Author: admin

புதுடெல்லி: இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலான தொற்றுகள் கேரளாவில் உள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக பாதிப்புகள் குறைவாக இருந்த நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளாவில் அதிகம்: தற்போதைய நிலவரப்படி, கேரளாவில் 1,147 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 424 பேர், டெல்லியில் 294 பேர் மற்றும் குஜராத்தில் 223 பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தலா 148 பேரும், மேற்கு வங்கத்தில் 116 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் உயிரிழப்பு: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏழு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டின்…

Read More

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப், கட்டாய மரபணு ரீதியான பாலின பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். உலக குத்துச்சண்டை அமைப்பின் புதிய நிர்வாகக் குழுவின் கொள்கை முடிவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். சுவிட்சர்லாந்து நாட்டின் லோசான் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக குத்துச்சண்டை அமைப்பு வெள்ளிக்கிழமை அன்று இதை அறிவித்தது. இதன்படி அனைத்து குத்துச்சண்டை வீரர்களுக்கும் இந்த மரபணு ரீதியான பாலின பரிசோதனை கட்டாயம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக இதில் அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் குறித்து புதிய நிர்வாகக் குழு பேசியது கவனிக்கத்தக்கது. அடுத்த மாதம் நெதர்லாந்தில் நடைபெற உள்ள குத்துச்சண்டை போட்டியில் அவர் பங்கேற்க உள்ளார். அதற்கு முன்பாக இந்த சோதனையை அவர் மேற்கொள்ள வேண்டும் என உலக குத்துச்சண்டை அமைப்பு கூறியுள்ளது. அதன்பின் தான் அவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்…

Read More

நடிகை சாய் தன்ஷிகா, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘யோகிடா’. இதில் ஷாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். மலையாளத்தில் ‘லூசிஃபர்’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள தீபக் தேவ் இசையமைத்துள்ளார். பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார். “இதில் சாய் தன்ஷிகா குறுகிய காலத்தில் அதிக டிரான்ஸ்ஃபர் பெற்ற நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். தான் வேலை பார்க்கும் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொல்லப்படுகிறார். அதை அவரது குடும்பத்தினர் தற்கொலை என மாற்ற முயற்சிக்கின்றனர். அதைக் கொலை என நிரூபித்து குற்றவாளியை கைது செய்கிறார் சாய் தன்ஷிகா. குற்றவாளியை விடுவிக்கக் கோரி அவருக்கு அழுத்தம் தரப்படுகிறது. இதையடுத்து அவர் சந்திக்கும் பிரச்சினைகள்தான் படம்” என்றது படக்குழு.

Read More

சென்னை: பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் இட ஒதுக்கீட்டைக் கடைபிடித்து நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 50%-க்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றில் 30% பணியிடங்களை இட ஒதுக்கீடு இல்லாமல் தற்காலிக அடிப்படையில் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன. திராவிட மாடல் அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் சமூகநீதியை சவக்குழியில் போட்டு புதைப்பதற்கு ஒப்பானதாகும். இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற பல்கலைக்கழக பதிவாளர்கள் கூட்டத்தில் , பல்கலைக்கழகங்களின் மொத்தப் பணியிடங்களில் 10% பணியிடங்கள் ஓய்வுபெற்ற பேராசிரியர்களையும், 10% பணியிடங்கள் தொழில்துறையினரையும், 10% பணியிடங்கள் வெளிநாட்டு ஆசிரியர்களைக் கொண்டும் நிரப்பப்பட வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை செயலாளர்…

Read More

பாரம்பரிய சீன மருத்துவம் முடி உதிர்தலுக்கான இயற்கை வைத்தியங்களை வழங்குகிறது, இது உள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறது. அவர் ஷோ வு, டாங் குய், ஜின்ஸெங், லிகஸ்ட்ரம் மற்றும் ரெஹ்மானியா போன்ற மூலிகைகள் முடி வளர்ச்சியைத் தூண்டுவதாகவும், உச்சந்தலையை வளர்ப்பதாகவும், உயிர்ச்சக்தியை மீட்டெடுப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த மூலிகைகள் உச்சந்தலையில் மசாஜ் உடன் இணைப்பது மற்றும் ஒரு டி.சி.எம் பயிற்சியாளரை ஆலோசனை செய்வது முடிவுகளை மேம்படுத்தலாம். முடி உதிர்தல் என்பது நம்பிக்கையையும் சுயமரியாதையையும் பாதிக்கும் ஆழ்ந்த தனிப்பட்ட பிரச்சினை. மினாக்ஸிடில் மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை போன்ற நவீன சிகிச்சைகள் பிரபலமாக இருக்கும்போது, ​​பலர் மிகவும் இயற்கையான அணுகுமுறைக்காக பண்டைய வைத்தியங்களுக்கு திரும்புகிறார்கள். பாரம்பரிய சீன மருத்துவம் (டி.சி.எம்) முடி வளர்ச்சியைத் தூண்டும், உச்சந்தலையை வளர்ப்பது மற்றும் உள்ளே இருந்து உயிர்ச்சக்தியை மீட்டெடுப்பதாக நம்பப்படும் நேர சோதனை மூலிகைகள் புதையலை வழங்குகிறது.தலைமுடியை மீண்டும் வளர்க்க உதவும் ஐந்து சீன மூலிகைகள் இங்கே…

Read More

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் அணுஆயுத மோதலை தான் தான் தடுத்ததாக 11-வது முறை டொனால்ட் ட்ரம்ப் கூறிவிட்டார். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 21 நாட்களில் 11வது முறையாகக் கூறியுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் அணுஆயுத மோதலில் ஈடுபடாமல் தடுக்க வர்த்தகத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றதாக ட்ரம்ப் கூறுகிறார். அதோடு, இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமாகக் கருதும் அமெரிக்காவின் பார்வையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது ஆனால் டொனால்ட் ட்ரம்ப்பின் நண்பர் நரேந்திர மோடி, இதனை மவுனத்துடன் தொடர்ந்து புறக்கணிக்கிறார். பிரதமர் ஏன் பேசவில்லை? மோடி எப்போதும் செய்வதை (அதாவது…

Read More

Last Updated : 21 May, 2025 06:47 AM Published : 21 May 2025 06:47 AM Last Updated : 21 May 2025 06:47 AM லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!

Read More

வாஷிங்டன்: அமெரிக்காவின் அரசு செயல்திறன் துறையில் பணியாற்றிய காலத்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தினார் என்ற ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் குற்றசாட்டினை உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் மறுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக அரசு செயல்திறன் துறையில் தொழில்நுட்ப ஜாம்பவான் எலான் மஸ்க் பணியாற்றிய காலத்தில் அவரிடம் அடிக்கடி போதைப் பொருள் பயன்பாடு மற்றும் ஒழுங்கற்ற நடத்தை இருந்ததாக ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தியைக்காட்டி தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர். அந்தக் கட்டுரையில், ‘எலான் மஸ்க் கேட்டமைன், எக்ஸ்டசி போதை வஸ்துக்கள் மற்றும் சைக்டெலிக் காளான்களை உட்கொண்டார். அது அவரின் அரசுப் பணி குறித்து கேள்விகளை தூண்டியது.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. என்றாலும் தனது பணிநிறைவு நாளில் பேசிய மஸ்க், பத்திரிகையின் மீது குற்றம்சாட்டி பிரச்சினையை திசைதிருப்பினார். ஃபாக்ஸ் செய்திகளின் பீட்டர் டூகி, நியூயார்க் டைம்ஸ் செய்தி பற்றி மஸ்கிடம் கேட்ட போது, “ரஷ்யா -கேட் பற்றி பொய்யான செய்தி வெளியிட்டு…

Read More

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து தீபிகா படுகோன் விலகியிருக்கிறார். ‘அனிமல்’ படத்துக்குப் பின் சந்தீஷ் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ படம் உருவாக இருக்கிறது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது பிரபாஸ் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் பிரபாஸுக்கு நாயகியாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தமானார். பின்பு இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து விலகி இருக்கிறார். தீபிகா படுகோனுக்கு பதிலாக வேறொருவரை நடிக்கவைக்க படக்குழு பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது. இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. அதற்கு முன் நாயகியை ஒப்பந்தம் செய்ய படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது.

Read More

சென்னை: அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் அளிக்கக் கோரி தமிழக முற்போக்கு மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு மக்கள் கட்சி சார்பில், அம்பத்தூர், கள்ளிக்குப்பம், முத்தமிழ் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் அளிக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் க.சக்திவேல் பங்கேற்று உரையாற்றும்போது, “அம்பத்தூர் வட்டம், கொரட்டூர் கிராமம், கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரில் வசித்து வந்த 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீர்ப்பிடிப்பு மற்றும் புறம்போக்கு பகுதிகளில் வசித்து வருவதாகக் கூறி அவர்களை அங்கிருந்து அரசு வெளியேற்றி விட்டது. அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் தெருவில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, ஆட்சியர், வருவாய் துறை அமைச்சர் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு…

Read More