Author: admin

இதய செயலிழப்பு என்றும் அழைக்கப்படும் இதய செயலிழப்பு (சி.எச்.எஃப்), இதய தசை பலவீனமடைகிறது மற்றும் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான இரத்தத்தை பம்ப் செய்ய முடியாது. நிலை மீளக்கூடியதாகவோ அல்லது குணப்படுத்தவோ இல்லை என்றாலும், அதை உணவு, மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்துடன் நிர்வகிக்க முடியும். இதய செயலிழப்பு (சி.எச்.எஃப்) உள்ள பெரும்பாலான மக்கள் பல ஆண்டுகளாக ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துகிறார்கள், அவர்கள் தங்கள் இதயத்தை மிகுந்த அக்கறை செலுத்தினால், மருந்துகளைத் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் இதயத்தை சரிபார்க்க வேண்டியது அவசியம், குறிப்பாக நீங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், பருமனானவர்கள் என்றால், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் அல்லது உங்கள் குடும்பத்தில் இதய நோய் இயங்கினால். இது தவிர, உங்கள் இதயம் தோல்வியடைகிறது என்பதற்கான சில ஆரம்ப அறிகுறிகளும் உள்ளன, எனவே இவற்றைப் பாருங்கள் ..சோர்வு மற்றும் பலவீனம்இதய செயலிழப்பின் ஆரம்ப அறிகுறிகளில்…

Read More

புதுடெல்லி: ப​னாமா நாட்​டில் மோடி அரசின் முடிவு​களை காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் பாராட்​டி​யிருப்​ப​தற்கு அவரது கட்​சி​யில் மீண்​டும் எதிர்ப்பு கிளம்​பியுள்​ளது. காங்​கிரஸ் மூத்த தலை​வரும் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் மோடியை​யும் மத்​திய அரசை​யும் பாராட்டி பேசி வரு​கிறார். இதற்கு காங்​கிரஸ் கட்​சி​யில் கடும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது. என்​றாலும் சசி தரூர் அதனை கண்​டு​கொள்​வ​தில்​லை. ஆபரேஷன் சிந்​தூர் குறித்து வெளி​நாடு​களிடம் விவரிக்​கும் எம்​.பி.க்​கள் குழு​வில் காங்​கிரஸ் எதிர்ப்​பை​யும் மீறி சசி தரூர் இடம்​பெற்​றுள்​ளார். அவர் பனாமா நாட்​டில் பேசுகை​யில், “இந்​தியா – பாகிஸ்​தான் இடையி​லான எல்​லைக் கட்​டுப்​பாட்​டுக் கோட்டை (எல்​ஓசி) முதன்​முறை​யாக கடந்து சென்று தீவிர​வாத முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது. இதற்கு முன் நாம் இவ்​வாறு தாக்​குதல் நடத்​தி​ய​தில்​லை. 2019 புல்​வாமா தாக்​குதலுக்கு பிறகு நாம் சர்​வ​தேச எல்​லையை (ஐபி) கடந்து சென்​றோம். தற்​போது இரு எல்​லைகளை​யும் கடந்து சென்று பஞ்​சாபின் இதயப் பகு​தி​யில் தாக்​குதல்…

Read More

சென்னை: அங்கீகாரம் இல்லாத மருத்துவ கல்லூரிகளில் சேர, மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவ கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்துகிறது. தமிழகத்தில் அனைத்து மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக மருத்துவ கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் நடத்துகிறது. இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதவர்கள் பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கின்றனர். இந்த நிலையில், மருத்துவ கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு…

Read More

முலான்பூர்: ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் சுற்​றில் பஞ்​சாப் கிங்ஸ் அணியை 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி. ஐபிஎல் தொடரில் முலான்​பூரில் நேற்று நடை​பெற்ற பிளே ஆஃப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் – ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி​கள் மோதின. டாஸ் வென்ற ஆர்​சிபி அணி​யின் கேப்​டன் ரஜத் பட்​டி​தார் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். அந்த அணி​யில் நூவன் துஷாரா நீக்​கப்​பட்டு ஜோஷ் ஹேசில்​வுட் சேர்க்​கப்​பட்​டார். பஞ்​சாப் அணி​யில் ஒரே ஒரு மாற்​றம் இருந்​தது. மார்கோ யான்​சனுக்கு பதிலாக அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் சேர்க்​கப்​பட்​டார். பேட்​டிங்கை தொடங்​கிய பஞ்​சாப் அணி, ஆர்​சிபி​யின் பந்​து​வீச்சை தாக்​குப்​பிடிக்க முடி​யாமல் மளமளவென விக்​கெட்​களை பறி​கொடுத்​தது. பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்​களில் யாஷ் தயாள் பந்​தை, கவர் திசை​யில் அடிக்க கிருணல் பாண்​டி​யா​விடம் எளி​தாக கேட்ச் ஆனது. மற்​றொரு…

Read More

வாஷிங்டன்: உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரி உயர்வை அறிவித்தார். அவரின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடைவிதித்தது. அதை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில், வர்த்தக நீதிமன்றத்தின் தடை உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம். சீனா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் என உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு வரி உயர்வை ட்ரம்ப் அறிவித்தார். அவரது இந்த வரி விதிப்பு கொள்கை ரீதியான முடிவு உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு அமெரிக்காவில் உள்நாட்டிலேயே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இது சட்டவிரோதமானது என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மன்ஹாட்டன் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ட்ரம்ப் வரிவிதிப்புக்கு எதிரான மனு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பின்…

Read More

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, வனிதா ஃபிலிம் புரொடக் ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம், ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. இதை வனிதா இயக்கி நாயகியாக நடித்துள்ளார். ராபர்ட், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.ராஜபாண்டி – விஷ்ணு ராமகிருஷ்ணன் – டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு காந்த் தேவா இசையமைத்துள்ளார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் இயக்குநர் வசந்தபாலன், அம்பிகா, பாத்திமா பாபு, மதியழகன், ஷகிலா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். வசந்த பாலன் பேசும்போது, “இங்கு பெண்களுக்கானக் குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. திரைப்படத் துறையில் இருந்து கொண்டு வனிதா நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம்,…

Read More

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியை தாக்​கிய​தில் பாதிக்​கப்​பட்ட இரு மாணவி​களுக்கு தலா ரூ.2 லட்​சம் இழப்​பீடு வழங்​கு​மாறு தமிழக அரசுக்​கு, மாநில மனித உரிமை​கள் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் சின்​ன​சேலம் பகு​தி​யில் உள்ள அரசு மகளிர் மேல்​நிலைப் பள்​ளி​யில் ஆசிரியையாகப் பணி​யாற்றி வருபவர் சாந்​தி. இவர் பள்ளி கழிப்​பறைக்​குச் சென்​ற​போது கதவு மூடப்​ப​டா​மல் இருந்​ததை பார்த்த 6-ம் வகுப்பு மாணவி​கள், கழிப்​பறைக் கதவை மூடி​உள்ளனர். சிறிது நேரம் கழித்து கதவை திறந்து விட்ட மாணவி​களை ஆசிரியை சாந்தி தகாத வார்த்​தைகளால் திட்​டி​யதுடன், சக மாணவி​கள் முன்​பாக அடித்​துள்​ளார். இதில் மாணவி​களின் உடல் நலம் பாதிக்​கப்​பட்​டது. இது தொடர்​பாக மாவட்​டக் கல்வி அதி​காரி​யிடம் புகார் அளித்​தும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்​காத நிலை​யில், பாதிக்​கப்​பட்ட மாண​வி​யின் தந்தை ஆறு​முகம் மனித உரிமை​கள் ஆணை​யத்​தில் புகார் அளித்​தார். இந்​தப் புகாரை விசா​ரித்த ஆணைய உறுப்​பினர் வி.கண்​ண​தாசன், விழுப்​புரம் மாவட்ட கல்வி அதி​காரியை, சின்​ன​சேலம்…

Read More

புதுடெல்லி: ஒழுங்குமுறை அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் செயல்முறைகளில் குறைவான வெளிப்படைத்தன்மை ஆகியவை நிச்சயமற்றத் தன்மையை உருவாக்கி, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) சரியான நேரத்தில் முடிவடைவதை பாதிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார். மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தற்போது அமெரிக்காவில் அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும்வேளையில் நிதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய போட்டி ஆணையத்தின் (Competition Commission of India) 16-வது ஆண்டு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர், இந்தியாவின் சுதந்திரமான மற்றும் நியாயமான சந்தையின் முக்கியத்துவத்தையும், அது எவ்வாறு முழுமையான பொருளாதாரத்துக்கு உதவும் என்பதையும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது: “ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட, வேகமான பொருளாதாரத்தில் ஒழுங்குமுறை அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுக்கும். வெளிநாடுகளுடன் நாம் சுதந்திர வர்த்தகத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் இந்த வேளையில், அவை…

Read More

புதுடெல்லி: இந்துத்துவா சித்தாந்தவாதியான விநாயக் சாவர்க்கர் மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் ரத்த சம்பந்தமான உறவினர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். சாவர்க்கரின் பேரன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்ததை அடுத்து, புனே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளார். கோட்சேவுடன் தன்னை இணைக்கும் தனது தாய்வழி வம்சாவளியை சத்யாகி சாவர்க்கர் வேண்டுமென்றே மறைத்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். லண்டனில் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சாவர்க்கர் குறித்து பேசியதற்காக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கை சத்யாகி சாவர்க்கர் தொடர்ந்தார். சாவர்க்கர் எழுதிய புத்தகத்தில், ஒரு முறை அவரும் சில நண்பர்களும் சேர்ந்து முஸ்லிம் நபரை அடித்ததாகவும், அதனை அவர்கள் மகிழ்ச்சியாக உணர்ந்ததாகவும் சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக சத்யாகி சாவர்க்கர் குற்றம்சாட்டியிருந்தார். அதுபோன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை,…

Read More

Last Updated : 21 May, 2025 07:08 AM Published : 21 May 2025 07:08 AM Last Updated : 21 May 2025 07:08 AM லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!

Read More