Author: admin

இந்தியாவுடனான நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றபோது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: காஷ்மீர் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம். மேலும், வர்த்தகம் மற்றும் தீவிரவாத ஒழிப்பு குறித்து எங்கள் அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம். ஆனால், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா முயன்றால், நமது நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், நாமும் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறோம் என்பதை நாங்கள் காட்டுவோம். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அமைதி எங்கள் இரு நாடுகளுக்கும் பயனளிப்பது மட்டுமல்லாமல்,…

Read More

மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.1 கோடி செலுத்தி உள்ளனர். மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா மே 8–ம் தேதி முதல் மே 17-ம் தேதி வரை நடந்தது. இதில் கள்ளழகர் மதுரைக்கு மே 10-ம் தேதி புறப்பட்டபோது அவருடன் 39 தள்ளு வண்டி உண்டியல்கள் வந்தன. இதில் வழி நெடுகிலும் பக்தர்கள் காணிக்கைகளை உண்டியல்களில் செலுத்தினர். பின்னர் மே 16-ம் தேதி கள்ளழகர் மலைக்கு திரும்பினார். அவருடன் 39 தள்ளுவண்டி உண்டியல்களும் கோயிலுக்கு திரும்பின. அந்த வகையில் சித்திரைத் திருவிழாவில் மட்டும் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியல்கள் எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. கோயில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன் தலைமையில் கூடலழகர் கோயில் உதவி ஆணையர் பிரதீபா முன்னிலையில் .காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ஆய்வர் சாவித்திரி, கோயில் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், அருணாதேவி, பிஆர்ஓ முருகன் மற்றும் அறங்காவலர்கள்,…

Read More

‘மாமன்’ படத்தில் ராஜ்கிரணுடன் நடித்தது குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. இப்படம் தமிழகத்தில் 30 கோடி ரூபாய் வசூலைக் கடந்து பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. குறிப்பாக பி மற்றும் சி சென்டர்களில் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ‘மாமன்’ படத்தில் ராஜ்கிரண் உடன் நடித்தது குறித்து சூரி, “ராஜ்கிரண் சாரின் நடிப்பு எனக்கு வாழ்க்கைப் பயணத்தில் மறக்கமுடியாத ஒரு மகத்தான கற்றல் அனுபவமாகும். ‘மாமன்’ படத்திற்கு அவரைப் போலப் பெரும் வரமாக ஒருவர் இருக்கவே முடியாது. ‘சிங்கம்’ என்ற கதாபாத்திரத்தை அவர் நடித்ததில்லை – அந்த பாத்திரத்தை முழுமையாக உணர்ந்து, ஒவ்வொரு சுவாசத்திலும் அதை வாழ்ந்தார். அவரது ஆழமான உணர்ச்சி வெளிப்பாடுகள், குறிப்பாக விஜி மேடம் அவர்களுடன் பகிர்ந்த அழகான கெமிஸ்ட்ரி, அந்தக் கதையின் நட்பும் நேசமும் பூரணமாகத் திரையிலே…

Read More

தாம்பரம்: பழைய பெருங்களத்தூரில் கார் பழுதுபார்க்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 9 கார்கள் எரிந்து நாசமாகின. பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (42) இவர் அதே பகுதியில் கார் பழுதுபார்க்கும் மையம் மற்றும் கார்களை வாடகை விடும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல பணிகள் முடிந்த பிறகு, கடையை பூட்டிவிட்டு அனைவரும் சென்றனர். இந்நிலையில், நேற்று காலை பழுதுபார்க்கும் மையத்தின் உள்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால், அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தீயை முழுமையாக அணைத்தனர். இந்த விபத்தில் பழுதுபார்க்கும் மையத்தில் இருந்த 9 கார்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. பழுது சரிசெய்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த காரில் பேட்டரியை சார்ஜ் போட்டுள்ளனர். அதை…

Read More

சென்னை: சென்னையைச் சேர்ந்த வங்கிசாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை நேற்று வெளியிட்டது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் லோச்சன் கூறியதாவது: சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 2024-2025-ம் நிதியாண்டில் வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபமாக ரூ.1,543 கோடியை ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2023-24-ம் நிதியாண்டில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகம். செயல்பாட்டு லாபம் 29 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் நிறுவனம் வழங்கிய கடன் 9 சதவீதம் அதிகரித்து ரூ.28,405 கோடியைத் தொட்டுள்ளது. நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 17 சதவீதம் உயர்ந்து ரூ.51,476 கோடியாக உள்ளது. கடந்த 2024-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும்போது 2025 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வழங்கப்பட்ட கடன்கள் 11 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டுக்கு 210 சதவீத இறுதி டிவிடெண்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதலீட்டாளர்களுக்கு பங்கு…

Read More

பட கடன்: @mia_yilin/ tiktok ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள், பெயர் குறிப்பிடுவது போல, கண்களை ஏமாற்றும் மற்றும் ஒரு நபரின் உள்-மிக எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாகக் கூறும் வித்தியாசமான தோற்றமுள்ள படங்கள். இந்த படங்கள் உளவியலை அடிப்படையாகக் கொண்டவை, அவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகள் உள்ளன, சில நேரங்களில் வெற்றுப் பார்வையில் மறைக்கப்படுகின்றன. முதலில் ஒரு நபரின் கவனத்தை ஈர்ப்பதைப் பொறுத்து, அவர்களைப் பற்றியும், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தை அவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதையும் பற்றி நிறைய வெளிப்படுத்தலாம்.இந்த குறிப்பிட்ட படத்தை ஆரம்பத்தில் மியா யிலின் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். முதல் பார்வையில், ஒரு நபர் படத்தில் உள்ள இரண்டு விஷயங்களில் ஒன்றைக் கவனிக்க முடியும்: ஒரு தாய்-குழந்தை இரட்டையர் மற்றும் ஒரு மரத்தைப் போல வடிவமைக்கப்பட்ட ஒரு பெண் உருவம். முதலில் ஒரு நபரின் கவனத்தை ஈர்ப்பதன் அடிப்படையில், ஒரு நபரின் உண்மையான ஆளுமையை…

Read More

கேலக்ஸி கிளஸ்டர் ஆபெல் எஸ் 1063 (நாசா) ‘மாதத்தின் படம்’ தொடரின் ஒரு பகுதியாக, நாசா எடுத்த புதிய படத்தை வெளிப்படுத்தியுள்ளது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அது தொலைதூர கடந்த காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. இந்த படம் கேலக்ஸி கிளஸ்டர் ஆபெல் எஸ் 1063 என்பது 4.5 பில்லியன் டாலர் அமைந்துள்ள விண்மீன் திரள்களின் பிரம்மாண்டமான தொகுப்பு ஒளி ஆண்டுகள் கிரஸ் என்றும் அழைக்கப்படும் கிரஸ் விண்மீன் ஒரு பகுதியாக பூமியிலிருந்து. இந்த பிரபஞ்சத்தின் தொலைதூர கடந்த காலத்திலிருந்து மங்கலான விண்மீன் திரள்களைக் குறிக்கும் என்பதால், விஞ்ஞானிகளுக்கு குறிப்பாக ஆர்வமுள்ள ஒளி மற்றும் திசைதிருப்பப்பட்ட வளைவுகளின் ஒளிரும் கோடுகளால் சூழப்பட்ட விண்மீன் திரள்களை படம் காட்டுகிறது. 120 மணிநேர கண்காணிப்புக்குப் பிறகு கைப்பற்றப்பட்ட இந்த படம், வெபின் ஒற்றை வான இலக்கை ஆழமான தோற்றத்தைக் குறிக்கிறது.இந்த படம் ஒரு ஆழமான புலம் படம்பிக் பேங்கிற்கு 200 மில்லியன் ஆண்டுகளுக்கு…

Read More

டைட்டன் நீரில் மூழ்கக்கூடிய குப்பைகள், டைட்டானிக் (AP) இன் சிதைவுக்கு அருகிலுள்ள கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்டன கான்கார்ட்: 2023 ஆம் ஆண்டில் டைட்டானிக் இடிபாடுகளுக்குச் செல்லும் வழியில் ஒரு சோதனை நீரில் மூழ்கியிருப்பதை விசாரிக்கும் அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் அதன் ஆதரவுக் கப்பலில் பதிவுசெய்யப்பட்ட வீடியோவை அதன் வெடிப்பு ஒலி கடலின் மேற்பரப்பை அடைந்த தருணத்திலிருந்து வெளியிட்டுள்ளனர். வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டானிக் சிதைவுக்குச் செல்லும் வழியில் டைட்டன் ஜூன் 18, 2023 இல் மறைந்துவிட்டது, ஐந்து நாள் தேடலை மேற்கொண்டது, இது கப்பல் வெடித்தபோது ஐந்து பயணிகளும் இறந்துவிட்டதாக அதிகாரிகள் முடிந்தது. பிரிட்டிஷ் எக்ஸ்ப்ளோரர் ஹமிஷ் ஹார்டிங், மூத்த பிரெஞ்சு மூழ்காளர் பால் ஹென்றி நார்ஜியோலெட், பிரிட்டிஷ்-பாகிஸ்தான் தொழிலதிபர் ஷாஜாதா தாவூத் மற்றும் அவரது 19 வயது மகன் சுலேமன் ஆகியோருடன் டைட்டனைக் கட்டிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ். தனியார் ஆழ்கடல் பயணத்தின் எதிர்காலம்…

Read More

புதுடெல்லி: இந்தியாவைத் தாக்க நினைக்கும் தீவிரவாதிகள் அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும் என்பதை உணர்ந்துள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் தெரிவித்தார். பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நிலையை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்துவதற்காக அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு நாடுகளுக்கு சென்று, அங்குள்ள தலைவர்களுக்கு விளக்கி வருகின்றனர். காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான குழு கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது சசி தரூர் தலைமையிலான எம்.பி.க்கள் பனாமா நாட்டுக்குச் சென்றுள்ளது. பனாமா நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சசி தரூர் கலந்துகொண்டு பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தகுந்த பாடம் கற்பித்து விட்டோம். பாகிஸ்தானில் இருந்தபடி, யார் வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, தப்பிச் செல்லலாம் என்ற நிலைப்பாட்டுக்கு தக்க பதிலடி கொடுத்து உள்ளோம். இந்தியாவைத் தாக்கலாம்…

Read More

பெங்களூரு: விரைவாக சார்ஜ் ஆகும் மற்றும் அதிக நேரம் நீடிக்கும் சோடியன் – அயன் பேட்டரியை பெங்களூரு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். எரிபொருள் விலையும் காற்றும் மாசுபாடும் அதிகரித்து வரும் இக்காலத்தில் மக்களுக்கு சிக்கனமான பயணத்தை வழங்கவும் காற்று மாசுபாட்டை குறைக்கவும் எலெக்ட்ரிக் வாகனங்கள் அவதரித்தன. தற்போது இந்த வாகனங்கள் இயங்க தேவையான பேட்டரி, லித்தியம்-அயன் தொழில்நுட்பத்தில் உருவானதாக உள்ளது. இந்த பேட்டரிகளின் விலை அதிகமாக உள்ளது. இதற்கு உலக அளவில் லித்தியம் வளம் குறைவாக இருப்பதும் காரணமாக உள்ளது. இந்நிலையில் லித்தியன் அயன் பேட்டரிக்கு மாற்றாக சக்திவாய்ந்த சோடியன்-அயன் பேட்டரியை பெங்களூரு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த பேட்டரி வெறும் 6 நிமிடத்தில் 80 சதவீதம் சார்ஜ் ஆகக் கூடியது. மேலும் அதிக நேரம் நீடிக்கக் கூடியது. பேராசிரியர் பிரேம்குமார் செங்குட்டுவன்…

Read More