Author: admin

ஜம்மு: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது 72 பாகிஸ்தான் ராணுவ நிலைகள் முழுமையாக அழிக்கப்பட்டன என்று எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜம்மு பிராந்திய பிஎஸ்எப் ஐஜி சுஷாங்க் ஆனந்த் ஜம்முவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்திய, பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மிகக் கடுமையான சண்டை நடைபெற்றது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தியது. இருதரப்புக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று கொண்டிருந்தபோது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து சுமார் 50 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி செய்தனர். அந்த முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினோம். இதில் ஏராளமான தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான தாக்குதலின்போது அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தினோம். குறிப்பாக…

Read More

புதுடெல்லி: முதன்முறையாக ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் போட்டி வரும் ஜூன் 18 முதல் 27-ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இந்த தொடரை ஹாக்கி இந்தியா நடத்துகிறது. போட்டி நடைபெறும் மைதானம், தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களும், மகளிர் பிரிவில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களும் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்பவர்கள் மாநில ஹாக்கி சங்கங்களில் பதிவு செய்திருக்க வேண்டும். போட்டிகள் லீக் மற்றும் நாக்வுட் முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read More

சென்னை: ‘நான் தவறு செய்யாதபோது என்னால் மன்னிப்புக் கேட்க முடியாது’ என்று கன்னட மொழி சர்ச்சை விவகாரத்தில் நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறுகையில், “நான் தவறாக இருந்தால் மட்டுமே, மன்னிப்புக் கேட்பேன். நான் தவறு செய்யவில்லை. அதனால் மன்னிப்புக் கேட்கப்போவதும் இல்லை. இதுதான் என் வாழ்க்கை முறை. தயவுசெய்து அதைக் குழப்ப வேண்டாம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, நான் சட்டத்தையும் நீதியையும் நம்புகிறேன். கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா மீதான எனது அன்பு உண்மையானது. உள்நோக்கம் கொண்டவர்கள் மட்டுமே அதனைச் சந்தேகிப்பார்கள். இதற்கு முன்பு நான் பல மிரட்டல்களைச் சந்தித்திருக்கிறேன். நான் தவறாக இருந்தால் மன்னிப்புக் கேட்கலாம். நான் தவறு செய்யவில்லை. அதனால் மன்னிப்புக் கேட்கப்போவதும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். கன்னட மொழி குறித்த தனது கருத்துக்காக கமல்ஹாசன் மன்னிப்புக்கேட்க வேண்டும், இல்லையென்றால் அவரின் படத்தைப் புறக்கணிப்போம்…

Read More

சென்னை: “திமுக திடீரென சாதி ரீதியான கணக்கெடுப்பை ஆதரிப்பது அதன் கொள்கை சார்ந்த முடிவாகத் தோன்றவில்லை. அரசியல் நெருக்கடி காரணமாக சாதி ரீதியான கணக்கெடுப்பை திமுக ஆதரிப்பதாகத் தோன்றுகிறது. அவர்கள் இந்த விஷயத்தில் தாமதமாகவும், திசை மாறிய நிலையிலும் உள்ளனர். அதிமுகவோ இதற்கு முரண்பாடாக நேர் எதிராக, தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு அண்மையில், விரிவான விதத்தில் சாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் போன்ற தருணம். இந்தியாவின் சமூகநீதிக் கொள்கையின் வரையறைகளை சீரமைத்து மாற்றியமைப்பதற்கான வாக்குறுதி இது. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் இதை நம்பிக்கையுடனும், பெருமையுடனும் நான் வரவேற்கிறேன். சாதி ரீதியான கணக்கெடுப்பு என்பது அதிமுக ஏற்கெனவே தெளிவுடனும், முன்னோக்கிய பார்வையுடனும் முன்வைத்த ஒரு வேண்டுகோள். இந்த தருணம், ஒரே இரவில் உருவான…

Read More

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் புதிய நடமாடும் மண் பரிசோதனை நிலையத்துக்கான வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் இன்று (மே 30) தொடங்கி வைத்தார். கோவை மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் பயன்பாட்டிற்காக கிராமங்கள் தோறும் மண் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் புதிய நடமாடும் மண் பரிசோதனை நிலையத்திற்கான வாகனம் இன்று (மே 30) அறிமுகப்படுத்தப்பட்டது. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து மண் பரிசோதனை கருவியின் இயக்கம் குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மண் வள மேம்பாடு, மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உர பயன்பாடு மூலம் அதிக பயிர் விளைச்சல் பெற்று விவசாயிகள் லாபம் பெற மண் மாதிரி சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் மலர் வள அட்டை…

Read More

இளவரசர் அவிராஜ் ஒரு காட்சிக்குள் நுழைந்த தருணத்திலிருந்து, அவரது உடைகள் ஒரு அறிக்கையை வெளியிடுவதை விட அதிகமாக செய்கின்றன, அவை முழு அத்தியாயங்களையும் வெளிப்படுத்துகின்றன. அவரது சடங்கு தோற்றம் கலாச்சார மரபில் மூழ்கியுள்ளது: வெல்வெட் குழாய், நகை-நிறமுடைய பந்தணர்கள், உலோக நூல்களால் அலங்கரிக்கப்பட்ட நகை-நிறமுடைய பந்தணர்கள் மற்றும் யோரின் ராயல் அட்லியர்ஸுக்கு மரியாதை செலுத்தும் ஆடம்பரமான ப்ரோகேட் குர்தாக்கள் ஆகியவற்றைக் கொண்டு சிக்கலான எம்பிராய்டரி ஷெர்வானிஸை சிந்தியுங்கள். இந்த ஆடைகள் முகலாய ஆடம்பரம் மற்றும் ராஜ்புத் பெருமை ஆகியவற்றின் எதிரொலிக்கின்றன, ஆனால் ஒரு தனித்துவமான தற்போதைய விளிம்பில்.ஆயினும்கூட அவரது பாணியை மிகவும் கட்டாயமாக்குவது அதன் இருமை. ராயல் கடமைகள் மற்றும் ஆஃப்-டூட்டி ப்ரூடிங் இடையே, அவிராஜ் அமைதியான ஆடம்பரத்தை உள்ளடக்கிய துண்டுகளாக நழுவுகிறார், முடக்கப்பட்ட கைத்தறி குர்தாக்கள், மிருதுவான மாண்டரின்-காலர் பருத்தி சட்டைகள், ப்ளீட்டட் கால்சட்டை மற்றும் நடுநிலை சாயல்களில் தளர்வான போலோஸ். செல்வத்தைப் பற்றி பேசாத அலமாரி, ஆனால் சுவை.…

Read More

கரகாட்: மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிஹார் மாநிலம் கரகாட்டில் இன்று ரூ.48,520 கோடி மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பேசிய அவர், “கடந்த ஆண்டுகளில் வன்முறை மற்றும் அமைதியின்மையை பரப்பியவர்களை நாங்கள் எவ்வாறு ஒழித்தோம் என்பதற்கு பிஹார் மக்கள் சாட்சிகளாக உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சசாரம் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் நக்சலைட் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியது. அவர்களுக்கு பாபா சாகேப் அம்பேத்கர் மீது நம்பிக்கை இல்லை. அந்தச் சூழ்நிலைகளிலும் கூட, நிதிஷ் குமார் இங்கு வளர்ச்சிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். 2014-க்கு முன்பு, 75-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் நக்சலைட்களால் பாதிக்கப்பட்டன. இப்போது, ​​18 மாவட்டங்கள் மட்டுமே நக்சலைட்களால் பாதிக்கப்பட்டுள்ளன. மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. பிஹாரில் நடந்த…

Read More

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபார்மில் இல்லாவிட்டாலும் அவர் மைதானத்தில் ஒரு போட்டியில் ஆடிவிட்டு ஓய்வு பெறாமல் அப்படியே ஓய்வு அறிவித்து வெள்ளைச் சீருடையைக் கழற்றியது பலருக்கும் வருத்தமே. ஆனால் ஹர்பஜன் சிங்கின் மகள் ஹினயா, தன் ஆதங்கத்தை கோலியிடமே கேட்டு விட்டாள். இது விராட் கோலிக்கு மட்டற்ற நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 123 டெஸ்ட் போட்டிகளில் 9,230 ரன்கள் எடுத்து 10,000 கனவு ரன்களைக் கூட நிறைவேற்றிக் கொள்ளாமல் ஓய்வு பெற்று விட்டார். விராட் கோலி ஓய்வு பெற்ற பின் ஹர்பஜன் சிங் ‘ஏன் விராட் ஏன்?’ என்று ட்வீட் செய்தார். மேலும் தன் மகள் ஹினயாவும் தன்னிடம், ‘அப்பா ஏன் விராட் ஓய்வு பெற்றார்?’ என்று கேட்டதாக இன்ஸ்டண்ட் பாலிவுட்டில் தெரிவித்தார். மேலும் ஹினயா, விராட் கோலியிடமே மெசேஜ் செய்து ஏன் ஓய்வு பெற்றீர்கள் என்று கேட்டதையும் பகிர்ந்து கொண்டார் ஹர்பஜன் சிங். அதாவது விராட்டிற்கு தன் மெசேஜில் ஹினயா,…

Read More

சினிமா தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், தொழில்நுட்பம் அதிகம் வளராத நேரத்தில், சிறந்த லைட்டிங் மற்றும் ஒளிப்பதிவின் மூலம் சில ஒளிப்பதிவாளர்கள் கவனிக்கப்பட்டனர். அதில் இருவர், ஆங்கிலோ – இந்திய ஒளிப்பதிவாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த மார்கஸ் பார்ட்லி (Marcus Bartley) மற்றும் ஆடி இரானி (Adi Irani). இதில் மார்கஸ் பார்ட்லி, பாதாள பைரவி (1951), மிஸ்ஸியம்மா (1955), மாயா பஜார் (1957), செம்மீன் (1965) உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மலையாளம், இந்திப் படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். ஆடி இரானி, சேதுமாதவன் இயக்கிய ஞான சுந்தரி மற்றும் இந்தி, தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்த தமிழ்ப் படம், ‘லாவண்யா’. ஜி.ஆர்.லட்சுமணன் தனது ஈஸ்டர்ன் ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பாகத் தயாரித்து எழுதி, இயக்கிய இந்தப் படத்தில், டி.இ.வரதன் கதாநாயகனாக நடித்தார். இவர் அந்த காலத்து அறிவியல் பட்டதாரி. கோவையைச் சேர்ந்த தயாரிப்பாளர் எஸ்.எம். ராமுலு…

Read More

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு தமிழக முதல்வர் விருது வழங்கி ஊக்குவித்து கவுரவிக்கப்படுவதால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, கீழ்காணும் விருதுகள் 15 ஆகஸ்ட் 2025 சுதந்திர தின விழா அன்று வழங்கப்படவுள்ளன. > விருதின் வகையும், விவரங்களும்: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் – 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ. 25,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் (மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் வழங்கப்படும்) மாற்றுத்திறனாளிகளுக்கு…

Read More