சென்னை: நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டு்ப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளை வெகுவாக பாதிக்காது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். சென்னை தீவுத்திடலில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்துக்கான பூர்வாங்கப் பணிகளை நேற்று காலை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சென்னை, தீவுத்திடல், சத்தியவாணி முத்து நகரில் 4 தளங்களுடன் 19,464 சதுர அடி பரப்பளவில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், துறை செயலர் சத்யபிரத சாஹூ உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு வழங்கும் கடன், நகைக்கடன், மகளிர் சுயஉதவிக் கடன், விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதையும் கடந்து கால்நடைக்கடன் வழங்குவதற்காக, “விவசாயிகளுக்கு பலம் கால்நடைகள்” அவற்றை பராமரிப்பதற்கு, புதிதாக வாங்குவதற்கு என கடன்கள் வழங்கப்பட்ட உள்ளது அதனை அவர்கள் உரிய காலத்தில்…
Author: admin
சென்னை: சென்னையில் இன்று (மே 20) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,710-க்கும், பவுனுக்கு ரூ 360 குறைந்து, ஒரு பவுன் ரூ.69,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் விலை ரூ.70,000-க்கு கீழாக மீண்டும் சரிந்துள்ளது நகை வாங்குவோருக்கு நிம்மதி தந்ததுள்ளது. கடந்த சில வாரங்களாக சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இன்று (மே 20) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,710-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு பவுன் ரூ.69,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், ஒரு கிலோ…
கருத்துகள் (()வரிசைப்படுத்துதல்: புதியதுமேம்பட்டதுபழமையானதுவிவாதிக்கப்பட்டதுடவுன் வாக்களித்தார்மறைவுகள்எண்ணிக்கை: 3000Xஆபாசமான, அவதூறான அல்லது அழற்சியான கருத்துக்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும், தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடாதது, பெயர் அழைப்பது அல்லது எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக வெறுப்பைத் தூண்டுகிறது. கருத்துகளை நீக்க எங்களுக்கு உதவுங்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவர்களை தாக்குதல் செய்வதன் மூலம். உரையாடலை சிவில் வைத்திருக்க ஒன்றாக வேலை செய்வோம்.மதிப்பாய்வு செய்த முதல் நபராக இருங்கள்.சரிபார்ப்பு மின்னஞ்சலை நாங்கள் உங்களுக்கு அனுப்பியுள்ளோம். சரிபார்க்க, செய்தியில் உள்ள இணைப்பைப் பின்தொடரவும்
புதுடெல்லி: ‘‘தேஜஸ் போர் விமானம் உட்பட ராணுவ தளவாட கொள்முதலில், ஒரு ஒப்பந்தமும் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றப்படுவதில்லை’’ என சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பேசிய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் வேதனை தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றியது. தீவிரவாத முகாம்களையும், பாக். விமானப்படை தளங்கள் மீதும் இந்திய போர் விமானங்கள் குண்டு வீசின. இந்தியா மீதான தாக்குதலையும், வான் பாதுகாப்பு படைப் பிரிவுகள் வெற்றிகரமாக முறியடித்தன. இந்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) ஆண்டு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் விமானப்படை தளபதி ஏ.பி.சிங் கலந்து கொண்டு பேசியதாவது: ராணுவத் தளவாட கொள்முதல்கள் குறித்த நேரத்தில் நிறைவேற்றப்படாமல் இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. உள்நாட்டு தயாரிப்புகள் உட்பட ஒரு ஒப்பந்தத்தில் கூட குறித்த காலத்தில் ராணுவத் தளவாடங்கள் விநியோகிக்கப்பட்டதாக எனக்கு நினைவில்லை. இது குறித்து…
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு, ஜூன் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 5.38 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்த திட்டத்தின்கீழ் முதல் 3 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டில் ரூ.25.80 கோடியில் 15 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்க பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் இயக்குநரகம் முடிவு செய்தது. முதல்கட்டமாக 30,191 மையங்கள் மூலமாக 8 திருநங்கைகள் உட்பட…
முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை எளிதில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறி உளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் தெரிவித்தது. “பந்துவீச்சை பொறுத்தவரை நாங்கள் எங்கள் திட்டங்களில் தெளிவாக இருந்தோம். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆடுகள சூழலை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். சுயாஷ் சர்மா சிறப்பாக விளாடியாடினார். அவரது லைன் மற்றும் லெந்த் அருமை. ஸ்டம்புகளை டார்கெட் செய்வதுதான் சுயாஷின் பணி. ஒரு கேப்டனாக அவரை நான் குழப்ப விரும்பவில்லை. அவருக்கு ஐடியா கொடுப்பது மட்டுமே என் பணி. அவர் ரன் கொடுத்தாலும் பரவா இல்லை. அவரது கூக்லிகளை ஆடுவது மிகவும் சிரமம். எங்கள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் விளையாடுவதை டக்-அவுட்டில் இருந்து பார்ப்பது கண்களுக்கு விருந்து. அணிக்கு சிறந்த தொடக்கத்தை அவர் வழங்குகிறார். ஆர்சிபி ரசிகர்களுக்கு நன்றி…
இஸ்லாமாபாத்: இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதற்காக இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை அதிகரிக்க வேண்டும் என்று 49% பாகிஸ்தானியர்கள் தெரிவித்திருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இம்மாதம் 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. 9 பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இந்த சம்பவத்தை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே ராணுவ மோதல் ஏற்பட்டு, 4 நாட்களுக்குப் பிறகு அது முடிவுக்கு வந்தது. ராணுவ மோதல் மே 10ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில், மே 12 முதல் 18 வரை பாகிஸ்தான் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நூறு பேரிடம் சர்வே…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களிடையே வரவேற்பு உள்ளது. இந்நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என இரண்டு பகுதிகளாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தற்போது, ஜூனியர் சீசன் 10-ன் ‘கிராண்ட் பினாலே’ நிகழ்ச்சி, நேரு விளையாட்டு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், டைட்டில் வின்னராக காயத்ரி அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசை நஸ்ரின் வென்றார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 3-வது இடத்தை சாரா சுருதி, ஆத்யா என இருவர் பிடித்தனர். அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இவர்களுக்கு நடிகர் கமல்ஹாசனும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து பரிசுகளை வழங்கினர். ‘தக் லைஃப்’ படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷனுக்காக இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இருவரும் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
சென்னை: தமிழ்மொழியின் மேம்பாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் தமிழ் அறிஞர்கள் கலந்துரையாடும் ‘அறிஞர்கள் அவையம்’ என்ற புதிய திட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கிவைத்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் ‘அறிஞர்கள் அவையம்’ நிகழ்வின் தொடக்கவிழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு, ‘அறிஞர்கள் அவையம்’ திட்டத்தின் பிரத்யேக இலச்சினையை அறிமுகப்படுத்தி திட்டத்தை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தமிழ் மொழி மற்றும் அதன் சிறப்புகளை அனைத்து துறைகளிலும் உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் வல்லுநர்களின் கருத்துகளை பெற்று திட்டங்களாக நிறைவேற்ற உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் கலந்தாய்வு கூட்டம் ‘அறிஞர்களின் அவையம்’ என்ற திட்டத்தின் வழியாக நடத்தப்படும் என்று, சட்டப் பேரவையில் தமிழ்வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ஒரே…
மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தில் சமீப நாட்களாக பெய்த தொடர் மழையால், பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஊட்டி, குன்னூர், மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்கு நாடு, நஞ்சநாடு உட்பட 15 கூட்டுறவு ஆலைகளும், ஏராளமான தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. நடப்பாண்டு தொடக்கத்தில் போதிய மழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டு, தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டது. கூட்டுறவு மற்றும் தனியார் தேயிலை தொழிற் சாலைகளில் தேயிலைத் தூள் உற்பத்தி பல மடங்கு குறைந்தது. தொழிலாளர் கூலி, மின் கட்டணம், உற்பத்திச் செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு சில தனியார் தொழிற்சாலைகள், தேயிலை உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தின. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து கன மழை பெய்தது. அதேவேளையில் ஓரளவுக்கு வெப்பமான காலநிலையும் இருந்ததால், தேயிலை உற்பத்தி அதிகரித்தது. இதனால்…
