தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் நாளை (ஜூன் 2) முதல் திறக்கப்பட உள்ளன. தமிழக பள்ளிக் கல்வியில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப்.15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்.7 முதல் 17-ம் தேதி வரையும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.8 முதல் 24-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்.25-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த நாட்களில் தமிழக அரசு சார்பில் மாணவர்கள் நலனுக்கு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. அதன்படி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜூன் 2) முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான வளாகப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. முதல்…
Author: admin
மாமல்லபுரம்: உறுதியாக இருந்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று பள்ளி மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, பிளஸ் 2 வகுப்புகளில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா, மாமல்லபுரம் அருகே தனியார் சொகுசு விடுதியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: கல்வியில் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. நீட் தேர்வு மட்டும் உலகம் அல்ல. நீட்டை தாண்டிய இந்த உலகம் ரொம்ப பெரியது. அதில், நீங்கள் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. அதனால், உங்களின் மனநிலையை மிகவும் தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகம் என்ற ஒன்று இருந்ததால்தான், இந்த உலகம் சுதந்திரமாக இருக்க முடியும். பணம் கொடுத்து வாக்கு வாங்கி வெற்றி பெற்று விடலாம் என நினைப்பவர்களின் செயலை ஊக்கப்படுத்த வேண்டாம். பணம்…
தன்னாட்சி அங்கீகாரம் தொடர்பான விதிகளுக்குட்பட்டு பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டுமென யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: உயர்தர கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் சமூக ஈடுபாட்டுடன் கூடிய திட்டங்களை வழங்க தேசிய கல்விக் கொள்கை-2020 வலியுறுத்துகிறது. அதன்படி கல்லூரிகளின் தன்னாட்சி நிலை மற்றும் தரநிலைகளைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுவாக கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கும்போது அதற்கான கருத்துருக்களை பல்கலைக்கழகங்களிடம் இருந்து யுஜிசி கேட்டு பெறுவது வழக்கம். ஆனால், பல்வேறு பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அங்கீகாரம் வழங்குவதற்கான இணைப்பு கல்லூரிகளின் விண்ணப்பங்களை செயலாக்குவதில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதுதொடர்பாக யுஜிசி தளத்தில் எந்த பதிலும் அளிக்கப்படுவதில்லை. அதேபோல், யுஜிசியால் தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னும் அதுகுறித்து தகவல் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு தாமதமாக சென்று சேருவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதனால் பாடத்திட்டங்களை வடிவமைத்தல், புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல்…
தனது பேரன் பள்ளிப் படிப்பை நிறைவு செய்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூத்த மகன் யாத்ரா பள்ளிப் படிப்பை நிறைவு செய்துள்ளார். இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கலந்து கொண்டனர். தங்கள் மகனை இருவரும் ஒன்றாக கட்டியணைத்து வாழ்த்தும் புகைப்படத்தை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘பெருமைமிகு பெற்றோர்’ என்று பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே புகைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “என் அன்புக்குரிய பேரனின் முதல் மைல்கல். வாழ்த்துகள் யாத்ரா கண்ணா” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பலரும் அவரது பதிவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு .தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் நீதிமன்றத்தால் விவாகரத்து வழங்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது மகனுக்காக இருவரும் இணைந்து ஒன்றாக பள்ளி…
சென்னை: ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் பேர் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள். ஆனால், அந்த இடங்களை நிரப்பத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதா? இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக படுதோல்வி அடைந்துவிட்டது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் 8144 பேர் இன்று ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர். மே மாத இறுதியில் அரசு ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் ஓய்வு பெறுவது இயல்பானது தான். ஆனால், அவ்வாறு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களால் ஏற்படும் காலி இடங்களை நிரப்ப தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் கண்டிக்கத்தக்கது ஆகும். ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் ஆண்டில் இடையில் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்பதால், மே மாத இறுதியில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை…
டெல்லியை தளமாகக் கொண்ட உள்ளடக்க உருவாக்கியவர் சீகோஹோ ஹோகிப், @ryanhaokip.xii என அழைக்கப்படுகிறது, டெல்லி மெட்ரோவின் மஞ்சள் வரிசையில் தனது காலை அழகு வழக்கத்தை படமாக்குவதன் மூலம் இணைய உணர்வாக மாறியுள்ளது. ப்ளஷ், லிப் பாம் மற்றும் ஹேர் ஜெல் ஆகியவற்றின் சிரமமின்றி பயன்பாட்டைக் காண்பிக்கும் வைரஸ் வீடியோ, மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று, அவரை ஒரு அன்பான அழகு குருவாக மாற்றியுள்ளது. ஒரு மெட்ரோ சாளரத்திற்காக உங்கள் குளியலறை கண்ணாடியையும், பயணிகளின் இருக்கைக்கான உங்கள் வேனிட்டியையும் மாற்றும்போது என்ன நடக்கும்? நீங்கள் இணையத்தின் புதிய அழகு ஐகானாக மாறக்கூடும். டெல்லியை தளமாகக் கொண்ட உள்ளடக்க படைப்பாளரான சீகோஹோ ஹோகிப், ஆன்லைனில் @ryanhaokip.xii என நன்கு அறியப்பட்டவர்-டெல்லி மெட்ரோவின் நகரும் மஞ்சள் வரி ரயிலில் தனது காலை பிரகாசத்தை படமாக்குவதன் மூலம் தலைகளை (மற்றும் வழிமுறைகளை) திருப்பினார்.இப்போது வைரஸ் வீடியோ, ரியான் சாதாரணமாக ப்ளஷ், லிப் பாம் மற்றும் ஹேர் ஜெல்…
ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகி அழகி இறுதிப் போட்டியில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ 72-வது மிஸ் வேர்ல்டாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.8.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் உலக அழகி 2025-ம் ஆண்டுக்கான போட்டி நடைபெற்றது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். மே 10-ம் தேதி தொடங்கிய இதன் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் மார்டினிக், எத்தியோப்பியா மற்றும் போலந்து நாடுகளைச் சேர்ந்த அழகிகளை பின்னுக்குத் தள்ளி தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ வெற்றிபெற்றார். அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா கிரீடத்தை அணிவித்தார். எத்தியோப்பியாவை சேர்ந்த போட்டியாளரான ஹாசெட் டெரெஜே அட்மாசு முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டார். போலந்து நாட்டின் மஜா கிளாஜ்தா இரண்டாவது ரன்னர் ஆகவும் மார்டினிக்கின் ஆரேலி ஜோகிம் மூன்றாவது…
மதுரை: மதுரையில் தன் அண்ணன் மு.க.அழகிரியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். மதுரையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார். இதன்பின், மதுரை பெருங்குடி முதல் ஆரப்பாளையம் அருகிலுள்ள மதுரா கோட்ஸ் மேம்பாலம் வரையிலும் ஏற்பாடு செய்திருந்த ரோடு ஷோவில் பங்கேற்று மதுரா கோட்ஸ் பாலம் அருகே புதுப்பிக்கப்பட்ட முன்னாள் மதுரை மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்து மரியாதை செய்தார். இதன்பின் கோரிப்பாளையம் வழியாக அழகர் கோயில் ரோட்டிலுள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்றார். பிறகு அங்கிருந்து மதுரை டிவிஎஸ் நகரிலுள்ள தனது சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் வீட்டுக்கு சென்றார். அவரை அழகிரி மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். அழகிரியிடம் நலம் விசாரித்த நிலையில் அங்கு முதல்வர் இரவு உணவு சாப்பிட்டார். சிறிது நேரம் சகோதரரிடம் முதல்வர் பேசிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு…
அவளது திகைப்பூட்டும் கேன்ஸ் 2025 தோற்றத்திலிருந்து, ம oun னி ராய் மீண்டும் இந்தியாவுக்கு வந்துள்ளார், ஏற்கனவே தனது தேசி பேஷன் விளையாட்டுடன் அலைகளை உருவாக்கியுள்ளார்.
சென்னை: தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக கூறி தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன மாணவரை தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் படித்து வரும் அஸ்லம், சயீத், நஹல் இப்னு ஆகிய மூன்று மாணவர்கள் தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி தேர்வுக்கு முந்தைய நாள் கல்லூரியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து அஸ்லாம் என்ற மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், “நிறுவனத்தின் உதவி பதிவாளராக உள்ள அவினவ் தாக்கூர் மீது பாலியல் புகார் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போரட்டத்தில் ஈடுபட்டேன். இதனால், பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி நான் நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். சமூகப் பணி இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில் எனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் நீக்கப்பட்டுள்ளேன்,…
