இங்கே நாங்கள் 10 ஷாஷி தரூர் சொற்களை பட்டியலிடுகிறோம், அவை உங்கள் பேச்சை உடனடியாக உயர்த்தும், மேலும் உங்களை புத்திசாலித்தனமாகவும் தொழில் ரீதியாகவும் ஒலிக்கும்:
Author: admin
புதுடெல்லி: தென்மேற்கு டெல்லி பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 92 வங்கதேச நாட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த பலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் முதல் போலீஸார் விசாரணை நடத்தி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேச நாட்டைச் சேர்ந்த நபர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சட்டவிரோதமாத தங்கியிருக்கும் வங்கதேச மக்களை கைது செய்வதற்காக, போலீஸார் 10 நாட்கள் சிறப்பு தேடுதல் வேட்டையை அண்மையில் தொடங்கினர். அதன்படி நேற்று வரை 92 வங்கதேச நாட்டவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் தென் மேற்கு டெல்லியில் பகுதியில் வசித்து வந்துள்ளனர். கடந்த டிசம்பர் முதல் தற்போது வரை 142 வங்கதேச நாட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் சுரேந்திர சவுத்ரி கூறும்போது, “தென் மேற்கு டெல்லியில்…
துபாய்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 11 முதல் 15-ம் தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன், தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான நடுவர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜவஹல் ஸ்ரீநாத் மேட்ச் ரெப்ரீயாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் இலிங்க்வொர்த், நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரிஸ் காஃபனி ஆகியோர் களநடுவர்களாக செயல்படுவார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது. டி.வி. நடுவராக இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் கெட்டில்பரோவும், இந்தியாவின் நித்தின் மேனன் 4-வது நடுவராகவும் செயல்பட உள்ளனர்.
‘ஸ்பிரிட்’ நாயகியாக திரிப்தி டிம்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா தெரிவித்துள்ளார். சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகவுள்ள படம் ‘ஸ்பிரிட்’. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு துவங்குவதற்காக நடிகர்கள் ஒப்பந்தமும் நடைபெற்று வருகிறது. முதலில், பிரபாஸுக்கு நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தமானார். பின்பு படப்பிடிப்புக்கான அவருடைய நிபந்தனைகளால் இயக்குநருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தீபிகா படுகோன் விலகவே, தற்போது நாயகியாக திரிப்தி டிம்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் தான் ‘அனிமல்’ படத்தில் 2-வது நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தினமும் பலத்த மழையும், மாவட்டத்தின் பரவலான பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி: கடந்த 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 68 மி.மீ., அடவிநயினார் அணையில் 56 மி.மீ., கருப்பாநதி அணையில் 55.50 மி.மீ., தென்காசியில் 47 மி.மீ., ராம நதி அணையில் 40 மி.மீ., கடனாநதி அணையில் 39 மி.மீ., ஆய்க்குடியில் 22 மி.மீ., சங்கரன்கோவிலில் 4.80 மி.மீ., சிவகிரியில் 2 மி.மீ. மழை பதிவானது. தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 36.10 அடி உயரம் உள்ள சிறிய அணையான குண்டாறு அணை இன்று முழு கொள்ளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் 35 கனஅடி நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது. 85 அடி உயரம் உள்ள கடனா நதி…
என்ன அவசர குழந்தை நோய்க்குறி?உளவியலாளர் டேவிட் எல்கிண்ட் உருவாக்கிய “ஹர்ரிட் சைல்ட் சிண்ட்ரோம்”, குழந்தைகள் தங்கள் மன, சமூக அல்லது உணர்ச்சித் திறனைத் தாண்டி சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும்போது ஏற்படும் மன அழுத்தம் தொடர்பான நடத்தைகளின் தொகுப்பை விவரிக்கிறது. இந்த நாட்களில், பள்ளியில் பல குழந்தைகளுடன், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதிகமாக திட்டமிடுவதை முடிக்கிறார்கள், அவர்களை மிகவும் கடினமாக உழைக்குமாறு அழுத்தம் கொடுத்து, அவர்கள் பெரியவர்களைப் போலவே செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்றைய சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட குழந்தைகள் மீதான அழுத்தம் மற்றும் வாழ்க்கையில் சிறப்பாகச் செய்வதற்கான ஒரு இனம் அவர்களை இலவச விளையாட்டில் ஈடுபடுவதிலிருந்தும், ஓய்வெடுப்பதிலிருந்தும், இயற்கையாகவே வளர்வதிலிருந்தும் தடுக்கின்றன.ரூபி ஹால் கிளினிக்கின் ஆலோசகர் மனநல மருத்துவரான டாக்டர் பங்கஜ் போரேட் கருத்துப்படி, “இந்த விளைவுகள் தலைவலி மற்றும் குறைவாக தூங்குவது போன்ற உடல் பிரச்சினைகள், கவலை மற்றும் மனச்சோர்வு, குறுகிய கவனத்தின் இடம், மற்றும், மோசமான, தற்கொலை…
புதுடெல்லி: இந்தியாவில் ரேடாரில் சிக்காத 5-ம் தலைமுறை போர் விமானங்கள் தாயரிக்கும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானுக்கு இத்தகைய போர் விமானங்களை வழங்கும் திட்டத்தை சீனா விரைவுபடுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் ராஜ்நாத் சிங் இதற்கான ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள அதிக சக்திவாய்ந்த போர் விமானமாக ரபேல் உள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல், நான்காம் தலைமுறை போர் விமானம் ஆகும். உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே ரேடாரில் சிக்காத 5-ம் தலைமுறை போர் விமானங்கள் உள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் இத்தகைய போர் விமானங்களை தயாரிக்கும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இரட்டை இன்ஜின் கொண்ட இந்த ஜெட் விமானம் தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசின் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ஏடிஏ) செயல்படுத்த உள்ளது. எனவே இந்த விமானத்துக்கான முன்மாதிரியை…
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தத் போட்டிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027-ம் ஆண்டு சுழற்சியில் இந்தியாவுக்கு முதல் தொடராக அமைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக்குழுவினர் மும்பையில் இன்று கூடுகின்றனர். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டதால் இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 25 வயதான ஷுப்மன் கில் தேர்வு செய்யப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அனுபவம் வாய்ந்த ஜஸ்பிரீத் பும்ரா அணியில் இடம் பெற்றாலும் நீண்ட கால அடிப்படை மற்றும் உடற்தகுதியை கருத்தில் கொண்டு…
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக தளத்தில் ’‘ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் எனது இரண்டு மணி நேர உரையாடலை நிறைவு செய்தேன். அது மிகவும் சிறப்பாக நடந்தது என நான் நம்புகிறேன். ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர் நிறுத்தம் தொடர்பாக, இன்னும் முக்கியமாக, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளனர். அதற்கான நிபந்தனைகள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த ரத்தக்களரியான பேரழிவு முடிந்ததும், அமெரிக்காவுடன் பெரிய அளவிலான வர்த்தகம் செய்ய ரஷ்யா விரும்புகிறது. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ரஷ்யாவுக்கு மிகப் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு மற்றும் வளத்தை உருவாக்க மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது. அதன்…
தமிழகத்தில் ‘மாமன்’ படத்தின் வசூல் ரூ.25 கோடியை கடந்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. மே 16-ம் தேதி வெளியான இப்படம் முதலில் சில நாட்கள் வசூல் குறைவாகவே இருந்தது. இதனால் படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தைக் கொடுக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், நாளுக்கு நாள் பி மற்றும் சி சென்டர்களில் வசூல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மேலும், திரையரங்க உரிமையாளர்களும் ஹவுஸ் ஃபுல் காட்சிகள் என கூறத் தொடங்கினார்கள். தற்போது தமிழகத்தில் ‘மாமன்’ படத்தின் வசூல் ரூ.25 கோடியைக் கடந்திருக்கிறது. இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கிறது. நாயகனாக 3-வது படமும் வெற்றி என்பதால் சூரியும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார். ‘மாமன்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு அனைத்தும் முடிந்துவிட்டதால், தற்போது ‘மண்டாடி’ படத்தில் கவனம் செலுத்த தொடங்கவுள்ளார் சூரி.…
