Author: admin

பிஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த கவுதம் கண்ணபிரான் உட்பட 3 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவுகளாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ 2-ம்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புகளுக்கான 2-ம் தாள் தேர்வு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 48,459 பேர் எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதையடுத்து மாணவர்கள் என்ற…

Read More

ஜெனீவா: 38 வயதான செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச், ஒற்றையர் ஆடவர் பிரிவில் தனது 100-வது பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ரோஜர் ஃபெடரர் மற்றும் ஜிம்மி கான்னர்ஸ் ஆகியோர் தான் 100+ பட்டங்களை ஒற்றையர் பிரிவில் வென்றுள்ளனர். தற்போது அந்த வரிசையில் ஜோகோவிச் 3-வது வீரராக இணைந்துள்ளார். சனிக்கிழமை அன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஜெனீவா ஓபன் இறுதிப் போட்டியில் ஹூபர்ட் ஹர்காக்ஸை 5-7, 7-6(2), 7-6(2) என்ற செட் கணக்கில் வீழ்த்தி, தனது 100-வது பட்டத்தை ஜோகோவிச் வென்றார். சுமார் மூன்று மணி நேரம் ஐந்து நிமிடங்கள் இந்த ஆட்டம் களிமண் தரையில் நடைபெற்றது. 24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், கடைசியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் கடந்த ஆண்டு தங்கம் வென்றிருந்தார். அதன் பின்னர் அவர் பட்டம் வெல்லவில்லை. மியாமி மாஸ்டர்ஸ் மற்றும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அவர் தோல்வியை…

Read More

கலிபோர்னியா: உலகின் எந்த பகுதியிலும் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் மினிட்மேன்-3 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. அமெரிக்கா கடந்த 1970-ம் ஆண்டே மினிட்மேன் ஏவுகணை திட்டத்தை கொண்டு வந்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் படைத்தது. இந்நிலையில் மினிட்மேன்-3 ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று சோதனை செய்தது. இதில் ஆயுதம் இல்லை. இந்த ஏவுகணை மூலம், உலகின் எந்த பகுதி மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம். கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விண்வெளி தளத்திலிருந்து இந்த ஏவுகணை நேற்று ஏவப்பட்டது. இந்த ஏவுகணை மணிக்கு 15,000 மைல் வேகத்தில் பயணித்து, 4,200 கி.மீ தொலைவில் உள்ள மார்சல் தீவின் ரொனால்ட் ரீகன் ஏவுகணை பரிசோதனை மையத்துக்கு சென்றது. இந்த மார்சல் தீவு, மத்திய பசிபிக் கடலில் அமைந்துள்ள எரிமலைகள் அடங்கிய தீவுப்…

Read More

’தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் ‘தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்து கன்னட அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது, “ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது ‘உயிரே உறவே தமிழே’ என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்” என்று கூறியிருந்தார். இதற்கு சிவராஜ்குமாரும் தலையை ஆம் என்று அசைத்து ஆமோதித்தார். ஆனால் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு கன்னட ரக்‌ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி…

Read More

சென்னை: தமிழக அரசின் 7-வது மாநில நிதி ஆணையம் ஓய்வுபெறற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து ஆணையிட்டுள்ளது. இந்த ஆணையம், பல்வேறு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்து மாநில அரசு வழங்க வேண்டிய நிதிப்பகிர்வு குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்ட வகையில், தமிழக அரசு அமைத்துள்ள இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். அலுவல் சாரா உறுப்பினராக திருப்பூர் மாநகராட்சி மேயர் என்.தினேஷ்குமார், அலுவல் வழி உறுப்பினர்களாக நகராட்சி நிர்வாக இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், பேரூராட்சிகள் ஆணையர், உறுப்பினர் செயலராக நிதித்துறை துணை செயலர் பிரத்திக் தாயன் ஆகியோர்…

Read More

சென்னை: தங்கம் விலை இன்று (மே.21) அதிரடியாக பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்​தும் வரு​கிறது. கடந்த ஏப்​.22-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.74,320 ஆக உயர்ந்​து, புதிய உச்​சத்தை தொட்​டது. அதன்​பிறகு, தங்​கம் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்து வரு​கிறது. அந்த வகையில், சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை கடந்த 13-ம் தேதி (மே 13) காலை, மாலை என அடுத்தடுத்து 2 முறை உயர்ந்து அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. காலையில் பவுனுக்கு ரூ.120, மாலை​யில் ரூ.720 என மொத்​த​மாக, பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. அதன் பின்னர் சற்றே குறையத் தொடங்கியது. (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.68,660-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நீண்ட காலத்துக்குப் பின்னர் பவுன் ரூ.69,000-க்கும் கீழ் குறைந்தது. பின்னர் மீண்டும்…

Read More

மும்பை: மும்பையில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கும் சூழலில் அங்கு தேங்கிய மழை நீரை வெளியேற்றும் நிலையங்களை ஒழுங்காக பராமரித்து சரியாக இயக்காத ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது. ஹிண்ட்மடா, காந்தி மார்கெட், யெல்லோ கேட் மற்றும் சுன்னாபட்டி ஆகிய நான்கு இடங்களில் உள்ள மழைநீர் வெளியேற்று நிலையங்களின் ஒப்பந்ததாரர்களுக்கும் தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள், மேற்கூறிய பகுதிகளில் செயல்பட்டு வந்த மழைநீர் வெளியேற்ற நிலையங்கள் போதுமான அளவில் மழை நீரை வெளியேற்றும் திறன் கொண்டதாக இல்லை. இதனாலேயே மழை நீர் தேங்கி பரவலாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி ஒப்பந்ததாரர் நகர வளர்ச்சிக்கு ஏற்ப மழை நீர் வெளியேற்றும் நிலையத்தின் திறனை மேம்படுத்த வேண்டும். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. இதனால் அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது“ என்றார். மெட்ரோ…

Read More

தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் 137 பொறியியல் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், புத்தொழில் நிறுவன மேம்பாட்டுக்கான ‘ஜிக்சா’ தளத்தின் பயன்பாடு தமிழகத்தின் 2, 3-ம் நிலை நகரங்களுக்கும் கிடைக்கும் என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ‘உமாஜின் – 2024’ மாநாட்டில், தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ஐடிஎன்டி-ஹப்) உருவாக்கிய ‘ஜிக்‌சா’ எனும் தளத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கல்வி நிறுவனங்கள், தொழில் துறை, தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து, தமிழகத்தில் ஆழ்தொழில்நுட்பங்களுக்கான (டீப்டெக்) வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இந்த தளம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, தொழில் துறையிலும், அரசு நிர்வாகத்திலும் உள்ள சிக்கல்கள் குறித்த அறிக்கைகளை பெற்று, புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களை கொண்டு தீர்வு காண்பது, தரவுகளை பகுப்பாய்வு செய்து தேவையான…

Read More

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் சுற்றை ‘டாப் 2’ அணிகளில் ஒன்றாக நிறைவு செய்வதற்கான பொன்னான வாய்ப்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிட்டியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகளும் சீசனில் இருந்து வெளியேறிய அணிகளுடன் 13-வது லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன. இருப்பினும் ‘டாப் 2’ இடத்தில் எந்த அணி நிறைவு செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தொடர்கிறது. ஏனெனில், பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இரண்டு முறை கிடைக்கும். நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ‘டாப் 2’-வில் நிறைவு செய்வதற்கான பொன்னான வாய்ப்பை வழங்கி உள்ளது. குஜராத் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப்…

Read More

வாஷிங்டன்: தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் போன்ற, தொழிலதிபர் எலான் மஸ்க்கின் நிறுவனங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக அதிபர் சிரில் ராமபோசா திட்டமிட்டு உள்ளார். இருப்பினும், தென்ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான மஸ்க், வெள்ளை இன மக்களுக்கு எதிரான கொள்கைகளை அதிபர் ராமபோசா தொடர்கிறார் என்று குற்றச்சாட்டிகூறி வருகிறார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ராமபோசா தொடர்ந்து மறுத்து வருகிறார். இதனிடையே, நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்பை, ராமபோசா நேரில் சந்தித்து பேசினார். உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் இருந்து, அகதிகளாக அமெரிக்காவுக்கு வருகை தருவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்த சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.அப்போது, தென் ஆப்பிரிக் காவில் வசிக்கும் வெள்ளை இன மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து தென் ஆப்பிரிக்க அதிபரிடம் நேரடியாக அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இது தென் ஆப்பிரிக்க…

Read More