Author: admin

புதுடெல்லி: பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு பாகிஸ்தானில் ஆறு பேர் ஏகே-47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை ஸ்காட்லாந்து யூடியூபர் வெளியிட்டுள்ளார். யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்கு சென்றிருந்த போது லாகூரில் உள்ள அனார்கலி பஜாருக்கு சென்று சுற்றிப்பார்த்துள்ளார். அப்போது அவருக்கு ஏகே-47 துப்பாக்கி ஏந்திய ஆறு பேர் சுற்றிநின்று பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இதனை தான் நேரில் பார்த்ததாக ஸ்காட்லாந்து யூடியூபர் கல்லம் மில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “கல்லம் அப்ராடு” என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கல்லம் மில் கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் சென்றிருந்தார். லாகூரின் அனார்கலி பஜாரில் அவர் எடுத்த வீடியோவில் ” நோ பியர்” என எழுதப்பட்ட ஜாக்கெட் அணிந்தவர்கள் துப்பாக்கியுடன் நின்றிருக்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் ஜோதி மல்ஹோத்ரா காணப்படுகிறார். அப்போது கல்லம் தன்னை ஸ்காட்லாந்து…

Read More

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமும் சிஎஸ்கே தோற்று இன்னும் ஒரேயொரு போட்டி மட்டுமே உள்ள நிலையில், படுமோசமாக அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது. ஒரு போட்டித் தொடரில் ஒரு அணி 13 போட்டிகளில் 10 போட்டியில் தோற்கிறது என்றால் கேப்டன்சி, அணித் தேர்வு, வீரர்களின் கடப்பாடு, ஸ்பிரிட் என்று அனைத்தும் கேள்விக்குட்பட்டே தீரும். இதில் தோனி பாவம் அவர் என்ன செய்வார் என்று ஒருதலைபட்சமாக வக்காலத்து வாங்க முடியாது. அவருக்கு போதுமென்ற மனம் வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் சஞ்சய் பாங்கர். ஆகாஷ் சோப்ராவோ இன்னும் ஒரு படி மேலே போய் 7 வீரர்களை சிஎஸ்கே உடனடியாக விடுவித்தால்தான் அடுத்த ஐபிஎல் தொடருக்காவது ஓர் இளம் சவால் அணியை உருவாக்க முடியும் என்று கூறுகிறார். இந்த அணியை வைத்துக் கொண்டு இப்போதிருக்கும் எந்த ஐபிஎல் அணியையும் சிஎஸ்கே வெல்லவே முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. முதலில் அவர்கள் நல்ல தலைமைத்துவத்தை அடையாளம் கண்டிருக்க வேண்டும்,…

Read More

’மகாராஜா’ என்ற மாபெரும் வெற்றிப் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படம் என்பதால் இப்படத்துக்கு இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. எனினும் இப்படி ஒரு படம் வெளியாவது குறித்தே பலருக்கும் தெரியாத நிலையில் தான் இதற்கான விளம்பரப் பணிகளும் நடைபெற்றன. முழுக்க முழுக்க கமர்ஷியல் பாணியில் விஜய் சேதுபதி களமிறங்கிய இப்படம் ‘சைலன்ட்’ ஆக சம்பவம் செய்ததா என்று பார்ப்போம். பிழைப்புக்காக சமையல் வேலையில் சேர மலேசியா வருகிறார் போல்ட் கண்ணன் (விஜய் சேதுபதி). தனது நண்பரின் சிபாரிசு என்பதால் அவரை வரவேற்று தன்னுடன் தங்க வைத்துக் கொள்கிறார் காகிதம் சேகரிக்கும் பணியாளரான அறிவு (யோகிபாபு). தான் தங்கி இருக்கும் வீட்டுக்கு எதிரில் வசிக்கும் ருக்கு (ருக்மிணி வசந்த்) மீது கண்டதும் காதல் வசப்படுகிறார் போல்ட் கண்ணன். காதலிக்கு பணம் தேவை என்பதால் சூதாட்டத்தில் ஈடுபட்டு பெரும் கடனில் சிக்கிக் கொள்கிறார். மலேசியாவில் பெரிய டான் ஆக இருக்கும் தர்மாவுக்கு…

Read More

விழுப்புரம்: ராமதாஸ்-அன்புமணி மோதலால் மன உளைச்சலில் தவிக்கிறேன் என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் உள்ளிட்டோருடன் நிறுவனர் ராமதாஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி கூறியதாவது: எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கடும் மன உளைச்சலில் இருக்கிறேன். பாமக பலமான கட்சி; தனித்தன்மை, கொள்கை, லட்சியத்துடன் இருக்கும் கட்சி. தற்போது கட்சிக்கு நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ளதைப் பார்க்கும்போது மிகவும் வேதனைப்படுகிறேன். எதையும் சொல்லக் கூடாது என்று கருதினாலும், எதுவும் சொல்லாமல் ஓடி விட்டார் என்று கூறுவார்கள் என்பதால், செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கிறேன். பிரச்சினைகள் ஓய்ந்து, நிலையை சீராக வேண்டும் என்று அனைவரும் கருதுகிறோம். மீண்டும் பழைய நிலை திரும்ப…

Read More

சிறுநீரக பீன்ஸ் அவற்றின் வடிவத்தின் பெயரிடப்பட்டுள்ளது, இது சிறுநீரகங்களை ஒத்திருக்கிறது, மேலும் அவை சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் சிறந்தவை. அவை நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் தாதுக்கள் நிறைந்தவை, அவை சிறுநீரகங்களிலிருந்து கழிவு மற்றும் நச்சுகளை அகற்ற உதவும். சிறுநீரக பீன்ஸ் சிறுநீரக கற்களை வெளியேற்றவும் சிறுநீர் பாதையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.உங்கள் உணவில் சிறுநீரக பீன்ஸ் உட்பட உங்கள் சிறுநீரகங்களின் இயற்கை துப்புரவு செயல்முறையை ஆதரிக்கலாம் மற்றும் ஒட்டுமொத்த சிறுநீர் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.பயன்படுத்துவது எப்படி: சமைத்த சிறுநீரக பீன்ஸ் சாலடுகள், சூப்கள் அல்லது குண்டுகளுக்கு சத்தான உணவுக்கு சேர்க்கவும்.

Read More

பாசிம் மேதினிபூர்: இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் இல்லாமல் அழிந்துபோகும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பாசிம் மேதினிப்பூரில் பேசிய அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், “நாடு பயங்கரவாத செயல்களை பொறுத்துக்கொள்ளாது என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அவர்கள் நாட்டிற்காக பேச வேண்டும். பயங்கரவாதிகள் பஹல்ஹாமில் ‘சிந்தூர்( குங்குமம்)’ பார்த்து மக்களைக் கொன்றனர். அதனால்தான் ஆபரேஷன் சிந்தூர் நடந்தது. அவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் இல்லாமல் போய்விடும். பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பதிலடி கொடுத்து தாக்கிய விதத்தை பாகிஸ்தான் இப்போது புரிந்துகொண்டுள்ளது. அதே தவறை அவர்கள் மீண்டும் செய்தால், அவர்களுக்கு தோட்டாக்கள் மற்றும் ஏவுகணைகள் மட்டுமே கிடைக்கும். அவர்களின் முதுகு இப்போது உடைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் இப்போதாவது, அவர்கள் முழு உலகத்திலிருந்தும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.…

Read More

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் நான்காவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் ஏற்கெனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் வெற்றி பெற்றால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற வாய்ப்பும், டெல்லி கேப்பிடல்ஸ் தோல்வியை தழுவினால் முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறும் நிலையிலும் இருந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. காய்ச்சல் காரணமாக அந்த அணியின் கேப்டன் அக்சர் படேல், இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு மாற்ற அணியை டூப்ளஸி வழிநடத்தினார். 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த…

Read More

சென்னை: சசிகுமார், சிம்ரன் நடித்தா ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவை நடிகர் சூர்யா நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இதனை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் வெளியிட்டது. இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார். மே 1-ம் தேதி ‘ரெட்ரோ’ படத்துடன் வெளியான இப்படம் முதல் நாளில் குறைவான வசூலே இருந்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.50 கோடியை கடந்துவிட்டது. மேலும் கேரளா, கர்நாடகா மட்டுமன்றி அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. விரைவில் இப்படம் ஜப்பானிலும் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் உள்ளிட்ட படக்குழுவினரை நடிகர் சூர்யா நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள…

Read More

சென்னை: கேரள கடற்கரையில் கப்பல் கவிழ்ந்துள்ள நியைலில், பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களும் மீனவர்களும் பின்பற்றவேண்டிய நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த மே 24-ம் தேதி கேரள மாநில கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவில் எல்சா-3 என்ற கப்பல் விபத்துக்குள்ளாகி, அதிலிருந்த எரிபொருள், பிளாஸ்டிக் துகள்கள், ஆபத்தான பொருட்கள் கொண்ட பெட்டகங்கள் கடலில் மூழ்கின. வலுவடைந்த தென்மேற்கு பருவ மழையின் காரணமாக பிளாஸ்டிக் துகள்கள், பெட்டகங்கள் உட்பட பிற பொருட்கள் கேரள மாநிலத்தின் கடற்கரையிலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையிலும் கரை ஒதுங்கி வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பிளாஸ்டிக் துகள்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மீன்வளம் மற்றும் கடல்சார் உயிரினங்களுக்கு ஏதாவது…

Read More

இருவாரங்களுக்கு முன் காங்கிரஸின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் டெல்லியில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசினார். நம் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் யாதவ் ஆகியோர் எழுதிய புத்தக வெளியீட்டு விழா அது. இதில் ப.சிதம்பரம் வெளியிட்ட பல கருத்துகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சிதம்பரம் கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இன்று இண்டியா கூட்டணியிலும், தேசிய அரசியலிலும் நிலவும் சூழல் மீது இக்கட்டுரை மூலம் நான் ஒரு பார்வை செலுத்த விரும்பினேன். ‘ஆபரேஷன் சிந்தூர்’, நாட்டின் அரசியல் சூழ்நிலையை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் படிமத்தை இது ஒரு புறம் வலுப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், மறுபுறம் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழலில் மூத்த காங்கிரஸ் தலைவரான ப. சிதம்பரத்தின் கருத்துக்கள், இண்டியா கூட்டணி சந்திக்க வேண்டிய சவால்களை சரியான நேரத்தில் நினைவூட்டுகின்றன. அவருடைய கருத்துகளை உள்ளடக்கிய…

Read More