‘மாமன்’ இனி படம் மட்டும் இல்லை; இது நம் அனைவருடனும் பிணைந்த ஓர் உணர்வு என்று தெரிவித்துள்ளார் சூரி. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. இப்படம் ரூ.30 கோடியை கடந்து தமிழகத்தில் வசூல் சாதனை புரிந்திருக்கிறது. இதனால் இப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே நல்ல லாபம் கிடைத்துள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்த தமிழகம் முழுக்க பயணம் செய்தார் சூரி. தனது பயணம் வெற்றியாக மாறியிருப்பது குறித்து சூரி தனது எக்ஸ் தளத்தில், “5000 கி.மீ மேலாக பயணம் செய்துள்ளேன். ஆனால் எண்ணமுடியாத இதயங்களுடன் தான் நான் இணைந்துள்ளேன். கடந்த 23 நாட்களில், 2,00,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் ‘மாமன்’ படத்தின் ஒரு பகுதியாக இணைந்தனர். அந்தச் சந்திப்புகள் என் நெஞ்சில் மறக்க முடியாத நினைவுகளாகி விட்டன. ஒவ்வொரு நாளும் மக்களை நேரில் சந்தித்து, அவர்கள்…
Author: admin
சென்னை: பசுமை வழித்தடம் திட்டம் 3-ல், துணைமின் நிலையங்களுக்கு அதிக மின்சாரம் எடுத்துச் செல்லும் வகையில், 400 கிலோவோல்ட் திறனில் மின்வழித் தடங்களை மின்வாரியம் அமைக்க உள்ளது. தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்களை அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. எனவே, தனியார் நிறுவனங்கள் அமைக்கும் பசுமை மின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பல்வேறு பகுதிகளுக்கு மின்வாரியம் எடுத்துச் செல்கிறது. ஜெர்மனியின் கே.எஃப்.டபிள்யூ. வங்கி உதவியுடன் பசுமை வழித்தடம் (கிரீன் காரிடார்) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. பசுமை வழித்தடம் திட்டம் 1-ல் ரூ.1,100 கோடி செலவில், திண்டுக்கல் மாவட்டம், தென்னம்பட்டியில் 400 கிலோவோல்ட் மின்நிலையமும், தென்னம்பட்டி முதல் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வரை 400 கிலோவோல்ட் வரை இரட்டை சுற்று மின்வழித் தடமும் அமைக்கப்பட உள்ளன. பசுமை வழித்தடம் திட்டம் 2-ல், ரூ.1,006 கோடி செலவில் திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரத்தில் 400 கிலோவோல்ட் துணைமின் நிலையம் அமைக்கப்படுகிறது. மேலும், திருப்பூரில் உள்ள பூளவாடி,…
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழையும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்து வருகிறது. தொடர் மழையால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைவு காரணமாக பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன. விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டது தென்காசி மாவட்டம். மாவட்டத்தில் பரவலாக காய்கறி வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை சந்தைகளில் விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. வியாபாரிகள் மொத்த விலைக்கு காய்கறிகளை வாங்கிச் சென்று வியாபாரம் செய்கின்றனர். தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழையும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்து வருகிறது. தொடர் மழையால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைவு காரணமாக பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன.…
துஷான்பே: நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை, தனது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் பாகிஸ்தான் மீறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. தஜிகிஸ்தானின் துஷான்பேயில் நடைபெற்ற பனிப்பாறைகள் குறித்த முதல் ஐ.நா.மாநாட்டின் முழுமையான அமர்வில் உரையாற்றிய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், பயங்கரவாதத்தின் மூலம் ஒப்பந்தத்தை மீறுவது பாகிஸ்தான்தான் என்று குற்றம்சாட்டினார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் அவர், “இந்த மன்றத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கும், மன்றத்தின் எல்லைக்குள் வராத பிரச்சினைகள் குறித்து தேவையற்ற குறிப்புகளைக் கொண்டுவருவதற்கும் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியை கண்டு நாங்கள் திகைக்கிறோம். அத்தகைய முயற்சியை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து சூழ்நிலைகளில் அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த மாற்றங்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மக்கள்தொகை மாற்றங்கள்,…
திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக பேட்டை போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்கள். வினாத்தாளை தேர்வாணையருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 106 கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 27-ம் தேதி நடைபெறவிருந்த பி.காம் பட்டப்படிப்பில் தொழிற்சாலை சட்டம் (இன்டஸ்ட்ரியல் லா) என்ற பாடத்தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அன்று நடக்கவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நேற்று மறுதேர்வு நடத்தப்பட்டது. இதனிடையே பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, திருநெல்வேலி பேட்டை காவல் நிலையத்தில் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரட்டீஸ் புகார் அளித்தார். கடந்த 27-ம்…
டோக்கியோ: ஜப்பானின் வடக்கே அமைந்துள்ள முக்கிய தீவுப் பகுதியான ஹொக்கைடோவில் இன்று (மே 31) பிற்பகல் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் (ஜே.எம்.ஏ) தெரிவித்துள்ளது. ஜப்பானின் வடக்கே அமைந்துள்ள நாட்டின் 2-வது பெரிய தீவுப் பகுதியான ஹொக்கைடோவில் சனிக்கிழமை (மே 31) பிற்பகலில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 20 கி.மீ (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் ஹொக்கைடோவின் கிழக்கு கடற்கரையில் இருந்ததாகவும், எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிப்பு குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
பிருத்விராஜ் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹொம்பாலே நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்க ஹ்ரித்திக் ரோஷன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதன் இயக்குநர் யார் என்பதை தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை. தற்போது இதன் இயக்குநர் பிருத்விராஜ் தான் என தகவல் வெளியாகியுள்ளது. ‘சலார்’ படத்தில் நடித்ததன் மூலம் ஹொம்பாலே நிறுவனத்துடன் பிரித்விராஜுக்கு நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஹொம்பாலே நிறுவனம் படம் ஒன்றை பிருத்விராஜ் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. தற்போது அப்படத்தில் தான் ஹ்ரித்திக் ரோஷன் நாயகனாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. ‘லூசிஃபர்’ படத்தின் வெற்றிக்குப் பின், ராஜமவுலி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் பிருத்விராஜ். அதனைத் தொடர்ந்து ஹ்ரித்திக் ரோஷன் படத்தின் பணிகளைத் தொடங்குவார் எனத் தெரிகிறது. ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க அடுத்த ஆண்டு இறுதியாகும் எனக்…
சென்னை: தங்க நகைக் கடன் பெற புதிய விதிமுறைகளை உடனே திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்க நகைக் கடன் பெற புதிய விதிமுறைகளை உடனே திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய விதிமுறை ரத்து செய்க; பெருநிறுவனங்களுக்கு துணை போகாதே; ஏழை, நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்காதே என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நிருபர்களிடம் அக்கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது: பன்நெடும்காலமாக, பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்காக தேசிய வங்கிகளிலும், அரசு வங்கிகளிலும் நகை கடன் பெறுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி அரசு கடந்த வாரம், நகை கடன் வாங்குவதை குறைத்து, சில…
பல ஆரோக்கிய ஆர்வலர்கள் பாலைத் தவிர்க்கிறார்கள், இது சளியை ஏற்படுத்துகிறது, கொழுப்பானது, அல்லது ஆரோக்கியமற்றது என்று நம்புகிறார்கள். இருப்பினும், பால் என்பது கால்சியம், வைட்டமின் டி மற்றும் உயர்தர புரதத்தின் வளமான மூலமாகும், இது வலுவான எலும்புகள், பற்கள் மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. இந்த ஊட்டச்சத்துக்களை மாற்றாமல் பாலைத் தவிர்ப்பது பலவீனமான எலும்புகள், பல் பிரச்சினைகள், தசைப்பிடிப்பு மற்றும் பிற்கால வாழ்க்கையில் ஆஸ்டியோபோரோசிஸ் கூட வழிவகுக்கும். உங்களிடம் உண்மையான ஒவ்வாமை அல்லது லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லையென்றால், பால் உங்கள் உணவின் ஆரோக்கியமான பகுதியாக இருக்கலாம். தயிர் போன்ற பல குறைந்த கொழுப்பு அல்லது புளித்த பால் விருப்பங்களும் ஜீரணிக்க எளிதாக இருக்கும். முறையான மாற்றீடுகள் இல்லாமல் பாலை வெட்டுவது உங்கள் ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்கு தற்செயலாக தீங்கு விளைவிக்கும்.
புவனேஸ்வர்: ‘இனிமேல் டெல்லியில் அமர்ந்து ஆராய்ச்சி செய்யப்படாது. கிராமத்திலிருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் தேவை சார்ந்த ஆராய்ச்சி செய்யப்படும். விவசாயம் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது’ என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார். மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று ஒடிசாவின் பூரி மாவட்டத்தைச் சேர்ந்த சகிகோபாலிலிருந்து ‘விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்’ திட்டத்தை தொடங்கினார். இந்தத் திட்டத்தின் பிரச்சாரம் மே 29 முதல் ஜூன் 12 வரை 15 நாட்களுக்கு 20 மாநிலங்களில் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்படும். 731 வேளாண் அறிவியல் மையங்கள், 113 ஐசிஏஆர் நிறுவனங்கள், மாநில அளவிலான துறைகள் மற்றும் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவராஜ் சிங் சவுகான், “நமது விஞ்ஞானிகளை நான் வாழ்த்துகிறேன். இனிமேல், டெல்லியில் அமர்ந்து ஆராய்ச்சி செய்யப்படாது.…
