மதுரை: பள்ளிகள் தொடங்கியதும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில், எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 16 ஆயிரம் மாணவர்களுக்கு ஜூன் 10-ம் தேதி முதல் பொது மருத்துவம், கண், காது, மூக்கு மற்றும் பல் போன்ற உறுப்புகளுக்கு இலவச உடல் மருத்துவப் பரிசோதனை செய்து, தேவையான மாணவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க மாநகராட்சி ஆணையர் சித்ரா ஏற்பாடு செய்துள்ளார். மதுரை மாநகராட்சி பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படுகின்றன. மாநகராட்சி கட்டுப்பாட்டில் 64 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை, மொத்தம் 16,000 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். பெரும்பாலும் ஏழை மாணவர்கள் படிப்பதால் முறையாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது கடினம். அதனால், பள்ளிகள் தொடங்கியதும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 10-ம் தேதி முதல் பொது மருத்துவம், கண், காது, மூக்கு மற்றும் பல்…
Author: admin
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 73 ரன்களும், நமன் திர் 8 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களும் விளாசினர். ரியான் ரிக்கெல்டன் 25, வில் ஜேக்ஸ் 21, திலக் வர்மா 27 ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் மும்பை அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் முகேஷ் குமார் வீசிய 19-வது ஓவரில் 27 ரன்களையும், துஷ்மந்தா சமீரா…
தனது பழைய அடையாளத்தை மறைத்து, மலேசியா வரும் போல்ட் கண்ணனுக்கு (விஜய் சேதுபதி) அறிவுக்கரசனின் (யோகிபாபு) அறிமுகம் கிடைத்து, அவர் வீட்டுக்குச் செல்கிறார். எதிர்வீட்டுப் பெண்ணான ருக்குவுக்கும் (ருக்மணி வசந்த்) போல்ட் கண்ணனுக்கும் காதல் மலர்கிறது. ருக்குவுக்கு வேலையைத் தக்கவைப்பதிலும் வீட்டை மீட்பதிலும் பிரச்சினை . அதற்காக போல்ட் கண்ணன் இரண்டு காரியங்களில் ஈடுபடுகிறார். அதனால் அவரை ஒரு பக்கம் வில்லன் கோஷ்டி, தேடி அலைகிறது. மறுபக்கம் மலேசிய போலீஸும் தேடுகிறது. இந்தப் பிரச்சினையிலிருந்து போல்ட் கண்ணன் மீண்டாரா, காதலியின் பிரச்சினை தீர்ந்ததா? என்பது கதை. ஒருவருக்குப் பிரச்சினை என்றால் எந்த வழியிலாவது உதவி செய்ய வேண்டும் என்கிற கொள்கை உடைய நாயகனின் கதை இது. ஒன் லைன் ஈர்க்கும்படியாக இருந்தாலும், திரைக்கதையில் அதை சுவாரஸியமாகவும் ரசிக்கும்படியும் வழங்க இயக்குநர் ஆறுமுகக்குமார் மெனக்கெட்டிருக்கலாம். பழைய குற்ற விஷயங்களை மறந்துவிட்டு புதிய வாழ்க்கை வாழ்வதற்காக மலேசியா வரும் நாயகன், மீண்டும் பழைய அவதாரத்தையே…
சென்னை: கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை (மே 31) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு பருவ மழை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மிகத் தீவிரமாக உள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தேனி மாவட்டத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது. நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. நேற்று (மே 29) காலை மேற்கு வங்கம் – வங்கதேச கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வங்கம்…
உடல் புத்திசாலி. தன்னை சுத்தம் செய்வது, குணப்படுத்துவது மற்றும் சமநிலையில் இருப்பது எப்படி என்று தெரியும். ஆனால் சில நேரங்களில், சில வெளிப்புற காரணிகளால், பதப்படுத்தப்பட்ட உணவு, மன அழுத்தம், மாசுபாடு இந்த இயற்கை அமைப்பை ஓவர்லோட் செய்யலாம், குறிப்பாக கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு வரும்போது. இந்த அமைதியான தொழிலாளர்கள் ஒவ்வொரு கணமும் உடலை வடிகட்டி, சுத்திகரிக்க மற்றும் போதைப்பொருள். இயற்கையின் சொந்த பரிசுகள் -பழங்கள் மூலம் அவர்களுக்கு தினசரி ஆதரவை வழங்குவது வித்தியாசமான உலகத்தை உருவாக்குகிறது.”ஆரோக்கியமாக இருப்பது” என்று அப்பால் செல்லும் ஆறு பழங்களின் பட்டியல் இங்கே. இந்த பழங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை தனித்துவமான, அவ்வளவு வெளிப்படையான வழிகளில் ஆதரிப்பதாக அறியப்படுகிறது.
புதுடெல்லி: கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.5% ஆக சரிந்துள்ளது. இது, முந்தைய 2023-24 நிதியாண்டில் 9.2% ஆக இருந்தது. கரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு, அதாவது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி இது. அதேவேளையில், 2024-25 நிதியாண்டின் இறுதி காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக இருந்தது ஓரளவு சாதகமாகப் பார்க்கப்படுகிறது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம், 2024–25 நிதியாண்டிற்கான வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகளையும், அதே ஆண்டின் ஜனவரி – மார்ச் காலாண்டுக்கான காலாண்டு மதிப்பீடுகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.5% ஆக உள்ளது. இது, முந்தைய 2023-24 நிதியாண்டில் 9.2% ஆக இருந்தது கவனிக்கத்தக்கது. 2024-25-ஆம் நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக அதிகரித்துள்ளது.…
சென்னை: துணைத் தேர்வு எழுதும் மாணவர்களின் கட்டணத்தை அரசே செலுத்த முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக தலைவர் தங்கமணி வெளியிட்ட அறிக்கையில், “பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது ஆசிரியர்கள் மூலம் தோல்வியுற்ற மாணவர்களை தொடர்பு கொண்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு 90 சதவீதம் பேர் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். அதேநேரம் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சுமார் 30,000 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இதில் பல்வேறு காரணங்களால் பள்ளிக்கே வராத மாணவர்கள் பலர் உள்ளனர். இந்த மாணவர்களை தொடர்புக் கொள்வதும், அவர்களை துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க வைப்பதிலும் பல்வேறு இடர்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் சந்தித்து வருகின்றனர்.…
நாட்டிங்காம்: இங்கிலாந்து – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. தனது 6-வது சதத்தை விளாசிய தொடக்க வீரரான பென் டக்கெட் 134 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 20 பவுண்டரிகளுடன் 140 ரன்கள் விளாசிய நிலையில் மாதவரே பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஸாக் கிராவ்லி 145 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் தனது 5-வது சதத்தை விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து. ஸாக் கிராவ்லி 171 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 14 பவுண்டரிகளை அவர் விளாசினார். மறுமுனையில் ஆலி போப் 169 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஜோ ரூட், 34 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹாரி புரூக் 9 ரன்களுடன் களத்தில் உள்ளார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகள் இழப்புக்கு…
நடிகர் யாஷின் தாயார் புஷ்பா அருண்குமார், புதுமுகங்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக, பி.ஏ புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் அவர் தயாரிக்கும் முதல் படம், ‘கொத்தாலாவாடி’. கன்னடத்தில் உருவாகும் இந்தப் படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு மலையாளத்திலும் படங்களைத் தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘கொத்தாலாவாடி’ படத்தில், பிருத்வி அம்பார் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக காவ்யா ஷைவா நடிக்கிறார். கோபால் தேஷ்பாண்டே, ராஜேஷ் நடரங்கா, அவினாஷ், காவ்யா ஷைவா, மான்சி சுதிர், ரகு ரமனகோப்பா, சேத்தன் காந்தரவா முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். அபினந்தன் காஷ்யப் இசை அமைக்கிறார். கர்நாடக மாநிலத்தின் குண்டலுபேட் தாலுகாவில் உள்ள கிராமத்தின் பெயர் இந்தப் படத்தின் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராஜ் எழுதி, இயக்கும் இதன் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூன் 15-ம் தேதிக்கு மேல் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமியிடம், சுயேட்சை எம்எல்ஏவும், மனித நேய மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனருமான நேரு (எ) குப்புசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் சட்டப்பேரவையில் முதல்வரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், “புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பதாக கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. தற்போது கோடைக்காலம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளது. அதன் எதிரொலியாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதனால் மேகமூட்டம் ஏற்பட்டு கோடை வெப்பம் சற்று தணிந்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள அந்த காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்துவிட்டால்…
