இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டுள்ள 3 நாடுகள் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது. கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. தனது 2-வது சதத்தை விளாசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 101 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 123 ரன்களும், தீப்தி சர்மா 84 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 93 ரன்களும் விளாசினர். 5-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 122 ரன்கள் குவித்து அசத்தியது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 63 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 28, பிரதிகா ராவல் 1, ரிச்சா கோஷ்…
Author: admin
இஸ்லாமாபாத்: ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தின் மீது இந்தியா ட்ரோன் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை தொடரலாமா வேண்டாமா என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி உள்ளது. இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போல, பாகிஸ்தானில் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு பிஎஸ்எல் அணிகளான பெஷாவர் ஸல்மி மற்றும் கராச்சி கிங்ஸ் இடையே போட்டி நடைபெறவிருந்தது. இந்நிலையில், இந்த மைதானத்தின் மீது இந்தியா ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்த முயன்றதை அடுத்து இந்த பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்தது. இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை தொடர்ந்து நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்…
சென்னை: மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி- யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தை அடுத்த வடநெமிலியில் மே 11-ம் தேதி பாமக சார்பில் நடத்தப்படும் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சித்ரா பவுர்ணமி நாளில் பாமக மாநாடு நடத்துவதால் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள். கடந்த 2013-ம் ஆண்டு நடந்த மரக்காணம் கலவரம், 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததை சுட்டிக்காட்டிய மனுதாரர், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.மாலா மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.…
திருவனந்தபுரம்: பாகிஸ்தானுக்கு எதிராகப் போரைத் தொடங்குவதில் இந்தியாவுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும், ஆனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், “பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது, அதை செய்தோம். பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக இரவில் பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. நாம் ஒரு குறிப்பிட்ட அளவிலான பதிலடியை மட்டுமே கொடுத்தோம். இப்போது, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 59 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு நமது படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. ஆனால், அதை அதிகரிக்க நாம் விரும்பவில்லை. பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் அரசு அல்லது ராணுவம் இருப்பது நமக்கு தெரிந்திருந்தாலும், நாம் அவற்றைத் தாக்கவில்லை. இது நமக்கு போரில் ஆர்வம் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால்…
வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ்-2 சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஓஜாஸ் தியோதலே, அபிஷேக் வர்மா, ரிஷப் யாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி கால் இறுதி சுற்றில் 239-232 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தியது. தொடர்ந்து அரை இறுதி சுற்றில் இந்திய அணி 232-231 என்ற கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி, மெக்சிகோவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் மதுரா தமன்கோங்கர், சிகிதா தனிபர்த்தி, ஜோதி சுரேகா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி கால் இறுதி சுற்றில் 232-229 என்ற கணக்கில் கஜகஸ்தானையும், அரை இறுதி சுற்றில் 232-230 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனையும் தோற்கடித்தது. வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி, மெக்சிகோவுடன் மோதுகிறது.
புதுடெல்லி: கடந்த 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான்…
டிரம்ப் இங்கிலாந்துடன் வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்கிறார் (புகைப்படம்: AP) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை பிரிட்டனுடன் வர்த்தகம் குறித்த ஒப்பந்தத்தை அறிவித்தார், இது அவர் தனது உலகளாவிய கட்டண பிளிட்ஸைத் தொடங்கியதிலிருந்து இதுபோன்ற முதல் ஒப்பந்தமாகும்.ட்ரம்ப் ஒப்பந்தத்தின் நோக்கம் குறித்து எந்த விவரங்களையும் வழங்கவில்லை, இது ஏப்ரல் 2 “விடுதலை நாளில்” அமெரிக்க வர்த்தக பங்காளிகள் மீது பெரும் கட்டணங்களை விதித்த ஒரு மாதத்திற்குப் பிறகு வருகிறது.”ஐக்கிய இராச்சியத்துடனான ஒப்பந்தம் ஒரு முழுமையான மற்றும் விரிவான ஒன்றாகும், இது அமெரிக்காவிற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான உறவை பல ஆண்டுகளாக உறுதிப்படுத்தும்” என்று ஜனாதிபதி தனது உண்மை சமூக தளத்தில் பதிவிட்டார்.”எங்கள் நீண்டகால வரலாறு மற்றும் விசுவாசத்தின் காரணமாக, ஐக்கிய இராச்சியத்தை எங்கள் முதல் அறிவிப்பாக வைத்திருப்பது ஒரு பெரிய மரியாதை. பேச்சுவார்த்தையின் தீவிர கட்டங்களில் உள்ள பல ஒப்பந்தங்கள் பின்பற்ற வேண்டும்!”காலை 10:00 மணிக்கு (1400 ஜிஎம்டி) திட்டமிடப்பட்ட வெள்ளை…
புதுடெல்லி: இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. மேலும், இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்களையும், அமைப்புகளையும் குறிவைத்தன. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி துறைகளில் உள்ள பகுதிகளில் சிறிய பீரங்கிகள் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே அதன் தூண்டுதலற்ற துப்பாக்கிச் சூட்டின் தீவிரத்தை அதிகரித்துள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு (மே 07) அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ்,…
ரோஹித் சர்மா தன் 38-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்தது குறித்து நிறைய உத்தேசக் காரணங்கள் வளைய வந்து கொண்டிருக்கின்றன. இது வழக்கம்தான். ஏனெனில், ஓய்வு பெறுபவர் உண்மையான காரணங்களைத் தெரிவிக்காதபோது கலாய்ப்புகள் ஆதிக்கம் செலுத்தும் என்பது பொதுவானதுதானே! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் ரோஹித் வருவதற்கு முன் பும்ரா கேப்டன்சியில் பெர்த் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பெரிய தோல்வியைப் பரிசாக அளிக்க, ரோஹித் வந்த பிறகோ பேட்டிங்க்கிலும் சொதப்பி கேப்டன்சியிலும் ஒன்றுமேயறியாத சிறுபிள்ளை போல் செய்து படுதோல்விக்குக் காரணமாக அமைந்தார். இதனையடுத்து, ரோஹித் சர்மாவை கேப்டன்சியிலிருந்து மட்டுமல்ல, பிளேயராகவும் அணியிலிருந்து தூக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்கும் அவர்தான் கேப்டன், ‘அவரக் கண்டா வரச்சொல்லுங்க’ என்ற ரீதியில் மும்பை சார்பு ஊடகங்கள் எழுதிக் கொண்டிருந்தன. ஆனால், திடீரென அவர் ஓய்வு அறிவித்ததற்குக் காரணம், கவுதம் கம்பீர்,…
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி கொடுத்த நிலையில், லாகூரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் அமெரிக்கர்களுக்கு, அமெரிக்க துணைத் தூதரக ஊழியர்களுக்கு அந்நாடு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு அருகே தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் எல்லை கிராமத்தில் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல கிராமங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா சேதப்படுத்தியுள்ளது. இதனை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பாகிஸ்தானும் இதனை உறுதி செய்துள்ளது. இந்நிலையில்…
