சென்னை: பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இன்று (மே 7) காலை 9 மணிக்கு வெளியிடுகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வெழுத 8 லட்சத்து 2,568 பள்ளி மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறை கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.21 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். அவர்களில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் 83 முகாம்களில் ஏப்ரல் 4-ல் தொடங்கி 17-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. மேலும், இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன. இதற்கிடையே பிளஸ் 2…
Author: admin
மற்றொரு மென்மையான மாபெரும், செயிண்ட் பெர்னார்ட்ஸ் நட்பு செல்ல நாய் இனங்கள், அவை குளிர்ந்த காலநிலைக்கு ஏற்றவை. ஆனால், அவர்கள் பொதுவாக 8-10 ஆண்டுகள் மட்டுமே வாழ்கின்றனர். ஏன்? ஏனெனில் அவற்றின் அளவு மற்றும் மரபியல் பெரும்பாலும் இடுப்பு டிஸ்ப்ளாசியா, இதய பிரச்சினைகள் மற்றும் கால் -கை வலிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கும், இது மற்ற நாய் இனங்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் ஆயுட்காலம் கணிசமாகக் குறைக்கிறது.
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முப்படைகளும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தின. சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து 24 ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 70 பேர் உயிரிழந்தனர். காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் மீது, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கடந்த மாதம் 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா ஆதரவு அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும்,இது குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார் என்றும் பாகிஸ்தான் கூறியது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட…
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், “டெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும்” என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த தாக்குதல் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அடுத்தபடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த சில தினங்களில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் மீது அரசு எடுக்கும்…
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘சிந்தூர்’ தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதன் விவரம் வருமாறு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: தீவிரவாதம் ஒரு அவமானம். கடந்த காலங்களை பார்க்கும் போது ஏதோ ஒன்று பெரிதாக நடக்கப் போகிறது என்பது மக்களுக்கு தெரியும். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மோதல் பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இது விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன். சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான்: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது கவலை அளிக்கிறது. இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும். இரு நாடுகளிடமும் நாங்கள் பேசி வருகிறோம். இரு நாடுகளுக்கு இடையில் உள்ள பதற்றத்தை தணிக்க சீனா தயாராக உள்ளது. ரஷ்ய வெளியுறவுத் துறை: இரு நாடுகளுக்கு இடையில் தாக்குதல் ஏற்பட்டுள்ளது…
ஐபிஎல் சீசனின் 57வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரேன் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் குர்பாஸ் 11, சுனில் நரேன் 26 ரன்கள் எடுத்தனர். ரஹேனே 48 ரன்கள் விளாசினார். ரகுவன்ஷி 1, மணீஷ் பாண்டே 36, ஆண்ட்ரே ரஸ்ஸல் 38, ரிங்கு சிங் 9, ராமன்தீப் சிங் 4 என 20 ஓவர் முடிவில் 179 ரன்களை கொல்கத்தா அணி எடுத்திருந்தது. அதிகபட்சமாக நூர் அஹமது 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 180 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் ஆயுஷ் மாத்ரே, டெவான் கான்வே இருவரும் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினர். 5 ஓவர்களில் விக்கெட்களை…
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இந்திய ராணுவம் நேற்றிரவு நடத்திய தாக்குதல் பாகிஸ்தான் பங்குச் சந்தைகளின் வர்த்தகத்தில் கடுமையாக எதிரொலித்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் பங்குச் சந்தையில் கராச்சி-100 குறியீட்டெண் 6,272 புள்ளிகள் அதாவது 6 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முந்தைய செவ்வாய்க்கிழமை வர்த்தகம் 1,13,568.51 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் புதன்கிழமை வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டு 1,07,296.64 புள்ளிகளாக ஆனது. இதேபோன்று, கேஎஸ்இ-100 குறியீடும் 3.7 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதேநேரம், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடக்கத்தில் மந்த நிலையில் காணப்பட்டாலும் இறுதியில் சென்செக்ஸ் 105.71 புள்ளிகள் ஏற்றம் கண்டு 80,746.78 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி 34.80 புள்ளிகள் உயர்ந்து 24,414.40-ல் நிலைத்தது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 23 முதல் மே 5 வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் பங்குச் சந்தைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேஎஸ்இ-100…
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது. இதன் பிறகு இந்திய ராணுவப் படைகள் மிகுந்த விழிப்புடன் உள்ளன. இந்தியாவின் முன்னேற்பாடுகளை கண்டு, பாகிஸ்தானில் அச்சம் அதிகரித்துள்ளது. இருநாடுகள் இடையே போர் ஏற்பட்டால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் பாகிஸ்தான் உள்ளது. இதற்கு பாகிஸ்தானிடம் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளுக்கு பெரும் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானிடம் தற்போது 96 மணி நேரம், அதாவது 4 நாட்கள் மட்டுமே பீரங்கிகள் மற்றும் ராக்கெட்டுகளை இயக்குவதற்கான வெடிமருந்துகள் உள்ளன. இதனால் மிகவும் ஆபத்தான சூழலுக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது,இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் பாகிஸ்தான் எல்லைகளில் பணியாற்றும் இந்திய உளவுத்துறை வட்டாரம் கூறியதாவது: பாகிஸ்தானின் ராணுவ உத்தி இந்தியாவுக்கு எதிராக அதன் நிலங்களை கைப்பற்றுவதை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு பாகிஸ்தானுக்கு 155 மிமீ குண்டுகள் மற்றும் 122 மிமீ ராக்கெட்டுகள் தேவை.…
ஒற்றுமைக்கான செய்தியைப் பகிர்ந்துகொள்ளும்போது உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்று நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் சச்சின் வெளியிட்டுளள பதிவில் கூறியுள்ளதாவது: ஒற்றுமையில் நாம் அச்சமற்று இருக்கிறோம். அதேபோல் வலிமையில் எல்லையற்றதாக இருக்கிறோம். இந்தியாவின் கேடயம் அதன் மக்கள். ஒற்றுமைக்கான செய்தியை நாம் பகிர்ந்து கொள்ளும்போது இந்த உலகில் தீவிரவாதத்துக்கு இடம் கிடையாது. நாங்கள் ஒரே அணி. ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் ஆபரேஷன் சிந்தூர் ஹேஷ்டாக்கையும் இணைத்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், ஷிகர் தவான், யூசுப் பதான், பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், செஸ் வீரர் விதித் குஜ்ராத்தி உள்ளிட்டோரும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படை நேற்று அதிகாலையில் தாக்குதல் நடத்தியது. அப்போது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு முஸாபராபாத் பகுதியில் உள்ள மசூதி ஒலிபெருக்கிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இதுகுறித்து முகமது ஷைர் மிர் (46) கூறும்போது, “வெடி சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்தோம். அப்போது மீண்டும் குண்டு வெடித்தது. இதனால் அச்சமடைந்த நாங்கள், குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறி மலைப்பகுதிக்குச் சென்றோம்” என்றார். பாரதத்தின் பதிலடி: அமைச்சர் அமித் ஷா பதிவு: பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்களை கொன்றதற்கான பாரதத்தின் பதிலடிதான் ஆபரேஷன் சிந்தூர் என்று அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘எக்ஸ்’ தளத்தில் நேற்று வெளியிட்ட…
