Author: admin

சென்னை: ‘சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், போட்டியிட விரும்பும் தொகுதிகளில் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள்’ என மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளன. திமுக கூட்டணி உறுதியாகவும், ஒருங்கிணைந்தும் செயல்பட்டு வருகிறது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் பல கட்சிகளுடன் தொடர்ந்து மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், தேர்தல், கட்சிப் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. காலையில் நடைபெற்ற கூட்டத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட கட்சி அமைப்பு ரீதியிலான மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும்,…

Read More

புதுடெல்லி: சந்தைகள் ஒரு சிலருக்கு மட்டுமல்ல பலருக்கும் வேலை செய்ய வேண்டும் என்பதை இந்திய போட்டி ஆணையம் உறுதிப்படுத்துகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய போட்டி ஆணையத்தின் (CCI) 16-வது ஆண்டு தின விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது: உலகளவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் வர்த்தகத்தில் சுதந்திரமான சந்தை செயல்பாட்டை பாதுகாப்பதற்கு போட்டி கண்காணிப்பு அமைப்புகளுக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. சந்தை கொள்கையை ஜனநாயகப்படுத்துவதே தாராளமயமாக்கல் உணர்வை பாதுகாப்பதற்கான திறவுகோல். அந்த வகையில் 2002-ல் போட்டி சட்டம் இயற்றப்பட்டது சந்தை சார்ந்த இந்தியாவின் பயணத்தில் ஒரு மிக முக்கிய சீர்திருத்தமாகும். அதிகப்படியானவற்றை கட்டுப்படுத்தும் வேளையில் தாராளமயமாக்கல் உணர்வை பாதுகாப்பதில் போட்டி ஆணையத்தின் பங்கு முக்கியமானது. போட்டி சட்டமானது சந்தைகளில் போட்டியை ஊக்குவிப்பதையும், நிலைநிறுத்துவதையும், நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதையும், வர்த்தக சுதந்திரத்தை உறுதி செய்வதையும், போட்டியின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் நடைமுறைகளை…

Read More

பனாமா சிட்டி: இந்தியா அமைதியை விரும்பினாலும், பாகிஸ்தான் அதற்கு தயாராக இல்லை என்று பனாமா நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய குழுவுக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் நாடாளுமன்றக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான குழு, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடான பனாமாவில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து உரையாடியது. அப்போது பேசிய திருவனந்தபுரம் எம்பி சசி தரூர், “இந்தியா அமைதியாக இருக்க விரும்புகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக எல்லையின் மறுபக்கத்தில் உள்ள எங்கள் நண்பர்கள்(பாகிஸ்தான்) அதை விரும்புவதில்லை. அவர்கள் கட்டுப்படுத்தாத, நாங்கள் கட்டுப்படுத்தும் பிரதேசத்தை(காஷ்மீர்) அவர்கள் விரும்புவதாக நம்புவதால் அவர்கள் எங்களை மீண்டும் மீண்டும் தாக்குகின்றனர். இது இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு பகுதி. நாங்கள் மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட விலையை செலுத்த…

Read More

கால்நடை மருத்துவ படிப்புகள், கால்நடை சார்ந்த பி.டெக். படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பது அடுத்த வாரம் தொடங்குகிறது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி – ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன. சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி கடந்த 1903-ல் தொடங்கப்பட்டது. 122 ஆண்டுகளை கடந்த பாரம்பரிய கல்லூரியாக திகழ்கிறது. பி.டெக். படிப்புகள்: திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில்…

Read More

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரேவும், டெவான் கான்வேயும் அதிரடியாக விளையாடினர். ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 34 ரன்களை விளாசினார். கான்வே 35 பந்துகளில் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த உர்வில் படேல் 37 ரன்களும், ஷிவம் துபே 17 ரன்களும் விளாசினர். இதையடுத்து களம் புகுந்த டெவால்ட் பிரேவிஸ் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசித் தள்ளினார். 20-வது ஓவரின் கடைசி பந்தில் டெவால்ட் பிரேவிஸ்…

Read More

Last Updated : 23 May, 2025 10:34 AM Published : 23 May 2025 10:34 AM Last Updated : 23 May 2025 10:34 AM லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!

Read More

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தாஹில் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20-ம் தேதி வெளியாகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். அவர் இசையில் இம்மாதத் தொடக்கத்தில் வெளியான ‘போய் வா நண்பா’ பாடல் டிரெண்டானது. இந்நிலையில் இந்தப் படத்தின் 2 நிமிட ‘டிரான்ஸ்’ எனப்படும் டீஸர், வெளியாகியுள்ளது. தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா, ஜிம் சர்ப் ஆகியோரை அறிமுகப்படுத்தும் இந்த டீஸர் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து ராஷ்மிகா மந்தனா கூறும்போது “நாங்கள் பேரன்பை ஊற்றி இந்தப் பயணத்தை உங்களுக்காக நடத்தி இருக்கிறோம். குபேராவின் உலகத்துக்கு வருக” என்று தெரிவித்துள்ளார்.

Read More

சென்னை: பிரபல நடிகர் ராஜேஷ், உடல்​நலக் குறை​வால் சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 75. அவரது உடலுக்கு முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள் அஞ்​சலி செலுத்​தினர். ஆளுநர் உட்பட பலரும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​குடி​யில் கடந்த 1949-ம் ஆண்டு பிறந்​தவர் ராஜேஷ். 1972-79 கால​கட்​டங்​களில் சென்​னை​யில் ஆசிரிய​ராக பணி​யாற்​றி​னார். இதற்​கிடையே, 1974-ம் ஆண்டு கே.​பாலசந்​தரின் ‘அவள் ஒரு தொடர்​கதை’ படத்​தில் நடிக​ராக அறி​முக​மா​னார். பின்​னர் ராஜ்கண்ணு தயாரிப்​பில் கே.​பாக்​ய​ராஜ் இயக்​கிய ‘கன்னி பரு​வத்​திலே’ படம் மூலம் கதா​நாயக​னாக அறி​முக​மா​னார். பின்​னர் குணச்​சித்​திர வேடங்​களில் நடிக்​கத் தொடங்​கி​னார். ‘அந்த 7 நாட்​கள்’, ‘அச்​சமில்லை அச்​சமில்​லை’, ‘சிறை’, ‘சத்​யா’, ‘மகாந​தி’, ‘விரு​மாண்​டி’, ‘யானை’ உட்பட 150-க்​கும் மேற்​பட்ட படங்​களில் நடித்​துள்​ளார். தமிழ் தவிர, தெலுங்​கு, மலை​யாள படங்​களில் நடித்​துள்​ளார். சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்ள இவர், சில படங்​களில் பின்​னணி குரலும் கொடுத்​துள்​ளார். கடந்த சில ஆண்​டு​களாக தனது யூ-டியூப் சேனலில்,…

Read More

மர்மகோவா: 2047-ஆம் ஆண்டில் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ ஆக இருப்பதே நமது நோக்கம், இதற்கு நமது எல்லைகளில் அமைதி அவசியம். அதோடு, இதற்கு தனிநபர் வருமானம் எட்டு மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். கோவாவின் மர்மகோவா துறைமுகத்தில் இன்று 3 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம், இரண்டு துறைமுக மொபைல் கிரேன்களின் வணிக செயல்பாடு மற்றும் நிலக்கரி கையாளுதலுக்கான மூடப்பட்ட குவிமாடம் ஆகியவற்றைத் திறந்து வைத்து அர்ப்பணித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பின்னர் தனது உரையை நிகழ்த்தினார். அப்போது அவர், “2047-ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தேசமாக இருப்பதே நமது நோக்கமாகும். இதற்கு தனிநபர் வருமானத்தில் எட்டு மடங்கு அதிகரிப்பு தேவைப்படுகிறது. இதற்கு நமது எல்லைகளில் அமைதி நிலவுவது அவசியமாகும். போர் போன்ற சூழ்நிலைகள் இருந்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படாது. வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு அமைதி அடிப்படையாகும். அமைதி…

Read More

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகப் பேசுவதில், பாஜகவின் சூப்பர் செய்தித் தொடர்பாளராக சசி தரூர் திகழ்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் விமர்சித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் நாடாளுமன்றக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான குழு, அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் பயணம் மேற்கொண்டு வருகிறது. சசி தரூர் தலைமையிலான குழுவில், ஷாம்பவி, சர்பராஸ் அகமது, ஹரிஷ் பாலயோகி, ஷஷாங்க் மணி திரிபாதி, புபனேஸ்வர் காலிதா, மிலிந்த் தியோரா, தேஜஸ்வி யாதவ், தரஞ்சித் சிங் சாந்து உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரின் தொடக்கத்தில் இருந்து மத்திய அரசுக்கு ஆதரவாக சசி தரூர் பேசி வருகிறார். வெளிநாடுகளுக்குச் செல்லும் தூதுக்குழுவில் இடம்பெறக்கூடிய 4 எம்பிக்களின் பெயரை மத்திய அரசு…

Read More