சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 23) பவுனுக்கு ரூ.280 குறைந்து ஒரு பவுன் ரூ.71,520-க்கு விற்பனை ஆகிறது. நேற்று பவுனுக்கு ரூ.360 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 23) கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,940-க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.71,520-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.38 குறைந்து ஒரு கிராம் ரூ.9,791 என விற்பனை ஆகிறது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதை காண முடிகிறது. ஒரு…
Author: admin
2017 ஆம் ஆண்டில் டெஸ்லாவில் சேர்ந்ததிலிருந்து, வைபவ் தனேஜா அணிகளில் உயர்ந்தார். எலோன் மஸ்க் தலைமையிலான டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரி வைபவ் தனேஜா செய்தியில் உள்ளார். செவ்வாயன்று அவரது இழப்பீட்டு விவரங்கள் வெளிவந்த பின்னர் 47 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிர்வாகி குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளார்.2024 ஆம் ஆண்டில் தனேஜா 9 139 மில்லியனைப் பெற்றார், இது மைக்ரோசாப்ட்’சட்யா நடெல்லா மற்றும் கூகிளின் சுந்தர் பிச்சாய் போன்ற சிறந்த தொழில்நுட்ப தலைவர்களின் ஊதியத்தை மீறுகிறது!கூகிளின் பெற்றோர் அமைப்பான ஆல்பாபெட்டிலிருந்து சுந்தர் பிச்சாய் மொத்தம் 10.73 மில்லியன் டாலர் இழப்பீட்டைப் பெற்றார், அதே நேரத்தில் மைக்ரோசாப்ட் 2024 ஆம் ஆண்டில் சத்யா நடெல்லாவுக்கு .1 79.1 மில்லியனை வழங்கியது.139 மில்லியன் டாலர் கணிசமான தொகை நேரடி சம்பளத்திற்கு அப்பால் பல்வேறு வகையான இழப்பீடுகளை உள்ளடக்கியது என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். டெஸ்லாவில் டானேஜாவின் அடிப்படை சம்பளம், 000 400,000 (ரூ. 3.33…
குல்மார்க்: ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதல், ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பேச்சுவார்த்தையை தடுத்து நிறுத்தவில்லை என்றும், சமீபத்தில் நடந்த நிதி ஆயோக் நிர்வாக கூட்டதில் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டது என்றும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். சுற்றுலா தளமான குல்மார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, “நிதி ஆயோக் கூட்டத்தில் பகிரப்பட்ட உரையை நீங்கள் எடுத்துக்கொண்டால், மாநில அந்தஸ்து விவகாரம் குறித்து அதில் குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்த உரை பிரதமர் மற்றும் நிதி ஆயோக்கின் அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது” என்று தெரிவித்தார். தொடர்ந்து பஹஸ்காம் தாக்குதல் ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து பேச்சுவார்த்தையை பாதித்துள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் உமர், “மாநில அந்தஸ்துப் பற்றிய பேச்சு இன்னும் நின்று போய்விடவில்லை. நான் செய்ய விரும்பாத ஒரு விஷயம், சட்டப்பேரவை (ஜம்மு காஷ்மீர்) சிறப்புக் கூட்டத்தைக்கூட்டி மாநில அந்தஸ்து…
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் கால வரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில் நுட்பப் பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 20,635 இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மற்றும் பகுதி நேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் கடந்த மே 7-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. முதலாமாண்டு பட்டயப் படிப்புகளுக் கு 11,140 பேர் விண்ணப்பித்துள்ளனர். நேரடி 2ம் ஆண்டு படிப்பில் சேர 12,184 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கான அவகாசமானது கால வரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /www.tnpoly.in/ எனும் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் வழி முறைகள், கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத் தளத்தில் மாணவர்கள் அறிந்து…
சிஎஸ்கே ரசிகர்களைப் பொறுத்தவரை தோனி ‘தல’ என்றால் சுரேஷ் ரெய்னா ‘சின்ன தல.’ அவர் சிஎஸ்கே-க்கு ஆடிய வரையில் மிடில் ஓவர், மிடில் ஆர்டர் பிரச்சினை சிஎஸ்கேவுக்கு எழுந்ததே இல்லை. அவர் போன்ற வீரர்கள் போன பிறகே சிஎஸ்கே அணி சரிவடையத் தொடங்கியது. இப்போது அப்படிப் போன வீரர்களை ஏதாவது ஒரு விதத்தில் அணிக்கு உதவியாகப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. அந்த விதத்தில் ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னாவை ஐபிஎல் 2026 சீசனுக்காக சிஎஸ்கே அணி பேட்டிங் பயிற்சியாளராகக் கொண்டு வரலாம் என்ற முடிவெடுத்திருப்பதாக பிரபல ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மைக்கேல் ஹஸ்ஸியின் கைவண்ணத்தில் சிஎஸ்கேவுக்கு பல பினிஷிங்குகளையும், மிடில் ஆர்டரில் ஸ்திரத்தையும் ஏற்படுத்தியவர் சுரேஷ் ரெய்னா. இந்நிலையில், இப்போதைய பேட்டிங் கோச் மைக்கேல் ஹஸ்ஸியின் இடத்திற்கு சுரேஷ் ரெய்னா வருவதுதானே பொருத்தம் என்று ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர். நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத்…
மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் ராணுவம், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக கனிமொழி தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழுவினரின் விமானம் மாஸ்கோவில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது. 45 நிமிடங்களுக்கு பிறகு அவர்களின் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளிடம் ஆதாரத்துடன் எடுத்துரைக்க சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்டோர் தலைமையில் 7 எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் 10 நாட்கள் பல்வேறு வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்கின்றனர். சமாஜ்வாதி எம்பி சஞ்சய் ஜா தலைமையிலான குழு ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, கொரியா, சிங்கப்பூர் நாடுகளில் பயணம் மேற்கொள்கிறது. சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு ஐக்கிய அரபு அமீரகம், லைபீரியா, காங்கோ, சியேரா லியோனி நாடுகளில் பயணம் மேற்கொள்கிறது. தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) எம்பி சுப்ரியா சுலே தலைமையிலான குழு…
ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்க புதிய படம் ஒன்று தொடங்கப்படவுள்ளது. 2014-ம் ஆண்டு வெளியான படம் ‘தெகிடி’. இதன் த்ரில்லர் திரைக்கதை, பாடல்கள் என அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன், ஜனனி ஐயர், காளி வெங்கட், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்க இப்படம் வெளியானது. ஐடி துறையில் பணிபுரிந்து வந்த ரமேஷ் நேரடியாக இயக்குநராக அறிமுகமானார். ‘தெகிடி’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஐடி துறை பணிக்கே சென்றுவிட்டார். தற்போது மீண்டும் அவருக்கு இயக்குநர் ஆசை வந்துள்ளது. இம்முறையும் அசோக் செல்வன் நடிக்க புதிய படமொன்றை இயக்கவுள்ளார். இதன் தயாரிப்பாளர், இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விவரம் விரைவில் தெரியவரும்.
விழுப்புரம்: ‘‘அன்புமணிக்கு பக்குவம், தலைமை பண்பு இல்லை. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கியது நான் செய்த தவறு. கட்சி பிரச்சினை பற்றி பேசிய தாய் மீது பாட்டிலை வீசி எறிந்தார். வளர்த்த கடா என் மார்பில் பாய்ந்துவிட்டது’’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையே கடந்த ஓராண்டாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. புதுச்சேரி அடுத்த பட்டானூரில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக இளைஞர் சங்க தலைவராக, தனது மகள்வழி பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். கூட்ட மேடையிலேயே இதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதை தொடர்ந்து, சமீபத்தில் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கி, செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இந்த நிலையில், கடந்த வாரங்களில் தைலாபுரத்தில் ராமதாஸ் கூட்டிய நிர்வாகிகள்…
சென்னை: இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் நிலையில், தமிழகம் – ஜெர்மனி இடையிலான வர்த்தகம் கணிசமாக அதிகரிக்கும் என்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் ஜெர்மனியின் தூதரக அதிகாரி கேத்ரின் மிசெரா லாங் தெரிவித்தார். தென்னிந்திய வர்த்தக தொழில் சபை, தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனம் (கைடன்ஸ் தமிழ்நாடு), ஜெர்மனியின் பிவிஎம்டபிள்யூ சங்கம் சார்பில் இந்தியா – ஜெர்மனி இடையிலான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை செயலர் அதுல் ஆனந்த் தலைமை தாங்கி, இந்தோ – ஜெர்மன் எம்எஸ்எம்இ உறவுகள் குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டார். பின்னர், அவர் பேசியதாவது: தமிழக பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் நோக்கில் பல்வேறு தொழில் திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது. அதன்படி, எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கும்…
ஜார்ஜியாவில் இந்திய மூலதன தொழில்நுட்ப மாணவர் அகாஷ் பானர்ஜியைக் கொன்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டின் காட்சிகளை அட்லாண்டா காவல் துறை வெளியிட்டது. ஜார்ஜியா தொழில்நுட்ப வளாகத்திற்கு அருகே அவர் தங்கியிருந்த அபார்ட்மெண்டில் 22 வயதான இந்திய வம்சாவளி தொழில்நுட்ப மாணவர் ஆகாஷ் பானர்ஜி தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மே 18 அன்று நடந்தது, இப்போது ஜார்ஜியா காவல்துறையினர் இது ஒரு இலக்கு செயல் என்று கூறி கண்காணிப்பு காட்சிகளை வெளியிட்டுள்ளனர், மேலும் கண்காணிப்பு காட்சிகளிலிருந்து சந்தேக நபரின் புகைப்படம் அவர்களிடம் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவியல் வரலாற்றைக் கொண்ட பானர்ஜியைத் தேடிக்கொண்டிருந்தார், கடந்த கால பானர்ஜிக்கு எந்த வகையான குற்றவியல் உள்ளது என்பதை விரிவாகக் கூறாமல் போலீசார் தெரிவித்தனர். நேற்று ஒரு செய்தியாளர் சந்திப்பில், அட்லாண்டா காவல் துறை, மாணவர் அகாஷ் பானர்ஜீ என ஃபுல்டன் கவுண்டி மருத்துவ பரிசோதகர் அலுவலகத்தால் அடையாளம் காணப்பட்டதாகக் கூறினார். அவர் போஷ்…
