Author: admin

மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் வருகை பதிவு உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவ பேராசிரியர்கள், அலுவலர்களின் வருகையைப் பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை கடைபிடிக்கப்படுகிறது. அதில், குறைந்தபட்சம் 75 சதவீதம் வருகைப் பதிவு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் அங்கீகாரத்துக்கு அனுமதி அளிக்கப்படாது. இதற்கிடையே, நடப்பாண்டில் தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையத்தின் குழு மேற்கொண்ட ஆய்வில், சென்னை மருத்துவக் கல்லூரி தவிர்த்து மற்ற 35 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் குறைந்த வருகைப்பதிவு, அதிலும் ஒரு முறை மட்டும் வருகைப்பதிவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்தன. இவற்றைச் சுட்டிக்காட்டி, அதற்கு விளக்கம் அளிக்கும்படி கல்லூரிகளின் நிர்வாகத்துக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு கல்லூரிகளின் நிர்வாகங்கள் விளக்கமளித்தன. இதைத்தொடர்ந்து, மருத்துவர்களின்…

Read More

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 69-வது லீக் ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. ஜெய்ப்பூரின் சவாய் மான் சிங் மைதானத்தில் இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கெனவே, பஞ்சாப், மும்பை இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், முதல் 2 இடங்களுக்குள் முன்னேறும் முனைப்பில் பஞ்சாப் அணி உள்ளது. பஞ்சாப் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 17 புள்ளிகளுடன் உள்ளது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களுக்குள் வர வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் மும்பை அணி, 13 ஆட்டங்களில் பங்கேற்று 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மும்பை இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் பட்டியலில் முன்னேறுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் அதேநேரத்தில்…

Read More

புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பயன்படுத்திய அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது. இந்தச் சூழலில் பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது அகமது ஷெரீப் சவுத்ரி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வில் பேசிய ஷெரீப் சவுத்ரி, “எங்கள் தண்ணீரை நீங்கள் தடுத்தால், உங்கள் மூச்சை அடைத்துவிடுவோம்” என்று கூறியுள்ளார் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின் மூளையாக இருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், இதே வார்த்தையை பயன்படுத்தி சமீபத்தில் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக ஹபீஸ் சயீத் சமூக ஊடகங்களில் பேசிய வீடியோ வைரலானது. பஹல்காமில் நடந்த பயங்கரவாதத்…

Read More

Last Updated : 28 May, 2025 07:09 AM Published : 28 May 2025 07:09 AM Last Updated : 28 May 2025 07:09 AM பிரபல மலையாள நடிகரான உன்னி முகுந்தன், தமிழில் ‘சீடன்’, ‘கருடன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருடைய மேலாளராக இருந்தவர் விபின் குமார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டோவினோ தாமஸின் ‘நரிவேட்டை’ படத்தைப் பாராட்டி முகநூலில் பதிவிட்டிருந்தார். இதைக் கண்டு கோபமடைந்த உன்னி முகுந்தன், அவரைத் தாக்கியதாக காக்கநாடு இன்ஃபோபார்க் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “உன்னி முகுந்தனிடம் 6 ஆண்டுகளாக பணியாற்றினேன். ‘மார்கோ’ படத்துக்குப் பிறகு அவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் விரக்தியில் இருந்தார். டோவினோ தாமஸின் ‘நரிவேட்டை’ படத்தைப் பாராட்டி முகநூலில் குறிப்பு ஒன்றை எழுதியிருந்தேன். அதைப் படித்ததும் ‘இனி நீ எனக்கு மேலாளராக இருக்க வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுத்…

Read More

திருப்பூர்: “அடுத்த 7 மாதங்களில் கட்சியினர் முழுமையாக களப்பணியாற்றியிருக்க வேண்டும்,” என திருப்பூரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்த கூட்டத்தில் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3-ல் திமுகவும், 5-ல் அதிமுகவும் கடந்த தேர்தலில் வெற்றிபெற்றன. இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மேற்கு மண்டல சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார். இதையடுத்து திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்ட நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திருப்பூரில் இன்று (மே 29) பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டார். இதில் திருப்பூர் வடக்கு தொகுதி மற்றும் அவிநாசி தொகுதிகளில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், வெற்றி பெறுவதற்கு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும், வாக்காளர்களை பூத் கமிட்டி ஏஜென்ட்டுகள் எவ்வாறு அணுக வேண்டும். அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்களை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுடன்…

Read More

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,760 அதிகரித்து ரூ.71,440-க்கு விற்பனையானது. இதனால், நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர். சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம், அமெரிக்க அதிபர் டிரம்பின் பொருளாதார போர் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரித்தது. இதனால், கடந்த மாதம் 22-ம் தேதி ஒரு பவுன் ரூ.74,320 ஆக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. பின்னர், தங்கம் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. கடந்த 15-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.68,660-க்கு விற்பனை செய்யப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. இதன்படி, தங்கம் விலை நேற்று அதிகரித்தது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.220 அதிகரித்து ரூ.8,930-க்கும், ஒரு…

Read More

புதுடெல்லி: மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக ஆபரேஷன் சிந்தூர் குறித்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜுலை மாதத்தில் நடைபெறும். இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவர் சகாிகா கோஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “பஹல்காம் தாக்குதலுக்கு பின்பும், ஆபரேஷன் சிந்தூரின் போதும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அரசுக்கு ஆதரவாக நின்றது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அனுப்பப்பட்டிருக்கும் தூதுக்குழுக்களையும் ஆதரித்தது. அரசுக்கு எங்களின் முழு ஆதரவினை வழங்கியிருக்கிறோம் என்று நாங்கள் நம்புகிறோம். இப்போது, மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் எழுப்பிய ஆபரேஷன் சிந்தூர் குறித்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக ஜுன் மாதத்தில் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.” என்றார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின்…

Read More

சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த 2 மாதங்களில் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். சென்னை மாநகராட்சி கல்வி துறையின் கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலை, 46 உயர்நிலை, 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சிப் பள்ளிகளில் ஆண்டுதோறும் 1.12 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் மார்ச் மாதத்துக்குப் பிறகு மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு மே 23-ம் தேதிக்குள் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மழலையர் வகுப்புகளில் மட்டும் 8 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 2 மாதங்களில் இவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளது இதுவே முதல்முறை.…

Read More

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றுக்கு பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முன்னேறியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற மகளிர் பிரிவு ஒற்றையர் சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலென்காவும், ரஷ்ய வீராங்கனையான கமீலா ரகிமோவாவும் மோதினர். இதில் அரினா சபலென்கா 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் கமீலாவை எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற மகளிர் ஒற்றையர் சுற்று ஆட்டங்களில் எலீனா ஸ்விட்டோலினா (உக்ரைன்) 6-1, 6-1 என்ற கணக்கில் துருக்கி வீராங்கனை ஜெய்னப் சோன்மெஸ்ஸையும், ஜெர்மனியின் இவா லிஸ் 6-0, 6-3 என்ற கணக்கில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டீர்ன்ஸையும், கனடாவின் விக்டோரியா போக்கோ 6-1, 7-6(4) என்ற செட் கணக்கில் நியூஸிலாந்தின் லுலு சன்னையும், சுவிட்சர்லாந்தின் விக்டோரிஜா கோலுபிக்…

Read More

டாக்கா: வங்கதேசத்தில் டிசம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்நாட்டு இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனுஸ், அனைத்து கட்சிகளும் அவருக்கு முழு ஆதரவை வழங்கவில்லை என்றால் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். அதிகாரத்தை தக்கவைக்கும் வகையில் போராட்டத்தை தூண்டுவதற்கான ஒரு சூழ்ச்சியாக யூனுஸின் ராஜினாமா வதந்தி பார்க்கப்படுகிறது. வேலை இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் தலைமையிலான போராட்டம் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இயக்கமாக மாறி, ஆகஸ்ட் 5, 2024 அன்று பிரதமர் ஹசீனா டாக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் பதவியை நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் ஏற்றுக்கொண்டார். இந்த சூழலில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்…

Read More