திருச்சி: மத்திய அரசுக்கு பரிந்துரை பட்டியல் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமிழக டிஜிபி நியமனத்தில் உள்நோக்கம் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் நேற்று பொதுமக்களிடையே பேசியதாவது: அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்தபோது, விலை கட்டுப்பாட்டு நிதி ரூ.100 கோடி ஒதுக்கி, குறைந்த விலையில் பொருட்களை கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்களுக்குக்கொடுத்தோம். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதுகாக்கப்பட்டனர். ஆனால், திமுக ஆட்சியில் விலைவாசியைக் கட்டுப்படுத்தவில்லை. கர்நாடக காங்கிரஸ் அரசு கொடுத்த வாக்குறுதிகளை இரண்டே மாதத்தில் நிறைவேற்றியுள்ளது. ஆனால், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் ஆக. 30-ல் ஓய்வுபெறுகிறார். ஆனால், அடுத்த டிஜிபிக்கான பெயர்ப் பட்டியலை தமிழக அரசு இதுவரை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது.…
Author: admin
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான வடம்பிடித்து தேர் இழுத்தனர். அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளியம்மனும் தனித்தனி வாகனங்களில் வீதியுலா சென்றனர். விழாவின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றன. வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் சுவாமி குமரவிடங்க பெருமான் தேரில் எழுந்தருளினார். காலை 7 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு நான்கு ரதவீதிகளையும் சுற்றி வந்தது. பின்னர், சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி, தெய்வானை அம்மன் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் ரதவீதிகள் சுற்றி வந்த பின்னர் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து, வள்ளியம்மன்…
சென்னை: தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில், பொறுப்பு டிஜிபியாக மூத்த அதிகாரி ஒருவரை தற்போதைக்கு நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபியான சட்டம்- ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் வரும் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சீனியாரிட்டி அடிப்படையில் டிஜிபிக்கள் சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். அபய்குமார் சிங், வன்னிய பெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கடராமன், வினித்தேவ் வான்கடே என அடுத்தடுத்து பட்டியலி்ல் உள்ளனர். வழக்கமாக புதிய சட்டம்- ஒழுங்கு டிஜிபி பணியிடம் காலியாக உள்ள 3 மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு அடுத்த தகுதியான 8 பேரின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கும். அதில், 3 பேர் பட்டியலை…
புதுடெல்லி: இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 திட்டம் மூலம் கடந்த 2023 ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்தது. இதை நினைவுகூரும் விதமாக கடந்த 2024-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேசிய விண்வெளி தினவிழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அவர் பேசியதாவது: ‘ஆர்யபட்டாவில் இருந்து ககன்யான் வரை: பண்டைய ஞானத்தில் இருந்து எல்லையற்ற சாத்தியக்கூறுகள் வரை’ என்பதே இந்த ஆண்டு விண்வெளி தினத்தின் கருப்பொருள். கடந்த 2023-ல் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து உலக சாதனை படைத்தோம். அதை தொடர்ந்து, விண்வெளியில் செயற்கைக் கோள்களை இணைக்கும் ‘டாக்கிங்’ தொழில்நுட்பத்தில் வெற்றி அடைந்துள்ளோம். இந்த…
சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: புகழ் பெற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த்தின் பிறந்த நாளான ஆக.29-ம் தேதி ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வரும் 29 முதல் 31-ம் தேதி வரை தடகளம் மற்றும் உள்ளரங்கம் சார்ந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும், அந்த அமைச்சகம் வழங்கியுள்ளது. அதை பின்பற்றி, விளையாட்டுப் போட்டிகளை சிறந்த முறையில் உயர்கல்வி நிறுவனங்கள் நடத்தி முடிக்க வேண்டும். கைப்பந்து, டென்னிஸ் பந்து கிரிக்கெட், பூப்பந்து, சதுரங்கம், கூடைப் பந்து,மேசைப் பந்து, கயிறு தாண்டுதல், கோ-கோ போன்ற போட்டிகளை நடத்தலாம்.மேலும், இதுசார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து…
விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவரான அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, மங்கல இசை ஒலிக்க, வடக்கு வாசல் வழியாக வந்து ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். அப்போது அங்காளம்மனை போற்றி கோயில் பூசாரிகள் தாலாட்டுப் பாடல்களை பாடினர். அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஊஞ்சல் மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். நள்ளிரவு ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றதும், கோயிலுக்கு உற்சவர் அங்காளம்மன் கொண்டு…
சென்னை: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிர்வாக, சட்ட ரீதியாக எண்ணற்ற குறுக்கீடுகள், தடைகளை ஏற்படுத்தி மத்திய பாஜக அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. மாநிலங்களுக்கு உரிய நியாயமான நிதி பங்கீட்டை வழங்க மறுக்கிறது என்று முதல்வர் ஸ்டாலி்ன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய – மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. தலைமைச் செயலர் முருகானந்தம் வரவேற்றார். மாநில உரிமைகளை பாதுகாத்து, மத்திய – மாநில அரசுகள் இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு அமைத்துள்ள உயர்நிலைக் குழுவின் தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான குரியன் ஜோசப் இக்கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வரும் பேசினார். மத்திய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவுக்கான பிரத்யேக இணையதளத்தை இந்த கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது: ஐ.நா. சபையின் மானிட மேம்பாட்டு குறியீடுகளான…
சென்னை: ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வுக்கு வழிவகுக்கும் அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஹரீஷ் சவுத்திரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சொத்துவரியை உயர்த்த வேண்டும். ஆனால், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 264 (2)-ல் 2023-ம் ஆண்டு திருத்தம் செய்து, தமிழகம் முழுவதும் சொத்துவரி ஆண்டுக்கு 6 சதவீதம் தானாக உயர்த்தப்படும் என்று 2024-ம் ஆண்டு செப்.5-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரியை உயர்த்தி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பிறப்பித்துள்ள அரசாணை சட்டவிரோதமானது. வரியை உயர்த்துவதற்கு முன், அறிவிப்பு வெளியிட்டு பொதுமக்களின் கருத்தை கேட்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சொத்து வரியை உயர்த்தியது சட்டவிரோதமாகும். எனவே, 6 சதவீத சொத்துவரியை தானாக…
கட்டுப்பாடற்ற சிரிப்பு அல்லது அழுவது ஒரு ஆச்சரியமான உணர்ச்சிகரமான எதிர்வினையை விட அதிகமாக இருக்கலாம், இது சூடோபுல்பார் பாதிப்பு (பிபிஏ) எனப்படும் நரம்பியல் நிலையை சமிக்ஞை செய்யலாம். பிபிஏ ஒரு நபரின் உண்மையான உணர்வுகளுடன் பொருந்தாத திடீர், விருப்பமில்லாத உணர்ச்சி வெடிப்புகளை ஏற்படுத்துகிறது, பெரும்பாலும் நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் வழக்கமான பதில்களை விட தீவிரமாக இருக்கும். உயிருக்கு ஆபத்தானதாக இல்லாவிட்டாலும், இந்த அத்தியாயங்கள் அன்றாட வாழ்க்கை, சமூக தொடர்புகள் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை சீர்குலைக்கும். நரம்பியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பக்கவாதம், அதிர்ச்சிகரமான மூளை காயம், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், ஏ.எல்.எஸ், பார்கின்சன் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற கடுமையான சுகாதார நிலைமைகளுடன் பிபிஏ அடிக்கடி இணைக்கப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளை ஆரம்பத்தில் அங்கீகரிப்பது சரியான நேரத்தில் கண்டறிதல், சரியான சிகிச்சை மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கு அவசியம்.கட்டுப்பாடற்ற சிரிப்பு மற்றும் அழுகை சூடோபுல்பார் பாதிப்பு (பிபிஏ) உடன் இணைக்கப்பட்டுள்ளதுசூடோபுல்பார் பாதிப்பு…
‘கூலி’ படத்தில் தனது கதாபாத்திரத்தின் மீதான விமர்சனத்துக்கு நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் “கூலி படத்தில் ப்ரீத்தியின் கதாபாத்திரம் எப்போதும் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வதாக காட்டப்பட்டது உங்களுக்கு நியாயமற்றதாக தோன்றவில்லையா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், “அந்த கதாபாத்திரம் துயரத்தில் இருக்கிறது. அது வேறொருவரின் பார்வை. இதில் நியாயம் அல்லது அநியாயம் என்பதெல்லாம் இல்லை” என்று தெரிவித்தார். முன்னதாக ஒரு பேட்டியில், பேசிய அவர், “ப்ரீத்தி கதாபாத்திரம் என்னைப் போன்றதல்ல. அவளுடைய சில அம்சங்களுடன் நான் தொடர்புப் படுத்திக் கொள்கிறேன். பெரும்பாலான பெண்களால் அந்த அம்சங்களுடன் தொடர்புப் படுத்திக் கொள்ளமுடியும் என்று நான் நம்புகிறேன். அந்தக் கதாபாத்திரத்தில் எனக்கு அதுதான் மிகவும் பிடித்திருந்தது. ப்ரீத்தி மிகவும் பொறுப்பானவள், மிகவும் கவனமானவள், மிகவும் ஊக்கமளிக்கும் குணம் கொண்டவள்” என்று கூறியிருந்தார். ‘கூலி’ படம் வெளியானபோது சமூக வலைதளங்களில் பலரும் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திர…