Author: admin

டாக்கா: வங்கதேச ராணுவ தலைமை தளபதி வாக்கர்-உஸ்-ஜமான் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் மீண்டும் வெடித்தால் வங்கதேசத்தில் மீண்டும் கலவர சூழல் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தேசிய குடிமக்கள் கட்சியின் (என்சிபி) ஒருங்கிணைப்பாளர் நஹித் இஸ்லாம், முகமது யூனுஸை ஜமுனாவில் உள்ள அதிகாரப்பூர்வமான இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்தை நடத்தினார். இதையடுத்து நஹித் இஸ்லாம் பிபிசி பங்களா செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: வங்கதேசத்தில் தற்போதைய நிலைமையில் தன்னால் பணியாற்ற முடியாத சூழல் இருப்பதாக யூனுஸ் கவலை தெரிவித்துள்ளார். இதனால் அவர் தனது தலைமை ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி தீவிரமாக யோசித்து வருகிறார். எனினும் அதுபோன்ற பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று நான் யூனுஸிடம்…

Read More

‘சிதாரே ஜமீன் பர்’ படம் ஓடிடி வெளியீடு இல்லை என ஆமிர்கான் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆமிர்கான் நடிப்பில் வெளியான ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’ மற்றும் ‘லால் சிங் சதா’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவின. இதனால் மீண்டும் கம்பேக் வெற்றிக்காக காத்திருக்கிறார் ஆமிர்கான். அடுத்ததாக அவருடைய நடிப்பில் ‘சிதாரே ஜமீன் பர்’ படம் வெளியாகவுள்ளது. இப்படம் ‘சாம்பியன்ஸ்’ என்ற ஸ்பெனிஷ் படத்தின் ரீமேக் ஆகும். ஜூன் 20-ம் தேதி வெளியாகவுள்ள இப்படம் ஓடிடி வெளியீடு இல்லை என ஆமிர்கான் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திரையரங்க வெளியீட்டில் இருந்து 8 வாரங்களுக்கு பிறகு யூடியூப் தளத்தில் Pay Per View முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார் ஆமிர்கான் என கூறப்படுகிறது. இந்த முடிவினை இந்திய திரையுலகினர் பலரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் ஆமிர்கான், ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிதாரே ஜமீன் பர்’. ஆமிர்கான்…

Read More

கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை விளக்கம் அளித்துள்ளது. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்திய தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்துள்ளார். இந்த அகழாய்வு குறித்து இந்திய தொல்லியல் துறை சில விளக்கங்களை கோரி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள், கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இதுகுறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வு அறிக்கை வெளியீடு குறித்து ஒருதரப்பு ஊடகங்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை திட்டவட்டமாக மறுக்கிறது. இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையானது தலைமை இயக்குநரின் பெயரில் அகழாய்வு செய்யப்பட்ட இடங்களின் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு அகழ்வாய்வு பணியிலும் அதிக நேரம், ஆற்றல் மற்றும் பணம் செலவிடப்படுகிறது. எனவே அகழாய்வு அறிக்கைகளுக்கு…

Read More

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இயங்கும் இனிப்பகங்கள் ‘பாக்’ என பெயர் கொண்ட இனிப்புகளின் பெயரை மாற்றியுள்ளன. தேசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், பாகிஸ்தான் குறியீட்டை தவிர்க்கும் வகையிலும் இந்த நகர்வை அங்கு செயல்படும் சிறியது முதல் பெரியது வரையிலான இனிப்பகங்கள் கையில் எடுத்துள்ளதாக தகவல். இதனால் மைசூர் பாக், மோத்தி பாக், ஆம் பாக், கோந்த் பாக், ஸ்வர்ண பஸம் பாக் போன்ற இனிப்புகளின் பெயர் மைசூர் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோந்த் ஸ்ரீ, ஸ்வர்ண ஸ்ரீ என மாற்றப்பட்டுள்ளது. “தேசப்பற்று எல்லையில் இருக்கும் மக்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் இருக்க வேண்டும். அதனால் இனிப்புகளின் இந்த பெயர் மாற்றத்தை எங்களது வாடிக்கையாளர்களும் வரவேற்றுள்ளனர்” என ஜெய்ப்பூரின் வைஷாலி நகர் பகுதியில் இனிப்பகம் வைத்துள்ள அஞ்சலி ஜெயின் கூறியுள்ளார். “இதன் மூலம் நாங்கள் ஒரு தெளிவான மெசேஜை சொல்லி உள்ளோம். அதாவது இந்தியாவுக்கு எதிராக புருவத்தை…

Read More

பல மாதங்களாக மனைவியைக் கொல்ல சதி செய்ததற்காக இந்தியன் மேன் தர்ஷன் சோனி கார்மலில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியானாவின் கார்மலில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷான் சோனி, ஒரு கேள்விக்கு ஒரு சுருக்கமான விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டார், அவர் தனது ஊழியர்களில் ஒருவர் தனது மனைவியைக் கொல்ல அவர் குஞ்சு பொரித்ததாக பல சதித்திட்டங்களை அவிழ்த்துவிட்டார் என்று கேட்டார். FOX59 ஆல் பெறப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, சோனி மீதான விசாரணை மே 12 அன்று போலீசார் அநாமதேய உதவிக்குறிப்பைப் பெற்றபோது தொடங்கினர், சோனி தனது மனைவியைக் கொலை செய்ய சதி செய்கிறார். டிப்ஸ்டர் சோனி தனது ஊழியர்களிடம் காம்பஸ் சொத்து குழுவில் ஒரு சைலன்சரைப் பெற முடியும் என்று கேட்டார், மேலும் இந்த கொலை மே 16 அன்று நடைபெறவிருந்தது. சோனியும் ஒரு ஊழியரின் இல்லத்திலிருந்து ஒரு விக்கை எடுப்பதைக் காண முடிந்தது, டிப்ஸ்டர் போலீசாரிடம் கூறினார். சோனி…

Read More

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்ததது. இதில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் இருந்த தீவிரவாத முகாம்கள் துல்லிய தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டன. இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கான லோகோவை இந்திய ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டது. இதில் இந்து பெண்கள் தங்கள் நெற்றியில் அணியும் குங்குமம் சிதறிக்கிடப்பது போல் வடிவமைக்கட்டு இருந்தது. மேலும் சிந்தூர் வார்த்தையில் ஒரு எழுத்து (O) குங்கும கிண்ணம் போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த லோகோ மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. பஹல்காமில் கணவரை இழந்த பெண்களுக்காக இந்தியா ராணுவத்தின் பதிலடிதான் இந்த நடவடிக்கை என்று கூறுவது போல் இருந்தது. இந்நிலையில் இந்த லோகோவை லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா, ஹவில்தார் சுரீந்தர் சிங் ஆகியோர் வடிவமைத்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Read More

பொறியியல், கலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரம் பேரும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்பில் சேர 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் ஆன்லைனில் விண்ணப்பித் துள்ளனர். பிஇ, பிடெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 18-வது நாளான நேற்று மாலை 6.60 மணி நிலவரப்படி 2 லட்சத்து 40,754 பேர் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 73,005 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். 1 லட்சத்து 30,262 பேர் தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்து விண்ணப்ப பதிவை முழுமை செய்துவிட்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க…

Read More

ஐபிஎல் 2025 தொடரின் 69வது ஆட்டத்தில் மும்பையை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப். ஜெய்ப்பூரின் சவாய் மான் சிங் மைதானத்தில் இரவு 7.30-க்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய மும்பை அணியின் ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ரியான் ரிக்கல்டன் 27 ரன்களும், ரோஹித் சர்மா 24 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில் 57 அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். திலக் வர்மா 1, வில் ஜாக்ஸ் 17, ஹர்திக் பாண்டியா 26 என 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 185 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ப்ரியான்ஷ் ஆர்யா 35 பந்துகளில் 65 ரன்கள் விளாசி…

Read More

உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான வரி உயர்வை அறிவித்தார். அவரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இது, ட்ரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். குறிப்பாக, வர்த்தக மோதலில் ஈடுபட்ட சீனாவுக்கு 145 சதவீதம் வரை வரி விதிப்பு உயர்த்தப்பட்டது. இதனிடையே, வர்த்தகம் தொடர்பாக பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவாக சீனாவை தவிர, மற்ற நாடுகளுக்கான வரி விதிப்பை 3 மாத காலத்துக்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அதில், ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கை சட்டவிரோதமானது. இது, அமெரிக்க பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அவரச பொருளாதார…

Read More

“நாங்கள் பக்கத்தில் இருந்திருந்தால் என் அண்ணன் ராஜேஷை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்போம். அவருக்கு எதுவும் ஆகியிருக்காது. சித்த மருத்துவர் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவர் கதை பேசிக் கொண்டே 2 மணி நேரத்தை இழுத்தடித்து விட்டார்” என்று நடிகர் ராஜேஷின் தம்பி சத்யன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் சத்யன் கூறியதாவது: “என் அண்ணன் ராஜேஷ் இறப்பதற்கு முன் அதிகாலையில் நாங்கள் அவருடைய பக்கத்தில் இருந்திருந்தால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்போம். அவருக்கு எதுவும் ஆகியிருக்காது. சித்த மருத்துவர் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவர் கதை பேசிக் கொண்டே 2 மணி நேரத்தை இழுத்தடித்து விட்டார். 6 மணிக்கு வந்தவர் 8 மணி வரை பேசிக் கொண்டே இருந்தார். அதன்பிறகுதான் ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மருத்துவமனையில் அனுமதித்தோம். அப்படி தாமதித்ததுதான் பெரிய தவறாகி விட்டது. அவர் விஷயதாரி என்பதால் நாங்களும் அவரை துரிதப்படுத்தாமல் இருந்துவிட்டோம். அது எங்களுடைய தவறுதான்.…

Read More