எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை, தினமணி கதிரில் எழுதிய தொடர்கதை ‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’. இந்தக் கதை புத்தகமாக வந்தபிறகு அதே பெயரில் திரைப்படமாக இயக்கினார், எஸ்.பி.முத்துராமன். திரைக்கதை, வசனத்தை புஷ்பா தங்கதுரை எழுதினார். ரம்யா சினி ஆர்ட்ஸ் சார்பில் சங்கரன் தயாரித்தார். இதில் கமல்ஹாசன், சுஜாதா, விஜயகுமார், விஜயலட்சுமி, விஜயகீதா, திலக் என பலர் நடித்தனர். பாபு ஒளிப்பதிவு செய்தார். சுஜாதாவும், கமல்ஹாசனும் காதலர்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நிலையில் ஒரு மோதலில் கமல்ஹாசனுக்கு ஆறுவருட சிறைத் தண்டனை கிடைக்கிறது. இது தெரியாத சுஜாதா, அவர் திரும்பி வராததால் வேறு வழியின்றி விஜயகுமாரைத் திருமணம் செய்துகொள்கிறார். பிறகு, சிறையில் இருந்து திரும்பும் கமல்ஹாசனுக்கு சுஜாதாவுக்குத் திருமணமான தகவல் தெரியவருகிறது.காதலியை மறக்க முடியாமல் தவிக்கும் கமல்ஹாசன், ‘ஒருநாள் மட்டும் தன்னுடன் மனைவியாக வாழ்வது போல நடி, வேறு எந்த தவறும் நடக்காது. அந்த நினைவிலேயே வாழ்நாளைக் கழித்துவிடுவேன்’ என்கிறார் சுஜாதாவிடம். அவர்…
Author: admin
சென்னை: ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நேரக்கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு கொண்டு வந்த விதிமுறைகள் செல்லும் என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த விதிமுறைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த விளையாட்டுகளை யாரும் விளையாட முடியாதபடி நேர கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு விதிமுறைகளை அமல்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வரப்பட்ட இந்த விதிமுறைகளை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு உட்பட எந்த வழக்குகளிலும் அரசியல் தலையீடு இல்லை என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொலை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கவில்லை. புள்ளி விவரங்களைப் பார்த்தால் இது தெளிவாக தெரியும். 2019 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில், குறிப்பாக ரவுடி, பழிவாங்கும், சாதி மற்றும் சமூகவாத அடிப்படையிலான கொலைகள் கணிசமாக குறைந்துள்ளன. 2025-ம் ஆண்டின் முதல் காலாண்டிலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவான கொலைகள் பதிவாகியுள்ளன. இதேபோல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளிலும் உண்மை இல்லை. உளவுத் துறையின் தோல்வி மற்றும் சில முக்கிய வழக்குகளில் அரசியல் தாக்கம் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை இல்லை. ஒரு சில தனிப்பட்ட சம்பவங்களை உளவுத்துறை தோல்வியாகக் கூறுவதில் நியாயம் இல்லை. அதற்கு…
சென்னை: பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வாழ்க்கைத் துணைவரின் பெயரை சேர்க்க அல்லது நீக்க விண்ணப்பதாரர்கள் `இணைப்பு ஜே’ என்ற பிரமாணப் பத்திரத்தைப் பயன்படுத்தலாம். இதுகுறித்து பாஸ்பார்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வேலை, படிப்பு, சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பல லட்சம் மக்கள் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். பாஸ்போர்ட் பெறுவதில் சில விதிமுறைகளை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டுவந்தது. இந்நிலையில், பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் முக்கிய சீர்திருத்தத்தை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. அதில், வாழ்க்கைத் துணைவரின் பெயரை பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் சேர்க்க அல்லது நீக்க விண்ணப்பதாரர்கள் திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக `இணைப்பு ஜே’ (Annexure J) எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, விண்ணப்ப செயல்முறையை நெறிப்படுத்துவதையும் தாமதங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. `இணைப்பு ஜே’ என்பது எளிமைப்படுத்தப்பட்ட பிரமாணப் பத்திரமாகும், இதில் விண்ணப்பதாரர்கள் தங்கள் திருமண நிலையை…
சென்னை: தமிழகத்தில் ஒருசில மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன என்றும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவர்கள் சில மாவட்டங்களில் உள்ளனர் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தெலங்கானா மாநிலம் உருவான நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1956-ம் ஆண்டு மொழிவாரியாக 16 மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து நிர்வாக வசதிக்காக மேலும் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அந்த வகையில், கடந்த 11 ஆண்டுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் பெரும்பான்மை மொழி பேசுவோர், பிற மொழி பேசுவோர் என்ற அரசியல் பிரிவினை உருவானது. கடந்த 2014-க்கு முன்பு இந்தியாவில் ஜாதி மற்றும் பிரிவினை அரசியல் நடத்தப்பட்டது. ஆனால், 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமர் ஆன பின்பு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஒரே பாரதம் உன்னத…
சிர்சாசனா, அல்லது ஹெட்ஸ்டாண்ட், ஒரு மேம்பட்ட யோகா போஸ் ஆகும், இது கண்கள் மற்றும் மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, நீண்ட காலத்திற்கு கண் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது.அதை எப்படி செய்வது:தரையில் மண்டியிட்டு, உங்கள் தலைக்கு ஒரு ஆதரவான தளத்தை உருவாக்க உங்கள் விரல்களை ஒன்றிணைப்பதன் மூலம் தொடங்குங்கள்.உங்கள் தலையின் மேற்புறத்தை உங்கள் கைகளுக்குள் தரையில் வைக்கவும்.மெதுவாக உங்கள் கால்களை தரையில் இருந்து தூக்கி அவற்றை மேல்நோக்கி நேராக்கி, உங்கள் தலை மற்றும் முன்கைகளில் சமநிலைப்படுத்துங்கள்.நீங்கள் ஒரு தொடக்கக்காரர் என்றால் 15 முதல் 30 வினாடிகள் போஸைப் பிடித்துக் கொள்ளுங்கள்.மெதுவாக கீழே வந்து ஓய்வெடுங்கள்.மறுப்பு: முதலில் ஒரு நிபுணரை அணுகாமல் எந்த மேம்பட்ட யோகா ஆசனங்களையும் முயற்சிக்க வேண்டாம்
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று (ஜூன் 4) மதியம் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கான நகல் இன்று (ஜூன் 4) மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அதே இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து ஜூன் 5, 6, 7-ம் தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வு உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், விண்ணப்பங்களை…
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குழித்துறை தாமிரபரணி ஆறு தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர் ஜான்சனின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸடாலின் நிதியுதவி வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குழித்துறை கிராமத்தைச் சேர்ந்த பீட்டர் ஜான்சன் என்பவர் குழித்துறை தடுப்பணை மேல்பகுதியில் வாவுபலி திடல் அருகில் குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டில் நின்று குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் 01.06.2025 அன்று சுமார் காலை 11.30 மணியளவில் மேற்படி பகுதியில் குளிக்கச் சென்றபோது தடுப்பணையில் வெட்டுமணி பகுதியிலிருந்து குழித்துறை, மதிலகம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோ (வயது 17) மற்றும் சிறுவன் அகிலேஸ் (வயது 12) ஆகியஇருவரும் நடந்து வந்து கொண்டிருக்கும்போது தவறி தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் விழுந்ததைக் கண்ட பீட்டர் ஜான்சன் இந்த நபர்களை காப்பாற்ற தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் இறங்கி இரண்டு இளைஞர்களையும் காப்பாற்றி கரை ஏற்றிவிட்ட…
புதுச்சேரி: அங்கன்வாடியில் தினமும் முட்டை, சிறுதானிய சுண்டல், மாதம் இரு முறை சத்துமாவு தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊதியமும் உயர்கிறது. மொத்தம் ரூ. 12 கோடி நலத்திட்டங்களுக்கு முதல்வர் ரங்கசாமி ஒப்புதல் தந்துள்ளார். புதுவை மாநிலத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்ட வழிகாட்டுதல் குழு கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது. அமைச்சர் தேனீ ஜெயகுமார், ஆட்சியர் குலோத்துங்கன், சார்புச் செயலர் (நிதி) ரத்னகோஷ் கிஷோர் சவுரே, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் முத்துமீனா, குழு அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் விவரம்: மத்திய அமைச்சகத்தின் வழிக்காட்டுதலின்படி 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு , தினமும் முட்டை மற்றும் சிறுதானிய சுண்டல், மாதம் இருமுறை சத்துமாவு வழங்குவது.. நகர்புற அங்கன்வாடி மையங்களுக்கு தற்போது வழங்கப்படும் வாடகை கட்டணம் ரூ.3…
திருப்பூர்: மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாஜகவினர் இன்று (ஜுன் 3) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அலுவலகத்துக்கு உள்ளே செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம், மே.30ம் தேதி மாதாந்திர மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த முகாமின் போது மத்திய அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரானது கூட்டம் நடக்கும் பொழுது அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளிக்க வலியுறுத்தியும் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆட்சியார் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். இதனிடையே, அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி 5 பேரை மட்டும் உள்ளே செல்ல அனுமதி வழங்குவதாக கூறியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் அனைவரையும்…
