Author: admin

ஐபிஎல் 2025 தொடரின் 65வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவரும் ஓப்பனிங் ஆடினர். இதில் அபிஷேக் சர்மா 34 ரன்களும், டிராவிஸ் ஹெட் 17 ரன்களும் எடுத்து வெளியேறினர். 4வது ஓவரில் இறங்கிய இஷான் கிஷன் 48 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 94 ரன்கள் விளாசினார். கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். கிளாசன் 24, அனிகேத் வர்மா 26, நிதிஷ் குமார் ரெட்டி 4, அபினவ் மனோகர் 12, பேட் கம்மின்ஸ் 13 என 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அடுத்து இறங்கிய ஆர்சிபி அணியில்…

Read More

எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த ‘டிராபிக் ராமசாமி’ படத்தை இயக்கியவர், விக்கி. அடுத்து ‘கூரன்’ என்ற படத்தைத் தயாரித்தார். இவர் இப்போது ‘வீரசிங்கம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஈழப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாழ்ப்பாணத் தமிழர்கள் நடித்துள்ளனர். இதுபற்றி இயக்குநர் விக்கியிடம் கேட்டபோது, “திரைப்பட விழாக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த படம் அரசியல் நையாண்டியை மையமாகக் கொண்டது. ‘வீரசிங்கம்’ என்ற கேரக்டரை பற்றிய இந்தக் கதையில் லக்‌ஷன், இளங்கோ ஆகியோர் நடித்துள்ளனர். லைவ் சவுண்ட்டை பயன்படுத்தி இதை உருவாக்கி இருக்கிறோம். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டெக்னீஷியன்கள் சிலர் இதில் பணியாற்றியுள்ளனர். பட விழாக்களுக்கான படம் என்றாலும் திரையரங்கில் வெளியிடவும் முயற்சி செய்து வருகிறோம்” என்றார்.

Read More

சென்னை: உற்பத்தி துறையில் உலகளவில் சாதனைகளைப் படைத்து நாட்டுக்கே தமிழ்நாடு வழிகாட்டுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் வெற்றிப் பாடங்களைப் பின்பற்றினால், இந்தியா விரைவில் உற்பத்தித் துறையில் உலகளாவிய சக்தியாக உருவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “2014-ல் ‘Make in India’ திட்டம் தொடங்கப்பட்டபோது, 2025-க்குள் உற்பத்தித் துறையின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 25% ஆக உயர்த்துவதை இலக்காக நிர்ணயம் செய்தது. ஆனால் தற்போது வரை 16% சதவீதம் எட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் தன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 25% உற்பத்தித் துறையிலிருந்து பெற்று நாட்டிற்கே வழிகாட்டும் மாநிலமாக உள்ளது. உலகத் தரத்தில் உற்பத்தி மையம்: தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், சாம்சங், ஹுண்டாய், ஃபோர்ட், நிஸான், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், அசோக் லேலண்ட் போன்ற உலகளாவிய பெருநிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. உலகளவில் புகழ்பெற்ற ஆப்பிள்(Apple)…

Read More

தடிமனான சருமத்தை வளர்ப்பது மற்றும் நெகிழ்ச்சியுடன் இருப்பது ஒரு முக்கியமான திறமையாகும், இது ஒரு உலகில் வலுவாக இருக்க மிகவும் தேவைப்படுகிறது, இது கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் நிறைந்தது. இருப்பினும், தடிமனான தோல் இருப்பது என்பது மற்றவர்களின் கருத்தை புறக்கணிப்பதாக அர்த்தமல்ல-குறிப்பாக இது நல்லெண்ணத்தில் கொடுக்கப்படும்போது-அல்லது உணர்ச்சியற்றதாக இருப்பது. அதற்கு பதிலாக, விமர்சனத்தை உங்கள் நம்பிக்கையையோ அல்லது மன அமைதியையோ காயப்படுத்த விடாமல் நன்றாகக் கையாள்வது என்று பொருள். எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக அமைதியாக பதிலளிக்க நீங்கள் கற்றுக் கொள்ளும்போது, ​​நீங்கள் உணர்ச்சி ரீதியாக வலிமையாகி விடுகிறீர்கள், மேலும் இது உங்கள் தனிப்பட்ட உறவுகளை பராமரிக்க உதவுகிறது-அது வேலையில், நண்பர்களுடன் அல்லது குடும்பத்தினருடன் இருக்கலாம். எனவே, தடிமனான தோல் உடையவராக இருக்க சில சக்திவாய்ந்த உதவிக்குறிப்புகளை இங்கே பட்டியலிடுகிறோம் மற்றும் ஒரு சார்பு போன்ற விமர்சனங்களைக் கையாளுகிறோம்:

Read More

பெங்களூரு: கர்நாடகாவில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 2 பாஜக எம்எல்ஏக்களை கட்சி மேலிடம் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது. கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபுரா சட்டப்பேரவை தொகுதியின் பாஜக எம்எல்ஏ சிவராம் ஹெப்பார் கட்சி மேலிடத்தையும், மாநில தலைவர் விஜயேந்திராவையும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக விமர்சித்தார். இதனால் அவர் தனது பழைய கட்சியான காங்கிரஸுக்கே திரும்ப போவதாகவும் தகவல் வெளியானது. இதேபோல பெங்களூருவில் உள்ள யஷ்வந்த்பூர் தொகுதியில் எம்எல்ஏ எஸ்.டி. சோமசேகரும் பாஜக மாநில தலைமையுடன் மோதலில் ஈடுபட்டார். கர்நாடக பாஜக எடியூரப்பாவின் குடும்ப சொத்தாக மாறிவிட்டது என அவர் விமர்சித்தார். இதனால் மாநில தலைவர் விஜயேந்திரா, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பாஜக மேலிடத்துக்கு புகார் அளித்தார். இதுகுறித்து பாஜகவின் மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் செயலாளர் ஓம் பதாக் கூறும்போது, ”கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் சிவராம் ஹெப்பார், எஸ்.டி.சோமசேகர் ஆகிய இருவரும் கட்சியின் விதிமுறைகளை…

Read More

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்க ஆண்டான 2008-ல் அரை இறுதிக்கு முன்னேறியிருந்தது. இதன் பின்னர் பிளே ஆஃப் சுற்று அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 2014-ம் ஆண்டு அந்த அணி லீக் சுற்றில் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. ஆனால் இறுதிப் போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது. இதுவரை முடிவடைந்துள்ள 17 சீசன்களிலும் பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஒரே சீசன் அது மட்டுமே. நடப்பு சீசனில் பிளே ஆஃப் சுற்றில் நுழைந்து 11 வருட வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது லீக் சுற்றை முதல் இரண்டு இடங்களுக்குள் நிறைவு செய்வதோடு மட்டுமல்லாமல், இறுதிப் போட்டியிலும்…

Read More

மாஸ்கோ: ரஷ்யா – இந்தியா – சீனா கூட்டமைப்பின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதில் மாஸ்கோ உண்மையிலேயே ஆர்வமாக உள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் பெர்ம் நகரில் நடைபெற்ற யூரேசியா சர்வதேச சமூக மற்றும் அரசியல் மாநாட்டில் உரையாற்றிய செர்ஜி லாவ்ரோவ், “முன்னாள் ரஷ்ய பிரதமர் யெவ்ஜெனி ப்ரிமகோவின் முன்முயற்சியின் பேரில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய முக்கூட்டின் வடிவமைப்புக்குள் பணிகளை விரைவில் மீண்டும் தொடங்குவதில் நாங்கள் உண்மையான ஆர்வத்தைக் கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. வெளியுறவுக் கொள்கைத் தலைவர்கள் மட்டத்தில் மட்டுமல்லாமல், மூன்று நாடுகளின் பிற பொருளாதார, வர்த்தக மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுடனும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. எல்லையில் நிலைமையை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது ஒரு புரிதல் எட்டப்பட்டுள்ளது. இந்த ஆர்ஐசி முக்கூட்டை மீண்டும்…

Read More

உன்னி முகுந்தனின் பான் இந்தியா படமான, ‘மார்கோ’வை தயாரித்த ஷெரிப் முகம்மது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் அடுத்துத் தயாரிக்கும் படம் ‘கட்டாளன்’. பால் ஜார்ஜ் இயக்கும் இதில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். இவர், மலையாளத்தில் வெற்றி பெற்ற அங்கமாலி டைரிஸ், ஜல்லிக்கட்டு, ஆர்டிஎக்ஸ் என பல படங்களில் நடித்துள்ளார். த்ரில்லர் படமான இதன் முதல் தோற்ற போஸ்டர் வரவேற்பைப் பெற்றது. இப்போது இந்தப் படத்தில் ‘காந்தாரா’ இசையமைப்பாளர் அஜனீஸ் லோக்நாத் இணைந்துள்ளார். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறது படக்குழு.

Read More

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சகோதரி சரோஜா அம்மையாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது உடலுக்கு நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோவின் இரண்டாவது சகோதரி சரோஜா அம்மையார் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். தனது சகோதரி மீது அளவற்ற பாசம் வைத்திருந்தவர் அண்ணன் வைகோ ஆவார். தன்னுடைய உடன்பிறந்த சகோதரியை இழந்து தவிக்கும் வைகோவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின், மறைந்த சரோஜா அம்மையாரின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, வைகோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Read More

நாம் அனைவரும் நீண்ட காலம் வாழ விரும்புகிறோம், இல்லையா? ஆனால் காலெண்டரில் அதிக வருடங்கள் டிக் செய்வது மட்டுமல்ல, நாம் உண்மையில் விரும்புவது அதைச் செய்யும்போது நன்றாக உணர வேண்டும். மருத்துவர் நியமனங்கள், புண் மூட்டுகள் அல்லது குறைந்த ஆற்றலால் நிரப்பப்பட்ட கூடுதல் ஆண்டுகளை யாரும் கனவு காணவில்லை. நல்ல செய்தி? உங்கள் வாழ்க்கையை நீட்டிக்க உங்களுக்கு மாய மாத்திரை, தீவிர உணவு அல்லது ஆறு மாத யோகா பின்வாங்கல் தேவையில்லை. சில எளிய, அன்றாட பழக்கவழக்கங்கள் உங்கள் ஆயுட்காலம் பல தசாப்தங்களாக சேர்க்கக்கூடும். உங்கள் உடலை நகர்த்துவதன் மூலம் ஆரம்பிக்கலாம்நன்மைகளை அறுவடை செய்ய நீங்கள் ஜிம் எலி ஆகவோ அல்லது மராத்தான்களை இயக்கவோ தேவையில்லை. நாய் நடப்பது, உங்கள் சமையலறையில் நடனமாடுவது அல்லது கொஞ்சம் நீட்டிப்பது போன்ற ஒளி, வழக்கமான இயக்கம் கூட பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். உடல் செயல்பாடு உங்கள் இதயத்தை பலப்படுத்துகிறது, நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது, மேலும்…

Read More