அகமதாபாத்: ஐபிஎல் டி 20 தொடரின் 18-வது சீசன் இறுதிப் போட்டியில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு பில் சால்ட் அதிரடி தொடக்கம் கொடுக்க முயன்றார். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே பில் சால்ட் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியை விளாசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டன. கைல் ஜேமிசன் வீசிய அடுத்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பில் சால்ட், 4-வது பந்தை விளாச முயன்ற போது மிட் ஆன் திசையில் நின்ற ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் ஆனது. 9 பந்துகளை சந்தித்த பில் சால்ட் 16 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய மயங்க்…
Author: admin
திருப்பதி: திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் கோவிந்தர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கோவிந்தராஜர் திருக்கோயிலில் கடந்த 2-ம் தேதி காலை பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி ஆகம சாஸ்திரங்களின்படி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2-ம் தேதி இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் கோவிந்தரின் திருவீதி உலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிரம்மோற்வசத்தின் 2-ம் நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் கோவிந்தராஜ பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, யானை, குதிரை, காளை ஆகிய பரிவட்டங்கள் மற்றும் பல்வேறு நடன கலைஞர்கள் நடனமாடியபடி முன்னால் சென்றனர். இதில் ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அர்ச்சகர்கள், அதிகாரிகள், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு அன்ன வாகனத்தில் கோவிந்தர் எழுந்தருளினார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், ‘ஜனநாயகன்’. இதில் பாபி தியோல், பூஜாஹெக்டே, மமிதா பைஜூ என பலர் நடிக்கின்றனர். நடிகர் விஜய்,தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி இருப்பதால் இதுதான் அவருக்குக் கடைசி படம். இதனால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெற்று வந்தன. தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பின் இறுதி நாளில், பணியாற்றிய அனைவருக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாளில் இந்தப் படத்தின் டீஸர் வெளியாக இருக்கிறது என்கிறார்கள்.
புதுடெல்லி: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து அரசுக்கு வழங்கும் தமிழக அரசின் சட்டங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அந்த 10 சட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தது. அதையடுத்து, துணைவேந்தர் கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களை தமிழக அரசு கடந்த ஏப். 11 அன்று அரசிதழில் வெளியிட்டது. இதை எதிர்த்து நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞரான குட்டி என்ற வெங்கடாசலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வான நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன்…
புதுடெல்லி: ட்ரோன்கள் மூலம் ரயில் பெட்டி களை சுத்தம் செய்வது குறித்து ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளதாவது: ட்ரோன்கள் மூலம் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் முயற்சி முதல் முறையாக சோதனை அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் அசாமின் காமக்யா ரயில் நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அங்கு எளிதில் செல்ல முடியாத ரயில் மற்றும் நடைமேடைகளின் பகுதிகளை சுத்தம் செய்ய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. மிகவும் வலுவான செயல்திறன் மற்றும் துல்லியத்தன்மையுடன் அதன் பணிகள் அமைந்திருந்தன. யாரும் எளிதில் நுழைந்து சுத்தம் செய்ய முடியாத இடங்களை ட்ரோன்கள் எளிதாக அணுகி தூய்மைப்படுத்தி விடுகின்றன. ரயில்களை சுத்தம் செய்யும் ட்ரோன்களில் உயர் அழுத்த நீர் நாசில்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம், பாஜக தலைவர் திலீப் கோஷ், காமக்யா ரயில் நிலையத்தில் ரயில்களை சுத்தம் செய்யும் ட்ரோன்களின் வீடியோவை வெளியிட்டிருந்தரா். அதில், “ஒரு நாட்டின் முன்னேறத்துக்கு நவீன, மேம்பட்ட இயந்திரங்கள் அவசியம்’’ என்று…
ரவி மோகன் நடிப்பில் அடுத்து ’கராத்தே பாபு’ என்ற படம் வெளியாக இருக்கிறது. அரசியல் த்ரில்லர்படமான இதில் அவர் அரசியல்வாதியாக நடித்துள்ளார். கணேஷ் பாபு இயக்கி உள்ளார். இதையடுத்து யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்தை ரவி மோகன் இயக்க இருக்கிறார். இதற்கிடையே, வடக்குப்பட்டி ராமசாமி, டிக்கிலோனா படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றொரு ஹீரோவாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரியலூர்: தமிழகத்தில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். அரியலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தவறான தகவல் பரவி வருகிறது. தனியார் பேருந்து உரிமையாளர்கள், பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதுகுறித்து மக்கள் கருத்து கேட்டு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த அடிப்படையில்தான், மக்கள் கருத்துகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கருத்துகள் கேட்கப்பட்டு, நீதிமன்றத்திலா் தெரிவிக்கப்படும். அப்போது, பொதுமக்களுக்கு சுமை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற கருத்துதான் வலியுறுத்தப்படும். ஏற்கெனவே இதுபோல பேருந்துக் கட்டண உயர்வு என்று தகவல் பரவியது. அப்போது, தமிழகத்தில் போக்குவரத்துத் துறையில் நெருக்கடி இருந்தாலும், பொருளாதார சிக்கல் இருந்தாலும், மத்திய அரசு டீசல் விலையை பலமுறை உயர்த்தி இருந்தாலும், பேருந்துக் கட்டண உயர்வு இருக்காது என்று…
பி.எம்.ஜே ஊட்டச்சத்து தடுப்பு மற்றும் ஆரோக்கியத்தில் சமீபத்திய ஆய்வு குறைந்த கலோரி உணவுகள் மற்றும் மனச்சோர்வு அறிகுறிகளுக்கு இடையிலான சாத்தியமான தொடர்பை வெளிப்படுத்துகிறது, குறிப்பாக ஆண்கள் மற்றும் அதிக எடை கொண்ட நபர்கள். ஆராய்ச்சியாளர்கள் 28,000 க்கும் மேற்பட்ட பெரியவர்களிடமிருந்து தரவை பகுப்பாய்வு செய்தனர், கலோரி-கட்டுப்பாட்டு உணவுகள் அதிக மனச்சோர்வு அறிகுறி மதிப்பெண்களுடன் தொடர்புடையவை என்பதைக் கண்டறிந்தனர். கலோரி எண்ணுவது ஒரு புதிய விஷயம் அல்ல, ஆனால் இன்று, அதிகமான மக்கள் தங்கள் கலோரி உட்கொள்ளலைப் பற்றி உணர்கிறார்கள். குறைந்த கலோரி உணவுகள் சுகாதார போக்குகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதில் ஆச்சரியமில்லை. ஆனால் இது உங்களுக்கு நன்மை பயக்குமா? கலோரிகளைக் குறைப்பது சரியான படியாகத் தோன்றலாம், குறிப்பாக உங்களிடம் ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சி குறிக்கோள் இருந்தால் அல்லது எடை இழப்பு திட்டத்தில் இருந்தால். இருப்பினும், ஒரு புதிய ஆய்வு குறைந்த கலோரி உணவு உங்களை எரிச்சலூட்டுகிறது என்று கூறுகிறது.பி.எம்.ஜே ஊட்டச்சத்து தடுப்பு…
குவாஹாட்டி: பிரம்மபுத்திரா நதி நீரை சீனா நிறுத்தினால் என்னாகும் என்னும் பாகிஸ்தானின் அச்சுறுத்தலைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவப் படைகள் அழித்தன. மேலும், பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளபோதும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததை இந்தியா நீட்டித்துள்ளது. இந்நிலையில், “பாகிஸ்தான் செல்லும் சிந்து நதி நீரை, இந்தியா நிறுத்தியுள்ளது. அதைப் போலவே, சீனாவிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் பிரம்மபுத்திரா நதி நீரை சீனா நிறுத்தினால் என்னாகும்” என்று பாகிஸ்தான் எச்சரிக்கை செய்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இதற்கு அசாம் மாநிலம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று நீண்ட விளக்கம்…
அக் ஷய் குமார், ஜியா கான், அர்ஜுன் ராம்பால் நடித்து 2010-ல்வெளியான படம், ‘ஹவுஸ்புல்’. காமெடி த்ரில்லர் படமான இது வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. இப்போது இதன் 5-வது பாகம் உருவாகியுள்ளது. இதில் அக்ஷய் குமார், ரிதேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்பட 24 முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தருண் மன்சுஹானி இயக்கியுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படத்தில் 2 கிளைமாக்ஸ் இடம்பெற்றுள்ளது. அதாவது, ஹவுஸ்புல் 5 ஏ, ஹவுஸ்புல் 5 பி என இரண்டாக பிரித்து இந்தப் படத்தை வெளியிடுகின்றனர். இரண்டும் வெவ்வேறு தியேட்டர்களில் வெளியாகும். இரண்டு விதமான கிளைமாக்ஸுடன் இரண்டு படமாக பிரித்து, ஒரே நேரத்தில் வெளியிடுவது, இதுதான் முதல் முறை என்கிறார்கள். இதுபற்றி தயாரிப்பாளர் சஜித் நாடியத்வாலா கூறும்போது, “இது புது முயற்சி. பார்வையாளர்கள் இரண்டு பதிப்பையும் பார்க்க வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்.
