“படுத்துக்கொண்டே 200 இடங்களில் வெல்வோம் என்று ஜம்பம் பேசி வந்த மு.க.ஸ்டாலின், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு, தொண்டர்கள் களப்பணியாற்றுமாறு கெஞ்சுகிறார். திமுகவினர் என்ன சர்க்கஸ் செய்தாலும் தமிழக மக்கள் அவர்களை நம்ப போவதில்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்ப அரசியல் நடத்தி வரும் திமுகவினருக்கு, தனது மகனே எதிர்கால கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்திட மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். தனது மகனுக்காக நடத்தப்பட்ட இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தான் வேடிக்கையாக இருக்கின்றன. பாஜகவையும் மத்திய அரசையும் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றிவிட்டால் தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களையும், ஊழல்களையும் மக்கள் மறந்து விடுவார்கள் என்று மனக்கணக்கு போடுகிறார் மு.க.ஸ்டாலின். தனது மகன் தான் இளவரசர், அவர் தான் கட்சியின் எதிர்காலம், அவர் இடும் கட்டளைகளை ஏற்று…
Author: admin
சில புத்தகங்கள் உள்ளன, அவை நகரும் மற்றும் ஆழமானவை, மக்கள் அவற்றை மீண்டும் மீண்டும் படிக்க விரும்புகிறார்கள். ஆனால் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க கிளாசிக்ஸின் குளத்தில், இந்திய ஆசிரியர்களையும் அவர்களின் பங்களிப்புகளையும் நாங்கள் அடிக்கடி மறந்து விடுகிறோம். விருது பெற்ற 8 இந்திய புத்தகங்களை படிக்க இங்கே குறிப்பிடுகிறோம்.
அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘காத்தி’ (Ghaati) திரைப்படம் ஜூலை 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ திரைப்படத்துக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் ‘காத்தி’ தயாராகி வந்தது. முதலில் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், அப்படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. தற்போது சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் படம் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. ஜூலை 11-ம் தேதி ‘காத்தி’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு நாகவல்லி வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ, அனுஷ்காவின் ஆக்ஷன் சம்பவமாக இந்தப் படம் இருக்கும் என்பதை உணர்த்தியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில்…
சேலம்: காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 3,352 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 112.60 அடியாக உயர்ந்துள்ளது. தென் மேற்குப் பருவமழை தொடங்கி விட்ட நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில நாட்களில் கனமழை பெய்கிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த 10 நாட்களாக நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. மேட்டூர் அணைக்கு கடந்த 31-ம் தேதி அன்று விநாடிக்கு 2,913 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3,017 கனஅடியாக அதிகரித்தது. இன்று விநாடிக்கு 3,352 கனஅடியாக மேலும் அதிகரித்தது. இந்நிலையில், காவிரி கரையோர மாவட்டங்களின் நீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் நீர் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை விட, அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால்,…
தலைமுறைகளாக, இந்திய பெண்கள் முடி வளர்ச்சிக்காக நெய் மற்றும் கடுகு எண்ணெயை நம்பியுள்ளனர். நெய் உலர்ந்த உச்சந்தலைகளை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள், நுண்ணறைகளைத் தூண்டுகிறது மற்றும் சேதத்தை சரிசெய்கிறது. கடுகு எண்ணெய் சுழற்சியை அதிகரிக்கும், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகிறது, மேலும் முடியை பலப்படுத்துகிறது. நீண்ட, அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தலைப் பின்தொடர்வதில், பெரும்பாலான இந்திய பெண்கள் பாரம்பரிய தீர்வுகளுக்கு புதியவர்கள் அல்ல. இந்திய சமையலறைகளில் இருந்து இரண்டு ஸ்டேபிள்ஸ் – நெய் (தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய்) மற்றும் கடுகு எண்ணெய், தலைமுறைகளாக தலைமுடி அமுதங்களாக அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் எது உண்மையிலேயே தீவிர முடி வளர்ச்சியை வழங்குகிறது? இரண்டுமே அவற்றின் தனித்துவமான நன்மைகளைக் கொண்டிருக்கும்போது, சரியான எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது உங்கள் முடி வகை, உச்சந்தலையில் ஆரோக்கியம் மற்றும் குறிப்பிட்ட முடி கவலைகளைப் பொறுத்தது.இங்கே, முடி வளர்ச்சிக்காக நெய் மற்றும் கடுகு எண்ணெய் போரில் நன்மைகள், குறைபாடுகள் மற்றும்…
லண்டன் சிம்பொனி இசைக் கலைஞர்களுடன் ஆகஸ்ட் 2-ம் தேதி தமிழகத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக இளையராஜா தெரிவித்துள்ளார். இன்று தனது 83-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. அவருக்கு பலரும் நேரில், தொலைபேசி வாயிலாகவும், இணையத்திலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இன்று காலை தனது அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் இளையராஜா பேசும்போது, “எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முக்கிய பிரமுகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்கும், நேரில் வந்து வாழ்த்திய ரசிகர்களுக்கும் நன்றி. எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற வெளியூரில் இருந்து எல்லாம் சிரமப்பட்டு வந்திருக்கிறார்கள். இணையத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறிக் கொண்டிருப்பவர்களுக்கும் நன்றி. ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பார்த்தால் வாயடைத்து போகிறது. வார்த்தைகளே வரவில்லை. என்னை பார்ப்பது சாதாரண விஷயம். அதற்காக இவ்வளவு சிரமப்பட்டு வருகிறார்கள். என்னை பார்க்க போகிறோம் என்று ஒரு வாரம் தூங்காதவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் நன்றி சொல்ல வார்த்தைகளே…
சென்னை: சென்னையில் 1,869 இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்குவதற்கான கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் தொலைத்தொடர்பு வசதி, ஆதார் பதிவுக்கான நிரந்தர பதிவு மையங்கள், பொது இடங்களில் இலவச வைஃபை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்ப சேவைகளை தமிழ்நாடு மின்னணு நிறுவனமான எல்காட் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொலைத்தொடர்பு சேவை வழங்குநருக்கும், உட்கட்டமைப்பு வழங்குநருக்கும் அனுமதிகளை வழங்க என்ற ஒற்றைச் சாளர இணையதளத்தை நிறுவியது. இதன்மூலம் கடந்த மார்ச் மாதம் வரை புதிய தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பை நிறுவுவதற்கு 7,772 அனுமதிகளும், தற்போது உள்ள தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பை முறைப்படுத்துவதற்கு 33,194 அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் தமிழகம் முழுவதும் ஆதார் பதிவு மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கு 266 நிரந்தர பதிவு மையங்களை நிறுவிய எல்காட் நிறுவனம்…
புதுடெல்லி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதேபோல தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஹென்ரிச் கிளாசனும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒரே நாளில் இரண்டு அதிரடி ஆட்டக்காரர்கள் ஓய்வை அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேக்ஸ்வெல்: கிரிக்கெட் உலகில் ‘பிக்-ஷோ’ என செல்லமாக அழைக்கப்படுபவர் மேக்ஸ்வெல். கடந்த 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 149 போட்டிகளில் 3,990 ரன்களை அவர் எடுத்துள்ளார். சராசரி 33.81, ஸ்ட்ரைக் ரேட் 126.70. ஆஃப் ஸ்பின்னரான அவர் 77 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 91 கேட்ச்களை பிடித்துள்ளார். 2015 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் ஒருநாள் உலகக் கோப்பை பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணியில் முக்கிய அங்கம் வகித்த வீரர். இதில் கடந்த 2023-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 201 ரன்களை…
“இந்திய சினிமாவுக்கு ஓர் அரிய செல்வம்” என்று நடிகை ஸ்வாசிகாவுக்கு நடிகர் சூரி புகழாரம் சூட்டியிருக்கிறார். பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. இப்படம் ரூ.30 கோடியை கடந்து தமிழகத்தில் வசூல் சாதனை புரிந்திருக்கிறது. இதனால் இப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே நல்ல லாபம் கிடைத்துள்ளது. இப்படத்தில் சூரிக்கு அக்காவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்வாசிகா. அவருடன் நடித்த அனுபவம் குறித்து சூரி, “என் அன்பும் நன்றிகளும் கிரிஜா அக்காவுக்கு, ‘மாமன்’ படத்தில் உங்கள் நடிப்பு என் மனதை ஆழமாக கவர்ந்தது. அக்கா, லட்டு அம்மா, மகள், மனைவி – ஒவ்வொரு வேடத்திலும் நீங்கள் காட்டிய திறமை ஒளிர்ந்தது. நீங்கள் நடித்த ஒவ்வொரு காட்சியிலும் உண்மையான உணர்வுகள் இருந்தன. அந்த உணர்ச்சிகள்தான் இந்தப் படத்தின் சிறப்பை உருவாக்கியது. உங்களோடு நடித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாகவும், நல்ல போட்டியாகவும் இருந்தது.…
விழுப்புரம்: “பாமகவில் அனைத்து அதிகாரங்களும் கட்சியின் நிறுவனர் ராமதாசிடம் மட்டுமே உள்ளது” என அக்கட்சியின் முன்னாள் தலைவரும், பேராசிரியருமான தீரன் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ராமதாஸை, பேராசிரியர் தீரன் இன்று (ஜூன் 2) சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “பாமக மகளிர் மாநாடு, பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி நடத்தப்படும் என நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம். பாமக தலைவராக ஒரு எம்பிசி வகுப்பை சேர்ந்தவரும், பொதுச் செயலாளராக ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவரும், பொருளாளராக சிறுபான்மையினரும் இருக்க வேண்டும் என்பது பாமக கட்சியின் சட்ட விதிகளாகும். அதன்படிதான், பொருளாளராக மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கெனவே மாநில பொருளாளராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். கட்சிக்கு நிதி திரட்டி கொடுத்துள்ளார். திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் வளர்ச்சிக்கு, மன்சூரின் பங்களிப்பு சிறப்பாகவே இருந்தது. இதனால், பொருளாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நீக்கம், சேர்க்கை என்பது…
