கொடைக்கானலில் இலங்கை நெய் மிளகாய் ஆப் சீசன் என்பதால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. 120 கிராம் ரூ.250-க்கு விற்பனையாகிறது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் கொண்டு வந்த ‘நெய் மிளகாய்’ திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தாண்டிக்குடி, ஏற்காடு, ஊட்டி மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் இந்த சாகுபடி நடைபெறும். பம்பரம் போன்று தோற்றமளிக்கும் இந்த மிளகாய், நாட்டு மிளகாயை விட காரம் அதிகம் கொண்டது. ஒரு மிளகாய் அதிகபட்சம் 10 கிராம் வரை எடை இருக்கும். குழம்பில் போட்டால் நெய் போன்று வாசனை கம கமக்கும். மழைக் காலமே இதன் சீசன். தற்போது கொடைக்கானலில் நெய் மிளகாய் சீசன் இல்லாததால் வரத்து குறைந்து விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு பாக்கெட் (120 கிராம்) ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறும் போது,…
Author: admin
கலிஃபோர்னியா இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் அன்றாட உணவில் சியா விதைகளை இணைக்க அறிவுறுத்துகிறார். இந்த விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவை, செரிமானத்திற்கு உதவுகின்றன மற்றும் மலச்சிக்கலை நீக்குகின்றன. சியா விதைகளும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இருதய நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. ஒட்டுமொத்த நல்வாழ்வில் குடல் ஆரோக்கியம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது, செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி முதல் மனநிலை மற்றும் மன தெளிவு வரை அனைத்தையும் பாதிக்கிறது. ஆச்சரியமில்லை, இது பெரும்பாலும் இரண்டாவது மூளை என்று குறிப்பிடப்படுகிறது. இன்றைய காலங்களில், உணவு பெரும்பாலும் கவனிக்கப்படாதபோது, மற்றும் அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் செயற்கை சேர்க்கைகள் மைய நிலைக்கு வரும்போது, ஒருவர் எவ்வாறு குடல் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்கிறார்? கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட ஒரு முன்னணி இரைப்பை குடல் நிபுணர்…
ஸ்ரீநகர்: பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தெரிவித்தார். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக பாரம்பரியத்திலிருந்து விலகி பஹல்காமில் ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்துக்கு முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தலைமை தாங்கினார். ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பொறுப்பேற்றதிலிருந்து கோடைகால தலைநகர் ஸ்ரீநகர் அல்லது குளிர்கால தலைநகர் ஜம்முவுக்கு வெளியே அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை. இதுகுறித்து வெளியிடப்பட்ட முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில், “ தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட பஹல்காமில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. இது, ஒரு வழக்கமான நிர்வாக பயிற்சி மட்டுமல்ல. கோழைத்தனமான தீவிரவாத செயல்களால் நாங்கள் அச்சுறுத்தப்படவில்லை என்பதற்கான தெளிவான செய்தி. மக்களின் தைரியத்துக்கு வணக்கம் செலுத்தி பயத்தை பின்னுக்குத் தள்ளுவதை நோக்கமாக கொண்டது இந்த நடவடிக்கை. ஜம்மு-காஷ்மீர் உறுதியாகவும், வலுவாகவும், அச்சமின்றியும் நிற்கிறது ” என்று…
கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 65-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 18-ம் நிலை வீரரான பிரான்ஸின் டோமா ஜூனியர் போபோவை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் 24-22, 17-21, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரை இறுதியில் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யுஷி தனகாவுடன் மோதுகிறார். கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 22-24, 13-21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஜியாங் ஷென் பாங், வெய் யா ஷின் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
Last Updated : 21 May, 2025 12:40 AM Published : 21 May 2025 12:40 AM Last Updated : 21 May 2025 12:40 AM லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!
‘மாமன்’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பால் மிகவும் நெகிழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் சூரி. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மாமன்’. இப்படத்தின் கதையை சூரிதான் கொடுத்துள்ளார். இப்படம் தமிழகத்தில் ரூ.25 கோடி வசூலை கடந்திருக்கிறது. இந்த வரவேற்பை முன்னிட்டு தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் சூரி. அந்தப் பதிவில் சூரி, “உண்மையான வெற்றி என்றால்… உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மனதார மதிப்புக் கொடுப்பதில்தான் ஆரம்பமாகிறது. அந்த நம்பிக்கையோடு ‘மாமன்’ கதையை நான் தொடங்கினேன். ‘மாமன்’ என் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான சம்பவங்களைத் தழுவிய, ஆனால் நம்மில் பலருடைய வாழ்க்கையிலும் எங்கோ ஒரு கோணத்தில் தொடும் ஓர் உணர்வுப்பூர்வமான பயணம். இந்த உணர்வுகளை என் இயக்குநர் மிக நுட்பமாக உணர்ந்து, ஆழ்ந்த அக்கறையுடனும் முழு அர்ப்பணிப்போடும் எடுத்துக் கொண்டு, அதை உயிரோட்டமுள்ள திரைப்படமாக மாற்றியதற்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் பயணத்தில், ஒவ்வொரு நடிகரும் தங்களது கதாபாத்திரங்களை…
சென்னை: “கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு, 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தல் களத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு, மக்கள் நலன் காக்கும் ஆட்சி தொடர்ந்திடபொதுக்குழுவில் கூடிடுவோம். பொதுத்தேர்தலில் வென்றிடுவோம்” என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என மு.க.ஸ்டாலின் எழுதி இருக்கும் கடிதம்: கூடிக் கலைவதல்ல கழகத்தின் நிகழ்வுகள். திசைவழியைத் தீர்மானிக்கும் செயல்பாடுகளைத் திட்டமிடும் களமாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு நிகழ்வும் அமைகின்றது. இதுதான் இந்த இயக்கத்தின் முக்கால் நூற்றாண்டு கால வரலாறு. கழகம் என்ன முடிவெடுக்கும் என்பதை உடன்பிறப்புகள் மட்டுமல்ல, மாற்று இயக்கத்தினரும் உற்று நோக்குகின்ற சூழலில்தான் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த கூடல் மாநகராம் மதுரையில் கழகப் பொதுக்குழு கூடுகிறது. அண்ணா தலைமையில் உருவாகி, கருணாநிதி தலைமையில் இரும்புக் கோட்டையாகக் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் இன்று இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மாநிலக்…
கோவிட் 19 திரும்பியுள்ளது. ஆம், 2019-2022 முதல் உலகில் சகதியை உருவாக்கிய பின்னர், வைரஸ் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் கடந்த சில வாரங்களில் அதிகபட்ச எண்ணிக்கையை பதிவு செய்வதன் மூலம் ஆசியாவிற்கு படிப்படியாக திரும்புவதைக் காண்கிறது. நெருக்கமான வீடு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் கண்டறியப்பட்ட NB.1.8.1 மற்றும் LF.7 வகைகள், (மற்றும் சமீபத்தில் XFG) மாறுபாட்டின் உயர்வைக் காண்கின்றன. இந்த நோய் இன்னும் பரவலாக இருக்கும்போது, (இப்போதைக்கு) அரசாங்கத்தின் கூற்றுப்படி உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை, இந்த புதிய மாறுபாடு என்ன, மற்றவற்றிலிருந்து வேறுபடுவது எது? அறிகுறிகளை ஆழமாக தோண்டி எடுப்போம் …பீதியடைய தேவையில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்வழக்குகள் அதிகரித்த போதிலும், பெரும்பாலான நோய்த்தொற்றுகள் லேசானவை, மற்றும் மருத்துவமனை ஐ.சி.யூ சேர்க்கைகள் கணிசமாக உயரவில்லை. இருப்பினும், மருத்துவமனைகளில் உள்ள வெளிநோயாளர் துறைகள் (OPD கள்) நோயாளியின் வருகைகளில் கூர்மையான அதிகரிப்பைக் காண்கின்றன, கடந்த பத்து நாட்களில் மூன்று முதல் நான்கு மடங்கு…
ஹைதராபாத்: ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை திரும்பப் பெற்றிருப்பார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார். நிஜாம்பேட்டையில் நடந்த காங்கிரஸின் ‘ஜெய் ஹிந்த் யாத்திரை’யில் பங்கேற்று உரையாற்றிய ரேவந்த் ரெட்டி, “போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்கு முன்பு அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்க ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டவில்லை. பிரதமர் மோடி 1000 ரூபாய் செல்லாத நோட்டு போன்றவர். எனவே இன்று, இந்த நாட்டிற்கு ராகுல் காந்தியின் தலைமை தேவை. ராகுல் காந்தி போன்ற ஒரு தலைவர் இந்த நாட்டின் பிரதமராக இருந்திருந்தால், அவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை உத்வேகமாக எடுத்துக் கொண்டு, காளியின் வழியில் நடந்து, பாகிஸ்தானை இரண்டு பகுதிகளாக ஆக்கி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீண்டும் கைப்பற்றியிருப்பார்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “இந்திரா காந்தியின் பேரன் ராகுல் காந்தி இந்த நாட்டின் பிரதமராக…
புதுடெல்லி: தனியார் பள்ளிகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்த டெல்லி அரசு ஒரு அவசரச் சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த அவசரச் சட்டம் ஒரு வாரத்திற்குள் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான கட்டண உயர்வைத் தடுக்க டெல்லி அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டுவரத் தயாராகி வருகிறது. ‘டெல்லி பள்ளிக் கல்வி மசோதா – 2025’ன் கீழ் முன்மொழியப்பட்ட அவசரச் சட்டத்தின் வரைவு ஏற்கெனவே சட்டத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த அவசரச் சட்டம் தனியார் பள்ளிகளின் விதிமீறல்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்க முன்மொழிகிறது. மேலும் மீண்டும் மீண்டும் விதிகள் மீறப்பட்டால், பள்ளி சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, தனியார் பள்ளிகளில் கட்டணங்களை நிர்ணயிக்க பள்ளி, மாவட்டம் மற்றும் மறுஆய்வு நிலைகளில் குழுக்கள் அமைக்கப்படும். இந்த மசோதா வரவிருக்கும் மழைக்கால அமர்வில் ஒரு மசோதாவாக அறிமுகப்படுத்தப்படும். தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வு பிரச்சினை குறித்து பேசிய டெல்லி…
