Author: admin

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் 4-வது பாலாலயம் நடைபெற உள்ளதால் ஜூன் 5-ம் தேதி வரை மட்டுமே மூலவரை தரிசிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியது. இந்தக் கோயிலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக இதுவரை 3 பாலாலயம் நடைபெற்றுள்ளன. தற்போது 4-வது பாலாலயம் ஜூன் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து கோயில் செயல் அலுவலர் ப.முத்து லட்சுமி கூறியது: பஞ்சபூத ஸதலங்களில் நிலத்துக்கு உரியதாக காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி கோயில் போற்றப்படுகிறது. இக்கோயிலில் 4-வது பாலாலயம் ஜூன் 6-ம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் நடைபெறும். மூலவர் கருவறையில் திருப்பணி செய்ய இருப்பதால் ஜூன். 5ம் தேதி வரை ஏகாம்பரநாதரை பக்தர்கள் தரிசிக்கலாம். அதன் பின்பு மகா கும்பாபிஷேகத்துக்கு பிறகே மூலவரை தரிசிக்க முடியும். யாகசாலையில்…

Read More

“நான் அடுத்த சென்னை மேயராகப் போகிறேனா என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக தன்னலமின்றி உழைப்பேன்” என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். அவருடைய மகள் திவ்யா சத்யராஜ் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து, தற்போது திமுக கட்சியில் ஐக்கியமாகி உள்ளார். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். இந்தச் சூழலில், அவர் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் பதிவு கவனம் ஈர்த்துள்ளது, அதில், “நான் அரசியல்வாதியாக விரும்புகிறேன் என்று பெற்றோரிடம் சொன்னபோது, அவர்கள் மிகவும் கவலைப்பட்டனர். அவர்கள் ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளவே இல்லை. நான் கெஞ்சி, அழுதே அவர்களை சமாதானப்படுத்த முடிந்தது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் அழுத்தம் காரணமாக தங்களுடைய காதலை பிரிந்து செல்லும் பல ஆண்களையும், பெண்களையும் காண்கிறேன். தயவுசெய்து உங்கள் காதலுக்காகப் போராடுங்கள். அது ஒரு நபர் அல்லது…

Read More

நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை சேவைகளுக்கான மாதாந்திர கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1998 (தமிழ்நாடு சட்டம் 1999) பிரிவு 199 (1)-ன் துணைப் பிரிவின் கீழ் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டணங்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மாநகரில் இதுவரை குடியிருப்பு இணைப்புகளுக்கு ஒருமித்த தொகையாக ரூ.40 ஆக இருந்த மாதாந்திர கட்டணம், தற்போது 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, குறைந்தபட்ச கட்டணம் ரூ.150 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தற்போது சதுர அடி அடிப்படையில் 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 600 சதுர அடிக்கு கீழ் ரூ.150 , 601- 1,200 சதுர அடி வரை ரூ. 200, 1,201-1,800 சதுர அடி வரை ரூ. 250, 1,801- 3,500 சதுர அடி வரை ரூ.300, 3,501- 5,000 சதுர அடி வரை ரூ. 400,…

Read More

தியா-மே மெக்கார்த்தி, அதன் அரிய மற்றும் மர்மமான மருத்துவ நிலை 2006 இங்கிலாந்து ஆவணப்படத்தை “தி கேர்ள் ஹூ ஹூ சாப்பிடாதது” என்ற தலைப்பில் மையமாகக் கொண்டது, சோகமாக 26 வயதில் காலமானார். அவரது ஆரம்பகால வாழ்க்கைக் கதை, மகத்தான முரண்பாடுகளுக்கு எதிராக உயிர்வாழ்வதன் மூலமும், சாப்பிட மறுப்பதன் மூலமும் வரையறுக்கப்படுகிறது, மில்லியன் கணக்கானவர்களுடன் எதிரொலித்தது மற்றும் பிரிட்டன் முழுவதும் மருத்துவ நிபுணர்களின் கவனத்தை ஈர்க்கும். 12 வாரங்கள் முன்கூட்டியே பிறந்து, ஓசோஃபேஜியல் அட்ரேசியா எனப்படும் ஒரு அரிய பிறவி நிலையில் கண்டறியப்பட்ட தியா-மே தனது வாழ்க்கையின் முதல் மாதங்களுக்குள் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். ஆயினும்கூட, கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக அவள் வாயால் ஒரு கடித்த உணவை சாப்பிடவில்லை.பல ஆண்டுகளாக, அவரது தாயார், சூ மெக்கார்த்தி, பிரிட்டிஷ் ஊடகங்களில் ஒரு உறுதியான நபராக ஆனார், தனது மகள் சாப்பிட மறுத்ததன் பின்னணியில் உளவியல் அல்லது உடலியல் காரணத்தை…

Read More

புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. அப்​போது தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோப​னா, தொழிலதிபர் நல்லி குப்​பு​சாமிக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்​கப்​பட்​டன. தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குரு​வாயூர் துரை, புதுச்​சேரியை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்​சிணா​மூர்த்​திக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்​கப்​பட்​டது. ஒட்​டுமொத்​த​மாக 68 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்​கப்​பட்​டன. கல்​வி, இலக்​கி​யம், அறி​வியல், விளை​யாட்​டு, சுகா​தா​ரம், தொழில், வர்த்​தகம், பொறி​யியல், பொது விவ​காரங்​கள், குடிமைப் பணி மற்​றும் சமூக சேவை உள்​ளிட்ட துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு ஆண்​டு​தோறும் பத்ம விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன. இந்த ஆண்​டுக்​கான விருதுகள் கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. இதன்​படி பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்​தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்​கப்​பட்​டன. முதல்​கட்​ட​மாக…

Read More

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டுமென்றால் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ள கூடாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் கூறியுள்ளார். குவாலிபையர்-1 ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி. எலிமினேட்டரில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறுகின்ற அணி குவாலிபையர்-2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி உடன் விளையாட வேண்டும். அதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். “ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பை வெல்ல வேண்டுமென்றால் மும்பையை குஜராத் அணி எலிமினேட்டரில் வீழ்த்த வேண்டும். மும்பை அணியை இறுதிக்குள் நுழைய அனுமதிக்க கூடாது. எதையாவது செய்து அவர்களை தடுத்து நிறுத்தியாக வேண்டும். ஏனெனில், இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தும் வாய்ப்புள்ள ஒரே அணி மும்பை தான். நான் ஆர்சிபி அணியில் இருந்தால், இறுதிப் போட்டியில் குஜராத்…

Read More

“மற்ற பசங்க எல்லாம் ஜாலியாக இருக்கும்போது நாம் மட்டும் ஒரு பக்கம் ஷூட்டிங், இன்னொரு பக்கம் படிப்பு என்று கஷ்டப்படுகிறோமே என்று நினைப்பேன். சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டேன்” என்று நடிகர் சிலம்பரசன் கண்கலங்கியபடி பேசினார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா இன்று (மே 24) நடைபெற்றது. இதில் நடிகர் சிம்பு பேசும்போது, “சிறுவயதில் எல்லா பசங்களையும் வெளியே அழைத்துச் செல்வார்கள். சாக்லேட் வாங்கித் தருவார்கள். படத்துக்கு, கடற்கரைக்கு அழைத்துச் செல்வார்கள். ஆனால் பிறந்தது முதலே எனக்கு நடிக்கச் சொல்லிக் கொடுத்தார்கள். அப்போதெல்லாம் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். மற்ற பசங்க எல்லாம் ஜாலியாக இருக்கும்போது நாம் மட்டும் ஒரு பக்கம் ஷூட்டிங், இன்னொரு பக்கம் படிப்பு என்று கஷ்டப்படுகிறோமே என்று நினைப்பேன். சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் இன்று 40 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு காரணம்…

Read More

மதுரை: நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பேச்சுக்கு ஏபிவிபி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்த அமைப்பின் தென் தமிழக இணை செயலாளர் ஜெ.டி.விஜயராகவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளி மாணவர்கள் மீது அக்கறையாக இருந்து அறிவுரை வழங்குவதாக கூறிக்கொண்டு தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தும் நோக்கத்தில் மாணவர்களிடம் தவறான கருத்துகளை தெரிவிக்கும் நடிகர் விஜய்யை ஏபிவிபி கண்டிக்கிறது. நடிகர் விஜய் அரசியல் சூழ்ச்சி தெரியாத பள்ளி மாணவர்களிடம் நீட் தேர்வு குறித்து எதிர்மறை எண்ணங்களை புகுத்தி, ஒன்றிய அரசு என அரசியல் பேசி மாணவர்களிடம் வன்முறையை தூண்டி வருகிறார். தமிழகத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் அடைந்து, அதிகப்படியான ஏழை மாணவர்கள் அதிகளவில் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் கடின முயற்சி எடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தி்ல் அரசியல் காரணங்களுக்காக நீட் தேர்வை எதிர்க்கும்…

Read More

இதிருப்பூர்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நேர்மறையாக நடைபெற்று வருவதாகவும், இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருப்பதாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக துணைத் தலைவர் சக்திவேல் கூறியுள்ளார். தொழில் வளர்ச்சி மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏஇபிசி) துணைத் தலைவர் ஏ.சக்திவேல், டெல்லியில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை இன்று (மே 30) சந்தித்தார். தொடர்ந்து ஆயத்த ஆடை துறையின் தற்போதைய நிலை, எதிர்கால வாய்ப்புகள் மற்றும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது பேசினர். இதில் தொழில்துறையின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அமைச்சரிடம் ஏ.சக்திவேல் தெரிவித்தார். இந்த சந்திப்பில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு தொடர்ச்சியாக பியூஷ் கோயல் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி…

Read More

புதுடெல்லி: ‘‘சுதந்திர இந்தியாவுக்கு அடித்தளமிட்டவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு’’ என அவரது 61-வது நினைவு தினத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி அவர் இறக்கும் வரை 16 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமராக இருந்தார். அவரது 61-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பண்டிட் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தில் அவருக்கு எனது பணிவான புகழஞ்சலியை செலுத்துகிறேன். வலுவான மற்றும் ஒங்கிணைந்த இந்தியா என்ற கணவுடன், நேரு தனது தொலைநோக்கு தலைமையால் சுதந்திர இந்தியாவுக்கு அடித்தளமிட்டார். சமூக நீதி, நவீனத்துவம், கல்வி, அரசியல்சாசனம் மற்றும் ஜனநாயகத்துக்கு அவர் அளித்த பங்களிப்பு மிக அதிகம். அவரது பாரம்பரியம் மற்றும் உயர்ந்த எண்ணங்கள் நம்மை எப்போதும்…

Read More