Author: admin

அடிஸ் அபாபா: பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவுடன் இணைந்து எத்தியோப்பியா பணியாற்றும் என்று அந்நாட்டின் துணைப் பிரதமர் ஆதம் ஃபரா, இந்திய தூதுக்குழுவிடம் உறுதிபட தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை உலகுக்கு எடுத்துச்சொல்லும் நோக்கில் பல்வேறு நாடுகளுக்கு மத்திய அரசு தூதுக்குழுக்களை அனுப்பி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே தலைமையிலான குழு, எத்தியோபியா தலைநகர் அடிஸ் அபாபாவில் அந்நாட்டின் துணை பிரதமர் ஆதம் ஃபராவைச் சந்தித்தது. இந்த சந்திப்பு தொடர்பாக எத்தியோப்பியாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, எத்தியோப்பியாவின் துணைப் பிரதமர் ஆதம் ஃபராவைச் சந்தித்தது. பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற எத்தியோப்பியாவின் வலுவான உறுதிப்பாட்டை அவர் தெரிவித்தார். இன்று, அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு ஆப்பிரிக்க ஒன்றியத்துடன் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தியது. பயங்கரவாதத்தை அதன்…

Read More

காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படம் என்று இயக்குநர் வ.கெளதமன் தெரிவித்துள்ளார். வ.கெளதமன் நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘படையாண்ட மாவீரா’. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் வசந்த பாலன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினரும் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் வ.கெளதமன் பேசுகையில், “இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பது போலவே மற்றொருபுறம் எனது திரைத் துறையையும் நேசிக்கிறேன். இது நான் இயக்கி நடித்திருக்கிற படைப்பு. உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்புதான் பேச வேண்டுமே தவிர, அவன் பேசக்கூடாது என நினைப்பேன். ஆனாலும் இந்த படத்தை பற்றி பேச வேண்டியுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்தப் படத்தை உருவாக்க முன்வந்தார்கள். திரைத் துறையில் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என விரும்பினார்கள். மக்களுக்கான கதையை அவர்களுக்கு…

Read More

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கல்குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கிராம நிர்வாக அலுவலர், கனிமவள வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் வட்டாட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் 400 அடி ஆழ பள்ளத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக குவாரி உரிமையாளரின் தம்பி, குவாரி பொறுப்பாளர், மேற்பார்வையாளர் ஆகிய 3 பேரை எஸ்.எஸ்.கோட்டை போலீஸார் கைது செய்தனர். மேலும், குவாரி உரிமையாளர் மேகவர்மனை போலீஸார் தேடி வருகின்றனர். கனிமள அதிகாரிகள் விசாரணையில், விபத்து நடைபெற்ற கல்குவாரி உரிமம் 8 மாதங்களுக்கு முன்பே காலாவதியானதும்,வேறு இடத்துக்கு பெற்ற உரிமத்தை பயன்படுத்தி விதிமீறி இயங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, வேறு இடத்துக்கு வாங்கிய கல்குவாரி உரிமத்தை மாவட்ட ஆட்சியர் தற்காலிகமாக ரத்து செய்தார். இதனிடையே மல்லாக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், குவாரி இயங்கிய காலக்…

Read More

சிங்கப்பூர்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ஆரம்பத்தில் இந்திய விமானப்படை இழப்புகளை சந்தித்ததாகவும், பிறகு தனது உத்திகளை மாற்றிக்கொண்டதாகவும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு தொடர்பான ஷாங்க்ரி-லா மன்றத்தில் பங்கேற்ற பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான், பின்னர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இதைத் தெரிவித்துள்ளார். அதன் விவரம்: இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுடனான மோதலின் முதல் நாளில் இந்தியா வான்வழி இழப்புகளை சந்தித்தது. பிறகு இந்தியா தனது தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டது. அதன்பிறகு மூன்று நாட்கள் நடந்த மோதலில் ஒரு தீர்க்கமான நன்மையை இந்தியா பெற்றது. மே 7, 8 மற்றும் 10-ம் தேதிகளில் பாகிஸ்தானுக்குள் உள்ள விமானத் தளங்களைத் தாக்கினோம். அவர்களின் அனைத்து வான் பாதுகாப்புகளையும் ஊடுருவி, துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். பெரும்பாலான தாக்குதல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட புள்ளியில் இருந்து ஒரு மீட்டர் வரை மட்டுமே இருந்தது. மோதலின் போது அணு…

Read More

திருநெல்வேலி: “சிறப்புக் கட்டணங்கள் என்ற பெயரில், பொருளாதார தீண்டாமையை இந்து கோயில்களில் திணிப்பது சாபக்கேடு. பக்தர்கள் எத்தனை கோடி காணிக்கைகளை அள்ளி கொடுத்தாலும் இந்துசமய அறநிலையத்துறைக்கு திருப்தி ஏற்படவில்லை. கோயிலை காட்சி பொருளாக்கி பக்தர்களிடம் சுரண்டி, கஜானாவை நிரப்பவே திட்டம் தீட்டப்படுகிறது” என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எல்லாருக்கும் எல்லாம் என்பது திராவிட மாடலின் வெற்று கோஷமாக இருக்கிறது. மதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வு மீனாட்சி திருக்கல்யாணம். இதனை தரிசனம் செய்ய தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் வசூலித்துள்ளது. கோயில்களின் விசேஷ நாட்களில் விஐபி தரிசனம், கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என சட்டப் பேரவையில்…

Read More

புதுடெல்லி: ஜிஎஸ்டி பதிவு செயல்பாடுகளில் லஞ்சக் குற்றச்சாட்டு கூறிய சமூக வலைதள பயனர் ஒருவரின் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு நேரடியாக பதில் அளித்துள்ளார். இந்தியாவில் நிதிக் கல்விப்புலத்தில் நன்கு அறிப்படும் வி.ஜி.லெர்னிங் டெஸ்டினேஷனின் நிறுவனரும், இயக்குநருமான வினோத் குப்தா லிங்கிடுஇன்-ல் வெளியிட்ட பதிவு வைரலானதைத் தொடர்ந்து, நிதியமைச்சரின் எதிர்வினை வந்துள்ளது. வினோத் குப்தாவும், அவரது மனைவியும் இணைந்து நடத்த விரும்பும் நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி எண்ணுக்கு விண்ணப்பித்து 20 நாட்கள் கடந்தும் இன்னும் ஜிஎஸ்டி எண் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். மேலும், லஞ்சம் கொடுத்தால் எண் விரைவாக கிடைக்கலாம் என்றும் கூறியிருந்தார். அவரின் இந்தப் பதிவுக்கு நிதியமைச்சர் நிர்மலா பதில் அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பான CBIC-ன் விரிவான பதிலையும் இணைத்துள்ளார். நிதியமைச்சர் பதில்: அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வரி செலுத்துவோருக்கு சேவை செய்வது நமது பொறுப்பு. அவ்வாறு செய்யும்போது…

Read More

புது டெல்லி: ரயில்வேயில் வேலை வழங்குவதற்காக நிலம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிபிஐ விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கக் கோரிய முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கின் குற்றச்சாட்டு பரிசீலனை கட்டத்தில், லாலு பிரசாத் யாதவ் விசாரணை நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைக்க முழு சுதந்திரம் இருப்பதாக நீதிபதி ரவீந்தர் துதேஜா தீர்ப்பளித்தார். மேலும், வழக்கின் விசாரணையை நிறுத்துவதற்கு எந்த வலுவான காரணங்களும் இல்லை என்றும் அவர் கூறினார். இதனை தொடர்ந்து, குற்றச்சாட்டு தொடர்பான வாதங்களுக்காக இந்த வழக்கு ஏற்கனவே சிறப்பு நீதிபதியின் முன் பட்டியலிடப்பட்டுள்ளது என்று கூறி லாலு பிரசாத் யாதவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. லாலு பிரசாத் யாதவ், சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தலைமையிலான…

Read More

புதுச்சேரி: புதுச்சேரி பாகூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் குப்பை அகற்றும் பணியில் நூதன முறையில் நடைபெறும் மோசடி குறித்தான‌ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் குப்பை அகற்றும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் குப்பைகளை அள்ளுவதற்குப் பதிலாக, ஊரின் சில பகுதிகளில் மணல், கல், மண்ணை அள்ளிச்சென்று, அவற்றைக் குப்பையாக எடுத்து எடை போட்டு அரசிடம் பணம் பெற்று வருவதாகப் பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகூர் சிவன் கோயில் எதிரே உள்ள பழுதடைந்த கட்டிடத்தை இடித்துக் கிடந்த கற்களை, அந்த நிறுவனம் வாரிச் சென்றதாகப் புகார் எழுந்த நிலையில், பொதுமக்கள் அதனைத் தடுத்து நிறுத்தினர். தற்போது அந்த தனியார் நிறுவனம் மீண்டும் பாகூர் பகுதியில் பல இடங்களில் மண், கல் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் செயல்களில் தொடர்ந்து…

Read More

வித்தியாசம் புதிர்கள் ஒரு இனிமையான பொழுதுபோக்காக இருப்பதோடு கூடுதலாக ஒரு அற்புதமான மன வொர்க்அவுட்டாகும்! ஒரே மாதிரியான இரண்டு புகைப்படங்களுக்கிடையில் நிமிட மாற்றங்களை நீங்கள் தேடும்போது, ​​இந்த வசீகரிக்கும் புதிர்கள் உங்கள் அவதானிக்கும் திறனை சோதிக்கும். ஒவ்வொரு கண்டுபிடிப்பும், இது ஒரு வண்ண மாற்றத்தை அடையாளம் காண்கிறதா அல்லது காணாமல் போன விவரமாக இருந்தாலும், நீங்கள் சாதித்ததாக உணர வைக்கிறது. இந்த புதிர்கள் எல்லா வயதினருக்கும் ஏற்றவை, ஏனென்றால் அவை பொழுதுபோக்குகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நினைவக தக்கவைப்பு, விவரங்களுக்கு கவனம் செலுத்துவதற்கும் கவனம் செலுத்துவதற்கும் உதவுகின்றன. உங்கள் நண்பர்களை ஒன்றிணைப்பதன் மூலமோ அல்லது சில வேடிக்கையான மூளை பயிற்சியில் மட்டும் ஈடுபடுவதன் மூலமோ எத்தனை வேறுபாடுகளை நீங்கள் அடையாளம் காண முடியும் என்பதைப் பாருங்கள்!இன்றைய விறுவிறுப்பான காட்சி சவாலுக்கு நீங்கள் தயாரா? மீன் பிடிக்கும் ஒரு சிறுவனின் இரண்டு புகைப்படங்கள் உங்களுக்கு முன்னால் உள்ளன, அவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. இங்கே…

Read More

அலகாபாத்: “நம் நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போதெல்லாம், அது ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளதற்கான பெருமை அரசியலமைப்புக்கு மட்டுமே உரியது” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அறைகள் மற்றும் பல நிலை வாகன நிறுத்துமிட திறப்பு விழாவுக்குப் பிறகு பேசிய தலைமை நீதிபதி கவாய், “அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன் இறுதி வரைவு அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது, ​​சிலர் அரசியலமைப்பு மிகவும் கூட்டாட்சி சார்ந்தது என்று கூறினர்; சிலர் அது ஒற்றையாட்சி சார்ந்தது என்று கூறினர். பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் அரசியலமைப்பு முற்றிலும் கூட்டாட்சியானது அல்லது முற்றிலும் ஒற்றையாட்சியானது அல்ல என்று பதிலளித்தார். ஆனால், ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்ல முடியும். நெருக்கடி மற்றும் போர்க் காலங்களில் இந்தியாவை ஒற்றுமையாகவும் வலுவாகவும் வைத்திருக்கும் ஓர் அரசியலமைப்பை நாம் வழங்கியுள்ளோம். இன்று நமது அண்டை நாடுகளின் நிலை என்ன என்பதைக் காண்கிறோம். சுதந்திரத்துக்குப்…

Read More