உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற நீதிபதிகளின் சொத்து விவரம் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தற்போது 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 21 பேரின் சொத்து விவரத்தை உச்ச நீதிமன்றம் அதன் இணைய தளத்தில் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள 5 நீதிபதிகளும் தங்கள் சொத்து விவரத்தை தெரிவித்துள்ளனர். மேலும் பீலா எம்.திரிவேதி, பி.வி.நாகரத்னா ஆகிய பெண் நீதிபதிகளில் பீலா திரிவேதி சொத்து விவரத்தை தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வரும் 13-ம் தேதி பணி ஓய்வுபெற இருக்கும் நிலையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. மேலும் உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக நீதிபதிகளின் சொத்து விவரம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதிபதிகளின் சொத்து விவரத்தை பொதுவெளியில்…
Author: admin
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ். இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா இன்னிங்ஸை தொடங்கினர். ரிக்கல்டன் 2 ரன்களுடன், ரோஹித் 7 ரன்களுடனுன் வெளியேறினர். வில் ஜாக்ஸ் அரை சதத்துடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சூர்யகுமார் யாதவ் 35, திலக் வர்மா 7, ஹர்திக் பாண்டியா 1, நமன் தீர் 1, கார்பின் போஷ் 27, தீபக் சஹர் 8 என 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் எடுத்தது மும்பை அணி. இதன் பிறகு 156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது…
புதுடெல்லி: டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கல்பாக்கம் உட்பட நாடு முழுவதும் தாக்குதல் அபாயம் உள்ள 259 மாவட்டங்களில் இன்று போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடும். அப்போது, அதில் இருந்து தப்பித்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று தாக்குதல் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதுவே போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை. தாக்குதல் அபாயம் உள்ள டெல்லி, மும்பை, சென்னை, கல்பாக்கம், குஜராத்தின் சூரத், மகாராஷ்டிராவின் தாராபூர், உத்தர பிரதேசத்தில் 19 மாவட்டங்கள், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் எல்லை மாவட்டங்கள் உட்பட 259 மாவட்டங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையை இன்று மேற்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தயார் படுத்துவதே இந்த போர்க்கால ஒத்திகையின் நோக்கம். போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையை…
இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024-ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் ஏப்ரல் 30-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது தவறான விவரங்களை குறிப்பிட்டதாகவும், தற்போது அதை சரிசெய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்குமாறு சில தேர்வர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களில் யாரேனும் ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறான விவரங்களை அளித்திருந்தால் அதை சரிசெய்வதற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. திருத்தம் கோருவதற்கான கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை ஆதார சான்றிதழ்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைதீர்…
சென்னை: ரஜினியின் ‘கூலி’ படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், படத்தின் புதிய க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சவுபின் சாகீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு டீசர் வெளியானது முதலே இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களின் கதை முன்கூட்டியே இணையத்தில் வெளியானது படக்குழுவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த முறை படம் குறித்த எந்த தகவலும் வெளியே கசியாமல் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்கிறது படக்குழு. இந்த நிலையில், படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், படத்தின் புதிய க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் சவுபின் சாகீர், உபேந்திரா, நாகர்ஜுனா, சத்யராஜ், கடைசியாக…
சென்னை: “தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல் துறையும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் நேற்று (மே 5) நடைபெற்ற முத்துமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவின் போது வழிபாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சினையையொட்டி பட்டியலின மக்கள் வசிக்கும் தெருவுக்குள் ஆதிக்க சாதி வெறியர்கள் உள்ளே புகுந்து பட்டியலின மக்களை அரிவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் தாக்கி, வீடுகளை அடித்து நொறுக்கியும், தீயிட்டு கொளுத்தியும், அங்கிருந்த இரண்டு கார்களையும், இரண்டு இரு சக்கர வாகனங்களை எரித்தும், ஒரு இருசக்கர வாகனத்தை அடித்து முற்றிலுமாக நொறுக்கியுள்ளனர். பலத்த வெட்டுக்காயங்களுடன் எட்டு பெண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேஆர்பி அணை கட்டுவதற்காக, வனப்பகுதி கிராமங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேஆர்பி அணை கட்டும்போது வனப்பகுதி கிராமங்களான கொத்துப்பள்ளி, கொட்டாவூர் கிராம மக்களை அதிகாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அங்கு வசித்தவர்கள் சூலகிரி தாலுகாவில் உள்ள துரிஞ்சிப்பட்டி மற்றும் கோட்டையூர் கிராமத்தில் குடியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் கொண்ட இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது எனக் கூறி அங்கிருந்து வெளியேறும்படி வனத்துறையினர் பொதுமக்களை நிர்பந்தம் செய்ததை எதிர்த்து அந்த கிராமங்களைச் சேர்ந்த 272 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், “கேஆர்பி அணை கட்டுவதற்காக எங்களது முன்னோரை தமிழக அரசு 70 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தி தற்போது வசிக்கும் கிராமத்தில் குடியமர்த்தியது. இந்த கிராமங்களில் நாங்கள் அன்றாடம் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்த கிராமங்களைத் தவிர்த்து…
ஸ்கிரிப்ஸ் தேசிய எழுத்துப்பிழை தேனீ அதன் விதிகளை ‘எழுத்துப்பிழை’ டைபிரேக்கரை குறைவாக மாற்றுவதற்கு மாற்றியமைக்கிறது (புகைப்படம்: AP) ஸ்க்ரிப்ஸ் தேசிய எழுத்துப்பிழை தேனீ இந்த ஆண்டு ஒரு சாம்பியனைத் தீர்மானிக்க ஒரு மின்னல் சுற்று டைபிரேக்கருக்குள் எழுத்தாளர்களை கட்டாயப்படுத்த அவ்வளவு விரைவாக இருக்காது, இது கடந்த ஆண்டு போட்டிக்கு திடீர் முடிவை விமர்சிப்பதைத் தொடர்ந்து வருகிறது. தேனீ இறுதிப் போட்டிகள் அவற்றின் இரண்டு மணி நேர ஒளிபரப்பு சாளரத்தின் முடிவை நெருங்கும்போது, ஒரு சாம்பியன் முடிவு செய்யப்படாதபோது, ”எழுத்துப்பிழை” என்று அழைக்கப்படும் டைபிரேக்கர் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தேவையை ஸ்க்ரிப்ஸ் நீக்கிவிட்டது. அதற்கு பதிலாக, தேனீ மேலதிக நேரத்திற்குள் ஓடினாலும், தேனீ விளையாட அனுமதிக்க நீதிபதிகளுக்கு அதிக விவேகம் இருக்கும். “அந்தக் கட்டுப்பாடுகள் எங்களிடம் இல்லை, அவை நேரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு எழுத்துப்பிழை சூழ்நிலைக்கு நம்மைத் தூண்டிவிடும். அந்த தருணத்தில் இது நிறைய அழுத்தங்களை எடுக்கும்” என்று தேனீவின் நிர்வாக…
கோவை: ஈஷா அறக்கட்டளை தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றே எரிவாயு தகன மேடையை கட்டியுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை ஆட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈஷாவை சுற்றியுள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் பொது மக்களின் பயன்பாட்டுக்காக எரிவாயு தகன மேடையை ஈஷா அறக்கட்டளை கட்டியது. பொது மக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட தகன மேடையை செயல்படாமல் முடக்கும் நோக்கில், முறையாக அனுமதி பெறாமல் தகன மேடை கட்டப்பட்டு உள்ளது எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கோவை மாவட்ட ஆட்சியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், “தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ‘நிறுவுவதற்கான ஒப்புதல்’ உட்பட அனைத்து அனுமதிகளைப் பெற்றும், தேவையான விதிமுறைகளையும் பின்பற்றியும், ஈஷா அறக்கட்டளை எரிவாயு தகன மேடையை…
புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தந்ததை நிறுத்தியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஊடக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இது குறித்து பேசியதாவது: “இப்போதெல்லாம், ஊடகங்களில் தண்ணீர் பற்றி நிறைய விவாதங்கள் நடக்கின்றன. முன்பு, இந்தியாவின்அடிப்படை உரிமையாக இருந்த தண்ணீர் கூட நாட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தது. இப்போது, இந்தியாவின் தண்ணீர் இந்தியாவின் நலனுக்காக பயன்படப் போகிறது. அது இந்தியாவின் நலனுக்காகப் பாதுகாக்கப்படும். இந்தியாவின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும். ஒரு காலத்தில், எந்தவொரு அத்தியாவசிய நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன்பு, உலகம் என்ன நினைக்கும் என்று சிந்தித்தனர். தங்களுக்கு வாக்கு கிடைக்குமா, தங்கள் நிலை பாதுகாப்பாக இருக்குமா என்று அவர்கள் சிந்தித்தார்கள். இந்தக் காரணங்களால், பெரிய சீர்திருத்தங்கள் தாமதமாகின. எந்த நாடும் இப்படி முன்னேற முடியாது. நாம் தேசத்துக்கு முன்னுரிமை கொடுக்கும்போதுதான் முன்னேறும்” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். பின்னணி என்ன? – கடந்த…
