Author: admin

Last Updated : 23 May, 2025 07:00 AM Published : 23 May 2025 07:00 AM Last Updated : 23 May 2025 07:00 AM லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!

Read More

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கேம் சேஞ்சர்’. இப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இப்படம் தொடங்கப்பட்டபோது எடிட்டராக ஷமீர் முகமது பணிபுரிந்து வந்தார். ஆனால், படம் வெளியாக தாமதமானதால் இறுதியில் ரூபன் எடிட்டராக பணிபுரிந்திருந்தார். தற்போது எடிட்டர் ஷமீர் முகமது அளித்த பேட்டி ஒன்றில், “‘கேம் சேஞ்சர்’ எடிட்டிங் அனுபவம் ஒரு பயங்கரமானது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “‘கேம் சேஞ்சர்’ எடிட்டிங் செய்யும்போது, படத்தின் ஆரம்ப நீளம் ஏழரை மணி நேரமாக இருந்தது. அதனை மூன்று மணி நேரமாக குறைத்தேன். 3 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வேறு படத்தின் பணிகள் காரணமாக, ‘கேம் சேஞ்சர்’ படத்தில் இருந்து வெளியேறிவிட்டேன். துரதிருஷ்டவசமாக ஷங்கர் சாருடன் பணிபுரிந்த அனுபவம் இனிமையானதாக இல்லை. அது ஒரு பயங்கரமான அனுபவம்” என்று தெரிவித்துள்ளார் எடிட்டர் ஷமீர் முகமது. இந்தப் பேட்டியை முன்வைத்து இயக்குநர் ஷங்கரை…

Read More

திருநெல்வேலி: “பாமக உட்கட்சி விவகாரங்களுக்கும், குறிப்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதலுக்கும் பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று கூறும்போது, “2024 மக்களவை தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தினேன். அதேநேரம் அன்புமணியும், சவுமியாவும், ‘பாஜகவுடன் கூட்டணி என்பதை ஏற்க வேண்டும்’ என்று எனது கால்களை பிடித்துக் கொண்டு அழுதனர். மறுநாள் காலை, தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை வந்துவிட்டார். எனக்கு தெரியாமல் பெரிய விருந்து வைக்கப்பட்டது. பாஜக உடனான கூட்டணி ஏற்பாடுகளை சவுமியா முன்கூட்டியே செய்துவிட்டார். நான் கூறியபடி அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், 3 இடங்களில் பாமக வெற்றி பெற்றிருக்கும். சின்னமும் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், திருநெல்வேலியில் இன்று (மே 30) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையிலான மோதலுக்கு…

Read More

துருக்கிக்கு பறக்கிறதா? விமானத்தில் உள்ள இந்த எரிச்சலூட்டும் பழக்கம் உங்களுக்கு மிகுந்த அபராதம் சம்பாதிக்கக்கூடும் விமானப் பயணத்தின் வளர்ந்து வரும் உலகில், பயணிகள் நடத்தை டிக்கெட், போர்டிங் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் போலவே முக்கியமானது. பெரும்பாலான விமானப் பாதுகாப்பு விதிமுறைகள் விமானத்தில் நடத்தை மற்றும் அவசரகால தயாரிப்பில் கவனம் செலுத்துகையில், துருக்கி இப்போது தனது கவனத்தை பயணத்தின் வித்தியாசமான, அடிக்கடி கவனிக்காத ஒரு பகுதிக்கு திருப்பி வருகிறது-தரையிறங்கிய தருணங்கள். பயண சமூகங்கள் முழுவதும் விவாதத்தைத் தூண்டிவிடும் முன்னோடியில்லாத நடவடிக்கையில், துருக்கியில் உள்ள சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) ஒரு புதிய உத்தரவை அறிமுகப்படுத்தியுள்ளது, இது விமானத்தைத் தொட்ட பிறகு முன்கூட்டியே நிற்கும் பயணிகள் மீது அபராதம் விதிக்க அனுமதிக்கிறது.இந்த நீண்டகால ஒழுங்குமுறை பறக்கும் உலகளவில் எரிச்சலூட்டும் அம்சங்களில் ஒன்றாகும்-குழப்பமான இடைகழி அவசரம். பொறுமையின்மை அல்லது ஆரம்பத்தில் மேல்நிலை சாமான்களைப் பிடிக்கும் விருப்பம் காரணமாக, பல பயணிகள் தங்கள் சீட் பெல்ட்களை அவிழ்த்து,…

Read More

மும்பை: இந்தியா – பாகிஸ்தான் விரோதப் போக்கு குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக புனேவைச் சேர்ந்த 19 வயது பெண்ணை கைது செய்ததற்காக மகாராஷ்டிர அரசை அம்மாநில உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும், அதன் பின்விளைவுகள் தீவிரமானது என்றும் சாடியுள்ளது. நீதிபதிகள் கவுரி கோட்சே மற்றும் சோமசேகர் சுந்தரேஷன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு, மாணவியின் வழக்கறிஞரை உடனடியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டு, ஜாமீன் இன்றே வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. மேலும், மாநில அரசின் இந்தத் தீவிரமான எதிர்வினை தேவையில்லாதது என்றும், மாணவி ஒருவரைக் குற்றவாளியாக்கியுள்ளது என்றும் உயர் நீதிமன்றம் காட்டமாக கருத்து தெரிவித்தது. இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் விரோதப் போக்கு குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அந்த மாணவி தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். அவர் தனது கல்லூரி தன்னை கல்லூரியில்…

Read More

நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. முலான்​பூரில் உள்ள மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணிக்காக ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோ இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மாற்று வீரராக இந்த சீசனில் தனது முதல் ஆட்டத்தில் விளையாடிய பேர்ஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ், 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா, 50 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். 9 ஃபோர்கள், 4 சிக்ஸர்களை அவர் விளாசினார். திலக் வர்மா, 11 பந்துகளில் 24 ரன்கள்…

Read More

தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வழங்கப்பட உள்ளது. இதில் சிறந்த நடிகர் விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட உள்ளது. இவர் புஷ்பா-2 திரைப்படத்துக்காக இவ்விருதினை பெற உள்ளார். சிறந்த நடிகையாக நிவேதா தாமஸ் (35 இதி சின்ன கத காது) தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘35 இதி சின்ன கத காது’ படத்தை நந்தா கிஷோர் இயக்கி இருந்தார். இதில் சரஸ்வதி என்ற கதாபாத்திரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார். இதற்காக இவர் உடல் எடையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனையடுத்து படத்தை விளம்பரப் படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு வந்த நிவேதா தாமஸின் உடல் பருமனான தோற்றத்தை வைத்து சமூக வலைதளங்களில் பலரும் அவரை கடுமையாக உருவகேலி செய்து வந்தனர். மேலும் சிலர் அவருக்கு உடல்நலப் பிரச்சினை காரணமாகவே அவரது எடை கூடியுள்ளதாக அவதூறாக பதிவிட்டனர்.…

Read More

மதுரை: நகைக் கடனுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பை முழுமையாகத் திரும்பபெற வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் இன்று (மே 30) மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது: “ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடன் சார்ந்து ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட்டுள்ளது. இது மிக மோசமான நடைமுறை. பிரிவு 11 -ல் நகைக் கடன் பெறுவோர் நகை வைத்திருப்பதற்கான ஆவணங்களை செலுத்த வேண்டும் என்பதும் மோசமான ஓர் அறிவிப்பு. மதுரை மாவட்டத்திலுள்ள வங்கிகள் இன்றைக்கு 65 சதவீதம் கடன் என்பதை நகைக் கடன்களாக தான் வழங்கியுள்ளனர். எந்த ஒரு ஆபத்தும் இல்லை. திருப்பி செலுத்துவதற்கான ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும் என சொல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், நகைக் கடன் பெறும் காரணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என…

Read More

பெங்களூரு: கர்நாடகாவின் கடலோர பகுதிகளுக்கு அடுத்து வரும் 5 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது. பெலகாவியில் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று வயது சிறுமி உயிரிழந்தார். இதனிடையே, பெங்களூருவில் வரலாறு காணாத மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்ததால் பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டது. கடலோர கர்நாடகாவுக்கு 5 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இப்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. தட்சிண கன்னடா மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களில், பல்வேறு நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பெல்தங்கடியைச் சுற்றியுள்ள ஆறுகளில் நீர் மட்டம் கடுமையாக உயர்ந்துள்ளது, இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்…

Read More

டப்ளின்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அயர்லாந்து அணி. மேற்கு இந்தியத் தீவுகள் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் டப்ளின் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. தனது 9-வது சதத்தை விளாசிய தொடக்க வீரரான ஆண்ட்ரூ பால்பிர்னி 138 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் விளாசினார். ஹாரி டெக்டர் 56, கேப்டன் பால் ஸ்டிர்லிங் 54, லார்கன் டக்கர் 30 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் மேத்யூ போர்டு 3, அல்சாரி ஜோசப் 2 விக்கெட்களை வீழ்த்தினர். 304 ரன்கள் இலக்குடன்…

Read More