புதுடெல்லி: அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது என்றும், பயங்கரவாதத்திற்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். குஜராத்தின் வதோதராவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “ஏப்ரல் 22 நடத்தப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாவை சேதப்படுத்துவதையும், மத பதற்றத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட தீய வடிவமைப்பாக இருந்தது. இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு ஒரு முன்மாதிரியான பதில் தேவைப்பட்டது. இது பாகிஸ்தானில் பஹாவல்பூர் மற்றும் முரிட்கே உள்ளிட்ட இடங்களில் உள்ள பயங்கரவாத கட்டளை மையங்களை அழிப்பதன் மூலம் வழங்கப்பட்டது. பயங்கரவாதத்தை தங்கள் நோக்கங்களுக்காக ஆதரிப்பவர்கள், வளர்ப்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நாங்கள் ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம். இந்தியாவின் தேசிய நலனுக்காகவே எந்த முடிவுகளும் எடுக்கப்படுகின்றன, அதுவே தொடர்ந்து எடுக்கப்படும். பயங்கரவாதத்திற்கு எதிராக நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை குறித்து மற்ற நாடுகளிடமிருந்து…
Author: admin
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 62வது ஆட்டம் இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணியின் ஆயுஷ் மாத்ரே, டெவான் கான்வே இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ஆயுஷ் மாத்ரே 20 ரன்களில் 43 ரன்கள் விளாசி அசத்தினார். கான்வே 10 ரன்களில் வெளியேறினார். ரவிச்சந்திரன் அஸ்வின் 13, ஜடேஜா 1, ப்ரெவிஸ் 42, துபே 39, தோனி 16 என 20 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே. 188 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி இருவரும் ஓப்பனிங் இறங்கினர். இதில்…
சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிகர் தனுஷ், கலாமாக நடிக்கிறார். இது குறித்து அறிவிப்பை இன்ஸ்டாகிராம் தளத்தில் தனுஷ் பகிர்ந்துள்ளார். “உத்வேகமிக்க தலைவரான அப்துல் கலாம் அய்யாவின் வாழ்க்கையை சொல்லும் படத்தில் நான் நடிப்பதை எனது பாக்கியமாக கருதுகிறேன்” என தனுஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார். கேன்ஸ் பட விழாவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை ‘ஆதிபுருஷ்’ பட இயக்குனர் ஓம் ராவத் இயக்குகிறார். அபிஷேக் அகர்வால், பூஷன் குமார், கிரிஷன் குமார், அனில் சுங்காரா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றர். இதில் அபிஷேக் அகர்வால் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் ராமேஸ்வரம் தீவிலிருந்து ராஷ்டிரபதி பவன் வரையிலான அப்துல் கலாமின் வாழ்க்கை பயணத்தை இந்த படம் சொல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் ஓம் ராவத் அதை தனது சமூக வலைதள பதிவில் கேப்ஷனாக குறிப்பிட்டு…
திண்டுக்கல்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் அடுத்த கோபால்பட்டி வாரச்சந்தையில் இன்று (மே 31) ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கோபால்பட்டியில் வாரந்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். தற்போது மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருமணம், காதணி விழா உள்ளிட்ட விசேஷங்களில் அசைவ விருந்து அளிப்பதற்காகவும், ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று (மே 31) வாரச்சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் விற்பனை 2 மடங்கு கூடுதலாக விற்பனையாது. ஆடுகள் வாங்கவும், விற்பனை செய்யவும் திண்டுக்கல், நத்தம், கோசுகுறிச்சி, அய்யலூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து காலை முதலே வியாபாரிகள், மக்கள் அதிகளவில் வந்திருந்தனர். எடைக்கு ஏற்றவாறு ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. இன்று (மே 31) ஒரு நாள் மட்டும்…
திருமணங்கள் மிகவும் சிக்கலானவை மற்றும் இந்த நாட்களில் தக்கவைக்க கடினமாகிவிட்டன. நீங்களும் அதில் போராடுகிறீர்கள் மற்றும் அதை மகிழ்ச்சியாக மாற்ற விரும்பினால், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் வலுவான மற்றும் மகிழ்ச்சியான உறவை உருவாக்க சில தங்க விதிகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு உலகலாவிய நம்பிக்கை குறியீட்டில் இந்தியா முன்னேறி இருப்பது தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக இப்ஸோஸ் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது. ‘உலகை கவலையடையச் செய்வது எது?’ எனும் தலைப்பில் கடந்த மே மாதம் தாங்கள் நடத்திய கணக்கெடுப்பு குறித்த தகவல்களை ‘இப்ஸோஸ்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: தேசிய அளவில் இந்திய அரசின் மீதான நம்பிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய பதிப்பில், தேசிய அளவிலான நம்பிக்கை 62% ஆக இருந்த நிலையில், மே 2025ல் அது 3 புள்ளிகள் அதிகரித்து 65% ஆக உயர்ந்துள்ளது. நம்பிக்கை குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைத் தொட்ர்ந்து இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. மே மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையான ‘ஆபரேஷன் சிந்தூர்’-க்குப் பிறகு தேசிய…
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்ததால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துவிட்ட நிலையில் கடைசி இடத்துக்கு 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மல்லுக்கட்ட உள்ளன. இந்த அணிகள் இன்று மும்பை வான்கடே மைதானத்தில்…
நடிகர் அஜித்குமார், சர்வதேச கார் பந்தயங்களில் இப்போது பங்கேற்று வருகிறார். துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்குமாரின் அணி, 3-வது இடம் பிடித்தது. தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸில் 3-வது இடமும் பெல்ஜியத்தில் நடந்த ஸ்பா பிரான்ஸ் ரேஸில் இரண்டாவது இடமும் பிடித்தது. கடந்த வாரம் நெதர்லாந்தில் நடந்த ஜிடி 4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்ற அவர், அடுத்து வரும் 24-ம் தேதி இத்தாலியில் நடக்கும் மிசானோ வேர்ல்டு சர்க்கியூட் ரேஸில் பங்கேற்கிறார். இதற்கிடையே, தனது ரோல் மாடலும், மறைந்த கார் ரேஸ் வீரருமான பிரேசிலை சேர்ந்த அயர்டன் சென்னா சிலைக்கு அஜித்குமார் அஞ்சலி செலுத்தியுள்ளார். கடந்த 1994-ல் நடைபெற்ற சான் மேரினோ கிராண்ட் பிரிக்ஸ் கார் ரேஸில் நடந்த விபத்தில் அயர்டன் சென்னா உயிரிழந்தார். அவர் மறைவு பார்முலா-1 பாதுகாப்பு விதிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தாலியின் இமோலாவில் உள்ள அவர் சிலை முன் மண்டியிட்டு மரியாதை செலுத்திய…
சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் இடம் ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, தேமுதிக பொருளாளர் சுதீஷ் நேற்று சந்தித்து பேசினார். கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட்டது. அந்த கூட்டணியில் 5 இடங்கள் தேமுதிகவுக்கு வழங்கப்பட்டன. ஒரு மாநிலங்களவை இடமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அதிமுக அதற்கு மறுப்பு தெரிவித்தது. தற்போது உறுதி அளித்தபடி தங்களுக்கு ஓரிடத்தை அதிமுக வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதிஷ் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்புவதாகவும், தற்போது மாநிலங்களவை தேர்தலில் தங்களுக்கு ஓரிடம் வழங்க வேண்டும் எனவும் சுதிஷ் தரப்பில் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து பதில் அளிப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள்…
ஆயுர்வேதத்தின் படி, இது ஒரு ட்ரிடோஷிக் மூலிகையாகும், அதாவது இது வட்டா, பிட்டா மற்றும் கபாவை சமப்படுத்த உதவுகிறது. அக்னியை (செரிமான நெருப்பு) தூண்டுவதற்கும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கும், நச்சுகளை நீக்குவதை ஊக்குவிப்பதற்கும் உணவுக்குப் பிறகு மெல்லும் பெட்டல் இலை பரிந்துரைக்கப்படுகிறது. அதன் கார்மினேடிவ் மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகள் செரிமானத்திற்கு உதவுகின்றன, சுவாசத்தை புதுப்பிக்கின்றன, தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளைக் குறைப்பதன் மூலம் வாய்வழி ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. இந்தியாவில் தேசிய மருத்துவ நூலகத்தின் ஆய்வின்படி, இந்தியாவில், பெட்டல் இலை (பி.எல்) பண்டைய கலாச்சாரத்திலிருந்து ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இந்தியாவில் அதன் பயன்பாடு கிமு 400 க்கு முந்தையது. ஆயுர்வேதம், சரகா, சுஷ்ருதா சம்ஹிதாஸ், மற்றும் காஷ்யபா போஹஜனகல்பா ஆகியோரின் பண்டைய புத்தகங்களின்படி, கி.பி 75 முதல் கி.பி 300 வரை உணவுக்குப் பிறகு பி.எல் மெல்லும் நடைமுறை.
