பெங்களூரு: ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் சுமுகமாக வெளியிடப்படுவதை உறுதி செய்வதற்கு உரிய பாதுகாப்பு கோரி நடிகர் கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது’ என்று கூறி இருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்துக்கு எதிராக பல்வேறு கன்னட அமைப்புகள் பெலகாவி, மைசூர், பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. தனது கருத்துக்காக கமல்ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்கத் தவறினால், ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்படுவதைத் தடுப்போம் என்றும் அவர்கள் மிரட்டினர். இதனிடையே, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலு, “கன்னட அமைப்புகளின் கோரிக்கையின்படி நடிகர் கமல்ஹாசன் 24…
Author: admin
நியூயார்க்: காசா போரை கண்டித்து உரையாற்றியதால், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி – MIT) படிக்கும் இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்ஐடி-யின் 2025-ம் ஆண்டு வகுப்புத் தலைவரான மேகா வெமுரி வியாழக்கிழமை (மே 29) மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் நடைபெற்ற ‘ஒன்-எம்ஐடி’ (OneMIT) தொடக்க விழாவில் கலந்து கொண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்தும் உரையாற்றினார். மேலும், காசா போரை எதிர்த்துப் போராடியதற்காக தனது சகாக்களைப் பாராட்டிய அவர், இஸ்ரேலுடனான பல்கலைக்கழகத்தின் உறவுகளை விமர்சித்தார். இதையடுத்து, மேகா வெமுரி மீது பல்கலைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (மே 30) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை. மேலும், பட்டமளிப்பு விழா முடியும் வரை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. “எம்ஐடி கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறது. அதேநேரத்தில், மேகா வெமுரி மீதான நடவடிக்கையில் பல்கலைக்கழகம் உறுதியாக உள்ளது.…
மதுரை: மதுரையில் ஜூன் 22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி, மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மீ.த.பாண்டியன், வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன், சே.வாஞ்சிநாதன் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று (ஜூன் 2) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: “திருப்பரங்குன்றம் பிரச்சினையின் தொடர்ச்சியாக ஜூன் 22-ல் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ‘முருக பக்தர்கள் மாநாடு’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்காக சங்க்பரிவார் அமைப்பினர் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பை மிக நுட்பமாக பரப்பும் விதத்தில் பரப்புரைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சங்பரிவார் அமைப்பினர் கடந்த பிப். 4-ல் 144 தடையாணை அமலில் இருந்தபோது பாஜக கொடியை மறைத்து எடுத்துச் சென்று திருப்பரங்குன்றம் கோயிலில் புகுந்து கலவரம் செய்ய முயன்றனர். இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குப்…
பாரிஸ் பேஷன் வீக்கில் அதன் இப்போது வைரஸ் லோப்ஸ்டர் பையின் அறிமுகத்துடன் லூயிஸ் உய்ட்டன் மீண்டும் உயர் ஃபேஷன் மற்றும் உயர் கற்பனைக்கு இடையிலான கோட்டை மழுங்கடித்தார். வீட்டின் வீழ்ச்சி/குளிர்கால 2025 தொகுப்பிலிருந்து ஒரு தனித்துவமான துண்டு, இந்த வடிவமைப்பு ஃபாரல் வில்லியம்ஸ், லூயிஸ் உய்ட்டனின் ஆண்கள் ஆடைகள் படைப்பாக்க இயக்குனர் மற்றும் நைகோ ஆகியோரின் கூட்டு மேதைகளிலிருந்து வருகிறது, இது ஆடம்பர பாகங்கள் விளையாட்டுத்தனமான சர்ரியலிசத்தை கொண்டு வருகிறது.பிரீமியம் வச்செட்டா தோலில் இருந்து வடிவமைக்கப்பட்டு, பிராண்டின் சின்னமான மோனோகிராம் கேன்வாஸுடன் முடிக்கப்பட்ட இந்த பை ஒரு இரால் வடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளது, விரிவான பின்சர்கள், ஆண்டெனே மற்றும் வெளிப்படுத்தப்பட்ட கால்களுடன் முழுமையானது. விவரங்களுக்கு மிகச்சிறந்த கவனம் இந்த துணையை அணியக்கூடிய கலைப் படைப்பாக மாற்றுகிறது, இது சம பாகங்கள் விசித்திரமான மற்றும் ஆடம்பரமாகும்.ஓட்டப்பந்தய தீம் பைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. சேகரிப்பு முழுவதும் சிறிய இரால் வடிவ அழகுகள் காணப்பட்டுள்ளன, இது எல்வியின்…
ஐபிஎல் 2025-ன் ஆகச் சிறந்த இன்னிங்ஸை நேற்று ஸ்ரேயஸ் அய்யர் ஆடினார். அதில் அவர் பும்ரா வீசிய யார்க்கரை தேர்ட் மேனில் பவுண்டரி அடித்த ஷாட்டை 360 டிகிரி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் ‘இந்த ஐபிஎல் தொடரில் ஆடப்பட்ட ஷாட்களிலேயே ஸ்ரேயஸ் அய்யரின் அந்த பவுண்டரிதான் ஆகச் சிறந்தது’ என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். 204 ரன்களை இலக்காகக் கொண்டு இறங்கும்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கடைசி 3 ஓவர்களில் 31 ரன்கள் தேவை. பும்ராவிடம் ஓவரைக் கொடுத்தார் ஹர்திக் பாண்டியா. ஏனெனில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக பும்ராவின் ஒரு ஓவர்தான் போட்டியையே மும்பைக்குச் சாதகமாக மாற்றியது. இப்போதும் பும்ராவையே நம்பியிருந்தார் பாண்டியா. பும்ரா 140+ கிமீ வேக யார்க்கரை ஸ்டம்பை நோக்கி இறக்கினார். மிடில் ஸ்டம்பின் அடிப்பகுதி நொறுங்கியிருக்கும் அப்படிப்பட்ட யார்க்கர் அது. இதை தடுத்தாடுவது கடினத்திலும் கடினம் என்பது ஒருபுறம் இருக்க, அதை பவுண்டரிக்கு அனுப்புவதென்றால் ஸ்ரேயஸ் அய்யரின் ரிஃப்ளெக்ஸ் அற்புதத்தை…
சென்னை: “யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெறவேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களாகிய நமக்கும் உள்ளது. யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெறவேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும்…
பட கடன்: (சாண்டி ஹஃபேக்கர்/வாஷிங்டன் போஸ்டுக்கு) பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு, இருதயநோய் நிபுணரும் ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி மொழிபெயர்ப்பு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் எரிக் டோபோல் தனிப்பட்ட மற்றும் விஞ்ஞான பணியில் ஈடுபட்டார். 53 வயதில், அவர் இனி நோய்க்கு சிகிச்சையளிக்க ஆர்வம் காட்டவில்லை. அதற்கு பதிலாக, சிலர் ஏன் சிரமமின்றி வயதாகத் தெரிகிறது, 80 களிலும் அதற்கு அப்பாலும் கூட சுறுசுறுப்பாகவும் கூர்மையாகவும் இருக்கிறார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள விரும்பினார்.ரகசியம் அவற்றின் மரபணுக்களில் பொய் சொல்லக்கூடும் என்று அவர் நம்பினார். ஆனால் அடுத்த தசாப்தத்தில் அவர் கண்டுபிடித்தவை அந்த யோசனையை அதன் தலையில் திருப்பின.மரபணு மந்திரத்தின் கட்டுக்கதை: ஏன் டி.என்.ஏ பதில் இல்லைதி வாஷிங்டன் போஸ்டுக்கு அளித்த பேட்டியில், டோபோலும் அவரது குழுவும் 80 மற்றும் அதற்கு மேற்பட்ட 1,400 பேரின் டி.என்.ஏவை டிகோட் செய்ய ஆறு ஆண்டுகளுக்கு மேலாக செலவிட்டனர், அவர்கள் அனைவருக்கும் பெரிய நாட்பட்ட நோய்கள் இல்லை.…
பெங்களூரு: கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்த சர்ச்சை கருத்துகள் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “இதை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம். நாம் அனைவரும் அண்டை மாநிலங்கள். நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்து ஒன்றாக வாழ வேண்டும்’ என்று கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “இதை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம். நாம் அனைவரும் அண்டை மாநிலங்கள். நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்து ஒன்றாக வாழ வேண்டும். நமது தண்ணீர் தமிழ்நாட்டுக்கு செல்கிறது, தமிழக மக்கள் இங்கு வருகிறார்கள். நாம் எதிரிகள் அல்ல; நாம் அனைவரும் நண்பர்கள். அந்தப் பிரச்சினையின் வரலாறு குறித்து எனக்குத் தெரியாததால், அதைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்றார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது’…
புதுச்சேரி: கோடை விடுமுறை பின் பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, ஒரு நாள் தலைமை ஆசிரியர்களாக பள்ளி மாணவர்கள் நியமிக்கப்பட்டனர். புதுவையில் இன்று அரசு பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டன. மழலையர் பள்ளிகளில் இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர். லப்போர்த் வீதியில் உள்ள எக்கோல் ஆங்கிலேஸ் அரசு தொடக்கப் பள்ளியில், பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். பள்ளியின் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் ஹரிஹரன், விடுப்பே எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவர் ஜோஸ்வா ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவக்குமார், ஒரு நாள் தலைமை ஆசிரியர்களாக அமர வைத்தார். அந்த மாணவர்களை ஆசிரியர்கள் கவுரவித்து வெகுவாக பாராட்டினர்.
தேன்கனிக்கோட்டை பகுதி கிராமங்களில் தகவல் பலகைகளில் ஊர் பெயர் மற்றும் தெரு பெயரை தமிழில் எழுத வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம் பாகலூர், பேரிகை உள்ளிட்ட கிராமங்கள் கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலத்தையொட்டி உள்ளன. இப்பகுதி மக்கள் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டுள்ளனர். அதேபோல, அரசுப் பள்ளிகளிலும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இக்கிராம பகுதிகளில் ஊராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் ஊர் பெயர் கன்னட மொழில் மட்டும் எழுதப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களிலிருந்து வரும் தமிழ் மொழி தெரிந்தவர்கள் ஊரின் பெயரை அறிந்து கொள்வதில் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். எனவே, இக்கிராம தகவல் பலகையில் தமிழ் மொழியிலு ம் எழுத வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதி…
