நாட்டிங்காம்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 565 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 88 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 498 ரன்கள் குவித்தது. ஸாக் கிராவ்லி 124, பென் டக்கெட் 140, ஜோ ரூட் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஆலி போப் 169, ஹாரி புரூக் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 96.3 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 565 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆலி போப் 171, ஹாரி புரூக் 58, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜேமி ஸ்மித் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஜிம்பாப்வே அணி…
Author: admin
மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் 2 மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது. இதற்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இப்போரை நிறுத்த உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறார். என்றாலும் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் 2 மணி நேரம் பேசினார். அப்போது ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இரு தலைவர்களும் விரிவாக விவாதித்ததனர். இதன் பிறகு செய்தியாளர்களிடம் புதின் கூறுகையில், “மூன்று ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுடன் இணைந்து பணியாற்ற ரஷ்யா தயாராக…
‘சக்திமான்’ படத்தை ரன்வீர் சிங் தயாரிக்கவிருப்பதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ரன்வீர் சிங் நடிக்கவிருந்த சில படங்கள் திட்டமிடப்படி தொடங்கப்படவில்லை. மேலும், அப்பாவானதால் அவரும் குழந்தையுடன் நேரம் செலவழித்து வந்தார். தற்போது தான் மீண்டும் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார் ரன்வீர் சிங். ஆதித்யா தர் இயக்கி வரும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே ‘சக்திமான்’ தொடரின் உரிமையினை கைப்பற்றி ரன்வீர் சிங் தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த தொடரின் உரிமையினை கைப்பற்றி இருப்பதாகவும், இது தொடர்பாக முகேஷ் கண்ணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள். இது வைரலாக பரவியதால் ரன்வீர் சிங் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. “புதிய சூப்பர் ஹீரோ தொடரை தயாரிக்க ரன்வீர் சிங் உரிமைகள் வாங்கியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மையில்லை. தற்போது ஆதித்யா தர் இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து ‘டான் 3’…
திருச்சி: “வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு அளிக்காதது எங்களுக்கு வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. தமிழகத்தின் நலன் கருதி நாங்கள் அதை கடந்து செல்வோம். கூட்டணியில் தொடருவோம்” என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1978-ம் ஆண்டு தனது 34- வது வயதில் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் சிறப்பாக பணியாற்றினார். நதிநீர் இணைப்பு குறித்து யாரும் சிந்திக்காத காலங்களில் தனிநபர் மசோதாவை கொண்டு வந்தவர் வைகோ. மே 1-ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை, நெய்வேலி என்.எல்.சி., தனியார்மயமாக்கலை தடுத்தது, ரயில்களில் டி.டி.ஆருக்கு படுக்கை வசதி, நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க குரல் கொடுத்தது, ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்தது என பல்வேறு செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியவர். கடந்த 1978-ம் ஆண்டு முதன்முதலாக…
நியூயார்க் நகரத்தை இந்திய கலாச்சாரத்தின் துடிப்பான கொண்டாட்டமாக மாற்றியதால், அவரது 400 பேர் கொண்ட பராட் ஒரு சபியாசாச்சி உடையணிந்த மணமகள் வோல் ஸ்ட்ரீட்டை நிறுத்திக் கொண்டார். மணமகளின் சிவப்பு லெஹங்கா, தங்க ஸாரி, கதிர்வீச்சு பாரம்பரியம் மற்றும் ஆடம்பரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, மணமகனின் தந்த ஷெர்வானியை முழுமையாக பூர்த்தி செய்கிறது. சின்னமான இந்திய திருமணங்களுக்கு வரும்போது, சில வடிவமைப்பாளர்கள் சபியாசாச்சி முகர்ஜியை விட ஆடம்பரத்தை சிறப்பாகக் கைப்பற்றுகிறார்கள். சமீபத்தில், நியூயார்க் நகரத்தின் வீதிகள், குறிப்பாக புகழ்பெற்ற வோல் ஸ்ட்ரீட், இந்திய நேர்த்தியின் ஓடுபாதையாக மாற்றப்பட்டன, ஏனெனில் 400 பேர் கொண்ட பராட் தலைகளைத் திருப்பி போக்குவரத்தை நிறுத்தினார். இந்த மகிழ்ச்சியான காட்சியின் இதயத்தில்? ஒரு மணமகள் ஒரு மூச்சடைக்கக்கூடிய சிவப்பு சபியாசாச்சி லெஹங்கா அணிந்திருந்தார், அது நிகழ்ச்சியைத் திருடியது.இப்போது வைரஸ் வீடியோ, சலசலப்பான நிதி மாவட்டம் பாலிவுட் மற்றும் பாப் பீட்ஸின் உயர் ஆற்றல் கலவையில் நடனமாடும் ஒரு கூட்டத்தினரால் வண்ணமயமான…
திருவனந்தபுரம்: கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் இடுக்கி, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று சிவப்பு எச்சரிக்கையும், மீதமுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதனால் பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்களின்படி, “கேரளா மற்றும் லட்சத்தீவுப் பகுதியில் அடுத்த 2-3 நாட்களுக்கு கீழ் வெப்பமண்டல மட்டங்களில் வலுவான மேற்கு காற்று தொடர வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால், மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கேரளாவில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல மே 31, ஜூன் 1 மற்றும் 2, 2025 ஆகிய தேதிகளில் பல மாவட்டங்களில் கனமழை…
புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணிக்கான புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இன்று அறிவித்தார். 25 வயதான ஷுப்மன் கில் வரவிருக்கும் தொடரில் இந்தியாவை கேப்டனாக வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை வழிநடத்தும் இளம் வீரர் இவராவார். அதேபோல இந்தத் தொடரில் புதிய துணை கேப்டனாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது ஜஸ்பிரித் பும்ராவிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. அதே நேரத்தில் கருண் நாயர் மற்றும் சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் டெஸ்ட் ஓய்வுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள புதிய…
சீனாவும், பாகிஸ்தானும் வர்த்தக தொடர்புகள், முதலீட்டு விவகாரங்களில் ஆழமான நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இதன்மூலம் சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை விரிவாக்கம் செய்ய வியூகம் வகுத்திருப்பதாகவும் தெரிகிறது. கடந்த மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டதாக இந்தியா விளக்கமளித்தது. ஆனாலும், பாகிஸ்தான் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இந்நிலையில், இரு நாடுகளும் மே.10-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன. சீனாவுடன் திடீர் நெருக்கம்: எங்கே அணு ஆயுதப் போராக மாறிவிடுமோ என்ற அச்சத்தின் விளிம்பு…
‘96’ பாகம் 2-ல் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு இயக்குநர் பிரேம் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். ’96’ இரண்டாம் பாகத்துக்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே, இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பிரேம் குமார். அதில், “இது வழக்கம் போல் ஒரு தவறான செய்தி. ’96’ படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும்தான் ’96’ 2 எடுக்க முடியும். நடிகர் பிரதீப் ரங்கநாதனை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு. அதற்கும் ’96 பார்ட் 2 படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாளுக்கு நாள் பெருகி வரும் தீங்கு விளைவிக்கும் இந்த பொய்ச் செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது. இதன் மூலம்…
சென்னை: கொலைக் குற்றச் சம்பவங்களில், வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று போலி குற்றவாளிகளைக் கைது செய்யும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி மு. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆங்காங்கே உள்ள காவல் துறையினர் அரும்பாடுபட்டு உண்மைக் குற்றவாளிகளைப் பிடிப்பது சகஜமான ஒன்றாகும். ஆனால் தமிழ் நாட்டில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், கொலைக் குற்ற வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உண்மைக் குற்றவாளிகளை தப்பவிட்டுவிட்டு, அவசர கதியில் குற்றங்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் போக்கு நடைபெற்று வருவது கொடூரத்தின் உச்சமாகும். தமிழகத்தில் ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருட்கள் கடத்தல், சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை…
