Author: admin

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீராணம் குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால் செயற்கை நீர் ஊற்று போன்று தண்ணீர் பீய்ச்சி அடித்தது. கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குழாய் மூலம் நாள்தோறும் 50 முதல் 75 கனஅடி குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 235 கி.மீ, தொலைவுக்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் வசிக்கும் மக்களின் குடிநீர் தாகத்தை தணிக்கும் வகையில், இக் கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2004-ம் ஆண்டு முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி (விக்கிரவாண்டி – கும்பகோணம் சாலை) கிராமம் மெயின் ரோடு அருகே உள்ள வீராணம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், குழாயில் இருந்து செயற்கை நீர் ஊற்று போன்று சுமார் 200 அடிக்கும் கூடுதலாக வானத்தை நோக்கி தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதனால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் குளமாக…

Read More

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்களில் ஆர்சிபி வென்றது. அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் ‘டாப் 10’ தருணங்கள் குறித்து பார்ப்போம். சால்ட் ஏமாற்றம்: ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான பிலிப் சால்ட், 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட் ஆர்சிபி அணிக்கு சிறந்த தொடக்கத்தை கொடுக்க தவறியது. அதனால் 200+ ரன்கள் என்ற ரன்களை முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி எட்டவில்லை. ஜேமிசன் மிரட்டல்: பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது லைன் மற்றும் லென்தில் உறுதியாக இருந்தனர். அந்த வகையில் மிகவும் நிதானமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் பஞ்சாப் பவுலர் ஜேமிசன். 4…

Read More

புதுச்சேரி: “கரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. முககவசம் அணிய வேண்டிய அவசியம் இப்போது இல்லை. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளது” என்று புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுவை அரசு சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை கடற்கரை சாலையில் உள்ள மேரி ஹாலில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்சரவணன் குமார் (பாஜக), எதிர்கட்சித்தலைவர் சிவா, பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, எம்எல்ஏக்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், கேஎஸ்பி.ரமேஷ், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: “கரோனா பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை. அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது.…

Read More

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஆர்சிபி அணி வெற்றி பெற்றதையடுத்து விராட் கோலி மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஐபிஎல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் அந்த அணியின் 18 ஆண்டுகால தவம் முடிவுக்கு வருகிறது. கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற 4 பந்துகளுக்கு 29 ரன்கள் தேவை என்ற நிலை வந்தபோது ஆர்சிபி அணியின் வெற்றி உறுதியாகி விட்டது. இதனையடுத்து மைதானத்தில் இருந்த ஆர்சிபி ரசிகர்கள் வெற்றிக் கூச்சலிட தொடங்கினர். வீரர்கள் முகத்திலும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. மைதானத்தின் நடுவே விராட் கோலி உணர்ச்சிப் பிழம்பாக காணப்பட்டார். அவர் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. கண்ணீரை கட்டுப்படுத்தமுடியாமல் அவர் முகத்தை மூடிக் கொண்டு அழுதது பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் ஒவ்வொரு…

Read More

ஹேமா கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது குறித்து நடிகை பார்வதி திருவோத்து கேரள அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மலையாள நடிகை ஒருவர், கடந்த 2017-ம் வருடம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதைத் தொடர்ந்து, மலையாள சினிமா துறையில் பணிபுரியும் பெண்களுக்காக ‘விமன் இன் சினிமா கலெக்டிவ்’ (WCC) என்ற அமைப்புத் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தொடர் கோரிக்கையால் மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது குறித்து நடிகை பார்வதி திருவோத்து கேரள அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரடியாக குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார் பார்வதி. அதில், “இப்போது ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதற்கான…

Read More

புதுச்சேரி: புதுச்சேரி கடலில் ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் இருவரை இன்று மீட்கப்பட்டனர். இதனிடையே, கடற்கரை கற்களில் சிக்கிய ஒடிசா நபரை போலீஸார் மீட்டனர். புதுவை கடல் ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை கடலில் தோன்றக்கூடிய பெரிய அலைகள் குளிப்பவர்களை கடலுக்குள் இழுத்து சென்று விடுகிறது. இதனால் கடல் அழகை ரசித்து குளிக்கும் சுற்றுலா பயணிகள் பலர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து புதுவை கடற்கரைகளில் ஆபத்தான கடல் பகுதி, குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி, சுற்றுலா வரும் இளைஞர்கள் தொடர்ந்து குளித்து வருகின்றனர். அப்போது கடல் அலைகளில் சிக்குபவர்களை காப்பாற்ற சுற்றுலா கடலோர பாதுகாவலர்கள் (லைப் கார்டு) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடல் அலையில் சிக்கியவர்களை காப்பாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 21) என்ற கல்லூரி மாணவர் தனது நண்பர் ஹேமநாதனுடன் (21) நேற்று இரவு புதுவைக்கு சுற்றுலா…

Read More

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி பட்டம் வெல்ல 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஜேமிசன் மற்றும் அர்ஷ்தீப் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவர் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சால்ட். பஞ்சாப் அணியின் ஜேமிசன் பந்து வீச்சில் ஸ்ரேயஸ் எடுத்த அபார கேட்ச் மூலம் அவர் வெளியேற்றப்பட்டார். மயங்க் அகர்வால், 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். சஹல் வீசிய முதல் ஓவரில்…

Read More

கோவை: கோவை கிராம ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு, குப்பை பிரச்சினைகள் குறித்து ‘வாட்ஸ் அப்‘ மூலம் புகார் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு பழுது மற்றும் குப்பைகள் அகற்றாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், மக்கள் எளிதாக ‘வாட்ஸ் அப்’ மூலம் புகார் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனைமலை (7402905234), அன்னுார் (9976550973), காரமடை (9786896660), கிணத்துக்கடவு (8778685349), மதுக்கரை (7402607284), பெரியநாயக்கன்பாளையம் (9976250205), பொள்ளாச்சி (தெற்கு) (7397581943), பொள்ளாச்சி (வடக்கு) (7402905266), சுல்தான்பேட்டை(7402905203), சூலுார் (7402905170), சர்க்கார்சாமக்குளம் (7402905147), தொண்டாமுத்துார் (7402905182). மேற்குறிப்பிட்ட எண்களில் மக்கள் புகைப்படத்துடன் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் மூன்று தினங்களுக்குள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார் விராட் கோலி. இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 122.86. இந்த சூழலில் அவரது இன்னிங்ஸை கண்டு ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தது. விராட் கோலி நிதான ஆட்டம்: இறுதிப் போட்டியில் பிலிப் சால்ட் உடன் இணைந்து முதல் இன்னிங்ஸை ஆடிய விராட் கோலி, மொத்தம் 3 ஃபோர்கள் மட்டுமே விளாசினார். ஒற்றை மற்றும் இரட்டை இலக்க ஓட்டங்களை கோலி எடுத்தார். பவர்பிளே ஓவர்களில் 10 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே அவர் எடுத்தார். போட்டி நடைபெறும் ஆடுகளம் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க ஏதுவாக இருந்தும் கோலி நிதானமாக இன்னிங்ஸை ஆடியது…

Read More

சென்னை: “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று கூறியுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ‘எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும்…’ என்று தலைப்பிட்டு வீடியோ பதிவு ஒன்றில் விவரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியது: “2024-ம் ஆண்டு டிச.23-ம் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு மிக மோசமான, கோரமான பாலியல் வன்கொடுமை நடந்தது. அந்தச் சம்பவம் நடந்த பிறகு, 25-ம் தேதி ஒரு குற்றவாளியை கைது செய்தனர். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், ஜனவரி மாத இறுதியில் நான் சில விஷயங்களை, சிடிஆர் (Call details record) அடிப்படையில் உங்கள் முன்பு தெரிவிப்பதாக கூறியிருந்தேன். அதைப் பேச வேண்டிய நேரம் இன்று வந்துவிட்டது. டிச.25-ம் தேதி கைது செய்யப்பட்ட பிறகு, எஃப்ஐஆர் கசியவிடப்பட்டது. 27-ம் தேதி நான்…

Read More