Author: admin

திருப்பூர்: கரைப்புதூர் சாய ஆலையில் மனிதக் கழிவு அகற்றும் பணியில் ஈடுபட்டது திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்த வாகனமா என ஆய்வுக்கு வந்த நீதிபதி குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. திருப்பூர் அருகே கரைப்புதூரில் தனியார் சாய ஆலையில் உள்ள மனிதக் கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது, திருப்பூர் சுண்டமேட்டை சேர்ந்த சரவணன், வேணு கோபால் மற்றும் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் விஷவாயு தாக்கி கடந்த 19-ம் தேதி உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு சாய ஆலை தரப்பில் தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையத் தலைவா் நீதியரசா் தமிழ்வாணன் தலைமையில் கடந்த 26-ம் தேதி ஆய்வு செய்தனர். இதில் ஆணைய உறுப்பினர்கள் செல்வ குமார், ஆனந்த ராஜா, பொன்தோஸ், ரேகா பிரியதா்ஷினி மற்றும் தூய்மை பணியாளா்கள் நல வாரிய முதன்மை அலுவலா் கோவிந்த ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது…

Read More

புதுடெல்லி: இந்தியாவும், அமெரிக்காவும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: அமெரிக்க வர்த்தக துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் உடன் ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடைபெற்றது. இரு நாடுகளும் தங்களது நாட்டு மக்களுக்கான வணிகங்கள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளன. அதனை முன்வைத்து மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகள் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கோயல் தெரிவித்துள்ளார். பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறைகள் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதால் ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் கட்டணங்களை குறைப்பதற்கான முதல் கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவும் அமெரிக்காவும் தீவிர பேச்சுவார்தையில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளும் வரிகளைக் குறைப்பதில் உடன்பாடு ஏற்படும்பட்சத்தில் அது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கும். பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் வாஷிங்டன்…

Read More

கஜோல் தனது திகில் படமான MAA இன் டிரெய்லர் வெளியீட்டில் ஒரு அதிர்ச்சியூட்டும் கருப்பு சேலையில் தலையைத் திருப்பினார்.

Read More

ஜே.டி.வான்ஸ் சமீபத்தில் இந்தியன்-ஓஜின் சிலிக்கான் பள்ளத்தாக்கு துணிகர முதலாளித்துவ ஆஷா ஜடேஜா மோட்வானியை சந்தித்தார். இந்திய-ஓஜின் துணிகர முதலாளித்துவ முதலாளித்துவ ஆஷா ஜடேஜா மோட்வானியுடனான துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸின் சமீபத்திய சந்திப்பு எச் -1 பி விசா திட்டம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. குடியேற்றக் கொள்கைகள் விவாதிக்கப்பட்ட ஒரு குடும்பக் கூட்டத்தின் போது வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் அடங்கிய சந்திப்பு நடந்தது.ஆஷா ஜடேஜா மோட்வானி சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு துணிகர முதலாளியாக உள்ளார், 100 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப தொடக்கங்களில் முதலீடுகள் உள்ளன. அவர் ஜே.டி.வான்ஸுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அவர்களது குடும்பக் கூட்டத்தைப் பற்றி எழுதினார், அதில் அவர் குடியேற்றம் தொடர்பான பிரச்சினையை எழுப்பியதாகக் கூறினார். உஷா வான்ஸ் துணை ஜனாதிபதியுடன் சென்றார், அவர்கள் இருவரும் “ஒரு தவறுக்கு தாழ்மையானவர்கள்” என்று மோட்வானி கூறினார். “ஜே.டி., எங்களில் ஒரு டஜன் சாப்பாட்டு மேசையைச் சுற்றி முடிவற்ற…

Read More

பெங்களூரு: கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிடில் ‘தக் லைஃப்’ படத்துக்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்தார். இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள‌ தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், ”கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்தார். கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட சலுவளி உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெங்களூருவில் உள்ள வணிக…

Read More

கிண்டி மகளிர் ஐடிஐயில் சேர விரும்பும் மாணவிகள் வரும் ஜூன் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மகளிர் ஐடிஐயில் 2025ம் ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் கணினியில் எம்பிராய்டிங் வடிவமைப்பு, அலங்கார நுட்பங்கள், ஃபேஷன் தொழில் நுட்பம், கட்டிடக்கடை வரைவாளர், தகவல் தொடர்பு தொழில் நுட்பம், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக், தையல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள், மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை உட்பட தேவையான சான்றிதழ்களுடன் என்ற இணையத்திலும், கிண்டியில் உள்ள மகளிர் ஐடிஐயை நேரடியாக தொடர்பு கொண்டும் வரும் ஜூன் 13ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும். பயிற்சிபெறும் மாணவியருக்கு விலையில்லா மடிக் கணினி, மிதி வண்டி, சீருடை, கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750, புதுமைப்…

Read More

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. இந்த 4 அணிகள் இடையே லீக் சுற்றை முதல் இரு இடங்களுக்குள் நிறைவு செய்வது யார்? என்பதில் போட்டி நிலவி வருகிறது. ஏனெனில் முதல் இரு இடங்களுக்குள் லீக் சுற்றை நிறைவு செய்யும் அணிகளுக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு கிடைக்கும். லீக் சுற்றி முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில்…

Read More

வாஷிங்டன்: ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு தடை விதித்து அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் அங்கு பயிலும் 800-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு நிலை கேள்விக்குறியானது. இந்த சூழலில் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியது ஹாவர்டு பல்கலைக்கழக நிர்வாகம். இது சட்ட மீறல் நடவடிக்கை என நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்க நீதிமன்றம் ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது. பின்னணி என்ன? -அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் புகழ்பெற்ற ஹாவர்டு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மாணவர்களும் உயர்கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது…

Read More

கிஷன் தாஸ் மற்றும் ஹர்சத் கான் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘ஆரோமலே’ என தலைப்பிட்டுள்ளனர். ‘தருணம்’ படத்துக்குப் பிறகு புதிய படமொன்றில் நாயகனாக நடித்து வந்தார் கிஷன் தாஸ். இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதனை ‘மார்க் ஆண்டனி’ படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரித்து வந்தார். தற்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்கு ‘ஆரோமலே’ எனத் தலைப்பிட்டுள்ளனர். இதன் அறிமுக வீடியோவினை அனிருத் வெளியிட்டுள்ளார். இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதில் ஹர்சத் கான், ஷிவாத்மிகா, விடிவி கணேஷ், சிபி ஜெயகுமார், நம்ரிதா உள்ளிட்ட பலர் கிஷன் தாஸ் உடன் நடித்துள்ளனர். சரங் தியாகு இயக்கியுள்ள இப்படத்துக்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். விரைவில் இப்படத்தினை விளம்பரப்படுத்தி ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

Read More

சென்னை: ஆசிரியர்களை தரக்குறைவாகப் பேசிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், “சமீபகாலமாக பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் மாவட்ட ஆட்சியரின் தலையீடுகளும், ஆசிரியர்களை தரக்குறைவாக ஒருமையில் பேசுவதும், குற்றவாளிகளைப் போல பொது வெளியில் திட்டும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளின் சூழல்களை மதிப்பிடாமல் 100 சதவீத தேர்ச்சியை மட்டும் பார்க்கக்கூடாது. ஒரு மாவட்டம் 100 சதவீத தேர்ச்சி பெற்றுவிட்டால் அதன் ஆட்சியருக்கு பாராட்டும், தேர்ச்சி குறைந்தால் ஆசிரியர்கள் மட்டுமே காரணம் என்பதும் சரியானதல்ல. மேல்நிலைப் பள்ளிகளில் 2 செய்முறைத் தேர்வுகள், 2 பொதுத் தேர்வுகள், நீட், ஜேஇஇ உட்பட உயர் கல்விக்கான தேர்வுகள் என மாணவர்களுக்கும் அதிக பாடங்கள் உள்ளன. மேல்நிலைக் கல்விச்சூழல், எமிஸ் உட்பட கற்றல் சாரா பணிகள்,…

Read More