Author: admin

புதுடெல்லி: லஞ்சம் கேட்ட இந்திய வருவாய்த் துறை (ஐஆர்எஸ்) அதிகாரியை டெல்லியில் சிபிஐ கைது செய்தது. அவரிடமிருந்து ரூ.1 கோடி ரொக்கம் மற்றும் 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லியில் வருமான வரி செலுத்துவோர் சேவை துறை இயக்குநரகத்தின் கூடுதல் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றுபவர் அமித் குமார் சிங்கால். இவர் 2007-ம் ஆண்டு இந்திய வருவாய்த் துறை பிரிவைச் சேர்ந்தவர். இந்நிலையில், அதிகாரி சிங்கால் மீது டெல்லியில் லாபினோ’ஸ் பீட்சா நிறுவனத்தின் உரிமையாளர் சனம் கபூர் என்பவர் சிபிஐயிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் டெல்லி மற்றும் பஞ்சாபில் சிங்காலுக்கு சொந்தமான வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.1 கோடி ரொக்கம் மற்றும 3.5 கிலோ தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் நேற்று கூறியதாவது: சனம் கபூருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த…

Read More

அகமதாபாத்: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவர் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சால்ட். பஞ்சாப் அணியின் ஜேமிசன் பந்து வீச்சில் ஸ்ரேயஸ் எடுத்த அபார கேட்ச் மூலம் அவர் வெளியேற்றப்பட்டார். மயங்க் அகர்வால், 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். சஹல் வீசிய முதல் ஓவரில் அவர் விக்கெட்டை இழந்தார். ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். பந்தில் வேகத்தை குறித்து ஜேமிசன்…

Read More

ஈரோடு: சிவகிரி அருகே கந்தசாமி பாளையம் சடையப்ப சுவாமி கோயிலில் புதியதாக கட்டப்பட்ட மகா மண்டபம் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, கந்தசாமி பாளையத்தில் சடையப்ப சுவாமி கோயில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயில் உட்பிரகாரத்தில், மகா மண்டபம், அர்த்தமண்டபம் ஆகியவை கற்களால் கட்டப்பட்டு வருகிறது. திருப்பணிகளை முடித்து, வரும் செப்டம்பர் 4-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த மகா மண்டபத்தின் தூண்கள் நேற்று காலை சரிந்து விழுந்தன. இதில், மண்டபம் கட்ட பயன்படுத்திய பிரம்மாண்டமான கற்கள் மற்றும் தூண்கள், துண்டு துண்டாக உடைந்தன. இந்த சம்பவத்தின் போது பணியாட்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. புதியதாக கட்டப்படும் கோயில் மகா மண்டபம் சரிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை…

Read More

‘‘இழப்புகள் முக்கியம் அல்ல, முடிவுகள்தான் முக்கியம்’’ என ஆபரேஷன் சிந்தூர் குறைபாடுகள் குறித்து முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் கருத்து தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் சேதம் அடைந்ததாக பல தகவல்கள் வெளியாயின. எத்தனை போர் விமானங்கள் சேதம் அடைந்தன என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் சவுகான் கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘இந்திய விமானப்படையின் 6 விமானங்களை சுட்டு வீழத்தியதாக பாகிஸ்தான் கூறுவது தவறு. சில விமானங்கள் சேதம் அடைந்தன. எத்தனை விமானங்கள் சேதம் அடைந்தன என்பது முக்கியம் அல்ல. கடந்த மே 7-ம் தேதி தாக்குதலுக்கு பின் தவறுகளை சரிசெய்து, மே 10-ம் தேதி அன்று பாகிஸ்தானுக்குள் 300 கி.மீ சென்று விமானப்படை தளங்களை துல்லியமாக தாக்கினோம்.’’ என்றார். இந்நிலையில் புனேவில் உள்ள சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் ‘எதிர்கால போர் முறைகள்’ என்ற…

Read More

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், பட்டம் வென்றது குறித்து ஆர்சிபி வீரர் விராட் கோலி தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். அப்போது அவர் தெரிவித்தது: “இந்த வெற்றி அணிக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ரசிகர்களுக்கும் முக்கியம். இதற்காக 18 வருடங்கள் காத்திருந்தோம். இந்த அணிகக்க எனது இளமை, ஃப்ரைம் ஃபார்ம் மற்றும் அனுபவத்தை தந்துள்ளேன். என்னிடம் உள்ள அனைத்தையும் தந்துள்ளேன். இந்த நாள் வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. கடைசி பந்து வீசியவுடன் மிகவும் உணர்ச்சி வசமானேன். ஆர்சிபி அணிக்காக டிவில்லியர்ஸ் நிறைய செய்திருக்கிறார். அதனால் இந்த ஆட்டத்துக்கு முன்பு, வெற்றியில் நீங்களும் இருக்க வேண்டும் என சொன்னேன். அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டார். இருந்தாலும் இந்த அணிக்காக அதிக முறை ஆட்ட நாயகன் விருதை வென்றது அவர் தான். அவர் எங்களுடன்…

Read More

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற செம்மொழி நாள் நிகழ்ச்சியில், தமிழக அரசின் நான்காண்டு சாதனை மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாள், தமிழக அரசு சார்பில் செம்மொழி நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் நேற்று செம்மொழி நாளாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று செம்மொழி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்மொழி உருவாக்கம், தொல்லியல் சான்றுகள், செம்மொழித் தகுதி, 1815 முதல் 1950-ம் ஆண்டு வரை வெளிவந்த செவ்வியல் நூல்கள், 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ் வளர்ச்சித் துறை ஆகியவற்றால் வெளியிடப்பட்ட நூல்கள், தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் உருவாக்கப்பட்ட கலைஞர் கருவூலம் மற்றும் ஒளிப்படங்கள் கொண்டு கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து…

Read More

புதுடெல்லி: இந்​தி​யா​வில் நேற்று காலை 8 மணி வரையி​லான நில​வரப்​படி கரோனா வைரஸ் தொற்​றுக்கு சிகிச்சை பெறு​வோர் எண்​ணிக்கை 4,026 ஆக அதி​கரித்​துள்​ள​தாக மத்​திய சுகா​தார அமைச்​சகத்​தின் புள்ளி விவரம் கூறுகிறது. நேற்று காலை 8 மணி​யுடன் முடிவடைந்த 24 மணி நேரத்​தில் புதி​தாக 65 பேருக்கு தொற்று உறுதி செய்​யப்​பட்​டது. அத்​துடன் கேரளா, தமிழ்​நாடு மற்​றும் மேற்கு வங்​கத்​தில் தலா ஒரு​வர் மகா​ராஷ்டி​ரா​வில் 2 பேர் என மொத்​தம் 5 பேர் உயி​ரிழந்​தனர். இதன்​மூலம் இது​வரை கரோனா தொற்​றால் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 37 ஆக அதி​கரித்​துள்​ளது.

Read More

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அந்த அணியின் ரசிகர்கள் இதை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் கோப்பையை பெறுவதற்கு முன்பு ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் தெரிவித்தது: “இந்த தருணம் எனக்கும் விராட் கோலிக்கும் மற்றும் இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கும் சிறப்பானது. குவாலிபையர்-1 ஆட்டத்தின் போது எங்களால் பட்டம் வெல்ல முடியும் என உறுதியாக நம்பினோம். இந்த ஆடுகளத்தில் 190 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் என்று நினைக்கிறேன். எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் திட்டத்துக்கு ஏற்ப பந்து வீசி இருந்தனர். குறிப்பாக க்ருனால் பாண்டியா ஒரு விக்கெட் டேக்கிங் பவுலர். அழுத்தம் கூடும் போதெல்லாம் அவரை பந்து வீச அழைப்பேன். விராட் கோலி உள்ள அணியை வழிநடத்தும் வாய்ப்பு என்பது நல்ல வாய்ப்பாக பார்க்கிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்…

Read More

அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் கடந்த டிச.24-ம் தேதி இரவு இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டிருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு டிச.23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அனைவரும் அறிந்ததே. சம்பவம் நடந்த மறுநாள் (24-ம் தேதி) கோட்டூர்புரம் போலீஸார் ஞானசேகரனைக் கைது செய்கிறார்கள். பின்னர் அன்று மாலை விடுவிக்கிறார்கள். அதன்பிறகு, டிச.25-ம் தேதி ஞானசேகரனை போலீஸார் மீண்டும் கைது செய்கின்றனர். தற்போது, 5 மாதங்கள் கழித்து ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வந்துள்ளது. முதலில் அவரை ஏன் டிச.24-ம் தேதி விடுவித்தார்கள்? ஆதாரங்களை அழிப்பதற்காகவா? 23-ம் தேதி சம்பவம் முடிந்த சிறிது நேரத்தில் கோட்டூர்புரம் காவல் உதவி ஆய்வாளரைத் தொடர்புகொண்டு ஞானசேகரன் பேசியுள்ளார். அதன்பிறகு 9 நிமிடங்கள் கழித்து…

Read More

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகத்தில் உதவி நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ஷாகுர் கான். இவரை அண்மையில் போலீஸார் கைது செய்தனர். இவர், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நீண்ட நாட்களாக அவரைக் கண்காணித்து வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இஸ்லாமாபாத்துடன் தொடர்புடைய தொலைபேசி எண்கள் ஷாகுர் கானின் மொபைல் போனில் இருந்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ஷாகுர் கான் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, முன்னாள் அமைச்சர் சாலே முகம்மதுவுக்கு தனிச்செயலாளராக கான் இருந்துள்ளார். முகம்மதுவும், கானும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளில் அவர் 6 அல்லது 7 முறை இஸ்லாமாபாத் சென்று வந்துள்ளதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.…

Read More