புதுடெல்லி: 2025-26 ஆம் ஆண்டுக்கான நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.69 அதிகரித்து ரூ.2,369 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “2025-26 ஆம் ஆண்டுக்கான காரீஃப் பருவத்திற்கான நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) 3% உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, பொதுவான மற்றும் ஏ தர ரகங்களுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.69 அதிகரித்துள்ளது. பொதுவான ரகங்களுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,369 ஆகவும், ஏ தர ரகங்களுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,389 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பருப்பு வகைகளில், துவரம் பருப்பின் ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.450 உயர்த்தப்பட்டு, ரூ.8,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.400 உயர்த்தப்பட்டுள்ளது.…
Author: admin
கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய 22 மாணவர்கள் ஜெர்மனிக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: பள்ளி அளவில் கல்வி மற்றும் நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, 2022 – 23ம் கல்வியாண்டில் 142 மாணவர்கள் ரூ.3 கோடியில் மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். அதேபோல், 2023 – 24ம் கல்வியாண்டில் 114 மாணவர்கள் சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவர்கள் தங்கள் பயணங்களில் இருந்து விரிவான அனுபவத்தையும், அறிவையும் பெற்றனர். தொடர்ந்து நடப்பாண்டில் 22 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர், அலுவலர் என மொத்தம் 24…
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனை வெற்றியோடு நிறைவு செய்துள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. எப்போதும் போல தனது ஓய்வு குறித்த முடிவை சஸ்பென்ஸாகவே இந்த சீசனிலும் அப்படியே உயிர்ப்போடு தோனி வைத்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் உடனான கடைசி லீக் ஆட்டத்தில் 83 ரன்களில் வென்றது சிஎஸ்கே. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என இந்த ஆட்டத்தில் அனைத்துமே சென்னை சூப்பர் கிங்ஸுக்கு கைகூடியது. இந்த சீசனில் கிடைத்துள்ள பாசிட்டிவ்களை அடுத்த சீசனில் சிஎஸ்கே நிச்சயம் கொண்டு வேண்டும். ஏனெனில், முதல் சீசனோடு சிஎஸ்கே வெளியேறிய போது ‘எஞ்சிய ஆட்டங்களை அடுத்த போட்டிக்கான பயிற்சியாக எடுத்துக் கொள்வோம்’ என சிஎஸ்கே நிர்வாகம் ஒருமித்த குரலில் தெரிவித்தது. இந்நிலையில், கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்தது, “ஒவ்வொரு சீசனிலும் புதிய சவால். கேரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் போது உடலை கூடுதல் கவனம் கொண்டு பராமரிக்க வேண்டும். சிஎஸ்கே…
வெளிநாடு சென்று கல்வி கற்க வேண்டும் என்று கனவு கொண்ட மாணவர்களின் முதல் இலக்கு பெரும்பாலும் லண்டனின் ஆக்ஸ்ஃபோர்டு, அமெரிக்காவின் ஹாவர்டு என்று தான் வரிசைப்படும். ஆனால், வெளிநாட்டு மாணவர்களின் ஹாவர்டு கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடை என்ற ஓர் அதிரடி, ‘அடாவடி’ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மாணவர்கள், பார்வையாளர்கள் பரிமாற்ற திட்டத்தின் (Student and Exchange Visitor Program – SEVP) மூலம் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள் ஆண்டுதோறும் சேருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 100 உலக நாடுகளை சேர்ந்த 6,800 மாணவர்கள் சேர்கின்றனர், அதில் சராசரியாக 500 முதல் 800 பேர் வரை இந்திய மாணவர்களும் உள்ளனர் என்கிறது புள்ளிவிவரங்கள். நடப்பு கல்வி ஆண்டில் 788 இந்திய மாணவர்கள் ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில்தான் ட்ரம்ப் நிர்வாகம் இந்தக் கெடுபிடியைக்…
‘சூர்யா 45’ படம் எப்போது வெளியீடு என்பது குறித்து பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிக்க புதிய படம் ஒன்று தயாரிப்பில் இருக்கிறது. இதன் தலைப்பு, எப்போது வெளியீடு உள்ளிட்ட எந்தவொரு தகவலுமே வெளியாகாமல் உள்ளது. இதனை ட்ரீம் வாரியர் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் ‘சூர்யா 45’ குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிந்துவிடும். ஜூன் 2-வது அல்லது 3-வது வாரத்தில் இருந்து விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும். ‘சூர்யா 45’ திரைப்படம் ஒரு கொண்டாட்டமாக இருக்கும். ஆகையால் ஒரு பண்டிகை தினத்தில் வெளியிடவுள்ளோம். அது தொடர்பான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ‘கைதி 2’ குறித்தும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு “‘கைதி 2’ படம்…
மறைமலை நகர்: மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது என அதிமுக வர்த்தக பிரிவு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சீ.த.செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதி அதிமுக சார்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 29-ம் தேதி) நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வர்த்தக பிரிவு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சீ.த.செல்லப்பாண்டியன் பங்கேற்று கட்சியின் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, முன்னாள் அமைச்சர் சீ.த.செல்லப் பாண்டியன் பேசியதாவது: கழக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் செயல்பட்ட அரசு வரிகள் உயர்த்தாமல் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை கையாளுவதில் கவனம் செலுத்தியது. இன்றைய ஸ்டாலின் மாடல் அரசு சொத்து வரி வீட்டு வரி குழாய் வரி உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்தியது மட்டுமல்லாமல் மின் கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி உள்ளது.…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.71,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ரூ.8,975-க்கும், பவுனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.71,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை மீண்டும் ரூ.72 ஆயிரத்தை நெருங்குவது, பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல்ல 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.78,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.112 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது.
அக்ஷய் குப்தா (இடது), தீபக் காண்டெல் (லிங்கிண்டின் மற்றும் எக்ஸ்-அஸ்டின்_போலிஸ்) டெக்சாஸின் ஆஸ்டினில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், இந்திய மூலமான தொழில்முனைவோர் ஒரு சக இந்திய பயணிகளால் கேப்மெட்ரோ பேருந்தில் படுகொலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர், அக்ஷய் குப்தா என அடையாளம் காணப்பட்டார், 30 வயது, தாக்குதலுடன் எந்த முன் தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது.தாக்குதல் நடத்தியவர், தீபக் காண்டெல், 31, சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டு முதல் நிலை கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.இந்த சம்பவம் மே 14, 2025 அன்று மாலை 6:45 மணியளவில் ஆஸ்டின் காவல் துறையின்படி, குப்தா தெற்கு ஆஸ்டினில் பஸ் பயணத்தின் போது எச்சரிக்கையின்றி கழுத்தில் குத்தப்பட்டார். குப்தாவை குப்தாவை கழுத்தில் குத்தியபோது குப்தாவுக்கு அருகில் காண்டல் அமர்ந்திருந்தார்.பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அவசர மருத்துவ சேவைகள் மாலையில் யாரோ ஒருவர் பஸ்ஸில் குத்தப்பட்ட “ஷூட்/ஸ்டாப்” அழைப்புக்கு பதிலளித்தனர்.சம்பல் ஜமா மஸ்ஜித் தகராறு வழக்கு: அலகாபாத்…
இம்பால்: மணிப்பூரில் புதிய அரசை அமைக்கும் முயற்சியாக பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷ்யாம் சிங் உள்பட 10 எம்எல்ஏக்கள், ஆளுநர் அஜய் குமார் பல்லாவைச் சந்தித்து, புதிய அரசு அமைக்க 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவாக இருப்பதாக தெரிவித்தனர். மெய்த்தி – குக்கி எனும் இரு பிரிவு மக்களிடையே மே 2023-இல் வெடித்த மோதல் காரணமாக மாநிலத்தில் அமைதியற்ற நிலை நீடித்தது. மணிப்பூர் முதல்வராக இருந்த பாஜக தலைவர் பிரேன் சிங் தலைமையிலான அரசு, இந்த மோதல்களை கையாண்ட விதம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக பிரேன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி முதல் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. இந்நிலையில், மணிப்பூரில் புதிய அரசு அமைக்கும் முயற்சியாக பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷ்யாம் சிங் உள்பட 10 எம்எல்ஏக்கள் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப்…
செய்யூர்: செய்யூரில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கலை கல்லூரியை முதல் வர் ஸ்டாலின் மே.26ம் தேதி (நாளை) திறந்து வைக்கிறார். தமிழக முதல்வர் பட்ஜெட் கூட்டத்தொடரில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது, செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என ஆணையிட்டார். இந்நிலையில் மே 26ம் தேதி செங்கல்பட்டு, மாவட்டம் செய்யூரில் 270 மாணவ மாணவியர் பயிலும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், நேற்று செய்யூரில் கல்லூரி செயல்பட இருக்கும் இடத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார். மேலும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உடனடியாக அவ்விடத்தை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் இக்கல்லூரி இடத்தை சுத்தப்படுத்தி சீர் செய்து மாணவ, மாணவிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு அறிவுறுத்தினார். மேலும் வட்டார…
