Author: admin

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தத் போட்டிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027-ம் ஆண்டு சுழற்சியில் இந்தியாவுக்கு முதல் தொடராக அமைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு நேற்று மும்பையில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 23 வயதான இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 18 பேர் கொண்ட இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். உடற்தகுதி மற்றும் பணிச் சுமையை கருத்தில் கொண்டு ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக நியமிக்கப்படவில்லை என அஜித்…

Read More

இஸ்லாமாபாத்: இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரியை இந்தியா வெளியேற்றியதை அடுத்து, தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அவரை 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது. உளவு பார்த்ததன் அடிப்படையிலேயே அவர் வெளியேற்றப்பட்டதாகவும், கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது நடவடிக்கை என்றும் இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, மே 13 அன்று, உளவு பார்த்த குற்றத்தின் கீழ் பாகிஸ்தான் அதிகாரி ஒருவரை இந்தியா வெளியேற்றியது. இந்தியாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஒரு இந்திய அதிகாரியை வெளியேற்றவதற்கான உத்தரவை பாகிஸ்தான் பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தின் அறிக்கையின்படி, “இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியை, முரணான…

Read More

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், சுமார் ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 2016-ம் ஆண்டு தனது 41-வது வயதில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது ஐம்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஜுலை 5-ம் தேதி, சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், இசை நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது. இதில் அவர் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களும் பின்னணி பாடகர்களும் பங்கேற்கின்றனர். வெல்பஃர் கோர் கமிட்டியுடன் இணைந்து ஏசிடிசி நிறுவனம் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறது.

Read More

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், 15-வது ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு தொடங்கியது. இதில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது. 30 சங்கங்கள் வெளிநடப்பு: போக்குவரத்துத் துறை செயலாளர் க.பணீந்தர்ரெட்டி, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர் உள்ளிட்ட 8 மேலாண் இயக்குநர்கள், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், தொமுச, சிஐடியு உள்ளிட்ட 85 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், 2023-ம் ஆண்டு செப்.1-ம் தேதி முதல் ஒப்பந்தம் அமலானாலும், 2024-ம் ஆண்டு செப்.1-ம் தேதி முதலே ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு, ஏஐடியுசி,…

Read More

புதுடெல்லி: இந்திய மாணவர்களுக்கு முன்புபோல் இனி வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது. தேனிலவு முடிந்துவிட்டது என்று குர்கானைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி தெரிவித்துள்ளார். இவர், ஜிஎஸ்எஸ் ஆக்ஸலரேட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஆவார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: சர்வதேச மாணவர்களின் கனவான அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு என்பது இல்லை. அதுவும் முன்பைப் போல இந்தியா மாணவர்கள் அதுபோன்ற நாடுகளில் மிகவும் எளிதில் வேலைவாய்ப்பை பெற்றுவிட முடியாது. தேனிலவு முடிந்துவிட்டது. எனவே, கோடிக்கணக்கில் கொட்டி படிக்க வைக்கும் பெற்றோர் இதனை ஒரு முறைக்கு இருமுறை நன்கு யோசித்து பிறகே முடிவெடுக்க வேண்டும். பொறியியல் மாணவர்கள் அதிலும் குறிப்பாக ஐஐடி மாணவர்கள், எளிதாக ஹேக் செய்து, அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்று, 2 லட்சம் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1.75 கோடி சம்பளத்தில் தொழில்நுட்ப வேலையை பெற்றனர். ஆனால் இந்த ஹேக்…

Read More

கிரேட் டேன்ஸ் பிரபலமாக “மென்மையான ராட்சதர்கள்” என்றும் அழைக்கப்படுகிறது, சரியாக! அவற்றின் பெரிய அளவு மற்றும் சக்திவாய்ந்த கட்டமைப்பை மீறி, கிரேட் டேன்ஸ் அமைதியாகவும், பாசமாகவும், இயற்கையில் நட்பாகவும் இருப்பதாக அறியப்படுகிறது- குறிப்பாக குழந்தைகளுடன். இது பெரிய வீடுகள் அல்லது பண்ணைகளில் வசிக்கும் குழந்தைகளுடன் உள்ள குடும்பங்களுக்கு அவர்களுக்கு ஒரு நல்ல கூடுதலாக அமைகிறது. அவற்றின் இயல்பான இயல்பு என்பது அவர்கள் எளிதில் கிளர்ந்தெழுந்ததில்லை, இது ஒரு குழப்பமான குடும்பத்திற்கு ஏற்றதாக அமைகிறது. சரியான பயிற்சி மற்றும் ஆரம்பகால சமூகமயமாக்கலுடன், பெரிய டேன்ஸ் மனித தோழமையை விரும்பும் விசுவாசமான, மென்மையான குடும்ப உறுப்பினர்களாக மாறுகிறார்.

Read More

ஹைதராபாத்: பிஆர்எஸ் கட்சியை பாஜக உடன் இணைக்க தொடர் முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதா குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உளள்து. “நான் என் அப்பாவுக்கு நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதுகிறேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? நான் எழுதிய கடிதம் எப்படி பொது வெளியில் கசிந்தது. அந்த செயலை செய்தது யார்? அதை ஏன் இதுவரை கண்டறியவில்லை? ஆனால், நீங்கள் ஏன் உங்கள் துணிச்சலை என்னிடம் வெளிப்படுத்துகிறீர்கள். சிலர் கேசிஆரின் (கே.சந்திரசேகர ராவ்) பெயரை சொல்லி என்னிடம் தவறான மெசேஜ்களை பகிர்ந்தனர். அது வேதனை தருகிறது. பிஆர்எஸ் கட்சியை பாஜக உடன் இணைக்கும் முயற்சியை கட்சிக்குள் இருப்பவர்கள் முன்னெடுத்துள்ளார்கள். நான் சிறையில் இருந்தபோது இது ஆரம்பமானது. அதை நான் அப்போதும் எதிர்த்தேன். இப்போதும் எதிர்க்கிறேன். என்னிடம் அது குறித்த பேச்சை கொண்டு வந்தவர்களிடம்…

Read More

கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் உலகத் தரவரிசையில் 65-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 23-வது இடத்தில் உள்ள ஜப்பானின் யுஷி தனகாவுடன் மோதினார். இதில் ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சர்வதேச பாட்மிண்டன் தொடரில் ஸ்ரீகாந்த் 6-வது வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ளார். கடைசியாக அவர், 2019-ம் ஆண்டு இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் 2-வது இடம் பிடித்திருந்தார்.

Read More

புதுடெல்லி: பாகிஸ்தானின் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர், தீவிர மதக் கண்ணோட்டத்துடன் இயங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார் நெதர்லாந்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெய்சங்கர், “பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகள். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், இந்துக்கள் என உறுதிப்படுத்திய பிறகே அந்த சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். 26 பேரின் மத நம்பிக்கையை உறுதிப்படுத்திய பிறகு, அவர்களது குடும்பங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டனர். இது மாநிலத்தின் சுற்றுலாவுக்கு தீங்கு விளைவிப்பதற்காகவும், வேண்டுமென்றே மத முரண்பாட்டை உருவாக்குவதற்காகவும் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் தலைமை, குறிப்பாக அதன் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர், தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்.” என்று அவர் கூறினார். இந்திய வெளியுறவு அமைச்சர் தற்போது நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, பாகிஸ்தான் ராணுவத்…

Read More

கன்னட மொழி குறித்த தனது பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசன் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக நடந்த ஆலோசனையின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் நரசிம்மலு கூறியது: “பல கன்னட அமைப்புகள் கமல்ஹாசனின் படத்தை தடை செய்யக் கோரிக்கை வைத்துள்ளன. எனவே, நாங்கள் அவர்களை சந்தித்து இந்த விஷயத்தைப் பற்றி ஆலோசித்தோம். மேலும் கமல்ஹாசன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். அவர் செய்தது தவறு என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மேலும் அவரைச் சந்தித்துப் பேசவும் முயற்சிக்கிறோம். கமல்ஹாசன் மீது எங்களுக்கு எந்த அனுதாபமும் இல்லை. இன்று அல்லது நாளை அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கன்னட அமைப்புகளுக்கு ஆதரவு கொடுத்து, கடுமையாகப் போராடுவோம். அவர் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் எந்தச் சூழ்நிலையிலும்…

Read More