Author: admin

சென்னை: வர்ணனையாளராக தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ். ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசன் அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜியோ ஸ்டார் நிபுணரான அவர் சொல்லியுள்ளது என்ன என பார்ப்போம். ‘தம்பி’ என பாசத்தோடு மைக்கில் தனது என்ட்ரியை சடகோபன் ரமேஷ் கொடுப்பது வழக்கம். அப்போது இந்திய கிரிக்கெட் அணியில் சக வீரர்கள் உடனான மறக்க முடியாத அவர் தருணங்களை பகிர்வார். “நடப்பு ஐபிஎல் சீசனில் நான் மிகவும் ரசித்த விஷயம் என்றால் அது தோனியின் விக்கெட் கீப்பிங் தான். மும்பையின் சூர்யகுமார் யாதவ், பெங்களுருவில் பிலிப் சால்ட்டை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார். அது எனக்கு மிகவும் பிடித்த தருணங்களில் ஒன்று. 43 வயதானாலும் அவரது கைகளுக்கு 15 வயது என சொல்வது போல இருந்தது. அதேபோல டெல்லி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான போட்டியும் அற்புதமாக இருந்தது. வர்ணனையை…

Read More

சோழிங்கநல்லூர்: “பாமகவைப் போல எந்த கட்சியும் தமிழ்நாட்டில் கிடையாது. நம் லட்சியம், கனவு பாமக தமிழகத்தை ஆள வேண்டும் என்பதே. அதற்கான நேரம் வந்திருக்கிறது. அது நிச்சயமாக நடக்கும். அடுத்தக் கட்டத்துக்கு நாம் செல்ல வேண்டும். மனு கொடுக்கும் கட்சி என்ற நிலையில் இருந்து மனு வாங்குகின்ற கட்சி என்ற நிலைக்கு வர வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில், இரண்டாவது நாளாக பாமக மாவட்ட நிர்வாகிகள் உடன், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்றும் (மே 31) ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், பாமக எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பங்கேற்கவில்லை. அதேபோல், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், எம்எல்ஏ அருள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: “ஒரு முக்கியமான வேலை திட்டத்துக்காக இன்று நாம் இங்கு கூடியிருக்கிறோம். நம்…

Read More

மும்பை: மும்பையின் மாற்றுத் திறனாளி அணி வீரர்களுடன் இணைந்து வீல்-சேரில் அமர்ந்தபடி கிரிக்கெட் விளையாடி தானும் மகிழ்ந்து, அந்த வீரர்களையும் மகிழ செய்தார் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ். கடந்த 2022-ம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிவில்லியர்ஸ் அறிவித்தார். மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என அவர் அறியப்படுகிறார். தென் ஆப்பிரிக்க அணிக்காக மொத்தம் 420 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 20,014 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகள் அடங்கும். 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த சூழலில் தற்போது இந்தியா வந்துள்ள அவர் ‘மகிழ்வித்து மகிழ்’ என்பதற்கு ஏற்ப ஒரு செயலை செய்துள்ளார். மும்பையில் உள்ள மாற்றுத் திறனாளி வீல்-சேர் கிரிக்கெட் அணி உடன் சேர்ந்து அவர் கிரிக்கெட் விளையாடினார். வீல்-சேரில் அமர்ந்தபடி…

Read More

மதுரை: மதுரையில் 22 கி.மீ தூரம் ‘ரோடு ஷோ’ சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இரு பக்கத்திலும் திரண்டு நின்று மக்கள் வரவேற்பு அளித்தனர். முதல்வர் ‘ரோடு ஷோ’ – மதுரையில் உத்தங்குடியில் திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 31) மதியம் மதுரை வந்தார். பின்னர் விமான நிலையம் அருகேயுள்ள தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். மாலை 5.30 மணிக்கு பெருங்குடி பெரியார் சிலை அருகில் ‘ரோடு ஷோ’வை தொடங்கினார். 22 கிலோ மீட்டர்… வில்லாபுரம், சோலையழகுபுரம், ஜீவாநகர், டிவிஎஸ் பாலம், பழங்காநத்தம் ரவுண்டானா, பைபாஸ் ரோடு, காளவாசல், குரு தியேட்டர், திண்டுக்கல் ரோடு சந்திப்பு, ஆரப்பாளையம் வரை 22 கிலோ மீட்டர் தூரம் வரை ‘ரோடு ஷோ’ சென்றார். வேனில் அமர்ந்தபடி ‘ரோடு ஷோ’வை தொடங்கிய முதல்வர், பின்னர் வேனிலிருந்து…

Read More

இரத்த சர்க்கரை நிர்வாகத்திற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக நடைபயிற்சி வெளிப்படுகிறது, குறிப்பாக நீரிழிவு நோய் அல்லது ப்ரீடியாபயாட்டீஸ் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். விறுவிறுப்பான நடைபயிற்சி நீரிழிவு அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, விரைவான இடங்கள் அதிக நன்மைகளைத் தருகின்றன. மீல்-பிந்தைய நடைப்பயணங்கள், சுருக்கமாக, இரத்த சர்க்கரை கூர்முனைகளை திறம்பட குறைக்கின்றன, குளுக்கோஸ் கட்டுப்பாட்டை மேம்படுத்துகின்றன மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை ஊக்குவிக்கின்றன. உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இயக்கம் நல்லது, அதைச் செய்ய நடைபயிற்சி சிறந்த வழியாகும். உகந்த ஆரோக்கியத்தை பராமரிக்க நடைபயிற்சி முக்கியத்துவத்தை போதுமான அளவு வலியுறுத்த முடியாது. ஆனால் பொது உடற்தகுதிக்கு அப்பால், நடைபயிற்சி இரத்த சர்க்கரை நிர்வாகத்திற்கு குறிப்பிட்ட நன்மைகளைக் கொண்டுள்ளது, இது நீரிழிவு அல்லது முன்கூட்டியே உயிருள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு ஒரு முக்கிய காரணியாகும்.இரத்த குளுக்கோஸை ஒழுங்குபடுத்துவதில் உணவு மற்றும் மருந்துகள் முக்கிய பாத்திரங்களை வகிக்கின்றன என்பதை பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கும்போது,…

Read More

மதுரை: மதுரையில் அண்ணா அறிவாலய முகப்புடன் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில் திமுக பொதுக்குழு நாளை (ஜூன் 1) கூடுகிறது. பொதுக்குழுவுக்கு வருபவர்களுக்கு சைவ, அசைவ உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதற்காக மதுரை உத்தங்குடியில் கலைஞர் திடலில் சென்னை அண்ணா அறிவாலயம் போல் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரங்கின் முன்பு செயற்கை புல்வெளிக்கு மத்தியில் நூறு அடி உயர கொடிக் கம்பம், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் சிலைகளும், ஸ்டாலின், உதயநிதி கட்-அவுட்களும் அமைக்கப்பட்டுள்ளன. கலைஞர் அரங்கில் ஒரே நேரத்தில் நூறு பேர் அமரும் வகையில் டிஜிட்டல் மேடை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் திமுக மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கின்றனர். பொதுக்குழுவுக்கு தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி…

Read More

புதுடெல்லி: நாளை (ஜூன் 1, 2025) முதல் வாட்ஸ்அப் இயங்காத ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியல் வெளியாகி உள்ளது அது குறித்து விரிவாக பார்ப்போம். வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச தேவைகளை அதன் மென்பொருள் சார்ந்து அதிகரித்து வருகிறது மெட்டா. இது அந்நிறுவனத்தின் வழக்கமான சுழற்சி அப்டேட்களில் ஒரு நடைமுறை. அந்தவகையில் ஆப்பிள் ஐஓஎஸ் 15 இயங்குதளம் அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன்கள், ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன்களில் வாட்ஸ்அப் நாளை முதல் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலி இயங்காத ஸ்மார்ட்போன்களின் பட்டியல்:…

Read More

வாணியம்பாடி: வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 பேர் தொற்று காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்ததாக ஆய்வின் முடிவில் தெரிய வந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் பல் மருத்துவமனையில் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ஞானமீனாட்சி நேற்று ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலை யில் மருத்துவர் அறிவரசன் என்பவர் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மருத்துவமனையில் கடந்த 2023-ம் ஆண்டு வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த சத்யா, இந்திராணி, வரதன், அலசந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா, வாணியம்பாடி கோணாமேடு பகுதியைச் சேர்ந்த நர்மதா, பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெய்சீலி, பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆபிசூர் ரகுமான், உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த அனிதா, செங்கிலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் ஆகிய 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அடுத்த 6 மாதங்களில் நோய் தொற்று காரணமாக…

Read More

யாராவது எங்கள் அழைப்பை எடுக்காதபோது, ​​நம் அனைவருக்கும் பீதி ஏற்பட்டது, ஆனால் மீண்டும் மீண்டும் அழைப்பது, குறிப்பாக தொடர்ச்சியாக இரண்டு முறைக்கு மேல், ஊடுருவும் மற்றும் சிந்தனையற்றதாக வரலாம். அனைவருக்கும் தனிப்பட்ட எல்லைகள் உள்ளன. அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கலாம், ஒரு கூட்டத்தில், குடும்பத்தில் கலந்துகொள்வது அல்லது வெறுமனே நேரம் ஒதுக்கலாம். இது ஒரு மருத்துவ அவசரநிலை அல்லது உண்மையிலேயே அவசர விஷயமாக இல்லாவிட்டால், உங்கள் அழைப்பைத் திருப்பித் தர நபருக்கு நேரம் கொடுங்கள். ஒருவரின் தனிப்பட்ட இடத்தை மதிப்பது, டிஜிட்டல் முறையில் கூட, நம்பிக்கையை உருவாக்குகிறது மற்றும் உணர்ச்சி நுண்ணறிவை பிரதிபலிக்கிறது.

Read More

புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட நிவாரண உதவிகள் அவர்களின் இழப்பை ஒருபோதும் ஈடு செய்யாது என்பது எனக்கு தெளிவாக தெரியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பதிலடியை வழங்கியது. இந்த வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லையான பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் கடைசி நாளான நேற்று மத்திய உள்துறை அமைச்சர் பூஞ்ச் பகுதிக்கு சென்று பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது அமித் ஷா கூறியதாவது: பாகிஸ்தான் தாக்குதலில் இங்குள்ள மக்கள்…

Read More