Author: admin

சசி தரூர் தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழுவின் விளக்கத்தை ஏற்று பாகிஸ்தான் ஆதரவு அறிக்கையை கொலம்பியா திரும்ப பெற்று உள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த மே 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. அப்போது சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக உலக நாடுகளிடம் பாகிஸ்தான் அரசு கூறியது. இதை நம்பிய கொலம்பிய அரசு, பாகிஸ்தான் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது. இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான எம்பிக்கள் குழு கொலம்பியா தலைநகர் போகோட்டாவுக்கு சென்றுள்ளது. அந்த நாட்டு வெளியுறவு துறை துணை அமைச்சர் ரோஸா யோலான்டாவை, இந்திய குழுவினர் நேற்று சந்தித்துப் பேசினர். இதன்பிறகு கொலம்பிய அமைச்சர் ரோஸா கூறும்போது, “இந்திய குழுவினர்…

Read More

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகேயுள்ள மகேந்திரகிரியில் இஸ்ரோ திரவ இயக்க உந்தும வளாக மையம் செயல்பட்டு வருகிறது. விண்ணில் விண்கலங்களை செலுத்துவதற்குத் தேவையான கிரையோஜெனிக் இன்ஜின், விகாஷ் இஞ்ஜின்கள், பி.எஸ்.4 இன்ஜின்கள் ஆகியவை இங்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 விண்கல சோதனையும் இங்கு நடைபெறுகிறது. இங்கு வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட ராக்கெட் இன்ஜின்கள் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு, விண்ணில் செலுத்தப்படுகின்றன. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் இன்ஜின்களில் பல்வேறு கட்ட சோதனைகள் மகேந்திரகிரியில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குநர் ஆசீர் பாக்யராஜ் மற்றும் விஞ்ஞானிகள் முன்னிலையில் நேற்று நடைபெற்ற இன்ஜின் சோதனை…

Read More

சவாலை ஆராயும்போது உங்கள் தேர்வுகளின் அடிப்படையில், உங்கள் உளவுத்துறையின் அளவை மதிப்பிடுவதற்கு இந்த ப்ரைண்டீசர் உதவும். உங்கள் IQ ஐ தீர்மானிப்பதற்கான ஒரு சுவாரஸ்யமான முறை இந்த தேர்வை எடுப்பதாகும். சிக்கலை ஸ்கேன் செய்து தீர்வைக் கொண்டு வருவதன் மூலம் இந்த மூளை புதிர்களை தீர்க்க நீங்கள் தர்க்கரீதியான பகுத்தறிவு திறன்களைப் பயன்படுத்த வேண்டும்.மூளை விளையாட்டுகளுக்கு தீர்க்க ஆக்கபூர்வமான சிந்தனை தேவைப்படுவதால், அவை எளிதான புதிர்களுக்கு சூழ்ச்சியைச் சேர்க்கின்றன. பதில் உடனடியாகத் தெரியவில்லை, எனவே அதைக் கண்டுபிடிக்க நீங்கள் சற்று வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். எனவே நாங்கள் ஒரு புதிரான ப்ரைண்டீஸரை உருவாக்கியுள்ளோம், அதில் ஒரு தோட்டத்திலிருந்து இந்த காட்சியில் மறைக்கப்பட்ட பூனையை நீங்கள் அடையாளம் காண வேண்டும்.மேலே உள்ள படத்தில் பூனை எங்கு மறைக்கிறது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். ஏராளமான தோட்டக்கலை கருவிகளைக் கொண்ட தோட்ட அமைப்பை புதிரில் காணலாம். தீர்வு நேரடியானது ஆனால் சிக்கலானது என்பதால், கேள்விக்கு…

Read More

இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று திமுக கட்சி எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவை உலகுக்கு அம்பலப்படுத்தவும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற இந்தியாவின் தற்காப்பு உரிமையை எடுத்துரைக்கவும் சர்வதேச நாடுகளுக்கு இந்திய பிரதிநிதிகள் சென்றுள்ளனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள 7 அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில், தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவும் ஒன்று. இந்த குழுவினர் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணமாகி உள்ளனர். இதில் ரஷ்யா, சுலோவேனியா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் லாத்வியா நாட்டை அடைந்தனர். லாத்வியா நாட்டின் ரிகா நகரில் வசிக்கும் இந்தியர்களுடன் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் கலந்துரையாடினர். அப்போது கனிமொழி பேசியதாவது: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டனர். அப்போது அவர்களின் குடும்பங்கள், அன்புக்குரியவர்கள், குழந்தைகள் முன்னிலையில் 26 அப்பாவி உயிர்களை இழந்தோம். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியர்களை பிரித்துப் பார்க்க…

Read More

வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவுக்கு தங்க கீரிட முடிசூட்டும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் மெழுகுவத்தி ஏந்தி பங்கேற்றனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. மே மாதம் மாதாவுக்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மே 6-ம் தேதி முதல் சனிக்கிழமைதோறும் வேளாங்கண்ணி பழைய மாதா ஆலயத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசிர் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான மாதாவுக்கு தங்க கிரீட முடிசூட்டும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் இருந்த மாதாவின் சொரூபத்துக்கு ஆயர் சகாயராஜ், தங்க கிரீடத்தை கொண்டு முடி சூட்டினார். தொடர்ந்து, தேர்பவனி நடைபெற்றது. இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மெழுகுவத்தி ஏந்தி கலந்துகொண்டனர்.

Read More

மதுரையில் நேற்று மாலை 22 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரையில் இன்று காலை நடைபெறும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். மாலை 5.30 மணியளவில் பெருங்குடி பெரியார் சிலை அருகில் ரோடு ஷோவை தொடங்கினார். வில்லாபுரம், சோலையழகுபுரம், ஜீவா நகர், டிவிஎஸ் பாலம், பழங்காநத்தம் ரவுண்டானா, பைபாஸ் சாலை, காளவாசல், குரு தியேட்டர், திண்டுக்கல் ரோடு சந்திப்பு, ஆரப்பாளையம் வரை 22 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ நடந்தது. முதலில் வேனில் அமர்ந்தபடி ரோடு ஷோவை தொடங்கிய முதல்வர், பின்னர் வேனிலிருந்து இறங்கி சாலையில் நடக்கத் தொடங்கினார். முதல்வரை பார்க்க சாலையின் இருபுறமும் திமுக கொடிகள், குடைகள், பலூன்கள் மற்றும் முதல்வர், உதயநிதி படங்கள் கொண்ட பதாகைகளைப் பிடித்தபடி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் நின்றிருந்தனர்.…

Read More

போபால்: இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான நடவடிக்கைதான் ஆபரேஷன் சிந்தூர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘மகிளா சக்திகரன் மகா சம்மேளனம்’ என்ற பெயரில் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாது: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நமது அப்பாவி மக்களை ரத்தம் மட்டும் சிந்த வைக்கவில்லை. அவர்கள் நமது கலாச்சாரம் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் நமது சமூகத்தைப் பிரிக்க முயன்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் பெண்கள் சக்திக்கு சவால் விடுத்தனர். இந்த சவாலே தீவிரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் அழிவாக மாறிவிட்டது. அவர்கள் தொடர்ந்த தாக்குதலால், தங்களுக்கு தாங்களே சாவுமணி அடித்துக் கொண்டனர். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா மிகத் துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.…

Read More

இந்தியாவுக்கான புல்லட் ரயில்கள் ஜப்பானில் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த புல்லட் ரயில்களின் சோதனை ஓட்டம் ஜப்பானில் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பை, குஜராத்தின் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பரில் புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புல்லட் ரயில் திட்டத்தின் மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடி ஆகும். மும்பை, அகமதாபாத் இடையே மொத்தமுள்ள 508 கி.மீ. தொலைவுக்கு அதிநவீன தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் 12 ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இப்போதைய நிலையில் 71 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் 2030-ம் ஆண்டில் மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் ஓடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலவசமாக 2 புல்லட் ரயில்கள்: ஜப்பானிய தொழில்நுட்பத்தில்…

Read More

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று மற்றும் இணை நோய் பாதிப்புக்குள்ளான இளைஞர் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் சேத்துக்குழி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (25). ஜேசிபி ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார். தமிழரசனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் தமிழரசனுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்த தமிழரசன் உடல் நிலை மோசமடைந்து நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவ பணிகள் (பொது சுகாதாரம்) இணை இயக்குநர் சவுண்டம்மாள் கூறும்போது, உயிரிழந்த தமிழரசனுக்கு சிறுநீரக கோளாறு, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு இணை நோய்கள் இருந்தன. இதுசம்பந்தமாக பரிசோதனை செய்தபோது, தமிழரசனுக்கு கரோனா தொற்று பாதிப்பும்…

Read More

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஹாங் காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் கரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் மே மாத தொடக்கத்தில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியது. கடந்த மே 26-ம் தேதி நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,010 ஆக இருந்தது. இது 30-ம் தேதி 2,710 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரம் கூறுகிறது. கரோனா தொற்று பரவலில் கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகியவை முன்னிலை வகிக்கின்றன. அதிகபட்சமாக கேரளாவில்1,147 பேர், மகாராஷ்டிராவில் 424, டெல்லியில் 294 , குஜராத்தில் 223, தமிழ்நாட்டில் 148 பேருக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பஞ்சாபைச் சேர்ந்த…

Read More