Author: admin

அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் தகுதி சுற்று 2-ல் இன்று இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி வரும் 3-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆர்சிபியுடன் பட்டம் வெல்வதற்கு மோதும். ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தகுதி சுற்று 1 ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கும் சரிவை சந்தித்து 101 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தது. முக்கியமான இநத் ஆட்டத்தில் முஷிர் கான் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இதேபோன்று மார்கோ யான்சன் இல்லாததும், யுவேந்திர சாஹலின் காயம் பந்துவீச்சு துறையின் சமநிலையை வெகுவாக பாதித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் கால்பதிக்க…

Read More

தமிழகத்தில் அனைத்து கழிவுப் பொருட்களையும் சேகரிக்கும் நிறுவனங்கள் மற்றும் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களைத் தேர்வு செய்து, பட்டியலிட்டு அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் நாள்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்ய ‘தூய்மை இயக்கம்’ என்ற ஒருங்கிணைந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் செயல்படுகிறது. இநத அமைப்பை செயல்படுத்த தூய்மை தமிழகம் நிறுவனம் (சிடிசிஎல்) என்ற அமைப்பு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது தூய்மை இயக்கத்தின் கீழ் செயல்படும் தூய்மை தமிழகம் நிறுவனம், தமிழகம் முழுவதும் அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நிலையான கழிவு மேலாண்மையை கட்டமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தூய்மை தமிழகம் நிறுவனம் மாநிலம் முழுவதும் உருவாகும் திடக்கழிவுகளை அறிவியல்பூர்வமாக மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சரியான முறையில் கையாளவும் அவற்றை…

Read More

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் 72-வது உலக அழகி போட்​டி​யின் இறு​திச் சுற்று நேற்று நடைபெற்​றது. இதில் உலக அழகியாக தேர்வு செய்​யப்​பட்ட தாய்​லாந்​தின் ஓபல் சுச்​சாதாசுவாங்​ஸ்ரீக்கு கடந்த ஆண்​டின் உலக அழகி கிறிஸ்​டினா பிஸ்​கோவா கிரீடம் அணிவித்​தார். எத்​தி​யோப்​பி​யா​வின் ஹாசெட் டெரிஜி 2-ம் இடமும், போலந்​தின் மஜா க்ளாஜ்தா 3-ம் இடமும் பிடித்​தனர். ஓபல் கடந்த 2024-ம்ஆண்​டின் மிஸ் யூனிவர்ஸ் தாய்​லாந்து பட்​டத்தை வென்​றார். இதையடுத்​து, மிஸ் யூனிவர்ஸ் போட்​டி​யில் பங்​கேற்ற இவர் 3-ம் இடம் பிடித்​தார். கடந்த 2022-ம் ஆண்​டில் மிஸ் யூனிவர்ஸ் தாய்​லாந்து போட்​டி​யில் 3-ம் இடம் பிடித்​தார். கடந்த 2003-ம் ஆண்டு பிறந்த இவர் பட்​டப் படிப்பு (அரசி​யல், சர்​வ​தேச உறவு​கள்) படித்​து வரு​கிறார்​.

Read More

மூலவர்: சூரிய கோடீஸ்வரர் அம்பாள்: பவளக்கொடி அம்மன் தல வரலாறு: பிரதோஷ வழி பாட்டில் தன்னால் பங்கேற்க இயலவில்லையே என்று சூரியன், யக்ஞவல்கிய மாமுனியிடம் தெரிவித்தார். சூரியனிடம் இருந்து வேதங்களைக் கற்ற மாமுனி, தனதுகுருநாதரின் வருத்தத்தை தீர்த்துவைக்கும்படி, சூரிய கோடிப்பிரகாசரிடம் வேண்டினார். பின் மாமுனி, தான் கற்றுக்கொண்ட வேதங்களை தட்சணையாக, வேதாக்கனி யோக பாஸ்கரச் சக்கர வடிவில் அவற்றின் பலன்களைப் பொறித்து ஈசனின் பாதங்களில் அர்ப்பணித்தார். வேதசக்திகள் இறைவனின் திருவடிகளில் இலுப்பை மரமாக வளர்ந்தது. இம்மரத்தில் உருவான இலுப்பை கொட்டைகளில் இருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெய்யால் தீபம் ஏற்றத் தொடங்கினார் மாமுனி. அன்று முதல் தினமும் மாலையில் (பிரதோஷ வேளையில்) இந்த வழிபாடு நடந்தது. மறுநாள் காலையில் சூரிய உதயத்தின்போது சூரிய பகவான், இந்த இலுப்பை எண்ணெய் தீபங்களை தரிசித்து பிரதோ‌ஷ வழிபாட்டின் பலன் அனைத்தையும் பெற்றார் என்பது புராண வரலாறு. கோயில் சிறப்பு: சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரியமூலை…

Read More

கடந்த 2016 அக்.20-ம் தேதி அல்லது அதற்கு முன் விற்கப்பட்ட தனி மனைகளை எந்த காலக்கெடுவும் இன்றி இணையவழியில் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வீட்டுவசதித்துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், கடந்த 2016 அக்.20-ம் தேதி மற்றும் அதற்கு முன் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதில் குறைந்த பட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப் பத்திரம் கடந்த 2016 அக்.20 அல்லது அதற்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட அல்லது விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவையும் வரன்முறைப்படுத்த அந்த விதிகள் வெளியிடப்பட்ட 6 மாதங்களுக்குள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வரையறையானது பல்வேறு அரசாணைகள் மூலம் வரும் 2026-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 2025-26-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை மானிய கோரிக்கையின்போது,…

Read More

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சிறப்பாக செயல்பட்ட எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பெண் அதிகாரி நேகா பண்டாரிக்கு, ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி பதக்கம் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். எல்லைபாதுகாப்பு படையில் உதவி கமாண்டன்டாக பணியாற்றும் பெண் அதிகாரி நேகா பண்டாரி. இவர் ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் பகுதியில் பர்க்வல் என்ற இடத்தில் பணியாற்றும் படைக்கு தலைமை தாங்குகிறார். சர்வதேச எல்லையில் உள்ள இப்பகுதியிலிருருந்து பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் 150 மீட்டர் தூரத்தில்தான் உள்ளன. அங்குள்ள நடமாட்டத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு, நேகா பண்டாரி தலைமையிலான படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இங்குள்ள எல்லை பாதுகாப்பு படை பிரிவில் நேகா பண்டாரியுடன், 6 பெண் காவலர்களும் போர் களத்தில் இறங்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இவர்களின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தானின் 3 நிலைகளில் இருந்த…

Read More

சென்னை: தமிழக அரசு பணி​யில் நேற்று ஒரே​நாளில் மட்​டும் 8,144 அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் பணி​யில் இருந்து ஓய்​வு​பெற்றனர். தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் ஏறத்​தாழ 9 லட்​சத்து 50 ஆயிரம் ஊழியர்​கள் பல்​வேறு நிலைகளில் பணி​யாற்றி வரு​கின்​றனர். முன்பு தமிழக அரசு ஊழியர்​களின் ஓய்வு வயது 58 ஆக இருந்​தது. கடந்த அதி​முக ஆட்​சிக்​காலத்​தில் ஓய்வு வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்​தப்​பட்​டது. அந்த வகை​யில் 60 வயதை எட்​டிய ஊழியர்​கள் பணி​யில் இருந்து ஓய்​வு​பெறு​வர். இந்​நிலை​யில், நேற்று (மே 31)ஒரே​நாளில் மாநிலம் முழு​வதும் 8,144 ஊழியர்​கள், அரசு பள்ளி ஆசிரியர்​கள் ஓய்​வு​பெற்​றனர். அவர்​களில் குரூப் அதி​காரி​கள் 424 பேர். குருப்​-பி அலு​வலர்​கள் 4,399 பேர். குருப்​-சி பணி​யாளர்​கள் 2,185 பேர். குருப்​-டிபணி​யாளர்​கள் 1,136 பேர். தலை​மைச் செயல​கத்​தில் மட்​டும் 30 அலுவலர்கள் நேற்று ஓய்வு பெற்​றனர். தமிழக அரசு பணி​யில் நேரடி குருப் ஏ பணி​யிடங்​கள் டிஎன்​பிஎஸ்சி குருப்-1…

Read More

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் சமீபத்​தில் நடை​பெற்ற மகா கும்​பமேளா​வின்​போது பிர​யாக்​ராஜ் ஜங்​ஷன் ரயில் நிலை​யம் முன்​பாக திரு​வள்​ளுவர் சிலை நிறு​வப்​பட்​டது. இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை 4.00 மணிக்கு நடை​பெறுகிறது. இந்த சிலையை அமைக்​கு​மாறு கோரிக்கை வைத்த பாஷா சங்​கம், மத்​திய கலாச்​சா​ரத் துறை, அலகா​பாத் அருங்​காட்​சி​யகம் மற்​றும் சென்​னை​யின் செம்​மொழி தமிழாய்வு மத்​திய நிறு​வனம் (சிஐசிடி), ‘இந்து தமிழ் திசை’ நாளேடு ஆகியவை இணைந்து இவ்​விழாவுக்​கான ஏற்​பாடு​களை செய்​துள்​ளன. இதன் சிறப்பு விருந்​தினர்​களாக தமிழர்​களான வாராணசி மண்டல ஆணை​யர் எஸ்​.​ராஜலிங்​கம், பிர​யாக்​ராஜின் டிஐஜி டாக்​டர்​.என்​.​கொளஞ்சி ஆகியோர் கலந்து கொள்​கின்​றனர். பிர​யாக்​ராஜ் நகர மேயர் கணேஷ் சந்​திர கேசர்​வாணி, அலகா​பாத் அருங்​காட்​சியக இயக்​குநர் முனை​வர்​.​ராஜேஷ் பிர​சாத் ஆகியோர் கலந்து கொள்​கின்​றனர். பாஷா சங்​கத்​தின் சார்​பில் அதன் முன்​னாள் நிர்​வாகி​களான சி.எம்​.​பார்​கவா மற்​றும் ஆனந்த் கில்​டி​யால் பங்கு பெறுகின்​றனர். இந்து தமிழ் திசை சார்​பில் அதன் டெல்லி மூத்த பத்​திரி​கை​யாள​ரான…

Read More

அனைத்து துறைகளை சேர்ந்தவர்களும் திமுக அரசு மீது கோபத்தில் உள்ளனர். 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றம் நடக்கும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில். சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.. கூட்டத்துக்கு பின்னர், செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது: வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் மகத்தான கூட்டணி அமையும். தற்போதைய சூழலில் திமுகவுக்கு எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது. இதனால், கண்டிப்பாக சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றம் நடக்கும். ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைக்கும், ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒரே அணியாக திரள வேண்டும். தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என அனைத்து துறையை சேர்ந்தவர்களும் தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என திமுக…

Read More

தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்தியா வளர்ச்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது, தொடர்ந்து நான்காவது ஆண்டாக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இதில் சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நமது உற்பத்தித் திறன், நமது சேவைத் திறன் அனைத்தும் அப்படியே இருப்பதை இவை உறுதி செய்துள்ளன. கரோனா பெருந்தொற்று காலத்திலும் அதற்குப் பிறகும் கூட விவசாயம் நம்மை தாங்கி நிற்கிறது. ஜனவரி-மார்ச் காலாண்டில், தொழில்துறையில் போதுமான முதலீடு இல்லை, அதன் திறன்கள் அதிகரிக்கவில்லை என்ற கருத்துக்கள் இருந்தன. பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இந்திய தொழில்துறையில் 2024-25-ம் ஆண்டின் 4-ம் காலாண்டில் உற்பத்தி நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக இருந்தன. நான்காம் காலாண்டில் மட்டும்…

Read More