Author: admin

ஜெய்ப்பூர் / பாட்னா: நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் பிஹாரில் 7 பேரும் நுழைவுச் சீட்டு மோசடி தொடர்பாக கேரளாவில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் போலி தேர்வர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப மோசடி சாதனங்களை உள்ளடக்கிய ஒரு மோசடியை போலீஸார் முறியடித்தனர். இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் ஜெய்ப்பூரின் ஜகதாம்பா நகரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கிருந்து போலி நுழைவுச் சீட்டுகள், ஏஐ தொழில்நுட்பம் மூலம் திருத்தப்பட்ட புகைப்படங்கள், புளூடூத் சாதனங்கள், சிம் கார்டுகள், ரூ.50,000 ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். அங்கிருந்த அஜித் குமார், சோகன் லால் சவுத்ரி (இருவரும் ஜெய்ப்பூர் தேசிய ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் முதுகலை மாணவர்கள்), ஜிதேந்திர சர்மா (கர்நாடகாவை சேர்ந்த எம்பிபிஎஸ்…

Read More

ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன. இந்த அணிகளை தவிர மீதமுள்ள 7 அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. லீக் சுற்றில் இன்னும் 14 ஆட்டங்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரை எந்த அணியும் பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்கவில்லை. எனினும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொண்டுள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்டர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்பை பெறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கின்றன. இந்த 7 அணிகளும் பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே காணலாம். ராயல் சாலஞ்சர்ஸ்…

Read More

வாஷிங்டன்: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் தனது கருத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “இது ஒரு அவமானம். ஓவல் அலுவலகத்தை அடையும்போது இந்த தகவலை அறிந்தோம். கடந்த காலத்தை வைத்து பார்க்கும்போது ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள் என நான் கருதுகிறேன். இந்தியா – பாகிஸ்தான் என இரு நாடுகளும் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மோதல் பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இது விரைவில் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன்” என ட்ரம்ப் கூறியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா வான்வழி தாக்குதல் மேற்கொண்ட உடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையின் மார்கோ…

Read More

சென்னை: ‘இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடந்தால் இரு நாடுகளும் அழிந்துவிடும்’ என ஆதங்கத்துடன் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுகவின் 32-வது ஆண்டு தொடக்க விழா, பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக, வளாகத்தில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து வைகோ மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு, நீர் மோர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவதால்தான் மதிமுக இத்தனை ஆண்டுகள் வளர்ந்திருக்கிறது. ஒன்றியம், நகரங்களில் கட்சி கட்டமைப்பு இருக்கிறது. திமுக, அதிமுகவுக்கு அடுத்து மதிமுகவுக்கு கிராமங்களில் 10 தொண்டர்களாவது இருக்கின்றனர். 62 ஆண்டுகள் பொது வாழ்கையில் பயணித்து வருகிறேன். தமிழ், தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன். பேச்சும், எழுத்து திறனும் இருக்கும் வரை மக்கள் பணி செய்யத் தயாராக இருக்கிறேன். கூட்டணிக்காக எந்த சமரசமும் கிடையாது. பிரதமர்…

Read More

புதுடெல்லி: சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது ரயில் பெட்டியைப் போல மாறிவிட்டது. இந்த பெட்டியில் இடம் கிடைத்து ஏறியவர்கள் அடுத்தவரை ஏறுவதற்கு அனுமதிப்பதில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின்போது அவர் இந்த கருத்தை கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள பி.ஆர். கவாய்க்கு பிறகு இந்த ஆண்டின் இறுதியில் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்க உள்ளார். மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016-2017-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டப் போரட்டத்தின் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறுகையில், “ தொகுதி மறுவரையின்போது ஓபிசி குறித்த தரவுகள் இருந்தபோதும்…

Read More

கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சிஎஸ்கேவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது. அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 11 புள்ளிகளை பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் கொல்கத்தா அணி உள்ளது. இந்த 3 ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும் 17 புள்ளிகளையே பெறும். இது நிகழ்ந்தாலும் அந்த அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு என்பது மற்ற அணிகளின்…

Read More

சென்னை: ‘எவ்வளவு நெருக்கடி வந்தாலும் பாஜகவுடன் எந்த சூழலிலும் கைகோர்க்க மாட்டோம்’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக வணிகர் அணியின் சார்பில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா, சென்னை கோயம்பேட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: சாதியவாதிகளுடனும், மதவாதிகளுடனும் எந்தச் சூழலிலும் விசிக சமரசம் செய்துகொள்ளாது. எத்தனை நெருக்கடிகள் தந்தாலும் அந்த நெருக்கடிகளை சமாளிக்கும் ஆற்றல் விசிகவுக்கு உண்டு. பதவி ஆசை காட்டி வீழ்த்த நினைத்தாலும், அச்சுறுத்தி வீழ்த்த நினைத்தாலும் ஏற்றுக்கொண்ட கொள்கையில் இருந்து ஒரு அடிகூட பின்வாங்க மாட்டோம். அப்படி சமரசம் செய்து 10 இடங்களில் வெற்றிபெற்று என்ன செய்வது? எதுவும் வேண்டாம் என்றுகூட இருப்போமே தவிர, பாஜக போன்ற மதவாத சக்திகளுடன் சமரசம் செய்துகொண்டு, 10 பேரை உள்ளே அனுப்புவதற்கு, நான் கட்சியை நடத்தவே தேவையில்லை. அந்த அவசியம் எனக்கு கிடையாது. இதுபோன்ற ஒரு…

Read More

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணை கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழக பொதுப் பணித் துறை அணையைப் பராமரித்து வருகிறது. முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அணை வலுவாக இருப்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த 2014-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த 2011-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த சூழலில் மத்திய அரசு சார்பில் அணை பாதுகாப்பு சட்டம் 2021…

Read More

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ . பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் சார்பில் நடிகர் ஆர்யாவழங்கும் இந்தப் படம் வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கூறியதாவது: “ஒவ்வொரு படத்துக்கும் அதிகம் மெனக்கெட்டு ரசிகர்களுக்கு வித்தியாசமாக ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும் என கடுமையாக உழைக்கிறார் சந்தானம். இந்தப் படத்தின் பார்ட் 1, பார்ட் 2 என இரண்டு பாகத்தையும் சிறப்பாக உருவாக்கி இருப்பார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் போதும்…

Read More

தேனி: சபரிமலையில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையைத் தொடர்ந்து, வரும் 18, 19-ம் தேதிகளில் நிலக்கல் முதல் சந்நிதானம் வரை ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு ரப்பட உள்ளது. மேலும், அந்நாட்களில் பக்தர்களின் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்தில் நடைதிறக்கப்பட்டு, வழிபாடு நடைபெறும். இதன்படி, இடவம் மாதத்துக்காக (வைகாசி) வரும் 14-ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. வரும் 19-ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்நிலையில், வரும் 19-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை வருகிறார். வரும் 18-ம் தேதி கோட்டயத்தில் உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அவர், மறுநாள் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல்லுக்கு வந்து, பின்பு அங்கிருந்து பம்பை வரை காரில் செல்கிறார். தொடர்ந்து பம்பையில் இருமுடி கட்டி, சந்நிதானத்துக்குச் செல்லவிருக்கிறார். இதையொட்டி…

Read More