சென்னை: உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக கூறி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞரான வாஞ்சிநாதன், அவருக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பியிருந்தார். இதையடுத்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு, இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வாஞ்சிநாதனை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியது. இந்நிலையில், வாஞ்சிநாதனுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடக் கோரி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து, நீதிமன்றத்தின் அன்றாட நடவடிக்கைகளில் முன்னாள் நீதிபதிகள் தலையீடு செய்யக் கூடாது என தடை விதிக்க கோரி வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், “நீதித்துறை…
Author: admin
நீங்கள் எப்போதாவது ஒரு உழவர் சந்தை, கார்டன் சென்டர் அல்லது உங்கள் அத்தை கொல்லைப்புறத்தில் இருந்திருந்தால், ரோஸ்மேரி போல தோற்றமளிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் இங்கே விஷயம், இயற்கை தாய் தந்திரங்களை விளையாட விரும்புகிறார். பல தாவரங்கள் ரோஸ்மேரியைப் போலவே சந்தேகத்துடன் இருக்கின்றன, நீங்கள் தேடுவதை உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் தவறான மூலிகையை முனகலாம் (அல்லது சமைக்கலாம்).படி ஒன்று: வடிவத்தையும் அளவையும் அறிந்து கொள்ளுங்கள்ரியல் ரோஸ்மேரி (ரோஸ்மரினஸ் அஃபிசினாலிஸ்) ஒரு மரத்தாலான வற்றாத மூலிகை, இது ஒரு சிறிய பைன் மரம் ஒரு ஹேர்கட் கிடைத்தது போல் தெரிகிறது. அதன் இலைகள் ஊசி போன்றவை, ஆனால் கூர்மையானவை அல்ல, மேலும் அவை நிமிர்ந்த, மர தண்டுகளுடன் அடர்த்தியான கொத்துக்களில் வளர்கின்றன.உயரம்: வழக்கமாக தொட்டிகளில் வளரும் போது 1–3 அடி, ஆனால் தரையில் அது 4–5 அடி உயரம் வரை கிடைக்கும்.தண்டுகள்: அடிவாரத்தில் வூடி, உதவிக்குறிப்புகளுக்கு அருகில் பசுமை.இலைகள்: குறுகலான, ஒரு அங்குல…
சென்னை: தமிழ்நாடு முதல்வர் கோப்பை போட்டிகள் 2025 மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு கடந்த ஜூலை 14 முதல் என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 10 லட்சம் போட்டியாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவுக்கான கடைசி நாள் ஆகஸ்ட் 16 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இணையதள முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் வரும் 20-ம் தேதி இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Last Updated : 14 Aug, 2025 11:25 AM Published : 14 Aug 2025 11:25 AM Last Updated : 14 Aug 2025 11:25 AM ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. இதனிடையே ‘கூலி’ படக்குழுவை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (ஆக.14) வெளியானது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கும், இதர மாநிலங்களில் காலை 6 மணிக்கும் திரையானது. அனைத்து மாநிலங்களிலும் டிக்கெட் முன்பதிவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது ‘கூலி’. வெளிமாநிலங்களில் காலை 6 மணிக்கே படம் ரிலீஸ் ஆனதால் தீவிர ரஜினி ரசிகர்கள் இன்று முதல் ஷோ பார்க்க ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் குவிந்தனர். ‘கூலி’ முதல் காட்சியைப் பார்த்த நெட்டிசன்களிடமிருந்து கலவையான விமர்சனங்களே வருகிறது.…
சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். மிகுந்த பரபரப்பான இந்தச் சம்பவத்தில் நடந்தது என்ன என்பதைப் பார்ப்போம். சென்னை மாநகராட்சியின் 5, 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிக்காக ரூ.276 கோடிக்கான ஒப்பந்தத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்தும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி பணி நிரந்தரம் செயய்க் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாக சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதேநேரம், முறைப்படி…
உயர் இரத்த அழுத்தம் என்பது உலகளவில் மிகவும் பொதுவான சுகாதார கவலைகளில் ஒன்றாகும், இருப்பினும் பலர் அதை நிர்வகிக்க உப்பை வெட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். சோடியத்தை குறைப்பது உதவக்கூடும் என்றாலும், இரத்த அழுத்தத்தை குறைக்க இது மட்டும் அல்லது மிகச் சிறந்த வழி அல்ல. வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சி, வாழைப்பழங்கள், இனிப்பு உருளைக்கிழங்கு, கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற உணவுகள் மூலம் பொட்டாசியம் உட்கொள்ளலை அதிகரிப்பது இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறுகிறது.அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசியாலஜி – சிறுநீரக உடலியல் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அனிதா லேட்டன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இரத்த அழுத்த அழுத்த ஒழுங்குமுறையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராய்வதற்கு விரிவான கணித மாதிரியைப் பயன்படுத்தினர். பொட்டாசியம்-க்கு-சோடியம் விகிதத்தை உயர்த்துவது தொடர்ந்து இரத்த அழுத்தத்தைக் குறைத்தது, உப்பு அளவு அப்படியே இருந்தபோதும் கூட. பெண்களுடன் ஒப்பிடும்போது அதிக பொட்டாசியம் உட்கொள்ளலில் இருந்து அதிக…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ஊடுருவல்காரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். இது வழக்கமான ஊடுருவல் முயற்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஏனெனில் ஊடுருவல்காரர்களுக்கு உதவ பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவும் முயற்சிக்கு ராணுவத்தின் தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கையின் போது துரதிருஷ்டவசமாக வீரர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை: 12 அணிகள் கலந்து கொள்ளும் புரோ கபடி லீக் 12-வது சீசன் போட்டி வரும் 29-ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி ஆகிய நகரங்களிலும் ம் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக பவன் ஷெராவத்தும், துணை கேப்டனாக அர்ஜுன் தேஷ்வாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அணியின் புதிய ஜெர்சியும் அறிமுகப்படுத்தப்பட்டது. பவன் ஷெராவத்தை இந்த சீசனுக்கு தமிழ் தலைவாஸ் அணி ரூ.2.26 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. ரெய்டுகளில் அபாரமாக செயல்படும் பவன் ஷெராவத் புரோ கபடி லீக்கில் ஹை ஃப்ளையர் என அழைக்கப்படுகிறார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும், 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பிலும் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் பவன் ஷெராவத் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
சசிகுமாரின் ‘சுந்தரபாண்டியன்’, சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தர்மதுரை, ‘றெக்க’, ‘ஜகமே தந்திரம்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சவுந்தரராஜா. நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ‘மண்ணுக்கும் மக்களுக்கும்’ என்ற சமூகநல அறக்கட்டளையைத் தொடங்கி, நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம், அடுத்த 6 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் திட்டமிட்டுள்ளார். இத்திட்டத்தின் தொடக்கமாக சென்னை ஆவடியில் உள்ள போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடிகர் சவுந்தர ராஜா தலைமையில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. கடந்த 9 ஆண்டுகளில் 45,000 மரக்கன்றுகளை வளர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சென்னை: அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். மிகுந்த பரபரப்பான இந்தச் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம். குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது…