Author: admin

கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. கன்னட மொழி குறித்த கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “கமல்ஹாசன் தமிழ்த் திரைப்படங்களை கடந்து இந்திய அளவிலும், அகில உலக அளவிலும் தனது படைப்புகளின் வாயிலாக தனி முத்திரை பதித்த ஒரு மூத்த கலைஞர். திரைப்படங்களையே தனது சுவாசமாகவும், உணர்வாகவும், உயிராகவும் சுமந்து வாழும் மகத்தான ஒரு படைப்பாளர். வெகுஜன மக்களை மட்டுமின்றி, அந்த மக்களின் பேராதரவையும், அபிமானத்தையும் ஈட்டிய பல திரை நட்சத்திரங்களின் மனதிலும், மதம், இனம், மொழி பேதமின்றி தனது பேரன்பாலும், கலைத்திறனாலும் நிரந்தர இடம் பிடித்தவர் பத்மஸ்ரீ டாக்டர். கமல்ஹாசன். அந்த வகையில், அவருக்கும் கிரிஷ் கர்னாட்டுக்கும் உள்ள நட்பும் அவர் எழுத்தின் மேல் இருக்கும் பெரும் ஈடுபாடும் அனைவரும்…

Read More

சிவகங்கை: ‘சசி தரூர் எம்.பி-க்கு காங்கிரஸ் உரிய மரியாதை கொடுக்க வேண்டும்’ என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுகவிடம் மாநிலங்களவை எம்.பி. குறித்த கோரிக்கையை காங்கிரஸ் வைக்கவில்லை. அதனால், எங்களுக்கு ஏமாற்றமில்லை. திமுக, காங்கிரஸ் இடையே நல்ல உறவு உள்ளது. சசி தரூர் சிறந்த சிந்தனையாளர், 4 முறை எம்.பி-யாக தேர்வானவர். அவருக்கு கட்சி உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் தான் கூட்டுறவு வங்கிகள் வருகின்றன. அதனால் அங்கும் நகைக் கடன் பெறுவதில் சிரமம் உள்ளது. பாஜக அரசு இருக்கும் வரை சிரமம் இருக்கத்தான் செய்யும். எனவே, இந்த விதிமுறை களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பாஜகவுக்கு தமிழக மக்களிடம் பெரிய அளவு ஆதரவு இல்லை. அண்ணாமலை இருந்தபோது பாஜக ‘ஐ.டி.’ அணி துரிதமாகச் செயல்பட்டது. தற்போது ஐ.டி. அணி செயல்பாடு குறைந்ததால், கட்சி செயல்பாடு இல்லாதது…

Read More

புதுடெல்லி: ஜூன் மாதம் பருவமழை வலுக்கும் காலத்தில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக்கான முன்கணிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் மாற்றியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்பின்படி, நீண்ட கால சராசரி மழையளவு 106 சதவீதம் பெய்யும் என்றும், அதில் 4 சதவீதம் வரை கூடுதல், குறைவாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. இது வானிலை ஆய்வு மையத்தின் முந்தைய கணிப்பான 105 சதவீதத்தை விட 1 சதவீதம் அதிகம். மேலும், வழக்கமான மழையளவை விட அதிகம் என்ற வகையில் வருகிறது. சராசரி மழையளவான 104 சதவீதத்தை மழையளவுத் தாண்டும்போது வழக்கத்தை விட அதிகமான மழை என்று அழைக்கப்படும். வரும் ஜூன் மாதம் பருவமழை வலுவாக தொடங்க இருக்கிறது. மழைப்பொழிவு வழக்கத்தை விட 108 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடக்க நிலை அதிக…

Read More

முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் அணிக்கு 229 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ரோஹித் சர்மா, 50 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். முலான்​பூரில் உள்ள மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதலில் பேட் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். அந்த அணிக்காக ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோ இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மாற்று வீரராக இந்த சீசனில் தனது முதல் ஆட்டத்தில் விளையாடிய பேர்ஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ், 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா, 50 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். 9 ஃபோர்கள்,…

Read More

‘கண்ணப்பா’ ஹார்ட் டிஸ்க் மாயமான விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விஷ்ணு மஞ்சு சென்னையில் விளக்கி இருக்கிறார். ‘கண்ணப்பா’ படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயமான விவகாரம் தெலுங்கு திரையுலகில் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை விஷ்ணு மஞ்சு சென்னையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். அதில் விஷ்ணு மஞ்சு, “சமீபகாலமாக சில சர்ச்சையான சம்பவங்கள் நடப்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப் பற்றி நான் இங்கு பேச விரும்பவில்லை. அதே சமயம், என்ன நடந்தது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ‘கண்ணப்பா’ பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது. படத்தின் கிராபிக்ஸ் பணிகள் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. லண்டன் மற்றும் துபாய் நாடுகளிலும், இந்தியாவில் 8 இடங்களிலும் பணிகள் நடக்கிறது. பொதுவாக படத்தின் காட்சிகள் அடங்கிய டிரைவ் இரண்டு காப்பிகள் எடுக்கப்படும். ஒன்று எடிட்டிங் ஸ்டூடியோவுக்கும்,…

Read More

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று பிற்பகல் மற்றும் மாலையில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், நகரில் குளிர்ச்சி நிலவி வருகிறது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக மே மாதத்திலேயே தொடங்கியது. கேரளா, கர்நாடக மாநிலங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் தீவிரமாக உள்ளது. பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகரில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் 2 மணிக்கு மேல் திடீரென இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 15 நிமிடங்கள் மழை நீடித்தது. அதனைத் தொடர்ந்து மாலையில் சுமார் 5.30 மணியளவில் மீண்டும் மழை பெய்தது. இவ்வாறு சென்னை, புறநகரில் விட்டு விட்டு மழை பெய்ததால், மாலை, இரவு நேரங்களில் குளிர்ச்சியாக, ரம்மியமான சூழல் நிலவியது. மாலை 6 மணி வரை பதிவான மழை…

Read More

பஹல்காம்: “சுற்றுலா என்பது மோதல்களுக்கு இடமில்லாத ஒரு செயலாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா அரசியலில் சிக்குகிறது. ஜம்மு காஷ்மீர் எதிர்கொள்ளும் சூழ்நிலையிலிருந்து சுற்றுலாத் துறை தனிமைப்படுத்தப்படுவதை எனது அரசு உறுதி செய்யும்” என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இன்று அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “சுற்றுலா என்பது மோதல்களுக்கு இடமில்லாத ஒரு செயலாக இருக்க வேண்டும். சுற்றுலா என்பது பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான ஒரு வழியாகும். மீண்டும் மீண்டும் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா அரசியலில் சிக்குகிறது. ஜம்மு காஷ்மீர் எதிர்கொள்ளும் சூழ்நிலையிலிருந்து சுற்றுலாத் துறை தனிமைப்படுத்தப்படுவதை எனது அரசு உறுதி செய்யும். சுற்றுலாவை வேறு எதையும் விட முக்கியமான ஒரு பொருளாதார நடவடிக்கையாக அனைவரும் பார்க்க வேண்டும். கடந்த ஐந்து…

Read More

ஷார்ஜா: வங்கதேச அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி தொடரை 2-1 என கைப்பற்றி சாதனை படைத்தது. வங்கதேச அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு ஷார்ஜாவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 11 ஓவர்களில் 71 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. தொடக்க வீரரான தன்ஸித் ஹசன் 18 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் சேர்த்த 40 ரன்களும், விக்கெட் கீப்பர் பேட்ஸமேனான ஜாகர் அலி 32 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் சேர்த்த 41 ரன்களுமே வங்கதேச அணி…

Read More

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என டாப் ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் கலக்கிக் கொண்டிருந்த காலத்தில், தனக்கென்று தனியிடம் பிடித்தவர், ‘தமிழக ஜேம்ஸ்பாண்ட்’ ஜெய்சங்கர். ஸ்பை ஆக்‌ஷன், ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகளில் அதிகம் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அவர் நடித்த படங்களில் ஒன்று, ‘வைரம்’. இது அவரின் 104-வது படம். இந்தியில், அசோக் குமார், சாய்ரா பானு நடித்து வெற்றி பெற்ற ‘விக்டோரியா நம்பர் 203’ என்ற படத்தின் ரீமேக். இந்தியில் சாய்ரா பானு நடித்த வேடத்தில் ஜெயலலிதா நடித்தார். ஸ்ரீகாந்த், எம்.ஆர்.ஆர்.வாசு, அசோகன், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.வி.ராமதாஸ், தேங்காய் சீனிவாசன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், சச்சு என பலர் நடித்தனர். ரூ. 3 கோடி மதிப்புள்ள வைரத்தை கடத்த நினைக்கும் ஆர்.எஸ்.மனோகர் அதற்காக ஆளை அனுப்புகிறார். அவரோ அதை அபகரித்துக்கொள்ள நினைக்கிறார். அவரைக் கொன்று விட்டு வைரத்தை எடுத்துவர வேறொருவரை அனுப்புகிறார், மனோகர். கடத்தப்பட்ட வைரத்தின் பின்னணியில் சில மர்மங்களும்…

Read More

சென்னை: நாளை (மே 31) ஓய்வு பெறும் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநரின் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்கக் கோரி போக்குவரத்து ஊழியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இது தொடர்பாக அரசு போக்குவரத்துத்துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வனஜா முனியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “திருவள்ளுவர் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 1989-ம் ஆண்டு நடத்துநராக பணியில் சேர்ந்தேன். கடந்த 2018-ம் ஆண்டு டிக்கெட் பரிசோதகர் பதவி உயர்வுக்கான பட்டியலில் என்னை விட ஜூனியரின் பெயர் எனக்கு முன்பாக இருந்தது. இதுதொடர்பாக புகார் அளித்ததால் பட்டியல் திருத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகும் எனக்கு டிக்கெட் பரிசோதகராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில் பணிமனை மேலாளரான சீனிவாசன், அப்போது அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளராக பணியாற்றிய பொன்முடி எனக்கு பதவி உயர்வு வழங்க ரூ. 50 ஆயிரம்…

Read More