Author: admin

அங்கீகார புதுப்பித்தலுக்கு ஜூன் 30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்காத வணிகவியல் பயிலகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தொழில்நுட்ப கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அரசு அங்கீகாரம் பெற்ற வணிகவியல் பயிலகங்களுக்கு தொழில்நுட்பத் தேர்வுகள் கூடுதல் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்ப கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் நிரந்தர மற்றும் தற்காலிக அங்கீகாரம் பெற்ற வணிகவியல் பயிலகங்கள், 2024 மற்றும் 2025ம் ஆண்டுக்கு அங்கீகார கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி, தொடர் அங்கீகாரம் பெற்ற பயிலகங்கள் ஓராண்டுக்கு ரூ.125 வீதம் 2 ஆண்டுக்கு சேர்த்து ரூ.250-ம் தற்காலிக அங்கீகாரம் பெற்ற பயிலகங்கள் ஓராண்டுக்கு ரூ.625 வீதம் 2 ஆண்டுக்கு ரூ.1,250ம் கட்டணத் தொகையாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். அங்கீகார புதுப்பித்தலுக் கான விண்ணப்பங்களை என்ற இணையதளத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 30ம் தேதி ஆகும். அதற்குள்…

Read More

சென்னை: எஸ்எஸ்பிஎல் (சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்) டி10 டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கோவா ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் பரிசுத் தொகை ரூ.3 கோடியாகும். இந்த போட்டி தொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஆற்காடு இளவரசர் நவாப்சாதா முகமது ஆசிப் அலி, நடிகர் ரவி மோகன், லீக் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போட்டிக்கான லட்சினை, கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொடருக்கான வீரர்கள் தேர்வு 68 மண்டலங்களில் நடைபெற உள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். வீரர்கள் தேர்வில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 300 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் பின்னர்…

Read More

நெல்லை, பொதிகை அதிவேக ரயில்களில் தலா ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் நீக்கப்பட்டு, 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த மாற்றம் ஆக.1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்களாக நெல்லை, பொதிகை அதி விரைவு ரயில்கள் உள்ளன. நெல்லை அதி விரைவு ரயில் தினசரி இரு மார்க்கமாக, சென்னை எழும்பூர் திருநெல்வேலி இடையே இயக்கப்படுகிறது. இதுபோல, சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே பொதிகை விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களுக்கும் பயணிகளிடம் மிகப்பெரிய தேவை இருப்பதால், பெட்டிகளில் இடங்கள் எப்போதும் நிரம்பி காணப்படும். அதிக வருவாயை கொட்டித்தரும் இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட ஒரு பெட்டி நீக்கப்பட்டு, மூன்றடுக்கு ஏசி பெட்டி ஒன்று இணைக்கப்பட உள்ளது. இருமார்க்கமாகவும் மாற்றம் செய்யப்பட உள்ளது. திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயிலில் (12632)…

Read More

வங்கதேசத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் பணியை அசாம் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சட்விரோத வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டவர்கள் எல்லாம் இந்தியா – வங்கேதசத்துக்கு இடையேயுள்ள உரிமை கோரப்படாத பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் சட்டவிரோத வெளிநாட்டினர் என தீர்ப்பாயத்தில் அறிவிக்கப்பட்ட 49 பேரை கடந்த 27 மற்றும் 29-ம் தேதிகளில் அசாம் அரசு வெளியேற்றியது. அவர்கள் இந்தியா மற்றும் வங்கதேச இடையே உள்ள உரிமை கோரப்படாத பகுதிக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது: சட்டவிரோத வெளிநாட்டினர் என தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யவில்லை என்றால், அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த சில ஆண்டுகளாக 30,000 பேரை சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் என பல தீர்ப்பாயங்கள் அறிவித்துள்ளன. அவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை கண்டறிந்து வெளியேற்றும் பணியை நாங்கள் விரைவுபடுத்த முடிவு செய்துள்ளோம். தேசிய…

Read More

குமி: 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென்கொரியாவில் உள்ள குமி நகரில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. 43 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்கள் குவித்து பட்டியலில் 2-வது இடம் பிடித்தது. இது கடந்த 2023-ம் ஆண்டு கைப்பற்றிய பதக்க எண்ணிக்கையைவிட3 குறைவாகும். தாய்லாந்தில் நடைபெற்ற அந்த தொடரில் இந்தியா ஒட்டுமொத்தமாக 27 பதக்கங்கள் வென்றிருந்தது. ஆனால் இம்முறை இந்தியா கூடுதலாக 2 தங்கம் வென்றுள்ளது. 2023-ல் 6 தங்கம் வென்றிருந்த நிலையில் தற்போது 8 தங்கம் வென்று அசத்தி உள்ளது. சீனா 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 26 பதக்கங்கள் குவித்து முலிடமும், ஜப்பான் 4 தங்கம், 10 வெள்ளி, 10 வெண்கலம் என 24 பதக்கங்கள் குவித்து 3-வது இடமும் பிடித்தன. கடைசி நாளான நேற்று…

Read More

கே.கே.நகரில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த பிரபல வணிக வளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம், 136-வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் அண்ணா பிரதான சாலையில் பிரபல வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் கட்டுவதற்காக மாநகராட்சி வழங்கிய அனுமதியில், இதன் தரை தளத்தை வாகன நிறுத்தமாக பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் அங்கு கடை நடத்தி வந்ததை மாநகராட்சி நிர்வாகம் கண்டறிந்தது. அதைத் தொடர்ந்து, விதிமீறலில் ஈடுபட்டதாக மாநகராட்சி சார்பில் அந்த கட்டிடத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் மீது பல்வேறு மேல்முறையீடுகள் செய்யப்பட்டன. நீதிமன்ற வழக்கும் தொடரப்பட்டது. பின்னர், இறுதியாக மாநகராட்சிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த நிலையில், சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டல செயற் பொறியாளர் இனியன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை, விதிமீறல் கட்டிடத்துக்கு சீல் வைத்தனர்.

Read More

ஆந்திராவில் இன்று முதல் முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று நேரடியாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஆந்திராவில் ஜூன் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகளுடன் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதன்படி, 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று நேரடியாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் இனி மாதத்தில் 1 முதல் 15-ம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் பிறகு மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். கடந்த ஜெகன் ஆட்சியில் ரேஷன் கடைகளை மூடிவிட்டு, ரூ.1600 கோடி செலவில் மாநிலம் முழுவதும் ரேஷன் விநியோக வாகனங்கள்…

Read More

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 6-0, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் 34-ம் நிலை வீரரான ஜிரி லெஹெக்காவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 5-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் ஜாக் டிராப்பர் 6-2, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் 65-ம் நிலை வீரரான பிரேசிலியின் ஜோவோ போன்சேகா மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் 96-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் மார்க்கெட்டா வோண்ட்ரௌசோவாவையும், 6-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-3, 6-1 என்ற…

Read More

சென்னை: ‘பேருந்து கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு விவகாரத்தில் மக்களிடம் முடிந்தவரை கொள்ளையடிக்க திமுக அரசு முடிவு செய்து விட்டது’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த திமுக அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அரசிடம் தெரிவிக்கலாம் எனவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பேருந்துக் கட்டண உயர்வு குறித்து உயர் நீதிமன்றம் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யச் சொன்னதும் அதற்காக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படுவதும் சரிதான். ஆனால், மக்களின் விருப்பங்களுக்கும் கருத்துகளுக்கும் இந்த ஆட்சியில் இதுவரை மதிப்பளிக்கப்பட்டுள்ளதா என்பதுதான் இங்கே அடிப்படைக் கேள்வி. மக்களின் விருப்பப்படிதான் இந்த ஆட்சி நடக்கிறது என்றால் அனைவருக்கும் சமக் கல்வி வழங்கும் தேசியக் கல்வி கொள்கையை திமுக அரசு எப்போதோ ஏற்றுக் கொண்டிருக்கும். மேலும், திமுக அரியணை ஏறியது முதல் மின்சாரக்…

Read More

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் தொடக்கத்தில் இழப்புகளை சந்தித்த பின் உத்தியை மாற்றிக்கொண்டதாக முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் கூறினார். முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் சிங்கப்பூரில் பாதுகாப்பு தொடர்பான ஷாங்கிரி-லா உரையாடலில் பங்கேற்றார். ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் 6 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுவது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அளித்த பதிலில், “இந்தியா 6 போர் விமானங்களை இழந்ததாக பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் தவறு. அவை ஏன் வீழ்த்தப்பட்டன, என்ன தவறு செய்யப்பட்டது என்பதுதான் முக்கியம். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் நமது உத்தியில் உள்ள தவறை புரிந்துகொள்ள இது உதவியது. இத்தவறுகளை சரிசெய்து அடுத்த 2 நாட்களில் நீண்டதூர இலக்குகளை குறிவைத்து நமது போர் விமானங்களை பறக்கவிட்டோம். இலக்குகளை வெற்றிகரமாக தாக்கி அழித்தோம்” என்றார். அவர் மேலும் கூறுகையில், “சீனாவுடன் பாகிஸ்தான் நெருக்கமான நட்பு கொண்டிருந்தாலும்,…

Read More