திருநெல்வேலி: “தமிழகத்தில் திருவிழா இல்லாத காலங்களில் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அவர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்று நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் கூறியுள்ளார். திருநெல்வேலியில் மண்டல அளவிலான நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய தலைவர் வாகை சந்திரசேகர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார், அப்துல்வகாப் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் வாகை சந்திரசேகர் கூறியது: “திருநெல்வேலி மண்டலத்திலுள்ள 5 மாவட்டங்களை சேர்ந்த 371 கலைஞர்களுக்கு ரூ.13.17 லட்சம் மதிப்பில் நிதியுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற கலைஞர்கள், நாடக மற்றும் திரைப்பட நடிகர்கள் போன்ற கலைஞர்களுக்காக தமிழக முதல்வர் பெருமளவு நிதி ஒதுக்கி, அவர்களது…
Author: admin
புதுடெல்லி: இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்துவதால் இந்தியா சிறிய அளவிலேயே பாதிப்பை எதிர்கொள்ளும் என்று மத்திய எஃகு அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்திற்கான வரிகளை தற்போதுள்ள 25% இலிருந்து 50% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதன் காரணமாக, அமெரிக்காவுக்கான முக்கிய ஆசிய ஏற்றுமதியாளர்களான தென் கொரியா மற்றும் வியட்நாமில் உள்ள எஃகு உற்பத்தியாளர்களின் பங்குகளில் திங்களன்று சரிவு ஏற்பட்டது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் இரும்பில் தோராயமாக கால் பகுதி, அண்டை நாடுகளான மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஜெர்மனி போன்ற ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நெருங்கிய நட்பு நாடுகளிலிருந்து இரும்பை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவிடம் இருந்து இரும்பை இறக்குதி செய்வது மிகவும் குறைவு. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது…
புதுடெல்லி: தென் அமெரிக்க நாடான பராகுவேவின் அதிபர் சாண்டியாகோ பெனா பலாசியோஸ், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். பராகுவே அதிபரை வரவேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “உங்கள் வருகை உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்கது. நீங்கள் டெல்லிக்கு மட்டுமல்ல, மும்பைக்கும் வருகை தருகிறீர்கள். இது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவுகளை உருவாக்குவதற்கான உங்கள் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. ஒருங்கிணைந்து பணியாற்றுவதன் மூலம், பகிரப்பட்ட வளர்ச்சி மற்றும் செழுமைக்கான பாதையை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். மின்னணு தொழில்நுட்பம், முக்கியமான கனிமங்கள், எரிசக்தி, வேளாண்மை, சுகாதாரம், பாதுகாப்பு, ரயில்வே, விண்வெளி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார கூட்டாண்மை போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை நாம் காண்கிறோம். தென்னமெரிக்காவின் வர்த்தக தொகுப்பு நாடுகளுடன்(மெர்கோசர்) எங்களுக்கு முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. அதை மேலும் விரிவுபடுத்த நாம் இணைந்து…
புதுச்சேரி: அதிமுக பொதுச்செயலாளரைத் தவறாக ஒருமையில் பேசியது கண்டிக்கத்தக்கது. முதலில் ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி வழியாக சென்னை, மகாபலிபுரம், கடலூர் கிழக்கு கடற்கரை சாலை ரயில் வழித்தடம் திட்டம் என்பது புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். கடந்த ஆண்டு திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக மத்திய அரசு சுமார் ரூ 52.13 கோடி நிதி ஒதுக்கி இருந்தது. இந்த நிலையில் திட்டத்தை செயல்படுத்த ஆரம்ப கட்ட பணிகளைச் செய்ய மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் திட்ட நிதியை செலவு செய்யாமல் அப்படியே ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் திரும்ப ஒப்படைத்துள்ளது. எதிர்வினை அரசியல் கண்ணோட்டத்துடன் தமிழகத்தை ஆளும் திமுக அரசு ஒத்துழைக்காமல் தவிர்த்து ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தமிழக திமுக முதல்வர் ஸ்டாலின் துரோகம்…
புதுடெல்லி: ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், திங்கள்கிழமை (ஜூன் 2, 2025) நிலவரப்படி ரூ.6,181 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்கள் வசம் உள்ளன என்று அதிகாரபூர்வ தரவுகள் வெளியாகியுள்ளன. மே 19, 2023 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மே 19, 2023 அன்று ரூ.3.56 லட்சம் கோடியாக புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மே 31, 2025 அன்று ரூ.6,181 கோடியாகக் குறைந்துள்ளது. அதேபோல மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 98.26% திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இருப்பினும் 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து சட்டபூர்வமானவை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும் அல்லது மாற்றும் வசதி அக்டோபர்…
உங்கள் ஐ.க்யூ, தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் கவனம் செலுத்துபவர்களுடன் விவரங்களுக்கு கவனம் செலுத்தலாம். இந்த வசீகரிக்கும் புதிர்கள் குறுகிய காலத்தில் விரைவாக சிந்திக்கும் மற்றும் நுட்பமான குறிப்புகளைப் புரிந்துகொள்ளும் திறனை சோதிக்கின்றன. புளோண்டீசர்ஸ் மூலம் வேலை செய்வதன் மூலம் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க உங்கள் மனதை அவதானிக்கவும் கற்பிக்கவும் உங்கள் திறனை மேம்படுத்தலாம். சூழ்நிலைகளை விமர்சன ரீதியாக மதிப்பிடுவதற்கும், நேரக் கட்டுப்பாடுகளின் கீழ் முடிவுகளை எடுப்பதன் மூலமும் அவை உங்கள் மனக் கூர்மை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை அதிகரிக்கின்றன.இன்றைய பிரைண்டேசர் ஒரு புதிரான புதிர், இது தவறுகளை விரைவாக அடையாளம் காணவும், நிமிட நுணுக்கங்களைக் கருத்தில் கொள்ளவும் உங்கள் திறன்களை சவால் செய்யும். ஒரு மரத்தில் நான்கு பையன்கள் அதன் கைகால்களில் அமர்ந்திருக்கிறார்கள், அவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் அமைந்துள்ள கிளையிலிருந்து வெட்டுகிறார்கள். அவற்றில் ஒன்று, தவிர்க்க முடியாத விளைவுகளைக் கொண்ட ஒரு முட்டாள்தனமான பிழையைச் செய்கிறது. நான்கு பேரில் யார் பகுத்தறிவற்ற…
சென்னை: “தமிழ்நாட்டின் மக்கள் டெல்லியில் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கையும் கண்டனத்துக்குரிய செயலாகும். இதுபோன்ற நடவடிக்கைகள் வரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்கும் வகையில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மதராசி கேம்ப் இடிப்புக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி, ஜங்புரா பகுதியில் உள்ள மதராசி கேம்ப் எனப்படும் குடிசைப் பகுதியில் தமிழர்களின் வீடுகள் நூற்றுக்கணக்கில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில், நீதிமன்ற உத்தரவை மேற்கோளாகக் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களது குடியிருப்புகளை இழந்து, வீதிகளில் தங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை முற்றிலும் மனிதாபிமான தன்மைக்கு எதிரானது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த மக்கள், தங்களது அடையாளம், உரிமை, இருப்பிடங்களை இழந்து வாழும் நிலையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
புதுடெல்லி: உலகின் முன்னணி மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார். இந்தியாவில் மின்சார கார்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை வெளியிடும் செய்தியாளர் கூட்டத்தில் இதுகுறித்து பேசிய ஹெச்.டி.குமாரசாமி, “டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தங்களது ஷோரூம்களைத் தொடங்குவதில் மட்டுமே அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்கள் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க ஆர்வமாக இல்லை. இதுவரை டெஸ்லா உற்பத்திய தொடங்க ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவில் மின்சார கார்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்துக்கான முதல் சுற்று பங்குதாரர் விவாதங்களில் மட்டுமே டெஸ்லா பிரதிநிதி பங்கேற்றார். இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று விவாதங்களில் டெஸ்லா நிறுவனத்தின் பிரதிநிதி பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் மெர்சிடிஸ் பென்ஸ், ஸ்கோடா-வோக்ஸ்வாகன், ஹூண்டாய் மற்றும் கியா போன்ற உலகளாவிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் மின்சார கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். ‘இந்தியாவில் மின்சார பயணிகள்…
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளா சமயத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலைக்கு அறிமுக விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை பாஷா சங்கம், மத்தியக் கலாச்சாரத் துறை, சென்னையின் சிஐசிடியுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நடத்தியது. இதில், உத்தரப் பிரதேசத்தின் தமிழ் அதிகாரிகள் பங்கேற்றனர். திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலை, வாரணாசியின் காசி தமிழ்ச் சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்தார். மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி) வெளியீடான அதன் அறிமுக விழாவும் நடைபெற்றது. குத்துவிளக்கேற்றித் துவக்கப்பட்ட விழாவில் திருவள்ளுவரின் சிறிய உருவச் சிலையும், இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலும் சிஐசிடி சார்பில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன. உ.பி.யில் திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்முதலில் கோரிய பாஷா சங்கத்தின் பொதுச் செயலாளரான மறைந்த கே.சி.கவுடுவின் மனைவி ரேகா கவுரை விருந்தினர்கள் பாராட்டி விழாவில் கவுரவித்தனர். உ.பி.யின் பிரயாக்ராஜில் மொழிகளைப் பாலமாக்கி தேச ஒற்றுமைக்காக 49 வருடங்களாகச் செயல்படும்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (ஜூன் 2) தொடங்கி வைத்தார். 2025–2026-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது, ‘சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு 10 திருக்கோயில்களில் தினசரி காய்ச்சிய பால் வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் தொடக்க விழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (ஜூன் 2) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். கூடுதல் ஆணையர் சி.பழனி முன்னிலை வகித்தார். தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து, குழந்தைகளின் தாய்மாரிடம் காய்ச்சிய…
