Author: admin

மே மாதத்தில், ஹப்பிள் தொலைநோக்கி 11 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியபடி, அவர் 020941.1+001557 என அழைக்கப்படும் வித்தியாசமான விண்மீனின் படத்தை வெளியிட்டார். எஸ்.டி.எஸ்.எஸ்.

Read More

பல்கலைக்கழகத்தின் தலைமை, விதிகள் மற்றும் சேர்க்கைக் கொள்கைகளை மாற்றுவதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் உந்துதல் தொடர்பாக ஹார்வர்ட் ஏப்ரல் 21 அன்று வழக்குத் தாக்கல் செய்தார். அதன்பிறகு, நிர்வாகம் பள்ளியின் கூட்டாட்சி நிதியைக் குறைத்து, சர்வதேச மாணவர் சேர்க்கையை நிறுத்த முயன்றது மற்றும் அதன் வரி விலக்கு நிலையை நீக்குவதாக அச்சுறுத்தியது. (பட கடன்: AP & ANI)

Read More

புதுடெல்லி: தீ விபத்தின் போது எரிந்த நிலையில் பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு தயாராகி வருகிறது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் யஷ்வந் வர்மா. டெல்லியில் இவர் வசித்த அரசு குடியிருப்பின் வளாகத்தில் பொருட்கள் வைக்கும் அறையில் சில மாதங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க சென்ற தீயணைப்பு படையினர் அங்கு எரிந்த நிலையில் பண மூட்டைகள் இருப்பதை கண்டறிந்து மீட்டனர். இது குறித்த தகவல் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தெரிவிக்கப்பட்டது. எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பணத்துக்கும், தனக்கும் சம்பந்தம் கிடையாது என நீதிபதி யஷ்வந்த வர்மா கூறினார். இது குறித்து உள் விசாரைணைக்குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதன் அறிக்கை விவரம் வெளியிடப்படவில்லை. நீதிபதி யஷ்வந்த வர்மாவை ராஜினாமா செய்யும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி…

Read More

இன்று எல்லாம் இணையமயமாகிவிட்டது. இணையம் வழியாக நல்லது பலவும் நடந்தாலும், கெட்டதும் அதிகம் நடைபெறுகின்றன. இணையக் குற்றங்கள் அதற்குப் பாதை அமைத்துக் கொடுத்திருக்கின்றன. இணையக் குற்றங்கள் பல வகைகளிலும் நடக்கின்றன. அதில் இணையதளம் மூலம் திருமணத்துக்கு வரன் தேடுவோரும் இணையக் குற்றங்களுக்கு ஆளாகி வருகின்றனர். திருமணத்துக்கு வரன் தேடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த ஓர் இளைஞரின் கதை இது. பெங்களூருவைச் சேர்ந்த ராஜ்குமார் ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்து ஆனவர். பெரிய நிறுவனத்தில் மேலாளர் பணியில் இருந்த அவரை இரண்டாம் திருமணம் செய்ய சொல்லி வீட்டில் பெற்றோர் வற்புறுத்தினர். திருமணத்துக்குச் சம்மதித்தவர், திருமணத்துக்கு வரன் தேடும் இணையதளத்தில் பதிவுசெய்தார். ஒரு வாரம் கழித்து ஒரு பெண் வரன் இணையதளம் மூலம் அவரை அணுகியிருந்தார். அந்தப் பெண்ணின் விவரங்களைப் பார்த்த ராஜ்குமாருக்கு அவரை மிகவும் பிடித்துப்போனது. மேற்கொண்டு பேசுவதற்காக விசாகப்பட்டினத்தில் வசிக்கும் அந்தப் பெண் தொடர்பான விவரத்தில் வழங்கப்பட்டிருந்த கைபேசி எண்ணில் ராஜ்குமார் தொடர்புக்கொண்டார்.…

Read More

சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், சில பள்ளிகளின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவர்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி போன்றவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழிலில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதை…

Read More

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் 228 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்து அசத்தியது ஆர்சிபி. இதன் மூலம் அந்த அணி குவாலிபையர்-1 போட்டியில் விளையாடுகிறது. லக்னோவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ஆர்சிபி பேட் செய்த போது நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ஜிதேஷ் சர்மாவை ‘மன்கட்’ முறையில் ரன் அவுட் செய்து அப்பீல் செய்தார் லக்னோவின் திக்வேஷ் ராத்தி. இருப்பினும் அதை லக்னோ கேப்டன் திரும்பப் பெற்றார். அது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினை அதிருப்தி அடைய செய்துள்ளது. ஆர்சிபி பேட் செய்த போது 17-வது ஓவரை திக்வேஷ் வீசி இருந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ஜிதேஷ் சர்மா பந்து வீச்சாளர் திக்வேஷ் பந்து வீசுவதற்கு முன்பாகவே கிரீஸ் லைனை தாண்டி சென்றார். அதை கவனித்து, ஸ்டம்புகளை தகர்த்தார் திக்வேஷ். அதோடு ரன் அவுட்டுக்கான அப்பீலையும் செய்தார். மூன்றாவது நடுவர் அதை பரிசீலித்த…

Read More

டாக்கா: வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர், அரசு ஊழியர்களை தொடர்ந்து தற்போது ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களால் இடைக்கால அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. இவரது அரசு சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு முடிவுகளை வலிந்து திணிப்பதாக புகார் எழுந்த நிலையில் பொதுத்தேர்தலை தாமதப்படுத்த சதி நடப்பதாக முன்னாள் பிரதமர் கலீதா ஜியா குற்றம் சாட்டினார். இந்த ஆண்டு டிசம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என அவரது வங்கேதச தேசியவாத கட்சி (பிஎன்பி) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் இடைக்கால அரசு தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக ராணுவ தளபதி வாக்கர்-உஸ்-ஜமான் குற்றம் சாட்டினார். வங்கதேசத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும், ராணுவ விவகாரங்களில் தலையிடுவதை…

Read More

திருமலை: திருப்பதி ஏழுமலையானை இந்த கோடை காலத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் சனி, ஞாயிறு மட்டுமின்றி அனைத்து நாட்களும் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 22-ம் தேதி சுவாமியை ஒரே நாளில் 72,579 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 21-ம் தேதி 80,964 பேரும், 20-ம் தேதி 76 ஆயிரம் பேரும், 19-ம் தேதி 79,003 பேரும், கடந்த 18-ம் தேதி அதிகபட்சமாக 84,561 பேரும் சுவாமியை தரிசித்துள்ளனர். நேற்று 34,067 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். ரூ.3.74 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. சர்வ தரிசனம் செய்ய தற்போது 18 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். மேலும் இன்று சனிக்கிழமை என்பதாலும், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

சனாதன தர்மத்தை நிலைநாட்டக் கூடிய படமாகவே ‘ஹரி ஹர வீர மல்லு’ இருக்கும் என்று இயக்குநர் ஜோதி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அவரது மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. ஜூன் 12-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக கீரவாணி பணிபுரிந்துள்ளார். இதன் ‘டாரா டாரா’ பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பவன் கல்யாண் தவிர்த்து இதர படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். இதில் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா பேசும் போது, “‘ஹர ஹர வீர மல்லு’ படத்தை இயக்கும்போது இவ்வளவு பெரிய பேன் இந்தியா படமாக வரும் என்று சிறிதும் நினைக்கவில்லை. நான் சுமார் 8 வருட காலம் படத்தை இயக்காமல் இருந்தேன். அதற்கு காரணம் அஜித் சார் என்னிடம் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை, அவரை கவனித்துக் கொள்ளுங்கள். தயாரிப்பு…

Read More

சென்னை: கட்சி நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: “மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒவ்வொரு நிதியாண்டும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்தால் மட்டுமே அந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2018-2019, 2019- 2020 ஆகிய நிதியாண்டுகளில் நன்கொடை குறித்த அறிக்கை தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த இரு நிதியாண்டுகளுக்கும் வருமான வரிவிலக்கு வழங்க மறுத்த வருமான வரித்துறை முறையே 66.76 லட்சம் ரூபாயும், 1.07 கோடி…

Read More