Author: admin

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 63-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. இதில் 59 ரன்களில் வெற்றி பெற்ற மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் டெல்லி வீரர் அபிஷேக் போரல் அவுட்டானது சர்ச்சையாகி உள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் ரியாக்‌ஷனை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பும், டெல்லி அணி தோற்றால் முதல் சுற்றோடு தொடரை நிறைவு செய்யும் நிலையும் இருந்தது. இதில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி அணி விரட்டியது. அந்த அணி 18.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 11-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.…

Read More

மருந்தகம் ஒன்றில் பணியாற்றும் ஆதித்யா (ஆதிரன் சுரேஷ்), விக்கி (சி.ஆர். ராகுல்), புகழ் (ராஜசிவன்) மூவரும் நண்பர்கள். இவர்களுக்குத் தனியாக மருந்தகம் ஒன்றைத் தொடங்கி முன்னேற வேண்டும் என்பது ஆசை. அதற்காகக் கடன் வாங்கியும் நகைகள் மற்றும் இடத்தை விற்று ரூ.6 லட்சம் சேர்க்கிறார்கள். அந்த பணம் திருடு போய்விட, போலீஸில் புகார் செய்கிறார்கள். பிறகு என்ன நடக்கிறது? அவர்களின் கனவை அடைய முடிந்ததா? அதற்கு என்ன செய்கிறார்கள்? என்பது இந்தப் படத்தின் பரபரக்கும் கதை. மிகவும் எளிமையாகவும் அழுத்தமாகவும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை யதார்த்தமாகத் தந்திருக்கும் அறிமுக இயக்குநர் தர்மா, மேக்கிங்கில் ஆச்சரியப்படுத்துகிறார். பொதுவாக இதுபோன்ற த்ரில்லர் படங்களுக்கு, முன் பின்னாகச் செல்லும் நான் -லீனியர் கதை கூறும் முறையையும் இரண்டு மூன்று லேயர்களை வைத்தும் பெரும்பாலான இயக்குநர்கள் திரைக்கதை அமைப்பது வழக்கம். அப்படி ஏதுமின்றி நேரடியாகவே கதை சொல்லி, கடைசிவரை த்ரில் உணர்வைப் பார்வையாளர்களுக்குத் தருவதில் வெற்றி…

Read More

பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று சென்னையில் நடந்த பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி தலைவர் அன்புமணி உறுதிபட தெரிவித்தார். பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையிலான மோதல் நேற்று முன்தினம் உச்சகட்டத்தை எட்டியது. ‘அன்புமணிக்கு பக்குவம் சபை நாகரிகம், தலைமை பண்பு கிடையாது. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கியது நான் செய்த மிகப்பெரிய தவறு’ என்று ராமதாஸ் கடுமையாக குற்றம்சாட்டினார். தேவைப்பட்டால், பொதுக்குழுவை கூட்டி கட்சியில் இருந்து அன்புமணியை நீக்கவும் முடியும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் அன்புமணி நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை சோழிங்கநல்லூரில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கான பாமக நிர்வாகிகளுக்கான உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் அட்டை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து காலை முதல் மாலை…

Read More

ஒடிசாவை சேர்ந்த தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத் துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ஒடிசா மாநிலம் தேன்கனலை சேர்ந்தவர் ரதிகாந்த ரூட். இவர் சுரங்கம் தொடர்பான தொழில் செய்து வருகிறார். இவர் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை தன்னிடம் லஞ்சம் கேட்பதாக கூறி சிபிஐ-யிடம் புகார் அளித்தார். இவர் அளித்த புகாரில், பணமோசடி வழக்கில் கைது செய்யாமல் இருப்பதற்காக அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்சி ரூ. 5 கோடி கேட்டதாகவும், பேரம் பேசியதில் பின்னர் லஞ்சத்தை ரூ.2 கோடியாக குறைத்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து ரகுவன்சியை பொறி வைத்து பிடிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டனர். இந்த நிலையில், ரூ. 2 கோடியில் முதல் தவணையாக ரூ. 50 லட்சத்தை லஞ்சமாக கொடுத்தபோது அமலாக்கத் துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர். சிபிஐ விசாரணையில் ரகுவன்சி கடந்த காலங்களில்…

Read More

பெங்களூரு: இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தலுக்கு மாற்று வீரராக நியூஸிலாந்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டிம் செய்ஃபெர்ட்டை ஒப்பந்தம் செய்துள்ளது ஆர்சிபி அணி. இது குறித்து அந்த அணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நாளை (மே 23) நடைபெற உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உடனான லீக் ஆட்டத்தில் ஜேக்கப் பெத்தல் விளையாடுவார். அதன் பின்னர் அவர் இங்கிலாந்து அணியுடன் இணைய உள்ளார். வரும் 29-ம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் இங்கிலாந்து விளையாட உள்ளது. அந்த தொடருக்கான அணியில் பெத்தல் இடம்பெற்றுள்ளார். டிம் செய்ஃபெர்ட்: 30 வயதான டிம் செய்ஃபெர்ட், நியூஸிலாந்து அணிக்காக கடந்த 2018 முதல் 66 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1540 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் ஆவரேஜ் 28 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 142 என உள்ளது. கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான்…

Read More

‘பராசக்தி’ படத்தின் அப்டேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்காரா. டான் பிக்சர்ஸ் மற்றும் சுதா கொங்காரா இணைந்து தயாரித்து வரும் படம் ‘பராசக்தி’. சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. ஏனென்றால், சமீபத்தில் இதன் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனை தொடர்பாக எந்தவொரு விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனை முன்வைத்து பல்வேறு வியூகங்கள் வெளியாகிவந்தன. இதனிடையே, சுதா கொங்காரா விழா ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, ”இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. ‘மதராஸி’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் வருகைக்காக காத்திருக்கிறேன். அது கொலம்போவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘பராசக்தி’ வெளியீடு குறித்து நான் மட்டும் முடிவு எடுக்க முடியாது. தயாரிப்பாளர்கள் தான் முடிவு…

Read More

சென்னை: ​திரைப்​படங்​களுக்கு உள்​ளாட்சி அமைப்​பு​களால் வசூலிக்​கப்​படும் கேளிக்கை வரி 4 சதவீத​மாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் திரைப்​படங்​களுக்கு உள்​ளாட்சி அமைப்​பு​களால் 8 சதவீத கேளிக்கை வரி வசூலிக்​கப்​பட்டு வந்​தது. இந்த வரியைக் குறைக்க வேண்​டும் என்று திரைப்பட அமைப்​பு​கள், தமிழக அரசிடம் தொடர்ந்து வலி​யுறுத்தி வந்​தன.குறிப்​பாக, சிறிய பட்​ஜெட் திரைப்​படங்​கள் இந்த வரி​யால் பாதிக்​கப்​படு​வ​தாகத் தயாரிப்​பாளர்​கள் கூறிவந்​தனர். இந்​நிலை​யில், இந்​தக் கோரிக்​கையை பரிசீலனை செய்த தமிழக அரசு, உள்​ளாட்சி அமைப்​பின் கேளிக்கை வரியை குறைத்து அரசாணை வெளி​யிட்​டு உள்​ளது. அதன்​படி, இந்த வரி 8 சதவீதத்​தில் இருந்து 4 சதவீத​மாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​காக தமிழக முதல்​வர் ஸ்டா​லின், துணை முதல்​வர் உதயநிதி உள்​ளிட்​டோருக்கு திரைப்​படத் துறை​யினர் நன்றி தெரி​வித்​து உள்​ளனர்​.

Read More

ஹைத​ரா​பாத்: உலகிலேயே அதிக நெல் உற்​பத்தி செய்​யும் 2-வது பெரிய நாடாக இந்​தியா உள்​ளது. நெல்உற்​பத்​தி​யில் உரத்​தின் பங்கு மிக முக்​கிய​மான​தாகும். உரங்​கள் நெல்​லுக்கு தேவையான ஊட்​டச்சத்​துக்​களை வழங்​கு​கின்​றன. உறை கரு​கல் நோயை ஆரம்​பத்​திலேயே கண்டு பிடித்து தடுக்​கா​விட்​டால், நெல் வளர்ச்சி 40 முதல் 50 சதவீதம் வரை பாதிக்​கப்​படும் என்​கிறது விவ​சா​யத் துறை. இதற்கு தீர்வு ஏற்​படுத்​தும் வகை​யில், பிஏஎஸ்​எப் நிறு​வனம் தனது மும்​பை, புனே ஆய்​வகங்​களில் தொடர்ச்​சி​யாக நடத்​திய ஆய்​வில் புதிய ரசாயன திர​வங்​களை கண்​டு​பிடித்​துள்​ளது. இதுகுறித்​து, பிஏஎஸ்​எப் தெற்​காசிய நிர்​வாக இயக்​குநர்​கள் குழு​வின் உறுப்​பினர் மைக் ஹெய்ன்​ஸ், மூத்த துணைத் தலை​வர்​கள் மார்கோ க்ரோஸ்​டானோவிக், சிமோன் பார்க், பிஏஎஸ்​எப் இந்​தியா நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் அலெக்​சாண்​டர் கெர்​டிங், பிஏஎஸ்​எப் இந்​தி​யா​வுக்​கான வேளாண் தீர்​வு​கள் பிரி​வின் வணிக இயக்​குநர் கிரிதர் ரனுவா ஆகியோர் ‘வேலெக்​சி​யோ’ மற்​றும் ‘மிபிலி​யா’ என்ற புதிய ரசாயன திர​வங்​களை ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளி​யிட்ட​னர்.…

Read More

சென்னை: “உங்களால் முடியவில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள்” என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை காட்டமாக விமர்சித்துள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்ற நிலையில் அதனால் அந்த அணி எதிர்பார்த்த மாயம் ஏதும் ஏற்படவில்லை. புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் சிஎஸ்கே உள்ளது. காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனின் பாதியில் விலகினார். அதன் பிறகு 8 ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸை தோனி கேப்டனாக வழிநடத்தி உள்ளார். அதில் 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் 13 ஆட்டங்களில் விளையாடி உள்ள தோனி, மொத்தம் 196 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த சூழலில் அவரை காட்டமாக விமர்சித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். “தோனி களத்துக்கு வந்தாலே லெக் ஸ்பின்னர் வசம் பந்தை எதிரணியின் கேப்டன்கள் கொடுத்து…

Read More

விஜய் ஆண்டனியின் ‘லாயர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ரவீனா டாண்டன். ‘மார்கன்’ மற்றும் ‘சக்தி திருமகன்’ ஆகிய படங்களை முடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இதில் ஜூன் 27-ம் தேதி ‘மார்கன்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. முழுக்க த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை அறிவித்தார் விஜய் ஆண்டனி. இப்படத்தினை ‘ஜென்டில்வுமன்’ படத்தினை இயக்கிய ஜோசுவா சேதுராமன் இயக்கவுள்ளார். ‘லாயர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் விஜய் ஆண்டனியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரவீனா டாண்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் ‘ஆளவந்தான்’ படத்துக்குப் பிறகு அவர் ஒப்பந்தமாகி இருக்கும் படம் இதுவாகும். ரவீனா டாண்டன் நடிக்கவுள்ள கதாபாத்திரம், விஜய் ஆண்டனி கதாபாத்திரத்துக்கு சரிசமமாக இருக்கும் என்று இயக்குநர் ஜோசுவா சேதுராமன் தெரிவித்துள்ளார். தற்போது விஜய் ஆண்டனியுடன் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக…

Read More