இடுகையில், இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். விவரங்களைப் படிக்க கீழே உருட்டவும்.
Author: admin
புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றனர். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின் தகவல்கள் செய்தியாளர்களுக்கு இன்று (மே.7) காலை விவரிக்கப்பட்டது. முதலில் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தான் மீது தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பதை விவரித்தார். அப்போது அவர், ”பஹல்காம் தாக்குதல் நடந்த 15 நாட்களுக்குப் பின்னர் திட்டமிட்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே வெகு நேர்த்தியாகக் குறிவைத்து, பொறுப்புடன் தாக்குதல் நடத்தியுள்ளோம். அங்குள்ள 9 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் பயங்கரவாதத்தின் மீது பதிலடி கொடுக்கும் நமது உரிமையை நாம் நிலை நாட்டியுள்ளோம்.” என்று…
கோவை: பி.ஹெச்டி படிப்புக்கு வரும் 9-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பாரதியார் பல்கலை அறிவித்துள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் இன்று (மே 7) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாரதியார் பல்கலைக்கழக துறைகளிலும், கோவை, ஈரோடு, திருப்பூர், உதகை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் உள்ள பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலும் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் உள்ள பி.ஹெச்டி பகுதி நேரம் மற்றும் முழு நேரம் ஆராய்ச்சிப் பட்டப்படிப்புக்கு 2025-26-ம் கல்வியாண்டுக்கான பொது நுழைவுத்தேர்வு வரும் ஜூலை 6-ம் தேதி நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் பொது நுழைவுத் தேர்வுக்கு வரும் 9-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் போர்ட்டல் ( மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்துக்கு தமிழக அரசின் சார்பில் காவல்துறை அணிவகுப்புடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர் ஜெ.சத்யநாராயண பிரசாத் (56). நீதிபதிகளுக்கான பணிமூப்பு தரவரிசைப்பட்டியலில் 42-வது இடத்தில் உள்ளார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகளுக்கான குடியிருப்பில் வசித்து வந்த இவருக்கு செவ்வாய்க்கிழமை இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் இறந்து விட்டதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து அவருடைய உடல் ஆம்புலன்ஸ் மூலமாக அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. இறந்த…
புகைப்படம்: @mia_yilin/ tiktok ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் இந்த நாட்களில் மிகவும் பிரபலமாக உள்ளன, ஏனெனில் அவர்கள் ஒரு நபரின் மறைக்கப்பட்ட பண்புகளை நொடிகளில் வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றனர். எப்படி? இவை உளவியல் அடிப்படையிலான படங்கள் மற்றும் அவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகள் உள்ளன. முதலில் ஒருவரின் கவனத்தை ஈர்ப்பதைப் பொறுத்து, இந்த சோதனைகள் ஒரு நபரின் உண்மையான ஆளுமைப் பண்புகளை டிகோட் செய்வதாகக் கூறுகின்றன, இல்லையெனில் பலருக்குத் தெரியாது.இந்த குறிப்பிட்ட இயற்கையால் ஈர்க்கப்பட்ட படத்தை டிக்டோக்கில் மியா யிலின் பகிர்ந்து கொண்டார், மேலும் ஒரு நபர் கடினமான மற்றும் சுயாதீனமானவரா அல்லது பச்சாதாபம் மற்றும் இதயத்தில் தாராளமாக இருக்கிறாரா என்று அது கூறுகிறது. முதல் பார்வையில், ஒரு நபர் மேலே உள்ள படத்தில் ஒரு புலி அல்லது மரத்தை கவனிக்கலாம். அவர்கள் முதலில் பார்ப்பதைப் பொறுத்து, அவற்றின் உண்மையான தன்மையைப் பற்றி நிறைய புரிந்து கொள்ள முடியும்.…
புதுடெல்லி: “இந்தியப் படைகள் தனது அற்புதமான வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தி ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளன.” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக உள்ள எல்லை சாலை அமைப்பின் சார்பில் 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 50 எல்லை சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “நேற்றிரவு இந்தியப் படைகள் தங்கள் துணிச்சலையும் வீரத்தையும் வெளிப்படுத்தி ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்திய ராணுவம் துல்லியம், விழிப்புணர்வு மற்றும் உணர்திறனுடன் நடவடிக்கை எடுத்துள்ளது. நாங்கள் நிர்ணயித்த இலக்குகள் திட்டமிட்டபடி துல்லியமாக அழிக்கப்பட்டன. பொதுமக்களுக்கோ, பொதுமக்களின் இருப்பிடங்களுக்கோ எந்தவொரு பாதிப்பும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் முழு முனைப்பு காட்டினோம். இதன்மூலம், ராணுவம் துல்லியம், முன்னெச்சரிக்கை மற்றும் இரக்கத்தைக் காட்டியுள்ளது. இதற்காக நமது…
காஞ்சிபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இரும்பு தகரங்கள் மூலம் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் உடைந்த நிலையில் கிடக்கிறது. முறையான தடுப்புச் சுவர் இல்லாததால் சம்பந்தமில்லாத பலர் இந்த மைதானத்துக்குள் நுழைவதால் முறையான தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதன் அருகே காவலர் பயிற்சி பள்ளி அமைந்துள்ளது. புதிதாக காவலர்கள் தேர்வு செய்யப்பட்டால் இந்த பயிற்சிப் பள்ளியில் தங்கி இருப்பர். அங்குள்ள மைதானத்தில் புதிய காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். காவல் துறையினருக்கு தேவையான அடிப்படை பயிற்சிகள், முதலுதவி பயிற்சி, சாமர்த்தியத்தை வளர்க்கும் பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த மைதானத்தை சில நேரங்களில் காவல்துறை சார்பில் நடைபெறும் விழாக்களுக்கும் பயன்படுத்துகின்றனர். இந்த மைதானத்துக்கு அருகிலேயே காவல் குடியிருப்பு, மற்றும்…
மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில், பழுப்பு அரிசியில் வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும்போது அதிக அளவு ஆர்சனிக் உள்ளது, இது குழந்தைகளுக்கும் இளம் குழந்தைகளுக்கும் சுகாதார கவலைகளை ஏற்படுத்தும். பிரவுன் அரிசி ஃபைபர் மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்து நன்மைகளை வழங்கும் அதே வேளையில், அதன் உயர்ந்த ஆர்சனிக் செறிவு நீண்டகால வெளிப்பாடு மற்றும் புற்றுநோய் ஆபத்து குறித்த கவலைகளை எழுப்புகிறது. பல தசாப்தங்களாக, பழுப்பு அரிசி வெள்ளை நிறத்தை விட ஆரோக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் அது உண்மையில் உண்மையா? பழுப்பு அரிசி அதன் வெள்ளை வகையுடன் ஒப்பிடும்போது அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதற்காக நீண்ட காலமாக பாராட்டப்பட்டது. இருப்பினும், ஒரு புதிய ஆய்வு பழுப்பு அரிசி நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்று கூறுகிறது. மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் ஒரு புதிய ஆய்வு, பழுப்பு அரிசியை சாப்பிடுவது வெள்ளை…
புதுடெல்லி: இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ 25 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டதாகவும், 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட 24 ஏவுகணைத் தாக்குதல்களில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர்-இ-தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து தாக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் தனது தாக்குதல்களை திட்டமிட்டது. இந்தத் தாக்குதல் இன்று (மே 7) அதிகாலை 1.05 மணிக்குத் தொடங்கி 1.30 மணிக்குள் நிறைவடைந்தது. 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இவற்றின் மீது தாக்குதல் நடத்த 24 ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதோடு, 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 60-க்கும்…
இஸ்லாமாபாத்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள பாகிஸ்தான், ‘இந்தியாவின் தாக்குதல் என்பது அப்பட்டமான போர் நடவடிக்கை. இந்தியாவின் இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர். இந்தப் போர் நடவடிக்கைக்கு பதிலடி தரும் உரிமை உண்டு’ என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் ஆயுதங்களை நிலைநிறுத்தி, சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள மக்களை குறிவைத்துத் தாக்கியது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயலாகும். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் பிரிவு 51 மற்றும் சர்வதேச சட்டங்களின்படி, தேவையான நேரத்தில் திருப்பித் தாக்கும் உரிமை என்பது பாகிஸ்தானுக்கும் உண்டு. இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியாவே காரணம்’ என்று தெரிவித்துள்ளது. உயிரிழப்பு விவரம்: மேலும், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்கு பாகிஸ்தான் தனியாக…
