வாஷிங்டன்: பழிக்குப்பழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டதால் இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நான் இரு தரப்புடனும் நன்றாகப் பழகுகிறேன். இரண்டு நாடுகளையும் நான் நன்கு அறிவேன். அவர்கள் பிரச்சினைகளை சரிசெய்துகொள்வதை, தாக்குதலை நிறுத்திக்கொள்வதை நான் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் பழிக்குப்பழி தாக்குதல்களை நடத்திவிட்டார்கள். எனவே அவர்கள் இப்போது நிறுத்த முடியும் என்று நம்புகிறேன். இரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்குவதை நிறுத்திவிட்டு அமைதிக்காக பாடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தேவைப்பட்டால் தலையிட்டு உதவத் தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தியாவின் பதிலடி தாக்குதலை அடுத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “இந்தியா நடத்திய தாக்குதலில் உயிர்நீத்த அப்பாவிகளின் ரத்தத்துக்கு பழிவாங்குவோம் என்று நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம். பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். என் பாகிஸ்தான்…
Author: admin
சென்னை: மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கான தினசரி ஊதியம் ரூ.319-ஐ ஏப்ரல் 1 முதல் ரூ.336 ஆக உயர்த்தி வழங்க ஊரக வளர்ச்சித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) பயனாளிகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை 1.4.2025 முதல் ரூ.319-லிருந்து ரூ.336 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்பேரில் தமிழகத்தில் பயனாளிகளுக்கான தினசரி ஊதியத்தை ஏப்ரல் 1 முதல் ரூ.319-லிருந்து ரூ.336 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் உரிய ஆணை வெளியிடுமாறு ஊரக வளர்ச்சி ஆணையர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை ஏற்று மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்பு உறுதியளிப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியம் ரூ.319-ஐ ஏப்ரல் 1…
சமஸ்கிருதம் அனைத்து மொழிகளின் தாயாக அறியப்படுகிறது. இது உலகின் மிகப் பழமையான மற்றும் மிகவும் சுத்திகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகும், மேலும் ஒவ்வொரு சமஸ்கிருத வார்த்தையும் ஒரு வகையான உச்சரிப்பு மற்றும் அர்த்தத்தை மிகவும் ஆழமாகவும் அழகாகவும் கொண்டு செல்கிறது, அவற்றைக் கற்றுக்கொள்வது, அவற்றைச் சொல்வது, வசனங்களாக ஓதுவது மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. சமஸ்கிருதம் சரியான மீள் எழுச்சியைக் காணும்போது, அது பச்சை குத்தல்கள், அல்லது மந்திரங்கள் மற்றும் சொற்றொடர்கள் மூலமாக இருந்தாலும், இங்கே 5 சமஸ்கிருத சொற்றொடர்களைக் குறிப்பிடுகிறோம், அவை மன அழுத்த நாட்களில் சரியான உறுதிமொழிகளாக செயல்படுகின்றன.
திருப்பூர்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு முழு ஆதரவை தெரிவிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் நாராயணா கூறினார். கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலக் குழு கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. தேசியச் செயலாளர் நாராயணா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், கே.சுப்பராயன் எம்.பி. முன்னிலை வகித்தனா். மாநில துணைச் செயலாளா் பொியசாமி, வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், தேசியச் செயலாளர் நாராயணா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு முழு ஆதரவை தொிவித்துக் கொள்கிறோம். தீவிரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோல, இந்தியா-பாகிஸ்தான் போரையும் ஏற்க மாட்டோம். போர் ஏற்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். பாகிஸ்தான் மக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் இல்லாமல், தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், பாஜக மக்கள் நல விரோதச் செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கிறது. மதச் சார்ப்பின்மைக்கு எதிராக தொடா்ந்து செயல்படுகிறது. மக்கள் விரோதக் கொள்கைக்கு…
புகைப்படம்: @mia_yilin/ tiktok ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் வேடிக்கையானவை மற்றும் ஈடுபடும் சோதனைகள், அவை ஒரு நபரின் மறைக்கப்பட்ட பண்புகளை சில நிமிடங்களில் வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றன. இவை உளவியல் அடிப்படையிலான வித்தியாசமான படங்கள், அவை வெவ்வேறு நபர்களுக்கு வித்தியாசமாக தோன்றும்.முதலில் ஒரு நபரின் கவனத்தை ஈர்ப்பதைப் பொறுத்து, இந்த படங்கள் அவற்றின் பலம் மற்றும் பலவீனங்கள், மற்றும் ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றன.இந்த குறிப்பிட்ட படத்தை டிக்டோக்கில் மியா யிலின் பகிர்ந்து கொண்டார், மேலும் வாழ்க்கையில் அவர்களின் உள்ளார்ந்த பாதுகாப்பின்மை பற்றி கூறுவதாகக் கூறுகிறது. எப்படி? சரி, முதல் பார்வையில் ஒரு நபர் மனிதக் கண்ணையோ அல்லது படத்தில் மரங்களால் சூழப்பட்ட குழியையோ காணலாம். ஒரு நபரின் கவனத்தை முதலில் பிடிப்பது முதலில் அவர்களைப் பற்றி நிறைய சொல்கிறது.இந்த சோதனையை எடுக்க, கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுக்கவும். இப்போது, ஆழ்ந்த மூச்சு எடுத்து மேலே உள்ள படத்தைப் பாருங்கள். முதலில் நீங்கள்…
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் தொடர்பாக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் புதுடெல்லியில் தொடங்கியது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் தலைமையிலான இக்கூட்டத்தில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜூ, “நமது நாடு ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. நமது ஆயுதப் படைகளால் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன்’ சிந்தூர் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். நிலைமை குறித்து அனைத்துக் கட்சிகளுக்கும் விளக்க வேண்டும், ஏனெனில் இது அரசாங்கத்தின் பொறுப்பு. மேலும் பிரதமர் அவ்வாறு செய்ய…
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இன்று (மே8) நடைபெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷம் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூர்த்தி நாயனார், தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும், தமிழகத்தில் 3-வது பெரிய தேர் கொண்டதாகவும் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் திருத்தலம் விளங்குகிறது. இக்கோயில் சித்திரை தேர்த் திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெறுகின்றன.புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளி அருள்பாலித்தனர். வியாழக்கிழமை காலை அவிநாசியப்பர் திருத்தேர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அரோகரா கோஷம் முழங்க, திருப்பூர் சிவனடியார்கள் கைலாய வாத்தியத்துடன் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரில் சோமாஸ்கந்தர் சொர்ண…
நாகர்கோவில்: சித்ரா பவுர்ணமியான வரும் 12-ம் தேதி மாலையில் கன்னியாகுமரியில் சூரியன் மாலை நேரத்தில் மறையும் காட்சியையும், அதேநேரத்தில் சந்திரன் உதயமாகும் காட்சியையும் காணலாம். இவ்விரு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடைபெறும் அபூர்வத்தை குமரியிலும், தென் ஆப்பிரிக்காவிலும் மட்டுமே காண முடியும். கோடை விடுமுறையில் இந்நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், குமரி கடற்கரைப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடுவார்கள். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அரபிக் கடல் பகுதியில் சூரியன் மறைவதையும், அதே நேரத்தில் கிழக்கே வங்கக் கடல் பகுதியில் பூரண சந்திரன் உதயமாவதையும் காணலாம். இந்நிகழ்வைக் காண்பதற்காக வரும் 12-ம் தேதி மாலையில் குமரி முக்கடல் சங்கம கடற்கரை, சூரிய அஸ்தமன மையம், முருகன் குன்றம் மலை மற்றும் தனியார் லாட்ஜ்களின் மொட்டைமாடி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் திரள்வார்கள் என்பதால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை: சென்னையில் இன்று (மே.8) தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனையாகிறது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்தது. ‘ஷாக்’ கொடுத்த தங்கம்: இந்நிலையில், நேற்று (மே.7) ஒரே நாளில் 2 முறை அதிகரித்து ‘ஷாக்’ கொடுத்தது. அதன்படி, நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.125 அதிகரித்து ரூ.9,025-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து ரூ.72,200-க்கும் விற்பனையானது. பின்னர், மதியம் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து ரூ.9,100-க்கும், ஒரு பவுன் ரூ.600 அதிகரித்து ரூ.72,800-க்கும் விற்பனையானது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்தது. இன்றைய நிலவரம்: தொடர்ந்து இன்றும் தங்கம்…
இதய ஆரோக்கியத்தைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, மாரடைப்பு அல்லது மார்பு வலிகள் போன்ற வியத்தகு காட்சிகளை நாம் அடிக்கடி கற்பனை செய்கிறோம், ஆனால் நம்மிடம் உள்ள சில பொதுவான பழக்கவழக்கங்கள் அமைதியாக நம் இதயங்களை நாசப்படுத்தக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பயங்கரமான பகுதி என்னவென்றால், பெரும்பாலான நேரங்களில், நாங்கள் அதைப் பற்றி கூட அறிந்திருக்கவில்லை! நல்ல செய்தி என்னவென்றால், இந்த சிறிய பழக்கவழக்கங்கள் பெரும்பாலும் மாற்ற எளிதானவை. உங்கள் இதயத்தை ரகசியமாக சேதப்படுத்தும் 7 ஸ்னீக்கி நடத்தைகளைப் பார்ப்போம், அவற்றைத் திருப்புவதற்கான எளிய வழிகளுடன்.
