நாகர்கோவில்: குமரி கடல் பகுதியில் கரை ஒதுங்கிய கன்டெய்னரில் இருந்து பொருட்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 36 கடற்கரை கிராமங்கள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் எம்எஸ்சி எல்சா 3 என்ற சரக்கு கப்பல் கடந்த 24-ம் தேதி மூழ்கியது. 640 கன்டெய்னர்களில் இருந்தவை, பல கடல் பகுதிகளில் மிதந்தும், கரையொதுங்கியும் வருகிறது. இதில் ஒரு கன்டெய்னர் குமரி மாவட்டம் வாணியக்குடி கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. அந்த கன்டெய்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அதிலிருந்த பொருட்கள் மீட்கப்பட்டு வருகிறது. இது குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “குமரியில் கரை ஒதுங்கிய கன்டெய்னரில் பிளாஸ்டிக் துகள் அடங்கிய மூட்டைகளே அதிகம் உள்ளன. மேலும் கால்சியம் கார்பைடு, மரைன் கேஸ் ஆயில், கந்தக எரிபொருள் எண்ணையுடன் கூடிய பொருட்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.…
Author: admin
விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா நாயகனாக அறிமுகமாகும் ‘ஒஹோ எந்தன் பேபி’ திரைப்படம் ஜூலை 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ள்ளது. விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா நாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. இதற்கு ‘ஒஹோ எந்தன் பேபி’ எனத் தலைப்பிடப்பட்டு க்ளிம்ஸ் வெளியிடப்பட்டது. இந்த வீடியோவுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ‘ஒஹோ எந்தன் பேபி’ படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். காமெடி, காதல், எமோஷன் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் கதையாக இப்படம் உருவாகி இருக்கிறது. படத்தில் உதவி இயக்குநராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குநராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல, ‘ரொமான்ஸ் கதை இல்லையா’ என கேட்கிறார். தொடர்ந்து இயக்குநர் ஆனாரா…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு அவருக்கு எந்த தண்டனை குறைப்பும் செய்யக் கூடாது என்று நீதிபதி ராஜலட்சுமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். புழல் சிறையில் இருந்த ஞானசேகரனை போலீஸார் இன்று (ஜூன் 2) மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர், தண்டனை விவரங்களை நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். 207 பக்க விரிவான தீர்ப்பை நீதிபதி வழங்கினார். பிஎன்எஸ் (பாரதிய நியாய சன்ஹிதா) சட்டத்தின்படி ஞானசேகரன் மீது குற்றம்சாட்டப்பட்ட 11 பிரிவுகள் மற்றும் அதற்கான தண்டனை விவரம்: > விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல் (பிரிவு 329) – 3 மாத சிறை. > செல்ல விடாமல் தடுத்து நிறுத்துதல் (126-2) – 1 மாத சிறை. > வலுக்கட்டாயமாக கடத்தி சென்று ஆசைக்கு இணங்க வைத்தல் (87)…
கொடிய 737 மேக்ஸ் செயலிழப்புகள் குறித்து போயிங்கின் திட்டமிட்ட சோதனை அமெரிக்க நீதிபதி (பட தலைப்பு: ஆபி) நியூயார்க்: ஒரு அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி திங்களன்று அமெரிக்க விமான நிறுவனமான போயிங் அதன் 737 மேக்ஸ் விமானத்தின் விபத்துக்கள் தொடர்பாக ரத்து செய்தார், இது கிட்டத்தட்ட 350 பேர் கொல்லப்பட்டனர்.விசாரணை ஜூன் 23 தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் நீதித்துறையும் போயிங் கடந்த மாதமும் நீண்டகால குற்றவியல் விசாரணையை விபத்துக்கள் செய்தன.அமெரிக்க மாவட்ட நீதிபதி ரீட் ஓ’கானர் விசாரணை தேதியை காலி செய்ய இரு தரப்பினரின் கோரிக்கையை வழங்கினார் மற்றும் டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் நடைபெற திட்டமிடப்பட்ட குற்றவியல் விசாரணையை ரத்து செய்தார்.ஆனால் நீதிபதி இன்னும் தனது இறுதி ஒப்புதலை தீர்வுக்கு வழங்க வேண்டும், மேலும் அவர் தனது பச்சை விளக்கு கொடுக்கத் தவறினால் அவர் ஒரு விசாரணையை மறுபரிசீலனை செய்யலாம்.விபத்துக்குள்ளானவர்களின் சில குடும்பங்களிடமிருந்து கண்டனத்தை ஈர்த்த ஒப்பந்தத்தின் கீழ், போயிங் 1.1…
ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்த விரக்தியில் மேஜையை ஓங்கி தட்டினார். நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் திங்கள்கிழமை அன்று ஆறாவது சுற்று ஆட்டத்தில் குகேஷ் மற்றும் கார்ல்சன் விளையாடினர். இதில் அபார கம்பேக் கொடுத்த குகேஷ் வென்றார். “ஆட்டத்தில் அதிகம் செய்ய எனக்கு எதுவும் இல்லை. அது எனக்கு தெளிவாக தெரிந்தது. அதனால் எனது நகர்வுகளை நான் தந்திரமாக முயற்சித்தேன். நான் தோற்றிருப்பேன். ஆனால், இன்று எனக்கு அதிர்ஷ்டமான நாள். நேரம் சார்ந்து அவருக்கு நெருக்கடி மற்றும் அழுத்தம் இருந்தது. அது அவரது கட்டுப்பாட்டை மீறச் செய்தது. இதை இந்த ஆட்டத்தின் மூலம் நான் கற்றுக் கொண்டேன்” என வெற்றிக்கு பிறகு குகேஷ்…
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகிய விவகாரத்தில் இயக்குநர் மணிரத்னம் தீபிகா படுகோனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார் தீபிகா படுகோன். அவருக்கு பதிலாக திருப்தி டிம்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார். தீபிகா படுகோன் விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. இதனையடுத்து அண்மையில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா தனது எக்ஸ் பக்கத்தில் தீபிகாவை மறைமுகமாக சாடியிருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் இயக்குநர் மணிரத்னம் தீபிகா படுகோனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். ‘தக் லைஃப்’ படத்துக்காக கொடுத்த பேட்டி ஒன்றில் இந்த விவகாரம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது, “அது ஒரு நியாயமான கோரிக்கை என்றே நான் நினைக்கிறேன். அதைக் கேட்கும் இடத்தில்அவர் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு திரைப்பட இயக்குநராக, இதனை கருத்தில் கொள்வது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.…
சென்னை: “2026-ல் மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு முதல் தமிழகத்தில் அனைத்து பாலியல் வழக்குகளும் மீண்டும் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் செய்த அனைத்து சார்-களுக்கும் சட்டத்தின்முன் தக்க தண்டனை பெற்றுத்தரப்படும் என்று எச்சரிக்கிறேன்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டதே, என்ன இன்னும் நிலைய வித்துவானை காணவில்லை என்று நினைப்பதற்குள் தனது அறிக்கை வாயிலாக மீண்டும் ஆஜராகிவிட்டார் அமைச்சர் ரகுபதி சார். ஸ்டாலின் மாடல் அரசு விசாரித்த நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். அப்படி நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்ஐடி நடத்திய விசாரணைக்குக் கூட கிரெடிட் எடுக்கும் அளவுக்கு ஸ்டிக்கர் வெறி திமுகவுக்கு முற்றிப் போயுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் வழக்கறிஞர் செய்தியாளர் சந்திப்பில், “இந்த…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.72,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அமெரிக்க – சீனா இடையே நிலவிய வர்த்தகப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தங்கம் விலை மே 12-ம் தேதி ரூ. 2,360 வரை குறைந்து ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. மே 28-ம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கியது. இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.72,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. காலையில் பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.71,600 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்நது, மாலையில் பவுனுக்கு ரூ.880 உயர்ந்தது. ஒருநாளில் பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.140 உயர்ந்து, ரூ.9,060-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி…
சிலந்தி ஆலை வளர்க்க சிறந்த காரணங்கள் அழகான இலைகள், நேர்த்தியான வடிவம் மற்றும் சூப்பர் குறைந்த பராமரிப்பு கொண்ட அழகான தாவரங்களில் ஒன்று சிலந்தி ஆலை. இது பானைகள், கொள்கலன்கள் மற்றும் சிறிய வளரும் பைகளில் கூட வளர்க்கப்படலாம், மேலும் நீங்கள் அதை வீட்டிலேயே வளர்க்க 9 காரணங்கள் உள்ளன.
ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நாளை விளையாடுகின்றன. இந்நிலையில், இதில் யார் தோற்றாலும் ஹார்ட் பிரேக் நமக்கு தான் என இயக்குநர் ராஜமவுலி கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர், “பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர், மும்பையின் பும்ரா மற்றும் போல்ட் வீசிய யார்க்கர்களை தேர்ட்மேன் திசையில் பவுண்டரி விளாசியது அருமை. அவர் டெல்லி அணியை முதல் முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார். இருப்பினும் அந்த அணி அவரை தக்க வைக்கவில்லை. கொல்கத்தா ஐபிஎல் அணிக்காக கோப்பை வென்று கொடுத்தார். இருப்பினும் டிராப் செய்யப்பட்டார். இப்போது இளம் வீரர்கள் அடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியை 11 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேற செய்துள்ளார். இந்த முறையும் கோப்பை வெல்வதற்கான தகுதி அவருக்கு உள்ளது. மறுபக்கம்…
