பெங்களூரு: சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்வில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசுகையில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்” என குறிப்பிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கன்னட அமைப்பினர், அவருக்கு எதிராக பெங்களூரு போலீஸில் புகார் அளித்தனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கன்னட கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறும்போது, “கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. கன்னட மொழிக்கு எதிரான சிறு கருத்தையும் எங்களால் ஏற்க முடியாது. கமல்ஹாசன் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் அவர் நடித்த அனைத்து திரைப்படங்களையும் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம்” என்றார். கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு கூறும்போது, ‘‘கமல்ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்காவிடில் அவரது படங்களுக்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்படும்”…
Author: admin
பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை எலீனா ஸ்விட்டோலினா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் எலீனா ஸ்விட்டோலினாவும், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியும் மோதினர். இதில் எலீனா 4-6, 7-6 (6), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் பிரிவு 4-வது சுற்றில் அமெரிக்க வீரர் டாமி பால் 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாப்பிரின்னை தோற்கடித்தார். போபண்ணா ஜோடி தோல்வி: ஆடவர் இரட்டையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, செக் குடியரசின் ஆதம் பாவ்லாசக் ஜோடி 2-6, 6-7(5) என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ், அர்ஜெண்டினாவின் ஹொராசியோ ஜெபலோஸ்…
“உழைத்தவரும், உழைத்து களைத்தவரும் என்றும் இளைத்தவரும் ஏய்த்து பிழைப்பவரும், படிப்பவரும், கொள்ளை அடிப்பவரும், இங்கு குடிப்பவரும், அன்பில் துடிப்பவரும் எவர் எவராகினும் அவர்க்கொரு துயரம் உயர் இசை கேட்டில் துயர் மனமுருகும், இன்னிசை என்னிசையென” எவர்க்கும் பொதுவென்று அள்ளிக் கொடுப்பவர் இசைஞானி இளையராஜா. அதனால்தான் அதிசயங்களை நிகழ்த்தியப் பிறகும் தொடரும் அவரது தீரா இசை தேடல் இப்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. திரை இசைத் துறையில் பின்னணி பாடகராக விரும்புகின்ற பலருக்கும் இளையராஜாவின் இசையில் ஒரு பாடலையாவது பாடிவிட வேண்டும் என்ற ஆவல் எப்போதும் இருக்கும். விவரிக்க இயலாத இசை ஆற்றலைப் பெற்ற இளையராஜா, பாடலுக்கான இசைக் குறிப்புகள் முழுவதையும் எழுதிய பிறகுதான், அந்தப் பாடலை யார் பாடப் போகிறார்கள் என முடிவு செய்வதாக கூறுகிறார். பிரபலமான தென்னிந்திய பாடகர்கள் துவங்கி, பாலிவுட்டின் பெருமைமிகு குரல்கள் வரை இளையராஜாவின் இசை சுவைத்தவையே. அந்த வகையில், இளையராஜா தன்னுடைய இசையில் பல…
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோயிலில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கவுதமி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குறித்து விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை. இத்தனை ஆண்டுகளாக அரசியலில் சாதித்து, படிப்படியாக கட்சியை ஒருங்கிணைத்து, 4 ஆண்டுகாலம் முதல்வராக சிறப்பாக செயல்பட்ட பழனிசாமி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசுவது கண்டிக்கத்தக்கது. மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவேன். மக்களுக்கான நேர்மையான ஆட்சி நிச்சயம் அமையும் என்றார். அதிமுக கூட்டணியில் தவெக இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, போகப்போக தெரியும். சரியான நேரத்தில் சரியான முடிவை பழனிசாமி அறிவிப்பார் என தெரிவித்தார்.
எங்களுக்கு போதுமான நேரம் இல்லை என்று நாங்கள் அடிக்கடி கூறுகிறோம் – ஆனால் பெரும்பாலும், இது ஒரு நாளில் மணிநேரங்களைப் பற்றியது அல்ல. நாங்கள் அவற்றை எவ்வாறு செலவிடுகிறோம் என்பது பற்றியது. நம்மில் பலர் எங்கள் காலையை நிரம்பிய செய்ய வேண்டிய பட்டியல்களுடன் தொடங்குகிறோம், எல்லா நேரங்களும் எங்கு சென்றன என்று யோசித்து நாள் முடிக்க மட்டுமே.நாங்கள் போதுமானதாக இல்லை என்பது பிரச்சினை அல்ல. ஏதேனும் இருந்தால், நாங்கள் எப்போதும் ஏதாவது செய்கிறோம் – செய்திகளுக்கு பதிலளிப்பது, பணிகளுக்கு இடையில் மாறுவது, ஒழுங்கீனத்தைத் துடைப்பது அல்லது பொறுப்புகளை ஏமாற்றுதல். ஆனால் பெரும்பாலும், நம் கவனத்திற்கு தகுதியானதை வேண்டுமென்றே தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக வினைபுரியும் சுழற்சியில் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கிறோம்.பிஸியாக இருக்க ஒரு நிலையான அழுத்தம் உள்ளது, இது உண்மையான முன்னேற்றத்துடன் செயல்பாட்டை குழப்புவதை எளிதாக்குகிறது. முடிவு? நிறைய இயக்கம், ஆனால் அதிக அர்த்தம் இல்லை.நல்ல செய்தி என்னவென்றால், உங்கள் நேரத்தை எண்ணுவதற்கு ஒவ்வொரு நிமிடமும்…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், சல்மான் குர்ஷித் வரிசையில் தற்போது மணீஷ் திவாரியும் இணைந்துள்ளார். இது, மத்திய அரசை ஏற்கெனவே விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இந்திய சமூகத்தினரிடையே பேசியதாவது: பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தவில்லை என்றால் இதைவிட மிகவும் ஆக்ரோஷமான பதிலடி இந்தியாவிலிருந்து கொடுக்கப்படும். பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலை எத்தியோப்பியா கண்டித்துள்ளதுடன் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியா எடுத்துள்ள சுய பாதுகாப்பு நடவடிக்கையை எத்தியோப்பியா மிகவும் பாராட்டியுள்ளது. எத்தியோப்பிய மக்களுடன் எங்களுக்குள்ள உறவு வலுவாகவும்…
மியூனிச்: யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் பிஎஸ்ஜி அணி கோப்பையைக் கைப்பற்றியது. ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 36 அணிகள் மோதின. இதில் இறுதிப் போட்டிக்கு, பிஎஸ்ஜி அணியும் இன்டர் மிலன் அணியும் தகுதி பெற்றன. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஜெர்மனியின் மியூனிச் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின. இதில் பிஎஸ்ஜி அணி 5-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. பிஎஸ்ஜி அணிக்காக டிசையர் டவ் 20, 63-வது நிமிடங்களில் 2 கோல்களும், அச்ரவ் ஹக்கிமி 12-வது நிமிடத்தில் ஒரு கோலும், கிவிச்சா வரட்ஸ்கீலியா 73-வது நிமிடத்தில் ஒரு கோலும், சென்னி மயுலு 86-வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
தாகா: வங்கதேசம் வெளியிட்டுள்ள புதிய கரன்சி நோட்டுகளில் அந்நாட்டின் தேசத் தந்தை முஜிபுர் ரகுமான் படம் நீக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் வழக்கமாக அந்நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரகுமான் படம் இடம் பெற்றிருக்கும். இவரது மகள் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக கடந்தாண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வங்கதேச சுதந்திரத்தின் போது உயிரிழந்த ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால், அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். தற்போது அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சி நடைபெறுகிறது. வங்கதேசம் 3 புதிய ரூபாய் நோட்டுகளை நேற்று வெளியிட்டது. அதில் முஜிபுர் ரகுமான் படம் இடம்பெறவில்லை. இது குறித்து வங்கதேச வங்கியின் செய்தி தொடர்பாளர் ஆரிப் உசைன் கான் கூறுகையில், ‘‘ புதிய…
சிங்கப்பூரில் நட்சத்திர விடுதி ஒன்றில் பேண்ட் பாடகராக இருக்கும் சக்தி (முகேன் ராவ்), இந்தியா வரும்போது, பழமையான பெட்டியை வாங்கிக்கொண்டு திரும்புகிறார். வீட்டில் உள்ள பலரும் அது என்ன பெட்டி எனக் கேட்க, அதற்குள் ‘ஜின்’ என்கிற அதிர்ஷ்டப் பேய் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். முதலில் மிரண்டாலும் பின்னர், பிரியா (பவ்யா) என்கிற பெண்ணை, சக்தி திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்ததால் ஜின்னை ஏற்கிறார்கள். ஆனால், பிரியாவை ஒரு கும்பல் கொலை செய்யும் நோக்கத்தில் கொடூரமாகத் தாக்கிவிட்டுப் போக, அதன் பின் ஜின் மீது சந்தேகம் வந்து அது இருக்கும் பெட்டியைத் தூக்கி வெளியே வீசுகிறார் சக்தி. பெட்டிக்குள் இருந்த ஜின் வெளியே வந்ததா, பிரியாவை கொலை செய்ய முயன்றவர்கள் யார் எனக் கதை செல்கிறது. போரில் வென்ற ஜின் என்கிற அதிர்ஷ்டப் பேயை மலேசிய அரசர் ஒருவர் நூற்றாண்டுகளுக்கு முன் வளர்த்தார். அதை எதிரிகள் பெட்டிக்குள் ஏன் அடைத்தார்கள் என்று ஏஐ-யில் உருவாக்கப்பட்ட…
சென்னை: தமிழகத்தில் 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும் என பாமக தலைவர் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார். சென்னை உத்தண்டியில் பாமகவின் 8 மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் நேற்றும் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது முக்கியமில்லை வெற்றி பெற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலும் கணிசமாக வெற்றி பெற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை செயல்படுத்த இருக்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய முதல்வருக்கு விருப்பமில்லை. தமிழகத்தில் சமூகநீதி என்றால் என்னவென தெரியாத தமிழக அரசு இருக்கிறது. ஆனால், சமூகநீதியில் பிஎச்டி படித்திருக்கிறோம். சமூகநீதி என்றால் பாமக நிறுவனர் ராமதாஸ்தான். அவர் கொள்கைகளை கடைப்பிடித்து முன்னேறுவோம். மற்றவர்களை ஆட்சியில் அமரவைக்க பாமகவை தொடங்கவில்லை. தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் விரைவில் செய்யப்படும். வரும் 2026-ல் பாமக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும். அதன்பிறகு தமிழகத்தில் பாமக…
