Author: admin

புதுடெல்லி: அவசரநிலையின் 50-ம் ஆண்டு நிறைவு நாளில், பஹல்காம் தாக்குதல் குறித்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் மோடி அரசின் மற்றுமொரு திசை திருப்பும் முயற்சி என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கடந்த ஏப்.22-ம் தேதி இரவில் இருந்தே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன் விளைவுகள் குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. அது இன்னும் நடக்கவில்லை. மே 10-ம் தேதி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் இருவரும் இணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டத் தொடரைக் கூட்ட வேண்டும், தீர்மானத்தின் வழியாக நாட்டின் கூட்டு உறுதியைக்…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா நிறுவனம் ‘ஷார்க் 5ஜி’ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா ஷார்க் 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த மாதம் இதே ஷார்க் ஸ்மார்ட்போனை 4ஜி மாடலாக வெளியிட்டது லாவா நிறுவனம். தற்போது அதன் 5ஜி மாடல் வெளியாகி உள்ளது. ஐபி54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உடன் இந்த போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. லாவா ஷார்க் 5ஜி – சிறப்பு அம்சங்கள்: 6.75 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் Unisoc T765 ஆக்டா-கோர்…

Read More

சென்னை: தக்கர்பாபா வித்யாலயாவில் ஐடிஐ படிக்கும்போது தொழிற்பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு ரூ.17 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. சென்னை, தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் ஐடிஐ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் செயல் இயக்குநர் வி.எஸ்.அசோக், மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்கினார். அதைத்தொடர்ந்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்ட பின் அவர் பேசியதாவது: தற்போதைய வாழ்வில் உண்மை, நேர்மை போன்றவை அனைவரிடமும் இருப்பதில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. இப்போதுதான் நாம் உண்மைக்கு உரித்தான மகாத்மாக காந்தியை நினைவுகூர வேண்டும். செய்யும் வேலையை உண்மை, நேர்மையுடன் செய்ய வேண்டும். அப்படி பணியாற்றி பெற்றோர், கல்வியறிவு தந்த தக்கர் பாபா வித்யாலயாவையும் பெருமையடையச் செய்ய வேண்டும். நான் ப்ளூ ஸ்டார் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறேன். ஸ்ரீசிட்டியில் இருக்கும் தொழிற்சாலையில் 45 சதவீதம் பெண்கள் பணியாற்றுகின்றனர். அடுத்த முறை தொழிற்பயிற்சிக்காக…

Read More

குமி: தென் கொரியாவின் குமி நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் இன்று (மே 27) தொடங்கியது. இதில் ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் தங்கப் பதக்கம் வென்றார். 26 வயதான அவர், பந்தய தூரத்தை 28:38.63 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வெல்லும் 3-வது இந்திய வீரர் குல்வீர் சிங் ஆவார். இதற்கு முன்னர் ஹரி சந்த் (1975), லட்சுமணன் (2017) ஆகியோர் தங்கம் வென்றிருந்தனர். ஜப்பானின் மெபுகி சுஸுகி (28:43.84) வெள்ளிப் பதக்கமும், பக்ரைனின் ஆல்பர்ட் கிபிச்சி ராப் (28:46.82) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். மற்றொரு இந்திய வீரரான சவான் பர்வால் (28:50.53) 4-வது இடம் பிடித்தார். முன்னதாக இந்தியாவின் பதக்க வேட்டையை தமிழகத்தைச் சேர்ந்த செர்வின் செபாஸ்டியன் தொடங்கி வைத்தார். அவர், ஆடவருக்கான 20 கிலோ மீட்டர் நடை…

Read More

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட சைஃபுல்லா காலித் என்கிற சைஃபுல்லா கசூரி பாகிஸ்தானில் நடந்த ஒரு பொதுப் பேரணியில் காணப்பட்டது பேசுபொருளாக மாறியுள்ளது. பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரவளிப்பதற்கான மற்றொரு சான்றாக இச்சம்பவம் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. பஹல்காமில் நடந்த தாக்குதல் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும். பஹல்காம் தாக்குதலின் மூளையாக சைஃபுல்லா காலித் என்கிற சைஃபுல்லா கசூரி இருப்பதாக கூறப்பட்டது. அதாவது, காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை சைஃபுல்லா காலித் முன்னெடுத்து நடத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) தளபதி சைஃபுல்லா கசூரி, புதன்கிழமை பொதுவில் மீண்டும் தென்பட்டுள்ளார். இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கிய பிறகு அவர் தலைமறைவானதும் கவனிக்கத்தக்கது. பாகிஸ்தான் மர்காசி முஸ்லிம் லீக் (PMML) என்ற கட்சி…

Read More

ராமநாதபுரம்: ஏர்வாடி தர்ஹா 851-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஏர்வாடியில் புகழ்பெற்ற மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் 851-ம் ஆண்டு சந்தனக்கூடு சமூக நல்லிணக்க திருவிழா ஏப்.29-ல் புகழ்மாலை எனப்படும் மவ்லீது ஷரீப்புன் தொடங்கியது. அதனையடுத்து மே 9-ல் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று (மே 21) மாலை 4:30 மணிக்கு யானை, குதிரைகள் நடனமாட, தாரை தப்பட்டை ஒலிக்க, வான வேடிக்கையுடன் ஊர்வலமாக தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று மே 22 அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜாவீர் நல்ல இபுராஹீம் தர்ஹாவில் இருந்து சந்தனக்கூடு எடுத்து, அலங்கார ரதத்துடன் ஊர்வலம் புறப்பட்டு, அதிகாலை 5.50 மணியளவில் தர்ஹா வந்தடைந்தது. தர்ஹாவை மூன்று முறை சந்தனக்கூடு வலம்…

Read More

சென்னை: அனைவரிடத்திலும் அன்பாகவும், இனிமையாகயும் பழகக்கூடிய அன்புச் சகோதரர் நடிகர் ராஜேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரபல திரைப்பட குணச்சித்திர நடிகர் ராஜேஷ் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். நடிகர் ராஜேஷ் ‘கன்னிப் பருவத்திலே’, ‘பயணங்கள் முடிவதில்லை’ ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘நிலவே மலரே’ உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் நடித்து மக்களின் பாராட்டையும், பேரன்பையும் பெற்றவர். அனைவரிடத்திலும் அன்பாகவும், இனிமையாகயும் பழகக்கூடிய அன்புச் சகோதரர் நடிகர் ராஜேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர்…

Read More

சென்னை: சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டிஜிபி மற்றும் சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி அலுவலகங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு கடிதம் வந்தது. அதில், ‘சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழி சாலையில் உள்ள தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி வீட்டில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடிக்கும்’ என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டறியும் போலீஸார் மோப்பநாயுடன் விரைந்து வந்து பழனிசாமி வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். அதேபோல மெட்டல் டிடெக்டர் மூலமாகவும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அங்கு வெடிபொருள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால், வதந்தி பரப்பும் நோக்கத்துடன் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அபிராமபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல, சேலத்தில் உள்ள…

Read More

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். இருப்பினும் இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் மவுனம் காத்து வருகிறார். டிம் குக் மவுனத்தின் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம். அண்மையில் மேற்கு ஆசிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தில் அவருடன் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இணைவது தொடர்பான அழைப்பு வெள்ளை மாளிகை தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கு டிம் குக் மறுத்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அது அதிபர் ட்ரம்ப்புக்கு எரிச்சல் தந்துள்ளது. இந்தச் சூழலில் ஆசிய சுற்றுப்பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாரில் பேசிய ட்ரம்ப், டிம் குக்கை கடுமையாக விமர்சித்தார். ட்ரம்ப் உடன் இந்த பயணத்தில் ஓபன்…

Read More

நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோயாகும், அங்கு இன்சுலின் உற்பத்தி போதுமானதாக இல்லை அல்லது உடலின் இன்சுலின் திறம்பட பயன்படுத்த இயலாமை காரணமாக உடலை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாது. இந்த நிலை பொதுவாக ஆயுட்காலம் மற்றும் மீளமுடியாதது, இருப்பினும் மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் நிர்வகிக்க முடியும். உங்கள் சர்க்கரை அளவை சரிபார்க்க சிறந்த வழி ஒரு எளிய இரத்த பரிசோதனை மூலம், ஆனால் நீரிழிவு சில முக்கிய அறிகுறிகளையும் ஏற்படுத்துகிறது, அவற்றில் சில பெரும்பாலும் இரவில் நிகழ்கின்றன. மேலும் தோண்டி எடுப்போம் …நீரிழிவு அறிகுறிகள் இரவில் ஏன் ஏற்படுகின்றனமுன்பே இருக்கும் நீரிழிவு நோயாளிகள் தூக்கத்தின் போது மிக அதிகமாக (ஹைப்பர் கிளைசீமியா) அல்லது மிகக் குறைந்த (இரத்தச் சர்க்கரைக் குறைவு) இரத்த சர்க்கரை அளவை அனுபவிக்கலாம். இரண்டு நிபந்தனைகளும் ஆபத்தானவை, மற்றும் சிகிச்சை தேவை. அவற்றைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் …கல்லீரல் நோய்…

Read More